Thottal Thodarum

Sep 17, 2008

சன் V/S கலைஞர். டி.ஆர்.பி யில் முந்தியது யார்?

கடந்த சில நாட்களாய் பதிவில் போட்ட ச்ர்வேயினபடி நெ.1 சேனல் எது என்ற சர்வேக்கு ஆதரவளித்த பதிவர்களூக்கு மிக்க நன்றி.முதலில் நமது டி.ஆர்.பியில் முதலில் வந்தது யார் என்பதை உங்க்ளுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

1 . சன்
2 . விஜய்
3 . கலைஞர் என்று முறையே முதல் மூன்று இடங்களை கைபபற்றியுள்ளது.

இதில் முக்கியமாக சொல்ல வேண்டியது என்னவெண்றால் சன் டிவி -100 வோட்டுகளை பெற்று 40 சதவிகதம் எடுத்து மீண்டும் ஓரு முறை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் நெ.1 என்று தன்னை நிறுபிப்திறுக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

மொத்தம் வோட்டு போட்ட பதிவர்கள்-247
சன் டிவி 100 வோட்டுகளும், விஜய் டிவி -83 வோட்டுகளும், கலைஞர் டிவி -31 ஓட்டுக்களும், மக்கள் டிவி -23 ஓட்டுகளும் பெற்று இருக்கிறது.

இது தான் ஓரிஜினலான டி.ஆர்.பி என்று எடுத்துக் கொள்ளலாமா? என்று நீங்கள் கேட்டால்.. இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஏன் என்றால் டி.ஆர்.பி பற்றி என்ன என்பதை பதிவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே லக்கிலுக்கின் பதிவிலிருந்து புரிந்திருக்கும். அதனால் நான் விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இப்போதைய நிலவரப்படி நிஜமான டி.ஆர்.பி ரேடிங்கில் முதலிடம் வகிப்பது சன் டிவியே..
முதல் 100 நிகழ்ச்சிகளூக்குள் 98 ப்ரோக்ராம்கள் சன் டிவியின் நிகழ்ச்சிகளே என்று அடித்து கூறுவதற்கு என்னிடம் டி.ஆர்.பி ரேடிங் ரிப்போர்ட் உள்ளது. கடந்த ஜூலை 20 திலிருந்து ஜூலை 27 ஆம் தேதிக்கான டி.ஆர்.பி ரேடிங் ரிப்போர்ட்படி உள்ள நிலை. ஏதோ ஓருபடம், இரண்டு படம் போடுவதால் டி.ஆர்.பி என்பது கொஞ்சம் முன்னே பின்னே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கலைஞர் டிவியில் லாபம் மற்றும் டி.ஆர்.பி தரும் ஓரே நிகழ்ச்சி “மானாட மயிலாட” டாக்டர் அய்யா பாஷையில் “மானாட மார்பாட” .அதுவும் 11.91 .48வது இடத்தில், நூறாவது இடம் “கலைஞர் செய்திகள்”

வருடத்திற்கு 50 படங்கள் வேண்டும் அவ்வளவு படங்களை தயாரிப்பது சாத்தியமா? என்ற கேள்வி எழுவது நியாயமே..ஆனால் வருடம் பூராவும் புதுபுது படங்களையே போடவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. கலைஞர் டிவியின் முதலாம் ஆண்டு விழாவுக்கு போட்ட பருத்திவீரன் படமே ஓரு ரிப்பீட்டு தான். அதனால் வருடம் பூராவும் புது படம்தான் போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

அடுத்து நம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும்பான்மை மக்கள் பார்பது சீரியல்களே.. அதில் முதல் 100 இடங்களூக்குள் ஓரு கலைஞர் டிவி சீரியலும் வரவில்லை எனக்கு தெரிந்து, ஓரு வருட்மாய். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கூட முதல் 100 இடங்களில் வந்திருக்கிறது ஆனால் ஓரு முறை கூட கலைஞர் டிவி சீரியல்கள் வந்தது இல்லை. மானாட மயிலாட தவிர.

