Thottal Thodarum

Oct 28, 2008

சேவல் - விமர்சனம்


சேவல்ன்னு ஏன் பேர் வச்சீங்கன்னு ஹரிகிட்ட கேட்டபோது, சேவல் போல ஊரை சுத்திகிட்டு இருக்கறவந்தான் என் படத்தோட ஹீரோ.. அதனாலதான் படத்திக்கு இந்த பேரை வச்சேன்னு சொன்னாரு..அதுக்கு ஏத்தாப்ல பரத்தும் சும்மாவே ஊரையே சுத்திகிட்டு கிடக்காரூ..திடீர்ன்னு அக்ரஹாரத்து பொண்ணு பூனத்தை பாக்கிறார்.. லவ் பண்ண ஆரம்பிக்க.. அவருடய அக்கா சிம்ரன், அப்பா வழக்கம் போல கோவில் குருக்கள்.. ஏழை பிராமணன்.. பொறுப்பில்லாத வேற சாதி பையன்..அவனுக்கு சித்தப்பாவா.. வடிவேலு..எந்த ஊருக்கு பெரியவர்ன்னு சொல்ல முடியாம ஓரு பெரிய மனுஷன் சண்முகம்..

சண்முகத்திக்கு பூனத்தின் மேல ஓரு கண்ணு, பரத்துக்கு பூனத்தின் மேல லவ், சிம்ரனின் கொழுந்தனுக்கு பூனத்தின் மேல ஓரு கண்ணு..இப்படி ஆளாளுக்கு கண் வைக்கிற மாதிரிதான் பூனம் இருக்காரு..

ஹரிக்கு என்ன ஓரு இதுவோ தெரியல.. அவருடய எல்லா படங்கள்லேயும் ஹீரோயின் அக்ரஹாரத்து பொண்ணாதான் வர்றா..அனா ஓரு அரத பழசான ஓரு கதையை வச்சிக்கிட்டு அவர் பாவம் என்னதான் பண்ணுவாரூ.. சேவலா சுத்திகிட்டுருந்த பரத், பூனத்தை காதலிக்க ஆரம்பித்ததுமே திருந்த ஆரம்பிக்க, பூனம் பரத்தை காதலிக்கணூம்னா அவருடய தாத்தா நிலத்தை எடுத்து வித்து குடிச்ச நிலத்தை திரும்பவும் மீட்டு என்னைக்கு அவருடய அப்பா கையில கொடுக்கிறாறோ அன்னைக்குதான் ஓரு நல்ல பதில தருவேன்னு சொல்லிட்டு போக..


சிம்ரனனுக்கு ரத்த புற்றுநோய் வந்து குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியாமல் போக, அங்கே அக்காவை பார்த்து கொள்ள போன பூனம் அக்கா குழந்தையை தன் குழந்தையாய் பார்த்து கொள்ள, சிம்ரனின் உடல்நிலை காரணமாய் அவரின் கணவனுக்கு இன்னொரு கல்யாணம் செய்ய முடிவு செய்ய, சிம்ரன் தனக்கு பதிலாய் தன் குழந்தையை பார்த்து கொள்வதற்கு தன் தங்கையையே தன் கணவனுக்கு கட்டி வைக்கிறார். திருமணத்திற்கு அப்புறம் தான் பரத்தை காதலிப்பது தெரிகிறது சிம்ரனுக்கு, அது தெரிந்தவுடன் ராத்திரியோடு ராத்திரியாய் பூனத்தின் காலில் விழுந்த போஸோடு இறக்கிறார்.இங்கே தமிழ் பண்பாடுபடி பூனத்துக்கும்,சிம்ரனின் கணவருக்கும் எந்தவித கில்மா நடப்பதாய் காட்டபடவில்லை. தமிழ் சினிமா விதியின்படி ஹீரோயின் கன்னி கழியாத பெண்ணாகவே இருக்க, வில்லன் செய்யும் சூழ்ச்சியால் பூனத்தின் கணவரும் இறந்து போய்விட, அவருக்கு வில்லன் சொல்லி மொட்டை அடித்து அழகு பார்த்து இருக்கிறார்கள்..

