Thottal Thodarum

Mar 30, 2009

என்னடி மீனாட்சி..

subramaniyapuram_6_328200881036123

ரொம்ப நாளுக்கு அப்புறம் சாந்தி மீனாட்சிய பார்த்தேன்.. அவளை பார்த்ததும் ரொம்ப வருஷமா நான் அவளை திரும்ப பார்த்தா கேட்கணும்னு நினைச்சிட்டிருந்த கேள்விய இன்னைக்கு கேட்டே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். பின்ன ஒருத்தன் எதுக்காக அடி வாங்குனான்னு தெரியாமயே அடி வாங்குறது எவ்வளவு கஷ்டம்னு அடிவாங்குனவனுக்குதான் தெரியும்.

நானும் ஆனந்த ராஜூம ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ் ஓவ்வொரு திங்கட்கிழமையும்.. ஆமா ஓவ்வொரு திங்கட்கிழமைமட்டும்தான் மத்த நாளெல்லாம் சாதா ஃப்ரெண்ட்ஸ்.. ஏன்னா அன்னைக்குத்தான் அவன் எல்லா ஞாயித்துகிழமையும் படம் பார்த்துட்டு, அடுத்த நாள் வந்து கதை சொல்வான்..அதனால் நானும் அவனும் திங்கட்கிழமை மட்டும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்..

அவன் கதை சொல்லும் போதே ஓரு முழு படத்தை பார்த்தா மாதிரி இருக்கும்.. காலையில முதல் ப்ரீயட் போதே ஏதாவது சாக்கு சொல்லி நானும் அவனும் கடைசி ரோவில் போய் உட்கார்ந்திருவோம்.. அப்புறம் எங்க வேலையை ஆரம்பிச்சுடுவோம்..சத்தமே இல்லாம..(அதெப்படி சத்தமே இல்லாமன்னு..) தியேட்டர்ல போட்ட அட்வர்டைசிங் முதக் கொண்டு ஓண்ணு விடாம ரீரிக்கார்டிங் மியூசிக்கோட வாச்சிக்கிட்டே கதை  சொல்லுவான்.. அப்படி அவன் அந்த வாரம் சொன்ன படம் சூப்பர் படம் ..அந்த படத்தோட பாட்டுவேற சும்மா சூப்பர் டூப்பர் ஹிட்.. தமிழ்நாடே பத்திக்கிட்டு எறிஞ்சுது..

அவன் சொல்ல, சொல்ல, எப்படியாவது அந்த படத்த பாக்கணும்னு முடிவெடுத்துட்டேன்..அவன் கதைசொன்ன இம்பாக்டுல அன்னைக்கு பூரா எனக்குள்ள அந்த பாட்டுதான்.

க்ளாஸ் முடிஞ்சி வெளியே போகும்போதும் அதே பாட்டுதான், அந்த பாட்டு என்னையும், என் திங்கட்கிழமை நண்பனுக்கும் ரொம்ப பிடிச்சதினாலே.. தெருவெல்லாம் “ஷோலே” பட “ஏ..தோஸுதி’” வருமே அது போல தோளில் மேல் இருவரும் கைபோட்டுக் கொண்டு, பாடிக் கொண்டே போனோம்.. அதை ,அந்த நிமிஷத்தை எப்படி சொல்றதுன்னே தெரியல. ஒரே சந்தோசமா இருந்திச்சு
<அடுத்த நாள் காலையில க்ளாஸூக்கு போனவுடனே..வழக்கபடி நாங்க ரெண்டுபேரும் அவங்க, அவங்க சீட்ல போய் உட்காந்திக்கிட்டோம்.. க்ளாஸ் எடுக்க வந்த அமுதவல்லி மேடம்.. எதையும் பத்தியும் பேசாம..எடுத்த்வுடனேயே என்னையும் என் திங்ககிழமை நண்பன் ஆனந்த ராஜையும் கூப்பிட..என்ன ஏதுன்னு புரியாம.. இரண்டு பேரும் எழுந்து நின்னோம்..

“இங்க வாங்கடா”  மேடம் கூப்ப்டாங்க..

எதுக்கா இருக்கும்ன்னு யோசிச்சிக்கிட்டே.. மெல்ல அவங்க பக்கத்தில போக,, மேடமுக்கு என்ன ஆச்சோ தெரியல.. எங்க தெருமுனையில குறி சொல்ற முனியம்மா மாதிரி கண்ணையெல்லாம் பெரிசா விரிச்சு வச்சிகிட்டு, பெருசு, பெருசா மூச்சை விட்டுகிட்டு ஒரு மாதிரி ரியாக்‌ஷன் கொடுத்திகிட்டு அங்கே இருந்த ஓரு நீட்டு குச்சிய எடுத்து சும்மா.. கையிலயும், முதுகிலெயும்.. ரெண்டு பேரையும் பின்னி எடுத்துட்டாங்க.. ஓவ்வொரு முறை அடிக்கும் போதும்..

