Thottal Thodarum

Mar 25, 2009

பெ’ண்’களூர்

கடந்த ரெண்டு நாட்களாய் பெங்களூரில் அவசர வேலை.. ஒரு பைனாசியரை பார்பதற்க்காக உடனடியாக வர சொல்லி அழைப்பு வர, நானும் என்னுடய புரொடியூசரும் ரயில் டிக்கெட் கிடைக்காமல்  காரிலேயே கிளம்பினோம். திங்கட்கிழமை ஆதலால் பெங்களூர் ஹைவேயே எங்களுக்காக அலம்பி விட்டது போலிருக்க, சுமார் 51/2 மணிநேரத்தில் பெங்களூருக்குள் போய் சேர்ந்துவிட்டோம்.. ஒரே வெயில்

************************************************************************************************]

ரிசெஷன்காரணமாய் ஸ்டார் ஓட்டல் எல்லாம் புக்கிங் இல்லாமல் காய்கிறது. நாங்கள் பிரிகேட் ரோடில் உள்ள Iris என்கிற ஓட்டலில் தங்கினோம் ஆறாயிரம் ரூபாய் ரூம் மூவாயிரம் ரூபாய்க்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் ஃபபே இலவசம். அருமையான கவனிப்பு, அற்புதமாய் உள்ளமைக்கபட்ட ரூம்கள்.. குளு, குளு ஏசி, என்று அருமையாய் இருந்தது. வெளியே கொளுத்தியது.
ஏசியை நினைக்கும் போது சுஜாதாவின் ஒரு நடுப்பகல் மரணம் கதையில் ஒரு வசனம் வரும் ”ஏசி ரூம் இருக்குமா?” “பெங்களூர் முழுக்கவே ஏசி தனியா ஏசி வேறயா“ என்பது போல் வசனம்  வரும். குளோபல் வார்மிங். எங்கள் ரூமிலிருந்து பிரிகேட் ரோட் முழுவதையும் பார்க்கலாம். அவ்வளவு அழகு. முக்கியமாய் எங்களை வரவேற்ற ரிஷப்ஷன் பெண்.. ம்ஹூம்ம்ம்ம்

************************************************************************************************
325969_f520

பெண்கள் எல்லோரும் செய்து வைத்ததை போல் கடைகளில் வைத்திருக்கும், பொம்மை போல இருக்கிறார்கள் அதே அளவுகளில்.  இவர்களை எல்லாம் எங்கிருந்து செய்து அனுப்புகிறார்க்ள்? அதிலும் அந்த பிரிகேட் ரோட், எம்.ஜி.ரோடில் நடப்பவர்கள் முக்கால்வாசி பேர் ஏறக்குறைய தேவதைகள். சரிவான அந்த ரோட்டில் அவர்கள் ’மிதந்த;படி நடப்பதை பார்த்து கொண்டிருந்தாலே போதும் போலிருக்கிறது. கருப்பாய், மாநிறமாய், சிகப்பாய், ஈரானிய சிகப்பாய், நீட்டு மூக்காய், கொஞ்சம் விரிந்த மூக்காய், பெரியதாய், சின்னதாய், மீடியமாய், அழகான கண்கள், மருண்ட கண்கள், அரை போதையில் மயக்கும் கண்கள், ரகசியம் பேசும் கண்கள், நீண்ட முடி, ஷார்ட் கட், பாய்கட், உயரம், குள்ளம்,மீடியம், சற்றே அகண்ட இடை, மெல்லிடை, அட இதுதான் இடை பெருத்தவள்,  நளினமாய் பாய்ப்ரெண்டுடன் ஸ்காட்சையோ, பீரையோ, பகார்டி ஃபிரிஸரையா சப்பிக் கொண்டு, லேசான போதையுடனும், ஸ்மோக் பாரில் நளினமாய் சிகரெட் பிடிக்கும் மெல்லிய, தடித்த, அதரங்களின் அழகும், என்று “கடவுளே உனக்கு  ஏன் இத்தனை காண்டு”

பெங்களூர் அல்ல பெ’ண்’களூர்

 

டிஸ்கி : தலைப்பு கொடுத்த மறைந்த எழுத்தாளர் இரவிசந்திரன் அவர்களுக்கு நன்றி


Blogger Tips -விஞ்ஞான கதை-1- பரிசல்காரன் கதை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..


Post a Comment

59 comments:

மேவி... said...

sema ya irukku boss.....
naan blorekku pona pothu kuda ithe madiri feelings thaan.....
app thaan therinthu konden kadavul evvalavu periya rasanaikararnnu

Anonymous said...

