Biggboss-9
இந்த முறை பிக்பாஸ் 9 போட்டியாளர்களைப் பார்த்து சமூக வலைதளத்தினர் குறிப்பாய் பேஸ்புக், டிவிட்டர் களங்களில் கரித்து கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆல் ஓல்ட் பாய்ஸ். இன்ஸ்டாவில் உலாவுகிறவர்களுக்கு கொண்ட்டாமாய் இருக்கிறது என்கிறார்கள். மொத்த நிகழ்ச்சியையும் பார்க்கலாம் என்று ஹாட்ஸ்டாரில் ஆர்ம்பித்தால் அவன் இது தான் சாக்கு என மூணு மணி நேர நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் விளம்பரம் வாங்கி 10 நிமிஷத்துக்கு ஒரு தரம் விளம்பர இடைவேளை போட ஆரம்பிச்சிட்டான். அதுவும் ஒரே விளம்பரம் ரெண்டு வாட்டின்னா போடா மயிருன்னு க்ளைமேக்ஸுக்கு போய் கூட்டமா உட்கார்ந்திருக்கிறவங்க பேரை படிச்சிட்டு வந்திட்டேன். ரைட். அடுத்த விஷயத்துக்கு வருவோம்.
நம்ம பலூன் அக்கா, வாட்டர்மெலன், ரெண்டு மூணு டிவி ஸ்டார்ஸ். ஒரு திருநங்கை, அகத்தியன் பொண்ணு, மீனவ இனத்திலேர்ந்து ஒரு பெண், ஒரு அரை குறை சாமியார்னு ஒருத்தன். அவனுக்கு வயசே 25 தான் ஆகுதாம் கல்யாணம் ஆகி 3 பசங்களாம். இந்த ஆளு யூடியூபுல பொண்டாட்டி பத்தி பேசுனதும் பொண்டாட்டி இவனைப் பத்தி பேசுனதும் பார்த்திருந்தாங்க்ன்னா.. நம்ம ப்ரவீன் காந்த். நல்ல காலத்துலேயே டிவி சேனல்ல அந்த கத்து கத்துவாரு. மற்றும் பல விஜய் டிவி ஆட்களுடன் ஆரம்பித்திருக்கிறார்கள்.
தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் ஆகிய நிகழ்ச்சிகளிலும் இம்மாதிரியான ஆட்களே அதிகம். அதற்கு காரணம் சமீப காலத்தில் பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு பெரிய தயக்கம் காட்டுவதே. தங்கள்து இமேஜுக்கு பங்கம் வந்துவிடுவதால் யோசிக்க ஆரம்பிக்க, பலூன் அக்கா, வாட்டர்மெலன், அந்த சாமியார் போன்ற இன்ஸ்டா பிரபலங்கள் கண்டெண்டுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராய் இருக்கிறவர்கள். எனவே தங்களது நிகச்சிக்கான ஆடியன்ஸை வேறிடத்திலிருந்து கொண்டு வர விஜய் டிவி முயன்றிருக்கிறது என்றே தோன்றுகிறது. போன வாரம் விஜே பார்வதியை பாத்திகட்டி முடி வெட்டிக் கொண்ட இளைஞர்கள் இருவர் அவரை வளைத்து வளைத்து அசோக்நகர் க்ரேஸ் புட் கோர்ட்டில் படமெடுத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் நண்பர் தமனிடம் வந்து அவர் நடித்த படத்தைப் பற்றி பாரட்டிவிட்டு போகும் போது அவரை அறிமுகப்படுத்தினார். தான் பிக் பாஸ் போவது குறித்து படப்பிடிப்பாக பேசினார். போகும் போது நீங்க? என்று விசாரித்தார். நமக்கு விஜே பார்வதியை தெரிகிறா அளவுக்கு அவருக்கு நாம் பிரபலமில்லாத இடத்தில் வளைய வருகிறோம் என்பதை சொல்லிக் கொண்டு. .. வருகிற வாரங்களில் இவர்களில் ஒரிரிருவரை நமக்கு பிடிக்கக்கூட கூடும் நிகச்சியை பார்த்தால். நான் பார்ப்பேன். லெட்ஸ் ஸீ #biggboss9 #cablesankar #sankarnarayan
Comments