அக்ரஹாரம் என்ற ஓன்றே தற்பொது இருக்கிறதா? என்கிற கேள்வி எழும்புகிற நேரத்தில், விதவைக்கு தலை மழித்தல், போன்ற சடங்குகளை அவர்களே மறந்தும், அழித்துவிட்ட நிலையில், மற்றவர்கள் அதை ஞாபகமாய் வைத்து கொண்டு அக்ரஹாரத்து ஐயர் குடும்பத்தில் சொல்வது.. ரொம்பவும் காமெடி..இதற்கு லீடாக வில்லன் அழகான பெண் தனக்கு கிடைக்கவில்லை என்றால் அவளுக்கு அவர்க்ளின் குடும்பத்தின் மூலமாகவே மொட்டை அடிக்க வைத்துவிடுவாராம்..என்ன கொடுமையடா சாமி,

பூனம் மொட்டை அடித்தபின் “ஏலியன் நேஷன் “ நாயகி போல் வருகிறார். அநேகமாய் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நல்ல ஓர்க்..மொட்டை அடித்தால் அழகை கெடுப்பதாய் நினைத்து மொட்டை அடிக்கிறார்கள் ஆனால்,மொட்டையிலும் பூனம் அழகாய் இருக்கிறார்.

பிரகாஷ்குமாரின் இசை ஓன்றும் சொல்லும்படியாய் இல்லை, வழக்கம் போல் ப்ரியனின் கேமரா ஹரிக்கு ஓத்துழைத்து இருக்கிறது. வடிவேலுவின் ஓன்றிரண்டு காட்சிகளை தவிர சிரிக்கும்படியாய் ஓன்றுமில்லை.. வழக்கம் போல் டப்பு, டிப்பு என்று எகிறும் பரபர எடிட்டிங் என்று எல்லாமே வழக்கம் போல்..

படம் முழுவதும் எதிலுமே ஓட்டாத விஷயமாய் துண்டு, துண்டாய், ஹைதர் காலத்து விதவை பெண்ணுக்கு திருமணம், தலை மழித்தல், போன்ற விஷயங்களை வைத்து காலத்தோடு ஓட்டாடத விஷயங்களை பெரிய செண்டிமெண்டுகளாய் நம்பி படமெடுத்திருப்பதால் சேவல்.. மியாவ்..

Post a Comment

12 comments:

sivam said...

இன்தமிழ் எழுத்து. உங்கள் இன் தமிழை பகிர்ந்து கொண்டு

உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்க இன்தமிழுக்கு In-Tamil வாருங்கள்.

Anonymous said...

படம் நல்லாயிருக்கா இல்லையா?

cable sankar said...

//படம் நல்லாயிருக்கா இல்லையா?//

பூனம் பாஜ்வாவை பார்த்து ஜொள்ளுவிட்டதினால் எதுவும் சொல்வதற்கில்லை...

R A J A said...

//சேவல்.. மியாவ்..//
சூப்பர் பஞ்ச். மொத்த படத்த பத்தி இந்த ஒரு வரியிலேயே புரிந்துபோய் விட்டது. அருமையான விமர்சனம்.

Raj said...

சண்முகத்திக்கு பூனத்தின் மேல ஓரு கண்ணு, பரத்துக்கு பூனத்தின் மேல லவ், சிம்ரனின் கொழுந்தனுக்கு பூனத்தின் மேல ஓரு கண்ணு..இப்படி ஆளாளுக்கு கண் வைக்கிற மாதிரிதான் பூனம் இருக்காரு///

so நீங்களும் கண்ணை வச்சிட்டீங்க...என்ன சொல்றது!

தமிழ்ப்பறவை said...

சேவல்‍ மியாவ்...நச் கமெண்ட்...
பூனம் பஜ்வா நல்ல (வெடைக்)கோழி என நினைக்கிறேன்...

cable sankar said...

//சூப்பர் பஞ்ச். மொத்த படத்த பத்தி இந்த ஒரு வரியிலேயே புரிந்துபோய் விட்டது. அருமையான விமர்சனம்.//

நன்றி ராஜா..உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

cable sankar said...

//so நீங்களும் கண்ணை வச்சிட்டீங்க...என்ன சொல்றது!//

ஹி...ஹி..லேசா...

cable sankar said...

//பூனம் பஜ்வா நல்ல (வெடைக்)கோழி என நினைக்கிறேன்...//

ம்ஹூம்..என்னத்தன்னு சொல்ல..

Balachander said...

இந்தமாரி படம் எடுத்த சொதப்பும்னு தெரிஞ்சும் ஏன் எடுக்குறாங்க சங்கர் சார்???????

cable sankar said...

//இந்தமாரி படம் எடுத்த சொதப்பும்னு தெரிஞ்சும் ஏன் எடுக்குறாங்க சங்கர் சார்???????//

எது ஜெயிக்கும்னு தெரிஞ்சுட்டா அப்புறம் எல்லோருமே நல்ல படம் தான் கொடுப்பாங்க.. எல்லாமே நல்ல படமாயிட்டா.. அப்புறம் கெட்ட படம் எதுன்னு தெரியாம போயிரும்.. அப்புறம் கெட்ட படம்.. என்ன ஆச்சு எனக்கு?

ஜுர்கேன் க்ருகேர் said...

கொக்கரக்க் "go.. go"