கலைஞர் டிவியில் எல்லா புதுப் படங்களையும் வாங்கிவிட்டதாக சொல்லிக் கொண்டிருப்பது எல்லாம் ஓரு பேச்சுதான். என்னதான் புதுப் படங்களை வாங்கியிருந்தாலும் பெரும்பாலும் பெரிய படங்கள் எல்லாம் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் போட வேண்டிய அக்ரிமெண்டில் இருப்பதால் அப்படி ஓன்றும் பெரிதாக பாதித்து விடாது. அதுவும் ஆட்சி இருக்கும் வரைதான் இவர்களால் இப்படி வாங்க முடியும். அதற்கு அப்புறம் கொஞ்சம் கஷ்டம்தான். போன முறையே சந்திரமுகியை ரொம்பவும் முட்டி மோதியே சன் டிவி வாங்கியிருப்பதும் அந்த படத்தை இன்னமும் டிவி ஓளிபரப்பவில்லை என்பது தெரிந்ததே.
நான் ஏதோ சன் டிவிக்கு பரிந்து பேசுவதாக நினைக்க வேண்டாம். எல்லாருமே ஓரே குட்டையில் ஊறிய மட்டைதான்.

அதோடு ஓவ்வொரு படத்தையும் அதிக விலை கொடுத்து வாங்கி வருவதால் அவ்வளவு பணத்தையும் ஓரே நாள் ஓளிபரப்பில் சம்பாதிப்பது சாத்தியமில்லை. அதனால் மிக ஹிட்டான படங்களை மீண்டும் மீண்டும் ஓளிபரப்பினால் மட்டுமே அந்த படத்தினால் லாபம் சம்பாதிப்பது சாத்தியம் என்பதை இந்த துறையில் உள்ள அனைவருக்கும் தெரிந்ததே..

கலைஞர் டிவியின் வரவால் சன் டிவிக்கு கொஞ்சம் , கொஞ்சமே கொஞ்சம் காம்படிஷன் வந்திருப்பது உண்மைதான். ஆனால் இதோ கலைஞர்டிவிக்கு, விஜய் டிவிக்கும் ஆப்பு வைப்பதை போல் வரப் போகிறது ஜீ தமிழ். அவர்களும் பாலாவின் நான் கடவுள் உட்பட பல படங்களை வாங்கி வருகிறார்கள். சோ.. அவர்க்ள் ஆரம்பிக்கும் போது தான் உண்மையான போட்டி ஆரம்பமாகும். ஏற்கனவே ராஜ் டிவியும் தன் பங்கிற்கு வருடத்திற்கு 12 படங்களை தயாரிக்க அரம்பித்துவிட்டது.

இதுநாள் வரை ஆட்சியின் அதிகாரத்தை வைத்தே சன் டிவி முன்னுக்கு வந்த்து போல் ஓரு மாயை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் அது அல்ல உண்மை, யார் ஆட்சியில் இருந்தாலும் நெ.1 சேனலாக உருவாவதற்கு அதன் பின்னே உழைப்பு வேண்டும்.ஏன் என்றால் டிவி ரிமோட் உங்க்ள் கையில் உள்ளது. எந்த ஆட்சியும் உங்களை இந்த, இந்த சேனலைத்தான் பாரக்க வேண்டும் என்று கட்டுப்படுத்துவ்து இல்லை. அப்படி இருந்தால் கடந்த ஆட்சியில் ஜெயா டிவிதான் நெ.1 ஆகியிருக்க வேண்டும். இதெல்லாம் கொஞ்சம் தான் இன்னமும் டிவிக்கு பின்னால் நிறைய இருக்கு. அதையெல்லாம் அடுத்த பதிவுகளில் சொல்கிறேன். ஜூலை20முதல் ஜூலை 27 வரைக்கான டி.ஆர்.பி ரிப்போட்டை என்னிடம் எக்ஸெல் ஷீட்டாயிருப்பதால் விரைவில் மாற்றி லிங்க் செய்கிறேன். மீண்டும் டி.ஆர்.பி யோடு சந்திக்கிறேன்.
Post a Comment

9 comments:

செல்வ கருப்பையா said...

சபாஷ் சரியான போட்டி!

ஆனால் ஒரு சந்தேகம்!

முதல் 100 இடங்களில் சன் டிவிக்கு 98 இடங்கள்.
கலைஞர் டிவிக்கு 2 இடங்கள் (மானாட மயிலாட மற்றும் கலைஞர் செய்திகள்)

அப்புறம் கனாக் காணும் காலங்களும் எப்படி முதல் 100 இடங்களுக்குள் வர முடியும்?

dondu(#11168674346665545885) said...

//சோ.. அவர்க்ள் ஆரம்பிக்கும் போது தான் உண்மையான போட்டி ஆரம்பமாகும்.//
ஆ? சோ அவர்கள் வேறு சேனல் ஆரம்பிக்கிறாரா? அவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? :))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

priyamudanprabu said...

சன் டீவி படும் கேவலமான நாடகத்தொடர்களை கொண்டுள்ளது,விஜை டீவி புரோகோராமை காப்பியடித்து வழங்கியபோதே சன் டீவி டுபாகூர் ஆயிடுச்சு

Cable சங்கர் said...

//ஆ? சோ அவர்கள் வேறு சேனல் ஆரம்பிக்கிறாரா? அவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? :))))))))))//

சாரி.. இங்கிலிபிசு ஸோ தான் இப்படி சோ ஆயிடுச்சு. “சோ” வேற சேனல் ஆரம்பிக்கணுமா? உங்கள் வருகைக்கு நன்றி டோண்டு

Cable சங்கர் said...

//முதல் 100 இடங்களில் சன் டிவிக்கு 98 இடங்கள்.
கலைஞர் டிவிக்கு 2 இடங்கள் (மானாட மயிலாட மற்றும் கலைஞர் செய்திகள்)

அப்புறம் கனாக் காணும் காலங்களும் எப்படி முதல் 100 இடங்களுக்குள் வர முடியும்?//

எப்போதாவது ஓரு சில முறைகள் “கனா காணும் காலங்கள்’ வந்திருக்கிறது. நான் சொல்லிய முதல் 100 நிகழ்ச்சிகளின் அந்த வாரத்தில் டி.ஆர்.பி நிலைமை தான் சன் 98இடங்களிலும், கலைஞர் 2 இடங்களிலும் என்பது. நன்றி செல்வ கருப்பையா..

Cable சங்கர் said...

//சன் டீவி படும் கேவலமான நாடகத்தொடர்களை கொண்டுள்ளது,விஜை டீவி புரோகோராமை காப்பியடித்து வழங்கியபோதே சன் டீவி டுபாகூர் ஆயிடுச்சு//

நீங்க சொல்றது என்னவோ சரிதான் ஆனா எல்லாரும் திட்டிகிட்டேதானே பாத்துகிட்டு இருக்காங்க.. அத கூட நான் சொல்ல.. டி.ஆர்.பி சொல்லுது...ஜூலை20 - 27வரைக்கும் வந்த ரிப்போர்டுல.. நெ.1 அரசி அதோட டி.ஆர்.பி -23.18
கோலங்கள் -23.06, ஆனந்தம் -18.25,கலசம் -17.01,ஆகும்

ISR Selvakumar said...

Brand Loyalty என்று ஒரு சமாச்சாரம் உள்ளது. அந்த வகையில் காலையில் தினத்தந்தி படிப்பதையும், உடம்புக்கு முடியவில்லை என்றால் ஹார்லிக்ஸ் வாங்குவதையும், சீரியல்களை சன் டிவியில் பார்ப்பதையும் படாரென யாராலும் மாற்றிக் கொள்ள முடியாது.

ஆனாலும் காம்படிஷன் உருவாவதையும் யாராலும் தடுக்க முடியாது.

இத்தனை நாள் சன் டிவி மட்டும் ரேஸில் இருந்தது. தற்போது விஜய் டிவியும், கலைஞர் டிவியும் மல்லு கட்ட ஆரம்பித்திருக்கின்றன.

திடீரென ஒரு ஜெ.கே.ரித்திஷ் படம் ஹிட்டானது போல, மானாட மயிலாடவும், கனாக் காணும் காலங்களும் ஹிட்டாகிவிட்டன. அவ்வளவுதான்.

கேபிள் டிவி என்பது DTH டிஸ்டிரிபியூஷன் என்று புது அவதாரம் எடுத்துள்ளது, அதனால் பிசினஸ் என்பது டி.ஆர்.பியை வைத்து என்பதே விரைவில் மாறிவிடும்.

இன்றைய நிலை வரையில் எல்லா இடங்களிலும் சன்டிவிதான் இருந்தது, ஆனால் தற்போது எங்கோ தொலைதூர இடங்களில் மற்ற சேனல் தலைகள் தெரிய ஆரம்பித்துவிட்டன.

சன் டிவியின் ஸ்பீடு குறைந்துள்ளது, மற்ற சேனல்களின் ஸ்பீடு அதிகரித்துள்ளது. இவை மட்டுமே மாற்றம்.

யூர்கன் க்ருகியர் said...

ஜி-தமிழ் என்ற இன்னொரு சேனல் வருகிறது என்று சொன்னதுக்கு நன்றி

Cable சங்கர் said...

//இன்றைய நிலை வரையில் எல்லா இடங்களிலும் சன்டிவிதான் இருந்தது, ஆனால் தற்போது எங்கோ தொலைதூர இடங்களில் மற்ற சேனல் தலைகள் தெரிய ஆரம்பித்துவிட்டன.//
நீங்கள் சொல்வது சரிதான் செல்வகுமார். நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.