மாதத்தில் பதினைந்து நாள் பெங்களூரில் இருக்கும் தமிழ் உதயனை கேட்டு பாருங்கள், அனேகமாக பெங்களூரில் சூடான கிளைமேட் அவர் விட்ட பேரு முச்சு தான்

Kanchana Radhakrishnan said...
This comment has been removed by the author.
ஷங்கர் Shankar said...

எங்க பெங்களூருக்கு வந்து தக்க அனுமதியில்லாமல் ஜொள்ளு விட்டு போயிருக்கீர்கள்! இதை வன்மையாக கண்டிக்கிறேன்!

Anonymous said...

///“கடவுளே உனக்கு ஏன் இத்தனை காண்டு”///

பெங்களூர் அல்ல பெ’ண்’களூர்

ஷங்கர் Shankar said...

\\ நளினமாய் பாய்ப்ரெண்டுடன் ஸ்காட்சையோ, பீரையோ, பகார்டி ஃபிரிஸரையா சப்பிக் கொண்டு, லேசான போதையுடனும், ஸ்மோக் பாரில் நளினமாய் சிகரெட் பிடிக்கும் மெல்லிய, தடித்த, அதரங்களின் \\

இருங்க இருங்க இவங்களை எல்லாம் ராமசேனா அமைப்பிடம் போட்டுகொடுக்கிறேன்! ஹி ஹி ஹி!

Raju said...

அண்ணே..போன வேலைய மட்டும் பாத்துருக்க வேண்டியது தான....
எதொ எதொயோ பாத்து ஏன் "சூடாகுறீங்க"?

வினோத் கெளதம் said...

தல,

வாழ்த்துக்கள் போன விஷயம் ஜெயம் உண்டு ஆகட்டும்.

Photo நீங்க எடுத்ததா..நல்ல இருக்கு..

நல்ல ரசனையான Photo.

Cable சங்கர் said...

//kadavul evvalavu periya rasanaikararnnu//

ஆனா ஓரவஞ்சனைக்காரனும்தான்.. சென்னை மட்டும் என்ன பாவம் செஞ்சுது..

பரிசல்காரன் said...

1) நல்ல விதமா ‘டிஸ்கஷன்’ பண்ணி படமெடுங்கப்பா.. போன இடத்துல வேலையைப் பார்க்காம என்னாதிது ஃபீலிங்கு? (பொறாமை.. பொறாமை!!)

2)சுஜாதா நல்லாத்தான் கூடுவிட்டு கூடு
பாயறார். அவரைப் பத்தி எழுதின உடனே.. அடுத்த பாரா எழுத உங்களுக்குள்ள புகுந்துட்டாரே..

3) இதே தலைப்பில் லக்கிலுக்கும் எழுதியிருக்கிறார்.

தராசு said...

//கருப்பாய், மாநிறமாய், சிகப்பாய், ஈரானிய சிகப்பாய், நீட்டு மூக்காய், கொஞ்சம் விரிந்த மூக்காய், பெரியதாய், சின்னதாய், மீடியமாய், அழகான கண்கள், மருண்ட கண்கள், அரை போதையில் மயக்கும் கண்கள், ரகசியம் பேசும் கண்கள், நீண்ட முடி, ஷார்ட் கட், பாய்கட், உயரம், குள்ளம்,மீடியம், சற்றே அகண்ட இடை, மெல்லிடை, அட இதுதான் இடை பெருத்தவள், நளினமாய் பாய்ப்ரெண்டுடன் ஸ்காட்சையோ, பீரையோ, பகார்டி ஃபிரிஸரையா சப்பிக் கொண்டு, லேசான போதையுடனும், ஸ்மோக் பாரில் நளினமாய் சிகரெட் பிடிக்கும் மெல்லிய, தடித்த, அதரங்களின் அழகும்,//

இவ்வளவு தூரம் ஆராய்ச்சி பண்ணுனதுக்கப்புறம் போன வேலைல கொஞ்சமாவது செஞ்சீங்களா ?

முரளிகண்ணன் said...

வழுக்கி விழுந்துவிடவில்லை தானே?

நீங்கள் விட்ட ஜொள்ளில் அருகிலிருப்போர்.

Anonymous said...

\\ தராசு said...
இவ்வளவு தூரம் ஆராய்ச்சி பண்ணுனதுக்கப்புறம் போன வேலைல கொஞ்சமாவது செஞ்சீங்களா ? \\\\\

mudiyalaiyeppaa!

