சென்ற வாரம் இரண்டு தற்கொலைகள். ஒரு பெண் சக மாணவி வைத்திருந்த பணம் காணாமல் போனதால், சந்தேக லிஸ்டில் இருந்த நான்கு பேரில் தன்னை மட்டும் நிர்வாணப்படுத்தி செக் செய்தார்கள் என்பதற்காக தூக்கு போட்டுக் கொண்டார். இன்னொருவர் பள்ளியில் பரிட்சையில் காப்பி அடித்தற்காக ஆசிரியர் திட்டியதை தாங்க முடியாமல் தூக்கு போட்டுக் கொண்டார். இதற்காக முதல் சம்பவத்தில் நான்கு ஆசிரியர்களை கைது செய்து அப்போதைக்கு பிரச்சனையை முடித்திருக்கிறது போலீஸும், கல்லூரி நிர்வாகமும். கோர்ட்டில் அவர்களை அரெஸ்ட் செய்ததே தவறு என்று கூறி ஜாமீன் கொடுத்துள்ளது.
இறந்த பெண் ஏழை, பிற்படுத்தப்பட்ட பெண் என்றதும், கூட்டமாய் வந்து பிரச்சனை செய்த மக்கள் கூட்டத்தை சமாளிக்க இம்மாதிரியான நடவடிக்கைகள் எடுத்தால் நிச்சயம் எதிர்காலத்தில் நல்ல ஆசிரியர்கள் கிடைக்க மாட்டார்கள். காப்பி அடித்தால் மடியில் வைத்துக் கொஞ்சுவார்களா என்ன? இம்மாதிரியான விஷயங்களை பத்திரிக்கைகளும் ஏதோ உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே பரபரப்புக்காக செய்திகளை போட்டு விடுகிறது. உடனே நம் பதிவர்களும் ஆளாளுக்கொரு பதிவு போட்டுவிடுகிறார்கள். ஜாதிப் பிரச்சனை, அது இது என்று ஆளாளுக்கு ஒர் கற்பனையில். மொத்தத்தில் இவர்களுக்கு தெரிந்த நிஜமெல்லாம் தினசரிகளில் வந்த செய்தி மட்டுமே.. பேப்பரை படித்து மட்டுமே ஆளாளுக்கு பதிவு போடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்பெண் தற்கொலைக்கு முன் அரைகுறையாய்த்தான் கடிதமெழுதி வைத்திருக்கிறார். அதில் எங்கேயும் தன்னை நிர்வாணப்படுத்தி செக் செய்தார்கள் என்று எழுதியிருந்ததாய் இல்லை.
இறந்த பெண் ஏழை, பிற்படுத்தப்பட்ட பெண் என்றதும், கூட்டமாய் வந்து பிரச்சனை செய்த மக்கள் கூட்டத்தை சமாளிக்க இம்மாதிரியான நடவடிக்கைகள் எடுத்தால் நிச்சயம் எதிர்காலத்தில் நல்ல ஆசிரியர்கள் கிடைக்க மாட்டார்கள். காப்பி அடித்தால் மடியில் வைத்துக் கொஞ்சுவார்களா என்ன? இம்மாதிரியான விஷயங்களை பத்திரிக்கைகளும் ஏதோ உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே பரபரப்புக்காக செய்திகளை போட்டு விடுகிறது. உடனே நம் பதிவர்களும் ஆளாளுக்கொரு பதிவு போட்டுவிடுகிறார்கள். ஜாதிப் பிரச்சனை, அது இது என்று ஆளாளுக்கு ஒர் கற்பனையில். மொத்தத்தில் இவர்களுக்கு தெரிந்த நிஜமெல்லாம் தினசரிகளில் வந்த செய்தி மட்டுமே.. பேப்பரை படித்து மட்டுமே ஆளாளுக்கு பதிவு போடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்பெண் தற்கொலைக்கு முன் அரைகுறையாய்த்தான் கடிதமெழுதி வைத்திருக்கிறார். அதில் எங்கேயும் தன்னை நிர்வாணப்படுத்தி செக் செய்தார்கள் என்று எழுதியிருந்ததாய் இல்லை.
