Thottal Thodarum

Oct 28, 2008

ஏகன் -விமர்சனம்


வழக்கமாய் ரீமேக் ராஜாவை எல்லோரும் கிண்டல் செய்வார்கள், இவரால் ரீமேக்கை தவிர புதுசாய் எடுக்க தெரியாதென்று.. ஆனால் ரிமேக் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று ஏகனை பார்த்தால் தெரியும்..

ஹிந்தியில் ஷாருக்கான் நடித்து வெளிவந்த “மே ஹூன் நா” என்ற படத்தைதான் தமிழில் கொடுக்க நினைத்து கெடுத்திருக்கிறார்கள்.. ஹிந்தியிலேயே ஷாருக்கின் கிரேஸினால் தப்பிய படம்..

வில்லன் சுமனிடமிருந்து விலகிய தேவன் அப்ரூவராக மாற முடிவெடுக்க, அவரை கொலை செய்ய முயற்சிக்க, போலீசிடமிருந்தும், வில்லன் சுமனிடமிருந்தும் தப்பியோடிக் கொண்டிருக்கிறார் தேவன்.. அவரை பிடிக்க சுமன் ஓரு புற்மும், போலீஸ் ஓரு புறமும் அலைய, அவருடய பெண் ஊட்டியில் ஓரு காலேஜில் படிப்பதாய் போலீஸுக்கு தெரிய, அந்த காலேஜில் ஸ்டூடண்டாய் நம்ம தலைய சேர்த்து, தேவனின் பெண் பியாவிடம் நெருக்கமாய் பழகி தேவனை பற்றி அறிந்து கொள்ள காலேஜில் நுழைகிறார் அஜித். இதற்கு நடுவில் தன்னுடய வளர்ப்பு அம்மா, தம்பி,அப்பா என்று செண்டிமெண்ட் குழப்பம், தம்பி நவ்தீப், பியாவின் காதல் என்று குழப்பியடித்து கும்மியடித்திருக்கிறார்கள்..

கல்லூரி முதல்வர் ஜெயராமும், சத்யனும் நடத்தும் அபத்தங்கள் எல்லாம் காமெடி என்று நினைத்து மனுஷனை கொல்லுகிறார்கள். தல ஸ்டூடண்டாய காலேஜில் நுழைந்து காமெடி பண்ண முயற்சி செய்திருக்கிறார்.. சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஜீன்ஸ் படத்தில் ராஜூ சுந்தரம் கத்தி, கத்தியே காமெடியாய் நடிப்பதாய் நினைத்து கொண்டு பேசுவாரே.. அதுபோலவே படத்தில எல்லோருடய வசன மாடுலேஷன்களும், ரியாக்‌ஷன்களும் இருக்கிறது..படத்தை அவர்தான் இயக்கினார் என்று காட்சிக்கு காட்சி ஃபூரூப் செய்திருக்கிறார்.

நயந்தாரா சூப்பர்.. அவருக்கு ஓரு கோடி சம்பளத்திற்கு அவரால் முடிந்த வரை ஆடைகளை குறைத்து நன்றாக நடித்திருக்கிறார்???..அவருக்கு தயாரிப்பாளர்கள் மேலும் சம்பளத்தை கூட்டி கொடுக்க என்னால் முடிந்த வரை ரெகமெண்டுகிறேன்.. (எல்லாம் ஓரு சுயநலம்தான்..)

இருப்பதிலேயே உச்ச பட்ச காமெடி வில்லன் சுமன்.. அவரை பார்த்தாலே ஓரு பயம் வரமாட்டேங்கிறது.. ராஜூசுந்த்ரம் சுமனுகுள் இருந்து அவரை போலவே கேனத்தனமாய் நடிக்கவைத்திருக்கிறார்.. அதிலும் அவரின் பாடி லேங்குவேஜும், டயலாக் டெலிவ்ரியும், விக்கும், தாடியும் சூப்பர் காமெடி..வில்லத்தனம் என்கிற பெயரில் அவ்வப்போது யாரையாவது மாடியிலிருந்து தள்ளிவிடுவதும், வந்திருக்கிற வெள்ளைகார வில்லனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், செமகாமெடி..

ரொம்ப நேரம் படம் எதுவுமில்லாமல் படம் ஓடி கொண்டிருப்பதை யோசித்து படத்தை முடிக்க வேண்டுமென்று சடாரென்று க்ளைமாக்ஸ் சண்டை வைத்து படத்திலிருந்து நம்மை விடுவிக்கிறார் இயக்குனர்..