Anonymous said...

Eppadi erunthalum tamil ladies pola varuma?

jaser

ஷண்முகப்ரியன் said...

உங்கள் படம் நிச்சயம் 'மாஸ் அப்பீலுடன்'இருக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்,ஷங்கர்.WISH YOU ALL THE SUCCESS.

வெண்பூ said...

ஹி..ஹி.. பதிவு நல்லா இருக்கு.. ஃபோட்டோ சூப்பரா இருக்கு..

ARV Loshan said...

சூப்பர்.. பல பதிவுகளில் சுஜாதா பக்தர் என்று காட்டுறீங்க..

சொல்லிட்டீங்கல்ல.. அடுத்த flight பெங்களூருக்கு போட்டாப் போச்சு..

நையாண்டி நைனா said...

/*“கடவுளே உனக்கு ஏன் இத்தனை காண்டு”*/

பாசு.... இதை நாங்க சொல்லணும்.....
இப்படி ரசிக்க!!(stomach fires much)இளைஞர்களான எங்களை அனுப்பாமல் சிறுவன் கேபிளை அனுப்பி வைத்திருக்கிறாயே, “கடவுளே உனக்கு ஏன் இத்தனை காண்டு” என்று.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே இனிமே ஈ.சி.ஆர் க்கு பதிலா அங்க போய்ருவோமா??

:)

K.S.Muthubalakrishnan said...

nice Photo, good worthy comments

Anbu said...

ஹி..ஹி.. பதிவு நல்லா இருக்கு.. ஃபோட்டோ சூப்பரா இருக்கு..

repeat

Suresh Kumar said...

மிதந்த;படி நடப்பதை பார்த்து கொண்டிருந்தாலே போதும் போலிருக்கிறது. கருப்பாய், மாநிறமாய், சிகப்பாய், ஈரானிய சிகப்பாய், நீட்டு மூக்காய், கொஞ்சம் விரிந்த மூக்காய், பெரியதாய், சின்னதாய், மீடியமாய், அழகான கண்கள், மருண்ட கண்கள், அரை போதையில் மயக்கும் கண்கள், ரகசியம் பேசும் கண்கள், நீண்ட முடி, ஷார்ட் கட், பாய்கட், உயரம், குள்ளம்,மீடியம், சற்றே அகண்ட இடை, மெல்லிடை, அட இதுதான் இடை பெருத்தவள், நளினமாய் பாய்ப்ரெண்டுடன் ஸ்காட்சையோ, பீரையோ, பகார்டி ஃபிரிஸரையா சப்பிக் கொண்டு, லேசான போதையுடனும், ஸ்மோக் பாரில் நளினமாய் சிகரெட் பிடிக்கும் மெல்லிய, தடித்த, அதரங்களின் அழகும், என்று “கடவுளே உனக்கு ஏன் இத்தனை காண்டு”/////////////////////////


இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் அதிகம் .

மேவி... said...

"Cable Sankar said...
//kadavul evvalavu periya rasanaikararnnu//

ஆனா ஓரவஞ்சனைக்காரனும்தான்.. சென்னை மட்டும் என்ன பாவம் செஞ்சுது.."

amanga ange ellam romba freeya irupanga....
naan vera 6ft irukkiren la...
athanal en nilamai romba kastama thaan irukkum naan blore pogum pothu

மோனி said...

வேற என்னத்த சொல்றது .
ஹி ஹி ஹி
படம் நல்லா இருக்கு ..

ஹாட் ஸ்பாட் ல
போட்டோவை மாத்துங்க சங்கர் ...
ரொம்ப நாளா இப்படியே இருக்காங்க
ரெண்டு பேருக்குமே இடுப்பு வலிக்கப்போவுது ...

Ganesan said...

யப்பா சென்னைல பதிவர்கள் மத்தியில‌ ஓரே டாக் ப்பா' என்னப்பா என்ன விசயம், இந்த கேபிள் சங்கர்னு ஒரு இருந்தாருப்பா,ஆமா எனக்கு கூட தெரியுமே


ஆங், அவரு இப்போ சொள்ளு சங்கர் ஆயிட்டருப்பா.


அப்படியா, நானும் ஓரு போன் போட்டு கேட்டுரென், வயசான காலத்தில இதெல்லாம் தேவையானு கேட்டுறேன்.

நையாண்டி நைனா said...

அண்ணே உங்களுக்கான பாட்டை என்னோட பதிவுலே போட்டாச்சு.

அக்னி பார்வை said...

