Thottal Thodarum

Oct 23, 2008

தியேட்டர்களை வாங்கும் சூரிய கம்பெனி...

காதலில் விழுந்தேன் திரைபடத்தை சில பல பேரின் அச்சுறுத்தல், மற்றும் மிரட்டலினால் மதுரையில் வெளிய்டமுடியாமல் தவித்த சூரிய கம்பெனி, அதற்கு ஓரு வழியை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

வேறு ஓருவரின் தியேட்டரில் தானே படத்தை ஓட விடமாட்டார்கள்.. நாமே தியேட்டர்க்ளை லீஸ் எடுத்து வைத்துவிட்டால்..என்று யோசிக்க ஆரம்பித்திருப்பதாக நம்பதகுந்த வட்டாரம் தெரிவிக்கிறது...

ஏற்கனவே சில நூறு தியேட்டர்களை தன் வசம் லீஸில் வைத்துள்ள ஓரு ”எகிப்து” லோகோ கம்பெனியிடமிருந்து தியேட்டர்களை சப் லீஸ் எடுப்பதாக இருக்கிறதாம் சூரிய கம்பெனி..

”எகிப்து” கம்பெனியின் தற்போதைய நிலைமை சற்று கவலைக்கிடமாய் உள்ளதால்..அவர்களுக்கும் இது ஓரு வரபிரசாதமாகவே இருக்கும் என்று நினக்கிறது..

சூரிய கம்பெனி இப்படி பல தியேட்ட்ர்களை தன் வசம் வைத்துதிருந்தால் அவர்களின் டிஸ்ட்ரிபூஸ்ன் நெட்வொர்கின் பலம் மேலும் கூடும் என்றே எதிர்பார்க்கிறது.. எதிர்காலத்தில் அவர்களின் படத்தை அவர்களே தங்கள்து தியேட்டர்களில் வெளியிடப்படுவதால்.. அவர்களை அச்சுறுத்துபவர்கள் ஏதேனும் எதிர் நடவடிக்கை எடுத்தால் அதையும் தன்னுடய, தொலைக்காட்சியில் காட்டிவிட்டுவிடலாம்.. என்ற பயம் அச்சுறுத்துபவர்க்ளுக்கு இருக்கும் என்பதும் அவர்களின் எதிர்பார்பாய் இருக்குமோ..?

முதன் முதலாய் கிசுகிசு எழுதியிருக்கிறேன்.. ஹி..ஹி...(மூஞ்சியில என் பீச்சாங் கைய வைக்க.. இத்தெல்லாம் ஓரு கிசு..கிசு. பொறந்த கொளந்தைய கேட்டா கூட சொல்லிறும்.. இத்தபோய்.. )


Post a Comment

10 comments:

Shanmuga said...

panam irrupavarkal ethai venndum anallum seiyalam

cable sankar said...

//panam irrupavarkal ethai venndum anallum seiyalam//

அப்படியில்லை சண்முகா.. பணம் இருப்பவர்கள் எல்லோரும் கரெக்டாக பிஸினெஸ் முடிவெடுப்பவர்கள் அல்ல..

Anonymous said...

their next move will be to 'buy' audiance i guess !

cable sankar said...

//their next move will be to 'buy' audiance i guess !..//

அதைத்தான் ஏற்கனவே செய்துவிட்டார்களே..நீங்க ஓத்துக்கிறீங்களோ.. இல்லையோ.. இன்னைய் வரைக்கும் சன்டிவி பாக்காத வீடு ஓண்ணு இருந்தா சொல்லுங்க..??

Dhamodharan said...

UltimateStar Vs Superstar ?
Who will be winner this deepavali?

cable sankar said...

//UltimateStar Vs Superstar ?
Who will be winner this deepavali?//

சூப்பர் ஸ்டார் வருவதற்கு சான்ஸ் இருக்கிறது..

ஜுர்கேன் க்ருகேர் said...

லீசுக்கு எடுத்து "லாஸ்"ஆகாம இருந்தா சரி.
பணம் பண்ணனும்-னு எடுக்கற படங்கள் பெரும்பாலும் (சிலவற்றை தவிர்த்து) தோல்வியையே தழுவுகிரதென்பது என் கருத்து.


அது போகட்டும்.. நாக்க மூக்க வெற்றியா தோல்வியா ?

cable sankar said...

//அது போகட்டும்.. நாக்க மூக்க வெற்றியா தோல்வியா ?//
சுமார் 3.5 அளவில் வாங்கபட்ட காதலில் விழுந்தேன் படத்தை சன் பிக்சர்ஸ் டிஸ்ட்ரிபூட்டர்களுக்கு சுமார் 3 கோடி லாபத்தில் கொடுத்துவிட்டது.. பெரிய விலை கொடுத்த படங்கள் எல்லாம் பப்படமாகிவிட்ட நிலையில் காதலில் விழுந்தேன் மிகப் பெரிய வெற்றி படமாகும்.. சுமார் கோடி வரை கலெக்ட் செய்யும் என்று கணக்கிடப்படுகிறது..

லக்கிலுக் said...

//”எகிப்து” கம்பெனியின் தற்போதைய நிலைமை சற்று கவலைக்கிடமாய் உள்ளதால்..அவர்களுக்கும் இது ஓரு வரபிரசாதமாகவே இருக்கும் என்று நினக்கிறது..
//

:-))))))

அப்புறம்,

காதலில் விழுந்தேன் படத்துக்கு சன் டிவி செலவிட்டிருக்கும் ஸ்பேஸ் மட்டும் பத்து கோடி அளவை நெருங்கிவிட்டது. தீபாவளி சீசணில் இந்த ஸ்பேஸ் ஒரு டிவிக்கு எவ்வளவு முக்கியம்?

இப்போது சொல்லுங்கள், காதலில் விழுந்தேன் வெற்றியா தோல்வியா?

cable sankar said...

//காதலில் விழுந்தேன் படத்துக்கு சன் டிவி செலவிட்டிருக்கும் ஸ்பேஸ் மட்டும் பத்து கோடி அளவை நெருங்கிவிட்டது. தீபாவளி சீசணில் இந்த ஸ்பேஸ் ஒரு டிவிக்கு எவ்வளவு முக்கியம்?

இப்போது சொல்லுங்கள், காதலில் விழுந்தேன் வெற்றியா தோல்வியா?//

அப்படி பார்த்தால் 80கோடி செலவில் படமெடுத்து 100கோடி சம்பாதித்த படங்கள் வெற்றி படமா? அல்லது சிறிய முதலீட்டில் தயாரிக்க பட்டு பல கோடிகள் அள்ளிய படங்கள் வெற்றி படமா??

நீங்கள் சொல்வது போல் சன் டிவியின் விளம்பர ஸ்பேஸ் விலை அதிகமே. சுமார் மூன்று கோடி கொடுத்து வாங்கிய படத்திக்கு இது அதிகமே... ஏதோ படம் "நாக்க மூக்க " ஓப்பனிங்கில் தப்பியதால் விநியோகஸ்தர்களுக்கு மிகப் பெரிய லாபம் வந்துள்ளது லக்கி.. சும்மா சொல்லக்கூடாது..சுமார்..முப்பது கே அளவில் மொத்த வசூலை அள்ளியிருக்கிறது. மொத்ததில் பார்த்தால் தானிக்கி தீனி சரிகா போயிந்தி...

சினிமாவை பொறுத்த வரை வெற்றி மட்டுமே ஏற்றுக் கொள்ள படும்