Thottal Thodarum

Mar 3, 2009

தீ – திரைவிமர்சனம்

ஒரே மாதத்தில் 30,000 ஹிட்ஸுகளை கொடுத்த, வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

www.tkada.com

நமீதாவை எதிர்பார்த்து போனால் ஆம்பளை நமீதா போல் நிர்வாணமாய் வருகிறார் சுந்தர்.சி. முதல் காட்சியிலேயே அரண்டு போக வைத்து விட்டார்கள். அதற்கு அப்புறம் எப்படி படம் பார்க்கிறது? எதை பார்த்தாலும் மிரட்சியாவே தெரியுது.வழக்கமான விஜயகாந்த பாணி போலீஸ் ரவுடி அரசியல்வாதி பிரச்சனைதான். ஒன்றும் புதுசாய் இல்லையென்றாலும், பிரசண்டேசனிலாவது ப்ரெஷாக கொடுக்க முயற்ச்சித்திருக்கலாம், தெலுங்கு படம் போல சரக், சரக் கென்று எபெக்ட் போட்டு நம்மை பயமுறுத்துகிறார்கள்.

Tamil - Movie-thee-movie-stills (10)

கட்சி தலைவர் சாயாஜி ஷிண்டே என்கிறார்கள், ஆனால் முதலமைச்சர் வேறு எவரோ.. அவர் கட்சி கெட்ட எம்.எல்.ஏ ஜி.எம்.குமார். இவரகள் இருவரும் சேர்ந்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்களாம்.  இந்த லட்சணத்தில் இவர்களின் கட்சி முக்கிய முடிவுகள் எல்லாவற்றையும் எடுப்பது, பிரபல நடிகை ருச்சிதேவி. அதாங்க நம்ம நமீதாதான். இவங்க எல்லாம் கெட்டவங்களாம், ஆனா முதல்மைச்சர் மட்டும் ரொம்ப நல்லவராம். ஸ்….ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா கண்ணை கட்டுதே..

சுந்தர்.சி போலீஸ் இன்ஸ்பெக்டராம், அவர் ப்ரோமோஷன் கொடுத்து ஏசிபி ஆனதுக்கு பின்னாடி கூட இன்ஸ்பெக்டர்னே கூப்பிடறாங்க.. அதைவிடுங்க, மொட்டை அடிச்சு கொஞ்ச முடி மொளைச்ச ஆளை அடையாளம் தெரியாதா என்ன.? அது தெரியாமா.. அவருக்கு புது ஆளுன்னு நினைச்சு, அவரை எம்.எல்.ஏ ஆக்கி, கடைசில அவரு தான் இன்ஸ்.. சே சாரி ஏசிபின்னு தெரிஞ்சதும், அதிர்ச்சியடையராங்களாம். பேசாம எம்.ஜி.ஆர். படம் போல மச்சம் வச்சிருந்திருக்கலாம்.www.tkada.com

புதுமுகம் ரம்யா பாவம் ஏதோ வெளிநாட்டுல ரெண்டு பாட்டு பாடுனதோட சரி, மூணு குழந்தைக்கு தாயா வர்றாங்க.. செத்து போறாங்க.. அதிலேயும், கலவரத்துல அவங்கள கொல்ல்லுற சீன்  இருக்கே அது ஒரு பெரிய காமெடி,

படத்தின் ஹைலைட்டா இருக்கிற விஷயம், போலீஸ் ஒரு நாள் ஸ்டைரைக் பண்ணா என்னவாகும்ங்கிறாது தான். ஆனா அதை எவ்வளவு அமெச்சூர் தனமா எடுக்க முடியுமோ. அவ்வளவு கேவலமா எடுத்திருக்காங்க.
thee-no17-2008_34

நமிதா ஒரு இருவது நிமிஷம் வர்றாங்க, ஏசி தியேட்டர் எல்லாம் சூடாகுது. முமைத்கான் லிப் சிங்கே இல்லாம ஒரு பாட்டை பாடுறாங்க.. பாட்டை யார் பார்த்தா?

தீ – பத்தலையே பரட்டை…

டிஸ்கி;

சன் டிவி இரண்டு குடும்பங்களுக்கிடையே சண்டை இருந்த போது வாங்கிய படம் போலிருக்கிறது. பல இடங்களில் வசனங்கள் அவர்களுக்கே ஆப்பு வைக்கிறது.
Blogger Tips -கொத்து பரோட்டா பதிவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

48 comments:

பாலா said...