அப்ப்ட்யே ஒரு எட்டு ஹீரோயின் செலக்‌ஷ்னையும் முடிக்க வேண்டியது தானே!

பரிசல்காரன் said...

//எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே இனிமே ஈ.சி.ஆர் க்கு பதிலா அங்க போய்ருவோமா??
//
வ.மொ

Cable சங்கர் said...

//அப்ப்ட்யே ஒரு எட்டு ஹீரோயின் செலக்‌ஷ்னையும் முடிக்க வேண்டியது தானே!//

அடியேங்கிறதுக்கு ஒருத்தியையும் காணோமாம் இதுல நீங்க வேற நம்ம புரொடியூசர் நம்மை காட்டி பைனான்ஸியர் ரெடி பண்ண போனாரு.. இந்த லட்சணத்துல ஹீரோயின் செலக்‌ஷனா..?

Cable சங்கர் said...

//அண்ணே உங்களுக்கான பாட்டை என்னோட பதிவுலே போட்டாச்சு.//

பார்த்தாச்சுண்ணே.. மிக்க நன்றி

Cable சங்கர் said...

//வயசான காலத்தில இதெல்லாம் தேவையானு கேட்டுறேன்.//

நீங்க வேற யாரையோ கேபிள் சங்கர்னு நினைச்சு பேசிகிட்டு இருக்கீங்க.. அவரு ரொம்ப யூத்து.

Cable சங்கர் said...

//ரொம்ப நாளா இப்படியே இருக்காங்க
ரெண்டு பேருக்குமே இடுப்பு வலிக்கப்போவுது//

:):):)

Cable சங்கர் said...

//ஹி..ஹி.. பதிவு நல்லா இருக்கு.. ஃபோட்டோ சூப்பரா இருக்கு..

repeat//

நன்றி முத்து பாலகிருஷ்ணன். அன்பு. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

/சூப்பர்.. பல பதிவுகளில் சுஜாதா பக்தர் என்று காட்டுறீங்க..//

நன்றி லோஷன்.. அவரின் பாதிப்பு இருக்கிறது என்பது என்னால் தவிர்க்க முடியவில்லை லோஷன்.

Cable சங்கர் said...

//அண்ணே இனிமே ஈ.சி.ஆர் க்கு பதிலா அங்க போய்ருவோமா??//

ம்ஹூஹூம்ம் நல்லாத்தானிருக்கும்.

Cable சங்கர் said...

//பாசு.... இதை நாங்க சொல்லணும்.....
இப்படி ரசிக்க!!(stomach fires much)இளைஞர்களான எங்களை அனுப்பாமல் சிறுவன் கேபிளை அனுப்பி வைத்திருக்கிறாயே, “கடவுளே உனக்கு ஏன் இத்தனை காண்டு” என்று.//

யூத் என்ற பதத்திற்கு தமிழில் சிறுவன் அல்ல, இளைஞர் பரவாயில்லை நன்றி நைனா..

Cable சங்கர் said...

//உங்கள் படம் நிச்சயம் 'மாஸ் அப்பீலுடன்'இருக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்,ஷங்கர்.WISH YOU ALL THE SUCCESS.//

மிக்க நன்றி சார்.. உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கட்டும்

Cable சங்கர் said...

நன்றி ஷங்கர், மாயாவி, ராதாகிருஷ்ணன் சார், தராசு, வெண்பூ, மயில் ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும்.. நன்றி

யூர்கன் க்ருகியர் said...

இன்னும் ரெண்டு மூணு போட்டோ இணைத்திருக்கலாம்!

ராஜ நடராஜன் said...

பாலைவனத்தில் கண்ணக்கட்டுதே!

அரவிந்தன் said...

எங்க ஊருக்கு வந்து எந்த பதிவரையும் சந்திக்காமல் சென்ற கேபிளாலர் அவர்களை வண்மையாக கண்டிக்கிறோம்.

அடுத்தமுறை வரும்போது தகவல் சொல்லிவிட்டு வரவும்

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

அத்திரி said...

ஹும்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நானும் வந்திருக்கனும்.. மிஸ் பண்ணிட்டேன்.... வாழ்க கேபிள் யூத்

Suresh said...

anbu ulla cable sankar avargale neenga bangalore vanthatha soli iruntha nan ungala vittu kupittu irupaen .. apprum unga mail id kudunga phone number vangi pesuran ...

seikirame neenga director aga valthukkal

joe vimal said...

