Super Singer Seaon 5- Ticket To Finale..
இந்த வார ரெண்டாவது டாப் 5 டிக்கெட் டு பினாலே போட்டியாளர்களில் சபேசன், ஷுஷாந்திகா, டார்லிங் ஷிவானி, பிரதிபா ஆகியோர் கோல்ட் வாங்கியிருக்க, இவர்களில் ஒருவரை முதல் நபராய் டிக்கெட் டூ பினாலேவில் செலக்ட் செய்யும் நாள். ஷுஷாந்திகாவை முதல் நபராய் செலக்ட் செய்தார்கள். நிச்சயம் ஷுஷாந்திகா தகுதியான ஆள் தான். அதிலும் நேற்று அவர் பாடிய லிங்கா பட பாடலான மோனா மோனா போன்ற சுமாரான பாடலை குரல் மாற்றி பாடி வெர்ஸடைலிட்டியை காட்டி வென்றார். பட் என்னைப் பொறுத்தவரை இந்த பாடல் கோல்டுக்கு ஒர்த் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் இது வரை இவர் பாடிய அத்துனை பாடல்களுமே மிக அற்புதமாய் பாடப்பட்ட பாடல்கள் என்பதால் நோ ரிக்ரெட்ஸ். நிச்சயம் டார்லிங் ஷிவானி 5-1 இடத்தை பெறுவார் என்று நம்பிக்கை இருக்கிறது.
பவித்ரா நேற்றைப் போலவே ஒரிரு நாட்களில் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார். ஆனாலும் இவர் போட்டியாளர்களில் நிச்சயம் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஸ்ரீஹரி வரிகள் மறந்து சொதப்பியது. செந்தமிழன் வர வர ஸ்ருதி இல்லாமல் ஹை பிட்ச் பாடல்களை குரல் பிரிந்து பாடிக் கொண்டிருக்கிறார். வருகிற வாரங்களில் வெளியேறப் போகிறர்வகளில் முதன்மையானவராய் தெரிகிறார். பின்பு ஹரிஷ். லெட்ஸ் சீ. #SaregamapaSeniorsSeason5 #cablesankar
Comments