//பேசாம எம்.ஜி.ஆர். படம் போல மச்சம் வச்சிருந்திருக்கலாம். //

ஹா... ஹா.. ஹா... கலக்கல்.. கேபிள் சார்..!!

நமத்து போன ‘தீ’.

பாலா said...

அட... மீ த ஃப்ர்ஸ்டா....?!!!!

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே இந்த மாதிரி தினமும் நமிதா படத்த போட்டீங்கன்னா ஒரே மாசத்துல முப்பது இலட்சம் ஹிட்டு அள்ளலாம்ணே :)

கார்க்கிபவா said...

/எம்.எம்.அப்துல்லா said...
9:53 AM
அண்ணே இந்த மாதிரி தினமும் நமிதா படத்த போட்டீங்கன்னா ஒரே மாசத்துல முப்பது இலட்சம் ஹிட்டு அள்ளலாம்ணே//

தப்புண்னே மூனு கோடி..

Anbu said...

நல்ல வேளை ஒரு 50 ரூபாய் மிச்சம்!!! சேமிக்க உதவியதற்கு நன்றி அண்ணா

முரளிகண்ணன் said...

கேபிள் சார் படங்களும், விமர்சனமும் அதனைத் தொடர்ந்த கமெண்டுகளும் கலக்கல்.

நையாண்டி நைனா said...

நமீதாவின் மார்கட் சரிந்து கொண்டுள்ளது என்பது இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது.

ஷண்முகப்ரியன் said...

உங்கள் விமர்சனத்துக்கு நீங்கள் கேட்ட மாதிரியே தமிழ் மணம்,தமிலிஷ், என்-தமிழ் மூன்று வோட்டுக்களையும் போட்டிருக்கிறேன்.நீங்கள் பட்ட சிரமத்துக்கு இந்த ஆறுதலாவது வேண்டாமா,ஷங்கர்?

SurveySan said...

நமீக்காக பாக்கலாம் போலருக்கே? :)

Ganesan said...

நமீதாவின் மார்கட் சரிந்து கொண்டுள்ளது என்பது இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது.

கமெண்டிலே சிறந்த கமெண்ட் இது தான்

Indian said...

Look at the third picture.
Namitha has got six packs.

Anonymous said...

//
Look at the third picture.
Namitha has got six packs.
//

But why people are so stuck with the first two ?

Joe said...

முதல் படத்தில சாயாஜி ஷிண்டே-வுக்கு பக்கத்தில நிக்கிறது யாரு?

பொன்னம்பலத்துக்கு வெள்ளையடிச்ச மாதிரி? ;-)

Cable சங்கர் said...

//முதல் படத்தில சாயாஜி ஷிண்டே-வுக்கு பக்கத்தில நிக்கிறது யாரு?

பொன்னம்பலத்துக்கு வெள்ளையடிச்ச மாதிரி? ;-)//

அவரு தாங்க.. நம்ம ஆம்பளை நமீதா.. சுந்தர்சி.. ஜோ..

நையாண்டி நைனா said...

/*அவரு தாங்க.. நம்ம ஆம்பளை நமீதா.. சுந்தர்சி.. ஜோ..*/
அப்படின்னா... உண்மையில் நமிதா பொம்பளையா????

நையாண்டி நைனா said...

/*ஏசிபி ஆனதுக்கு பின்னாடி கூட இன்ஸ்பெக்டர்னே கூப்பிடறாங்க.. */

பிரமோசன் வாங்குனது பிடிக்க வில்லை என்றால் 'பின்னாலே' தானே பாசு பேசுவாங்க.

நையாண்டி நைனா said...

/*அதைவிடுங்க, மொட்டை அடிச்சு கொஞ்ச முடி மொளைச்ச ஆளை அடையாளம் தெரியாதா என்ன.? */

க்கும்... ஆனாலும் உங்க நக்கலுக்கு அளவே இல்லைங்க.

அப்படி ஆளையே மாத்துற மாதிரி மேக் அப் போட்டு, நல்லா நடிச்சி, அவார்டு கருவாடுன்னு எதையாவது வாங்கிட்டாங்கன்னு வையுங்க அப்புறம் அவங்க கல்லா எப்படி நெறையும்.

நையாண்டி நைனா said...

/*தீ – பத்தலையே பரட்டை…*/
தீ - சன் டிவி காரணமா கண்ணையும், படம் பார்க்க போனா "சீட்டையும்" கொளுத்திருச்சி"

T.V.ராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
T.V.ராதாகிருஷ்ணன் said...