இதில் உச்சம் என்னவென்றால் ஒருவர் எப்படி ஒரு பெண் அவ்வளவு பணத்தை காலேஜுக்கு கொண்டு வரலாம் என்று கேட்டிருந்தார். என்ன கொடுமைங்க இது?. அதன் பின்னணியில் இருப்பது யாருக்கும் தெரியாது. எப்படி அந்தப் பெண் திருடியிருக்க வாய்ப்பில்லை, அவள் ஏழை, பிற்படுத்தப்பட்ட பெண் என்ற காரணத்தினால் தான் அவமானப்படுத்தப்பட்டாள் என்று ஒரு வர்ஷன் இருக்கும் போது, ஏன் அந்த பெண் திருடியிருக்கக்கூடாது? தான் மாட்டியதால் அவமானப்பட வேண்டியிருக்குமே என்று தூக்கு மாட்டி செத்திருக்கலாம் என்ற வர்ஷனும் இருக்கத்தானே செய்யும். இதோ இன்று இவர்களை கைது செய்து அவமானப்பட வைதாகிவிட்டது. நாளையே இவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிருபிக்கப்பட்டுவிட்டால், இதே பத்திரிக்கைகளும், பதிவர்களும் அவர்கள் எழுதியதற்கு குறைந்தபட்சமாக வருத்தமாவது தெரிவிப்பார்களா? நிச்சயம் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் அதற்கான பரபரப்பு போன பிறகு எழுதுவது வேஸ்ட். இப்படி போலியாய் குற்றம் சாட்டப்பட்டு அவமானத்திற்கு உட்பட்டவர்களின் வலி மிகக் கொடியது.
ஒரு பெண் காப்பியடிப்பதை பார்த்து ஆசிரியர் திட்டாமல் என்ன செய்ய வேண்டும்?. உடனே அவர்கள் அவளை என்ன சொல்லித் திட்டினார்கள் என்பதுதான் முக்கியம் என்று சொல்வது மீண்டும் ஜாதி, மற்றும் பொருளாதார நிலையை வைத்து பேசும் சப்பைக்கட்டுகள் தான். பத்திரிக்கையில் வந்த செய்தியின் படி, நன்றாக படிக்கும் மாணவியான அவர் உடல் நிலை சரியில்லாததால் படிக்கவில்லை. அதை சரி செய்யும் நோக்கில் காப்பி அடித்துள்ளார். ஒரு ஆசிரியை இம்மாதிரியான செயல்களை நன்றாக படிக்காத மாணவி செய்திருந்தால் கூட எக்கேடோ கெட்டு போகிறதென்று விட்டு விடுவார். நன்றாக படிக்கும் மாணவி இப்படி செய்தால் நிச்சயம் கோபப்பட்டு திட்டத்தான் செய்வார். அம்மாணவி தூக்கு போட்டு செத்துப் போனதால் அவள் செய்தது நியாயம் என்றாகிவிடுமா?
ஒருவர் தவறு செய்தால் அவர்களுக்கு ஜாதி, இன, பண வேறுபாடு இல்லாமல் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். ஆனால் இங்கு நடக்கும் பல விஷயங்கள் வெறும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இயக்கும் மாப் சைக்காலஜியில் கும்பல் சேரும் கூட்டத்தை சரி செய்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள், அந்த ஆசிரியர்களின் வாழ்க்கையை எவ்வளவு தூரம் பாதிக்கும் தெரியுமா?
போன வாரம் இன்னொரு செய்தி ஒரு அரசு ஆஸ்பத்திரியில் தங்கள் குழந்தைக்கு உடல் நிலை சரியிலலை என்று போய் காட்டியிருக்கிறார்கள். அதற்கு டாக்டர்.. குழந்தையின் உடல் நிலை மோசமாக இருக்கிறது. விரைவில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதை மதிக்காத பெற்றோர்கள் மேலும் ஒரு மாதம் கழித்து குழந்தையின் நிலமை மோசமான போது கொண்டு வந்து ஆபரேஷன் செய்யச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். டாக்டர் இப்போது நிலை மோசமாக உள்ளது இப்போது ஆபரேஷன் செய்தால் சான்ஸ் ரொம்ப குறைவு என்று சொல்லிவிட்டுத்தான் ஆபரேஷன செய்திருக்கிறார். ஆபரேஷன் தோல்வியடைந்து குழந்தை இறந்துவிட்டது. உடனே ஒரு கூட்டத்தை கூட்டிக் கொண்டு வந்து டாக்டரை கைது செய்ய வேண்டும் என்று ஒரு கும்பல் ஆஸ்பிட்டலை முற்றுகையிட்டு ப்ரச்சனை செய்திருக்கிறதது.
சைக்கிள்காரனுக்கு குறுக்கே நடந்து அடிபட்டால், தவறு நடந்து வந்தவன் செய்திருந்தாலும் சைக்கிள்காரந்தான் தப்பு செய்தான், என்று முடிவு செய்வது போல யாரோ எவரோ எங்கோ ஒருவர் செய்யும் தவறான செயல்களை பொதுபுத்திக் கொண்டு உணர்ச்சிவசப்படாமல் பார்க்க பழகினால் பல பிரச்சனைகளுக்கான காரணம் தெரியும்.