பாஸ் வர வர யூத் ஆய்ட்டே வரீங்க .கலக்கல் போங்க financier என்ன சொன்னார் படம் எப்போ ஆரமிக்க போறீங்க .


ஆவலுடன்
ஜோ

kishore said...

இருங்க கொஞ்சம் ஜொள்ளு விட்டுட்டு வரேன்..

Prabhu said...

அந்த வயித்தெரிச்சல ஏன் கிளப்புறீங்க. எங்கள மாதிரி சின்னப் பையன அங்க அனுப்பாம உங்கள(யூத்து!?) எல்லாம் அனுப்புறாங்க.

Cable சங்கர் said...

//அந்த வயித்தெரிச்சல ஏன் கிளப்புறீங்க. எங்கள மாதிரி சின்னப் பையன அங்க அனுப்பாம உங்கள(யூத்து!?) எல்லாம் அனுப்புறாங்க.//

:):)-

Cable சங்கர் said...

///இருங்க கொஞ்சம் ஜொள்ளு விட்டுட்டு வரேன்..//

இதையெல்லாம் சொல்லிட்டு செய்வாங்களா..?

Cable சங்கர் said...

//பாஸ் வர வர யூத் ஆய்ட்டே வரீங்க .கலக்கல் போங்க financier என்ன சொன்னார் படம் எப்போ ஆரமிக்க போறீங்க .


ஆவலுடன்
ஜோ//

மிக்க நன்றி ஜோ.. இன்னும் முடிவாகவில்லை ஜோ..

Cable சங்கர் said...

//anbu ulla cable sankar avargale neenga bangalore vanthatha soli iruntha nan ungala vittu kupittu irupaen .. apprum unga mail id kudunga phone number vangi pesuran ...
//

மிக்க நன்றி சுரேஷ்... என்னுடய மெயில் ஐடி மேலே தொடர்புக்கு இடத்தில் உள்ளது. மீண்டும் நன்றி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

//ஹும்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நானும் வந்திருக்கனும்.. மிஸ் பண்ணிட்டேன்.... வாழ்க கேபிள் யூத்//

இப்பத்தான் கேட்கவே நல்லாருக்கு.. வாழ்க அத்திரி.. வாழக் நீ எம்மான்.

Cable சங்கர் said...

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அரவிந்தன் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

Cable சங்கர் said...

//இன்னும் ரெண்டு மூணு போட்டோ இணைத்திருக்கலாம்!//

தேட டைம் இல்லை ஜூர்கேன் மிக்க நன்றி உங்க வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

//பாலைவனத்தில் கண்ணக்கட்டுதே!/

:) மிக்க நன்றி ராஜ நடராஜன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..

பாலா said...

சங்கர்.. அந்த ‘ரைட்’ சைட்ல இருக்கற பொண்ணையே உங்க படத்துக்கு ஹீரோயினா போடுங்களேன்! குஜிலி சூப்பரா கீது!

அடுத்த முறை அண்ணி சேட்ல கிடைச்சா.. உங்க கதை கந்தல்தான் சாமி..! பார்த்து விடுங்க ஜொள்ளை..!

கேபிள் சங்கர் ஜொள்ளு சங்கர் ஆய்ட்டு வர்றீங்களா..! :-)

பாலா said...

செலவு உங்க தலையில விழலயே?
------------

வர்ணனைகள் எல்லாம் கலக்குது போங்க..! சுஜாதாதான் இப்படி பெங்களூரை மாஞ்சி.. மாஞ்சி வர்ணிப்பார். நீங்க அவரை நினைவு படுத்தறீங்க!

Cable சங்கர் said...

//செலவு உங்க தலையில விழலயே?
------------

வர்ணனைகள் எல்லாம் கலக்குது போங்க..! சுஜாதாதான் இப்படி பெங்களூரை மாஞ்சி.. மாஞ்சி வர்ணிப்பார். நீங்க அவரை நினைவு படுத்தறீங்க!//

செலவு நம்ம தலையில இல்ல.. மிக்க நன்றி பாலா.. எவ்வளவு தவிர்த்தாலும் சுஜாதாவை தவிர்க்க முடியவில்லை.

Venkatesh Kumaravel said...

நீங்க மணிப்பாலுக்கு வரணும் அண்ணே!

Sameer said...

நான் கொஞ்ச நாள் பெங்களூரில் வேலை தேடி கொண்டிருந்தேன். வேல தேடற டென்ஷன்ல நீங்க வசீகரிச்ச அழகல்லாம் அன்னக்கி எனக்கு கொடுமையா தெரிஞ்சு.