சன் டிவி இரண்டு குடும்பங்களுக்கிடையே சண்டை இருந்த போது வாங்கிய படம் போலிருக்கிறது. பல இடங்களில் வசனங்கள் அவர்களுக்கே ஆப்பு வைக்கிறது.

:-))))

தராசு said...

//நமீதாவை எதிர்பார்த்து போனால் ஆம்பளை நமீதா போல் நிர்வாணமாய் வருகிறார் சுந்தர்.சி. முதல் காட்சியிலேயே அரண்டு போக வைத்து விட்டார்கள். அதற்கு அப்புறம் எப்படி படம் பார்க்கிறது? எதை பார்த்தாலும் மிரட்சியாவே தெரியுது.//

படத்துக்கு போறதுக்கு முன்பே போட்டுத் தாக்கணும்கற முடிவோடதான் போவீங்க போலிருக்குது.

உண்மைத்தமிழன் said...

இப்படி நமீதா, நமீதான்னு தியேட்டர், தியேட்டரா ஓடிக்கிட்டிருந்தா முதுகு வலி வராம என்ன செய்யும்..?

நையாண்டி நைனா said...

/*இப்படி நமீதா, நமீதான்னு தியேட்டர், தியேட்டரா ஓடிக்கிட்டிருந்தா முதுகு வலி வராம என்ன செய்யும்..?*/

ஓட்டை குத்த சொன்னா....! இப்படி உள் குத்து குத்தலாமோ?

Cable சங்கர் said...

//ஓட்டை குத்த சொன்னா....! இப்படி உள் குத்து குத்தலாமோ?//
ஏதோ சின்ன பையன் யூத்து நான் வலியை மறக்கறதுக்கு நமிதாவை பாக்க போணா.. எவ்வளவு காண்டு பாருங்க..

Cable சங்கர் said...

//இப்படி நமீதா, நமீதான்னு தியேட்டர், தியேட்டரா ஓடிக்கிட்டிருந்தா முதுகு வலி வராம என்ன செய்யும்..?//

வலிய மறக்கத்தான்.. அண்ணே..

Prabhu said...

//நமீதாவின் மார்கட் சரிந்து கொண்டுள்ளது என்பது இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது.//

ஹேய்... யாருப்பா அது... வோட்ட பாருங்க... அதுல நமீதாவுக்கு எத்தனையோ?... கூகுள் வர்றவன் சுந்தர்.சி யவா தேடறான்? நமீதாவத்தான தேடுறான்.... நமீதா இப்படி சர்வதேச லெவல்ல உயரும்னு நெனச்சுக் கூட பாக்கல... தமிழன நம்பவே முடியல... எல்லாம் ஆபிஸ்ல உக்காந்து இதத்தான் பண்றாய்ங்க போல...

Cable சங்கர் said...

//படத்துக்கு போறதுக்கு முன்பே போட்டுத் தாக்கணும்கற முடிவோடதான் போவீங்க போலிருக்குது.//

அப்படியெல்லாம் இல்லைண்ணே.. முதகாட்சியிலேயே நம்மளை போட்டு தாக்குறாங்களே.. அதான் தாங்க முடியலை.. ரொம்ப நன்றிங்கண்ணே.. உங்க வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

//அப்படின்னா... உண்மையில் நமிதா பொம்பளையா????//

நைனா.. எங்கள் தங்கத்தலைவி.. நமிதாவை கிண்டல் பண்ணா சும்மாயிருக்க மாட்டேன்.. ம்ம்ம்.. சாக்கிரதை..

Cable சங்கர் said...

அட ஹிட்ஸ் வரதுக்கு இப்படி ஒரு வழி இருக்கா.?? உடனே பத்து நமீதா படத்தை போட்டு மொக்கை போடவேண்டியதுதான்.

Cable சங்கர் said...

நன்றி அப்துல்லாண்ணே.. கார்கி..

Cable சங்கர் said...

//But why people are so stuck with the first two ?//
சிக்ஸ் பேக்ல ரெண்டு பேக் ‘கண்ணுல குத்துற மாதிரி இருக்கிறதனலயோ..?

Cable சங்கர் said...

//நமீதாவின் மார்கட் சரிந்து கொண்டுள்ளது என்பது இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது.

கமெண்டிலே சிறந்த கமெண்ட் இது தான்//

வாங்கண்ணே.. என்ன ஊருல இல்லையா..? நன்றிங்க்ண்ணே.. ரொம்ப நாள் கழிச்சு வந்ததுனாலே.. உஙகள விடறேன். இல்லன்னா.. நமிதா சங்க தலைவர்ங்கிற முறையில அவ்வளவுதான்.

