Phoonk 2 –(2010)
x
இரண்டாவது பாகத்தில் இறந்து போன அந்த பெண் ஆவி ரூபமாய் கதாநாயகனின் குடும்பத்தை தொடர்கிறாள். காட்டில் குழந்தைகள் மூலமாய் ஒரு பொம்மை ரூபத்தில் வீட்டிற்குள் நுழைய, கொஞ்சம், கொஞ்சமாய் குழந்தைக்கு என்ன ஆகுமோ என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவனின் மனைவிக்குள் பேய்யா இறங்கிவிடுகிறாள் செத்துப் போனவள். அவ்வப்போது சந்திரமுகியாய் மாறி, தன் கணவனிடம், உன்னை கொல்ல மாட்டேன் உன் குடும்பத்தை கொஞ்சம், கொஞ்சமாய் அழிக்கிறேனா இல்லையான்னு பார். என்று சவால் விடுகிறாள் மனைவி ரூபத்தில் இருக்கும் பேய்.
மனைவி ரூபத்தில் இருக்கும் பேய் அவனையும், அவன் குடும்பத்தையும் பழிவாங்கியதா.? அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை ஒரே ரத்தமயமாய் காட்டியிருக்கிறார்கள். படம் நெடுக பேய் வந்த பிறகு கார்பரேஷன் குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுவது போல ரத்தமாய் கொட்டுகிறது.
படத்தில் பாராட்டபட வேண்டிய முக்கிய விஷயம் கேமரா. வழக்கமாய் ஆர்.ஜிவியின் படங்களுக்கான கோணங்களுடன். பின்னணி இசை பெரிதாய் பயமுறுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஓரிரு காட்சிகளை தவிர..
நடித்திருக்கு நடிகர்கள் அனைவரின் நடிப்பினால் பல காட்சிகள் உயிரூட்ட பட்டிருக்கிறது. குறிப்பாய் க்ளைமாக்ஸ் காட்சியில் சுதீப்பின் நடிப்பும், அவனது மனைவிக்கு அந்த வீட்டில் ஏதோ தப்பாக் இருக்கிறது என்று உணர்ந்து சுதீப்பிடம் அழும் காட்சி.
மிலிந் கட்கர் இயக்கியிருக்கிறார். இவர் தான் பூங் முதல் பாகத்தில் ரைட்டர். இரண்டாவது பாகத்தில் முதல் பகுதி முழுவதும் சும்மாவாவது பில்டப் கொடுத்தே நோக அடிக்கிறார். இரண்டாவது பாதியில் சுறுசுறுப்பாய் இருந்தாலும் கடைசி காட்சிகளில் வரும் ஓவர் ரத்தமும், பெரியதாய் போராட்டம் ஏதும் இல்லாத காட்சியமைப்புகளால் கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது. அநேகமாய் பூங் 3 வரும் என்றுதான் தோன்றுகிறது.
Phook – Nothing Extraordinaryகேபிள் சங்கர்
Comments
பதிவின் தலைப்பை சற்று திருத்தவும்.N மிஸ்ஸிங்.
டிவிடி கடையில தான்:)
இந்த விமர்சனம் சுருக்கமாக இருப்பது போல் தோன்றுகிறது.... மற்றபடி, படத்தை பற்றி உங்கள் பார்வை , வழக்கம் போல "நச் " என்று இருக்கிறது..
Phook விமர்சனம் – Nothing Extraordinary
சிங்கப்பூர் வந்தாச்சு, விமர்சனம் படிச்சாச்சு, ஒட்டு போட்டாச்சு
நன்றி சூஸன் ஒன்
நன் ராஜேஷ் கண்ணன்