நவ்தீப், பியா எல்லாம் சும்மானாச்சுக்கும் வந்து போகிறார்கள்.. பியாவுக்கு நடிக்க சந்தர்பம் இல்லை..

படத்தில் சொல்லிக் கொள்ளுகிற மாதிரி இருப்பவர்கள்..அஜித், நயந்தாரா, ஓளிப்பதிவாளர் அர்ஜூன்.

டிஸ்கி: அஜித்துக்கு தயவு செய்து கதை கேட்காமல் நடிக்காதீர்கள்..இயக்குனரை பார்த்து செலக்ட் செய்யுங்கள்.

டிஸ்கி: ராஜூசுந்தரத்திற்கு, எல்லோரையும் உங்களை போலவே பேசி நடிக்க வைக்க முயற்சிக்காதீர்கள்..ஹீரோவுக்கும், வில்லனுக்கும் நேரடியான ப்ரச்சனையில்லாமல் எந்த விதமாய் கதை சொன்னாலும் படம் ஜெயிக்காது என்று தயவு செய்து தெரிந்து கொள்ளூங்கள். உங்களுக்கென்ன.. டான்ஸ் ஆட போய்விடுவீர்கள்.. பாவம் எங்க தல்தான் அடுத்த கவுதம் மேனன் படம் வரும் வரைக்கும் காத்திருக்கணும்..

ஏ..க..ன்.. ஏகத்துக்கும் சொதப்பல்..
Post a Comment

11 comments:

Raj said...

இந்த வாட்டியும் "தல" சொதப்பிருச்சா...அட கடவுளே! யாராச்சும் தலக்கு கதை தேர்ந்தெடுப்பது எப்படின்னு க்ளாஸ் எடுங்கப்பா.

Cable சங்கர் said...

//இந்த வாட்டியும் "தல" சொதப்பிருச்சா...அட கடவுளே! யாராச்சும் தலக்கு கதை தேர்ந்தெடுப்பது எப்படின்னு க்ளாஸ் எடுங்கப்பா.//

போன வாட்டி பில்லாவில தப்பிச்சிட்டாரு.. இந்தவாட்டி தீபாவளி புஸ்ஸூ.. நன்றி ராஜ்.. தீபாவளி நன்றாக நடந்ததா?

தமிழ் அமுதன் said...

ரொம்ப நேரம் படம் எதுவுமில்லாமல் படம் ஓடி கொண்டிருப்பதை யோசித்து படத்தை முடிக்க வேண்டுமென்று சடாரென்று க்ளைமாக்ஸ் சண்டை வைத்து படத்திலிருந்து நம்மை விடுவிக்கிறார் இயக்குனர்..

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//அவருக்கு தயாரிப்பாளர்கள் மேலும் சம்பளத்தை கூட்டி கொடுக்க என்னால் முடிந்த வரை ரெகமெண்டுகிறேன்..//

குறைந்தது ஒரு ஐந்து கோடியாவது கொடுக்க வேண்டுகிறேன் !

Cable சங்கர் said...

//குறைந்தது ஒரு ஐந்து கோடியாவது கொடுக்க வேண்டுகிறேன் !//

ஹீ..ஹி.ரொம்ப தேக்ஸ்..
நானும் வழிமொழிகிறேன்.

vivek said...

very very bore guys.aegan soon will be in TV

Anonymous said...

evan padam odinalu odavitalum namakku entha oru labamum illa.

Cable சங்கர் said...

//evan padam odinalu odavitalum namakku entha oru labamum illa.//

என்ன அப்படி சொல்லிபுட்டீக..
நன்றி மோகன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

//very very bore guys.aegan soon will be in TV//

பொங்கலுக்கே வராம இருந்தா சரி..

யூர்கன் க்ருகியர் said...

எவ்வளவு பட்டாலும் அஜித்துக்கு புத்தியே வராதா?

அஜித்துக்கு ஒரு குறிப்பு : நீங்க உண்மையிலேயே தலையா... இல்ல,,,, கிணத்து பூண்டு தழையா?


இனிமேலாவது நல்ல கதையினை செலக்ட் பண்ணுவாரா?

priyamudanprabu said...

////
ஏ..க..ன்.. ஏகத்துக்கும் சொதப்பல்
//////

//குறைந்தது ஒரு ஐந்து கோடியாவது கொடுக்க வேண்டுகிறேன் !//

ஹீ..ஹி.ரொம்ப தேக்ஸ்..
நானும் வழிமொழிகிறேன்.