“முளைச்சு மூணு இலைவிடல அதுக்குள்ள.. அதுக்குள்ள..”ன்னு சொல்லிகிட்டே அடிச்சாங்க..

எங்களுக்கு என்னனு புரியவே இல்ல.. நான் மட்டும் வீரனா “எங்கள எதுக்கா மேடம் அடிக்கீறீங்கன்னு கேட்டதுக்கு எக்ஸ்ட்ராவா ரெண்டு எனக்கு கிடைச்சுது.. இதையேல்லாம் பார்த்த என் க்ளாஸ் மேட்களுக்கு ரொம்ப வருத்தமாயி.. என் கேர்ள் ப்ரண்ட்.. ஆண்டாள் என்னிடம் மட்டும் தனியாக வந்து “எல்லாத்துக்கு காரணம் அவதான்னு “சொன்னா.. அவதான் மேடத்துக்கிட்ட என்னவோ காலையிலேயே சொன்னான்னு சொன்னதும் நான் மீனாட்சிய பார்த்தேன்.. அவ எனக்கு ப்ரெண்டே இல்ல.. குண்டா புசுக், புசுக்க்னு இருப்பா, ஆண்டாளுக்கு அவளை பிடிக்காது அதனால எனக்கும் அவளை பிடிக்காது. நான்  மீனாட்சி  பாக்கும் போது  என்னவோ தனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமில்லங்கற கணக்கா.. என்னைப் பார்த்ததும் மூஞ்சிய திரும்பிக்கிட்டா..

என்ன சொன்னேன்னு அப்ப கேட்கிற தைரியம் அப்ப எனக்கு இல்ல.. ஆனா இப்ப இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் மீனாட்சிய பார்த்ததும் கேட்கணும்னு தோணிச்சு.. அப்ப பாத்தா மாதிரி குண்டு பூசணிக்கா கணக்காதான் இருந்தா, கொஞ்ச நேரம் சகஜமா பேசினதுக்கு அப்புறம் மீனாட்சியிடம் “ஆமா.. அன்னைக்கு எதுக்காக மேடத்துக்கிட்ட அடிவாங்க வச்சே..?”
actress-swathi-stills-71
மீனாட்சி ஆச்சர்யத்துடன் விழுந்து விழுந்து சிரித்தபடியே.. “அத இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா..?” கேட்டா.. எப்படி மறக்க முடியும்ன்னு அடி வாங்குனவன் நானில்லேன்னு மனசுகுள்ளே நினைச்சுகிட்டே.. அசட்டு சிரிப்பு சிரித்தபடியே  அவளை பார்க்க..

“அது ஓண்ணுமில்ல அன்னைக்கு நீயும் ஆனந்த ராஜூம்.. என் பின்னாடி வந்துகிட்டே.. என்னை பத்தி பாட்டு பாடி கிண்டல் பண்ணீங்களா..அதத்தான் மேடத்துக்கிட்ட சொன்னேன்.. அதுக்குதான் அடிச்சாங்க...ன்னு சொல்லிட்டு வெட்கப்பட்டு சிரிச்சிகிட்டே போயிட்டா..

”என்ன கொடுமை சார் இது? நாலாம் க்ளாஸ் படிக்கும் போது, “என்னடி மீனாட்சீ.. சொன்னது என்னாச்சுன்னு”  எங்களுக்கு முன்னால் போன சாந்தி மீனாட்சிய பார்த்துகிண்டல் பண்ணி பாடற வயசா சார் அது.. ? ஆனந்தராஜூ எங்கடா இருக்கே..?


Blogger Tips -பட்டாளம் திரைவிமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..


Post a Comment

25 comments:

தராசு said...

நல்ல புனைவு,

//“முளைச்சு மூணு இலைவிடல அதுக்குள்ள.. அதுக்குள்ள..”ன்னு சொல்லிகிட்டே அடிச்சாங்க.. //

அப்ப நீங்கெல்லாம் மரமாத்தான் இருந்தீங்களா??????

ஷண்முகப்ரியன் said...

நன்றாக இருந்தது.சின்ன வயது ஞாபகங்களையே அடித்தளமாக வைத்துக் கதைகளை எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்.

பரிசல்காரன் said...

நடை - நச்
முடிவு - ச்சப்.

பாலா said...

meel pathivu ethukku thala

puthu padam ethum release aagalaiya????????????

summathaan keten

bala

Anonymous said...