Cable சங்கர் said...

//உங்கள் விமர்சனத்துக்கு நீங்கள் கேட்ட மாதிரியே தமிழ் மணம்,தமிலிஷ், என்-தமிழ் மூன்று வோட்டுக்களையும் போட்டிருக்கிறேன்.நீங்கள் பட்ட சிரமத்துக்கு இந்த ஆறுதலாவது வேண்டாமா,ஷங்கர்?//

ரொம்ப நன்றி சார்.. என் கஷ்டம் உங்களுக்காவது புரியிதே..?

அக்னி பார்வை said...

வேணா விட்டுறுங்கா ..

அழுதிடுவேன்... அழுதிடுவேன்

நையாண்டி நைனா said...

/*நைனா.. எங்கள் தங்கத்தலைவி.. நமிதாவை கிண்டல் பண்ணா சும்மாயிருக்க மாட்டேன்.. ம்ம்ம்.. சாக்கிரதை..*/

சகோதர யுத்தம் தேவை இல்லை என்ற காரணத்தால் நான் வழி விடுகிறேன்

இப்படிக்கு
அண்ட சராசர பேரொளி ஷகிலா பாசறை

நையாண்டி நைனா said...

ஹேய்... பனை மரத்திலே வவ்வாலா?
ஷகிலாவுக்கே சவாலா!

ஹேய்... பனை மரத்திலே வவ்வாலா?
ஷகிலாவுக்கே சவாலா!

ஹேய்... பனை மரத்திலே வவ்வாலா?
ஷகிலாவுக்கே சவாலா!

இப்படிக்கு
'சக்சஸ்' ஷகிலா சங்கம்,
திறந்தமடம் கிளை.

Cable சங்கர் said...

//வேணா விட்டுறுங்கா ..

அழுதிடுவேன்... அழுதிடுவேன்//

ஏன் தலைவா நானிருக்கும்போது நீ அழலாமா.. நான் பாத்துக்கறேன். அக்னி அழுக்கூடாது..

Cable சங்கர் said...

//சகோதர யுத்தம் தேவை இல்லை என்ற காரணத்தால் நான் வழி விடுகிறேன்
//

அதானே பாத்தேன்,

ஸ்ரீ.... said...

சூப்பர் விமர்சனம். மறுபடியும் மக்கள் பணத்த மிச்சமாக்கிட்டீங்க.

ஸ்ரீ....

Vidhya Chandrasekaran said...

:((

Cable சங்கர் said...

நன்றி ஸ்ரீ.. வித்யா.. உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.

M.VIJAYKUMAR said...

Vanakkam.Sundar's wife kushboo coming with half dress in all tv shows.Sundar is good boy.He is coming THEE film without dress.Good combination.(maindla vachikoonga)

Vijayakumar,
Hosur.

Anonymous said...

/தீ – பத்தலையே பரட்டை…

டிஸ்கி;

சன் டிவி இரண்டு குடும்பங்களுக்கிடையே சண்டை இருந்த போது வாங்கிய படம் போலிருக்கிறது. பல இடங்களில் வசனங்கள் அவர்களுக்கே ஆப்பு வைக்கிறது./
பத்தவச்சிட்டியே பரட்டை!? :)

அத்திரி said...

//சன் டிவி இரண்டு குடும்பங்களுக்கிடையே சண்டை இருந்த போது வாங்கிய படம் போலிருக்கிறது. பல இடங்களில் வசனங்கள் அவர்களுக்கே ஆப்பு வைக்கிறது.//


இப்படியெல்லாம் எழுதும் கேபிள் சங்கரை கண்டிக்கிறேன்... ஆங்

அத்திரி said...

//நமிதா ஒரு இருவது நிமிஷம் வர்றாங்க, ஏசி தியேட்டர் எல்லாம் சூடாகுது.//

ஏசி இல்லாத தியேட்டரை நினைச்சாலே பயம்தான்..

அத்திரி said...

மீண்டும் மீண்டும் இந்த மாதிரியான படங்களை பார்த்து நம்மை காப்பாற்றும் அண்ணன் கேபிள் வாழ்க வளமுடன்....

Vadielan R said...

கரேக்டா சொன்னீங்க தலைவரே

Cable சங்கர் said...

//கரேக்டா சொன்னீங்க தலைவரே//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவரே..