Thottal Thodarum

Sep 30, 2008

கலைஞர் v/s மாற்ன் ப்ரதர்ஸ்


காதலில் விழுந்தேன் திரைப்படத்தை மதுரை மற்றும் ராமநாதபுர மாவட்டங்களில் வெளியிட முடியவில்லை. அதற்கு காரணம் முதல்வரின் மகன் திரு.மு.க. அழகிரிதான் என்றும் அவரின் பேரில் தியேட்டர்காரர்கள் மிரட்ட படுகிறார்கள் என்று கூறுகிறது சன் பிக்சர்ஸ்.
இதற்கு முதல்வர் தலையிட்டு ப்ரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கோரியிருக்கிறது.அதற்கு முதல்வர் அவர்கள், சென்சார் சர்டிபிகேட் பெற்ற எந்த படங்களும் மக்கள் பார்வைக்கு தடை செய்ய முடியாது என்றும், இது குறித்து மதுரை போலீசாரிடம் புகார் கொடுக்காமல், தலைமை செயலருக்கு ஃபாக்ஸ் ஏன் செய்தார்கள்? என்று கேட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தேவையேயில்லாமல் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பதை போல் சன் குழுமம் அரசாஙக் கேபிளுக்கு சிக்னலை தர மறுத்தது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
ஓரு வேளை நீ உன் சிக்னலை எங்களுக்கு கொடுத்தால் உங்கள் பிரச்சனையை சரி செய்யப்படும் என்று அர்தமா?ஏனென்றால் மதுரையில் அழகிரி நடத்தும் ஆர்.சி.வி கேபிளுக்கும் அவர்கள் சிக்னலை தரவில்லை. அதனால் மதுரை முழுவதும் சன் டிவியின் சீரியல்கள் எல்லாம் ரெக்கார்ட் செய்யப்பட்டு அரைமணி நேர இடைவெளியில் ஓளிபரப்பபடுவதாக தெரிகிறது. இந்த பிரசனையால் எஸ்.சி.வியைவிட ஆதிகம் லாபமடைந்தது சன் டைரக்ட் டி.டி.எச்தான். ஆனால் பாதிக்கபட்டதோ அங்கிருக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள். பெரிய வீட்டு சண்டையில் இவர்கள் பிழைப்பு கெட்டு, சந்தாதாரர்களை இழந்து நிற்கிறார்கள். தங்களுடய அரசு, மற்றும் ஆர்.சி.வி நெட்வொர்களுக்கு சிக்கனல் தராததினாலே தான் பெரிய மார்கெட்டான மதுரை, ராமநாடபுரம் மாவட்டத்தில் படத்தை ரிலீஸ் செய்ய தடை செய்திருப்பார்களோ என்று முதல்வரின் பதிலுக்கு எண்ண தோன்றுகிறது.அதற்காக சன் குழுமன் செய்வது நியாய்ம் என்று கூறவில்லை.அவர்கள் செய்வதும் அராஜகம் தான் தங்கள் கையில் மக்கள் விரும்பும் சேனல் இருக்கிறது என்கிற தெம்பில் சன் குழுமம் செய்கிறது. ஆனால் இதையெல்லாம் கற்றுக் கொடுத்ததே அவர்கள் தானே.. எல்லோரும் ஓரு குட்டையில் ஊறிய மட்டைகள் தானே. அதனால் தான் இவர்களின் வீக்ன்ஸ் என்ன் என்பது அவர்களுக்கும் தெரியும். அவர்களது இவர்களுக்கு.சன் குழுமம் காதலில் விழுந்தேன் படத்தை உலக தர படமாக விளம்பர படுத்தியிருப்ப்து பற்றி பல விதமான பதிவுகள் வருகிறது. ஓன்றை மற்றும் சொல்கிறேன், கலாநிதி மாறன் ஓரு சிறந்த பிஸினெஸ்மேன் தாங்கள் செய்கிற தொழில்களில் எப்படி முண்ண்னிக்கு வருவது என்பதை சிறந்த முறையில் அறிந்தவர். சென்ற முறை திமுக அணி வெற்றி பெற எப்படி தன்னுடய சேனலை வைத்து விளையாடினார் என்று மனசாட்சி உள்ளவர்கள் மறுக்க மாட்டார்கள்.ஓரு விஷயத்தை யோசித்து பாருங்கள் சுமார் 3.75 கோடிக்கு வாங்கப்பட்ட காதலில் விழுந்தேன் திரைபடதிற்கு ரஜினி ரோபோ கூட இந்த அளவிற்கு தொலைக்காட்சிகளில் விளம்பரபடுத்த படவில்லை. ஆனால் கடந்த 10 நாட்களில் சன் குழும தொலைக்காட்சியில் எல்லா சேனல்களிலும், மாறி, மாறி விளம்பரம் செய்து, ஓரு புதுமுக டைரக்டர், நடிகர்கள் நடித்த படத்திற்கு மிகப் பெரிய ஓபனிங் ஏற்படுத்தியிருப்பதே அவர்களின் வியாபார வெற்றி. அவர்கள் விளம்பரம் செய்த செலவை வேறு ஏதாவது படத்திற்கு அவர்களிடம் செய்திருந்தால் சுமார் 10 கோடிகளாவது ஆகியிரு.கும். அவர்களின் விளம்பர ஸ்லாட்டுகளின் விலை என்பதை அறிந்தவர்களுக்கு தெரியும்


எல்லா கட்சிகளுக்கும் சேனல் இருக்கிறது. ஆனால் அவை எல்லாம கட்சி பத்திரிக்கை போலத்தான் செயல் படுகிறது. அதனால் தான் அவை எல்லாம் எல்லா கால கட்டத்திலும் முண்ணனியில் வர முடியவில்லை.அப்படி வர முடியும் என்று நினைத்திருந்தால் சென்ற ஆட்சி காலத்தில் ஜெயா டிவிதான் நெ1 ஆகியிருக்க வேண்டும்.ஆனால் நிலைமை என்ன
என்று எல்லாருக்கும் தெரியும்.

அவர்களை பொறுத்தவரை இது வியாபாரம் அதனால் அதில் வெற்றி கொள்ள என்ன வழிவகை செய்ய முடியுமோ, எப்படியெல்லாம் விளம்பரபடுத்த முடியுமோ, அதையெல்லாம் செய்யத்தான் செய்வார்கள். அவ்வாறு விளம்பரபடுத்தும் எல்லாமும் வெற்றி பெறுகிறதா என்று கேட்டால் அது இல்லை என்று தான் சொல்வேன். அது அவர்களுக்கும் தெரியும். ப்ராடக்ட் மக்களுக்கு பிடித்திருந்தால்தான் என்ன பப்ளிசிட்டி செய்தாலும் தாங்கும் இல்லாவிட்டால் அந்த விளம்பரமே அவர்க்ளுக்கு எமனாக மாறும் என்பதே உண்மை.

அதனால்.. கலைஞர் போன்றவர்கள் இவர்களை போன்ற வியாபரிகளிடம் சண்டை போடுவதற்காக மாற்று வழியை யோசிப்பதை விட்டு, அவர்களை போலவே யோசித்து தன்னுடய் பெயரையும், தன் ஆட்சியின் பெயரையும் இறக்கி கொள்ளாமல் இருக்க வேண்டும்.
Post a Comment

6 comments:

யூர்கன் க்ருகியர் said...

கலைஞர் டிவி வழங்கும் படவரிசை பத்தில் காதலில் விழுந்தேன் படத்திற்கு எத்தனாவது இடம் கொடுப்பாங்க?

Cable சங்கர் said...

//கலைஞர் டிவி வழங்கும் படவரிசை பத்தில் காதலில் விழுந்தேன் படத்திற்கு எத்தனாவது இடம் கொடுப்பாங்க?//

அவங்க..ரொம்ப நடுநிலை.. உளியின் ஓசை படத்துக்கே.. தசாவதாரத்தோட முதலிடம் கொடுத்தாங்க.. சன் டிவியாவது காமெடி சேனல்ன்னு ஓண்ணு தனியா ஆரம்பிச்சாங்க.. இவங்க.. ஓரு ப்ரோக்ராம் ஆரம்பிச்சிருக்காங்க.. ஆனா ஓண்ணு சன் டிவில நடுநிலையோட?? நெ.1தான்.

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//சன் டிவில நடுநிலையோட?? நெ.1தான்.//
ஹா ஹா ஹா !!!!

மணிகண்டன் said...

:)-

Cable சங்கர் said...

//ஹா ஹா ஹா !!!!//

நல்ல காமெடி இல்ல.. நன்றி பாஸ்கர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Cable சங்கர் said...

:)-

நன்றி மணிகண்டன்