டிஸ்கி: இதோ இன்றும் ஒரு தற்கொலை. சுவாமிமலையில். ஆனால் இதைப் பற்றி ஏதும் பதிவுகளோ, அல்லது பத்திரிக்கைகளில் பெரிய பரபரப்போ இல்லை. இங்கேயும் திருட்டுப் பிரச்சனைதான். என்ன இறந்து போன பெண் வெளிநாட்டில் வேலை செய்யுமொரு குடும்பத்திலுள்ள பெண். ஒரு வேளை அதனால்தான் யாரும் எதுவும் எழுதலையோ.. இல்லை சரி விடுங்கப்பா..
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
but,,
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
என் அப்பா ஒரு ஆசிரியர்
-->ஒரு முறை பள்ளியில் ஒரு மாணவனை அவர் அடித்ததற்காக என் வீட்டிற்கு வந்து சத்தம் போட்டு இருக்கிறார்கள்.
-->ஒரு பழைய மாணவர்,சார்,உங்க அடிக்கு பயந்து தான்,நான் கணக்கு படிச்சேன் என்றார்.
அவர் செய்தது எல்லாம் சரி என்று சொல்லவில்லை. இது ஒரு வாழ்க்கையின் விதி.
http://enathupayanangal.blogspot.com
http://enathupayanangal.blogspot.com
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..
பத்தவச்சுட்டேளே சங்கரநாராயணன்..
- என்ன எல்லை என்பதை ‘எல்லாம் படித்த்’ ஆசிரியர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். ஆசிரியர் என்றால் தெய்வம், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதெல்லாம் இன்று கூலிக்கு மாரடிக்கும் ஆசிரியர்களுக்கு ஒத்து வராது.
Psychology என்ற ஒரு பிரிவைப் பற்றி அறியாமலே (அல்லது தெரிந்தும்) பொது இடத்தில் தாறுமாறாக ஒரு மாணவ/மாணவியைப் பேசுவதால் சிறந்த ஆசிரியராகலாம் என்பதெல்லாம் crap.
சரி, இந்த காப்பி விஷயத்தில் எப்படிக் கையாண்டிருக்கலாம்? பேப்பரைப் பிடிங்கிக் கொண்டு பெற்றோரை அழைத்திருக்கலாம். இல்லை தனியறையில் வைத்து கேள்வி கேட்டிருக்கலாம் (அப்படியும் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்). So, இந்த விஷயத்தில் ஆசிரியர் தற்கொலைக்கு instigate-ஆக இருந்திருக்கிறார்.
ஆசிரியர்கள் மேல் எனக்கு மரியாதை உண்டு, என் வளர்ச்சிக்கு தனி அக்கறை எடுத்த ஆசிரியர்களையும் தெரியும். அதே சமயம் பிரம்பு தன் கையில் இருப்பதால் Psycho-வாக(ஆம்...மனநல மருத்துவர் அவசியம் கவனிக்கவேண்டியவர்களாக) இருந்த ஆசிரியர்களையும் பார்த்திருக்கிறேன். ஆசிரியர்கள் என்பதற்காக நியாயப்படுத்துவது துரதிர்ஷ்டவசமாக இதில் முடியாது.
நல்ல கருத்து.
நல்ல கருத்து.//
Athey...
உங்கள் கதைகளை வாசித்ததில் இருந்து நீங்கள் இந்தக் காலத்து ஆள் - ஏன் எதிர்காலத்துக்கும் ஏற்றதொரு மனப்பாங்கு உள்ள ஆள் என்றல்லவா எண்ணியிருந்தேன்!?
என்னாச்சு கேபிள்..? சாளேஸ்வரம் வந்தால் சமாளிக்கக் கூடாது. கண்ணாடி போட்டுக்கணும். கொஞ்சம் பழைய பாதையைப் பாருங்க. தினம் எழுதுவதால் வரும் களைப்பா...
உங்கள் எழுத்துக்களை மட்டுமே படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். கவலையோடு எழுதுகிறேன்... கவனித்துக் கொள்ளுங்கள். இதுவல்ல நீங்கள்?
இந்த போக்கு நம் சமுகத்தின் சகல திசைகளிலும் உள்ளது. பிற சமுகத்தை பற்றிய பாடம் நமக்கு மிக குறைவே.. பிற நாடுகளிலிருந்து எல்லா தொழிட்நுடபம் மற்றும் கலாச்சரங்களை அடையாளங்களை திருடுவோம்... ஆனால் அடிப்படை ஒழுங்கு, தனிநபர் உணர்வு என்பதில் நம் மக்கள் மிக கீழான நிலையில் இருக்கிறார்கள். பேராசிரியர்கள் மாணவர்களின் மன நலன்கள் பற்றிய அடிப்படை கல்வியில் இன்னும் ஆவன்னாவை தாண்டவில்லை என்பதுதான் தற்கொலைக்கான அடிப்படை காரணம்.