உன்மையை வெளியில் அடிக்கடி சொல்லாதிங்க

கார்க்கிபவா said...

மீள்பதிவோ?

முரளிகண்ணன் said...

சீரியஸ் கதையா படிக்க ஆரம்பிச்சேன். சிரிப்புல முடிஞ்சிடுச்சு

நையாண்டி நைனா said...

அண்ணே...
தலைப்பு + பாடல் + அடி.
என்னால் கதை முழுவதும் படிக்கும் முன்னே முடிவை கிரகிக்க முடிந்தது என்று இந்த சபையிலே கூறி கொள்கிறேன்.

ஆனால் நீங்கள் கதை சொல்லும் பாங்கு மிக அலாதியானது.

Cable சங்கர் said...

//ஆனால் நீங்கள் கதை சொல்லும் பாங்கு மிக அலாதியானது.//

மிக்க நன்றி நைனா..

Cable சங்கர் said...

//அப்ப நீங்கெல்லாம் மரமாத்தான் இருந்தீங்களா??????//

கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க.

மிக்க நன்றி தராசண்ணே..

Cable சங்கர் said...

//நன்றாக இருந்தது.சின்ன வயது ஞாபகங்களையே அடித்தளமாக வைத்துக் கதைகளை எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்.//

மிக்க நன்றி சார்.. நீங்கள் சொன்னது போல அதுவும் உண்மைதான் சார்..

Cable சங்கர் said...

//நடை - நச்//

:)
//முடிவு - ச்சப்.//
:(
நன்றி பரிசல்.

Cable சங்கர் said...

நன்றி சாய்ரபானு, மயில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Cable சங்கர் said...

//சீரியஸ் கதையா படிக்க ஆரம்பிச்சேன். சிரிப்புல முடிஞ்சிடுச்சு//

இது காமெடி கதைதான் தலைவரே.. நிஜமாவே காமெடியா இருந்திச்சா..?

Cable சங்கர் said...

//மீள்பதிவோ?//

மீள்.. ரி எடிட்டட் பதிவு கார்க்கி

பாலா said...

ஓ.. மீள் பதிவா...?!

ஆனாலும் பரிசலும் & நைனாவும் சொன்னதோடு ஒத்துப்போகிறேன் சங்கர்.

வேறு தலைப்பையோ அல்லது மீனாட்சிங்கற பேரை கடைசியாவோ சொல்லியிருந்தா சஸ்பென்ஸ் போயிருக்காதுன்னு நினைக்கிறேன்.

அன்பேசிவம் said...

சங்கர் ஜீ குமுதம் ஒரு பக்க கதை மாதரியே கடைசியில் ஒரு ட்விஸ்ட். சூப்பர். பள்ளிபருவம் என்றுமே இனிப்பானதுதான். தொடர்ந்து எழுதுங்கள்.

அத்திரி said...

அண்ணே சந்தடி சாக்குல உங்க வயச சொல்லிட்டீங்களே..... ஹாஹாஹா....

அத்திரி said...

//பின்ன ஒருத்தன் எதுக்காக அடி வாங்குனான்னு தெரியாமயே அடி வாங்குறது எவ்வளவு கஷ்டம்னு அடிவாங்குனவனுக்குதான் தெரியும்.//

நீங்க ரொம்ப நல்ல்லவரா...............................அண்ணே

Cable சங்கர் said...

//நீங்க ரொம்ப நல்ல்லவரா...............................அண்ணே//

Cable சங்கர் said...

மேல் பின்னூட்டம் உங்களூக்குதான் அத்திரி அண்ணே..

Cable சங்கர் said...

//வேறு தலைப்பையோ அல்லது மீனாட்சிங்கற பேரை கடைசியாவோ சொல்லியிருந்தா சஸ்பென்ஸ் போயிருக்காதுன்னு நினைக்கிறேன்.//

இதுக்கு முன்னாடி இந்த கதைக்கு பேரு மீனாட்சி சாமான் நிக்காலோ..

Cable சங்கர் said...

நன்றி முரளி.. உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்

Prabhu said...

இயக்குனரே, உன் வயசு பாதி காந்தி போல இருக்கு. நீரும் என்னோட சேந்து யூத்துன்னு சொல்லிட்டு திரியிறேள்!

Cable சங்கர் said...

//இயக்குனரே, உன் வயசு பாதி காந்தி போல இருக்கு. நீரும் என்னோட சேந்து யூத்துன்னு சொல்லிட்டு திரியிறேள்!//

கதையில் வரும் சம்பவங்களும், நிகழ்வுகளும் அத்தனையும் கற்பனையே..