ஏன் முக்கியமில்லையா!?
||அந்த ஆசிரியர்களின் வாழ்க்கையை எவ்வளவு தூரம் பாதிக்கும் தெரியுமா?
||
பிள்ளையை தொலைத்த குடும்பம் மற்றும் உறவுகளுக்கு வரும் பாதிப்பு!
...
இது போல் பல வரிகளுக்கு கேள்வியும் பதிலுமாய் போராடலாம், ஆனால் பயனில்லை!
முன்முடிவோடு இருக்கும் உங்களிடம் இது குறித்து என்ன பேச!
நம்மூரில் இருக்கும் எல்லா ஆசியர்களும் கொடுமைக்காரர்கள் என்று யாரும் சொல்லிவிடமுடியாது. ஆனால் ஓரிருவர் மிகக் கடுமையான குற்றங்களை வன்முறைகளை மாணவ, மாணவிகள் மேல் ஏவிவிடுவது இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கடக்கும் வல்லமை படைத்தவர்கள் கடந்து போகிறார்கள். முடியாத, கடும் வலி கொண்டவர்கள் - தற்கொலையை தேர்ந்தெடுக்கலாம். ஆசிரியர்கள் செய்த கொடுமையால் பிள்ளைகள் இறந்தால் அந்த ஆசிரியர்கள் மேல் குறைந்த பட்சம் கடும் கண்டனத்தை பதிவு செய்வது மனித தேவை.
வெரி சாரி கேபிள்
என்னவோ மாற்றுப்பார்வையில் எழுதனுமேன்னு எழுதியிருக்கீங்க!
உங்கள் இந்த இடுகையோடு கடுமையாக முரண்படுகிறேன்!
//சைக்கிள்காரனுக்கு குறுக்கே நடந்து அடிபட்டால், தவறு நடந்து வந்தவன் செய்திருந்தாலும் சைக்கிள்காரந்தான் தப்பு செய்தான், என்று முடிவு செய்வது போல யாரோ எவரோ எங்கோ ஒருவர் செய்யும் தவறான செயல்களை பொதுபுத்திக் கொண்டு உணர்ச்சிவசப்படாமல் பார்க்க பழகினால் பல பிரச்சனைகளுக்கான காரணம் தெரியும்//
இது தான் பிரச்சனை சார்
//இதே பத்திரிக்கைகளும், பதிவர்களும் அவர்கள் எழுதியதற்கு குறைந்தபட்சமாக வருத்தமாவது தெரிவிப்பார்களா? //
கண்டிப்பாக கிடையாது
அவர்களுக்கு திட்ட ஒரு சாக்கு வேண்டும்
அவ்வளவு தான்
இது தினம் தினம் நடப்பது தானே
--
இங்கும் நீங்கள் சொன்ன அதே சைக்கிள்காரன் - நடந்து வரும் நபர் உதாரணம் தான்
பிறகு ஏன் அந்த ஆசிரியர் பணி மாற்றம் செய்யப்பட்டார்
--
இவ்வளவு பொங்கிய பதிவர்கள் ஒருவராவது அந்த ஆசிரியர் பணி மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்த்து பதிவிட்டார்களா
இருந்தால் சுட்டி காட்டவும்
--
தேர்வில் ஏமாற்றுவதை தடுத்த ஆசிரியருக்கு - ஒரு நாகரிகமற்ற கும்பல் கூச்சல் போடுவதால் - பணிமாற்றம் என்பது எங்கு சென்று முடியும்
//
தேர்வில் வெற்றியடையாத மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கூட அதற்கும் ஆசிரியர் தான் காரணமா
தேர்வில் ஏமாற்றும் மாணவியை கண்டுபிடித்த ஆசிரியரை பணிமாற்றம் செய்வதும் மன நெருக்கடி தானே
அல்லது
அது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமா
என்ற கேள்விக்கு யாரிடமாவது விடையுள்ளதா
மாணவர்களை கண்டிக்கவே கூடாதா ?? மாணவர்கள் தவறே செய்யாதவர்களா ??
கண்டிப்பா இல்லை. தெளிவாகதானே இருக்கு ??
இப்ப புலம்பும் பெற்றோர்கள் ,மகளிடம் ஏன் ஒழுக்கத்தை கடைபிடிக்க சொல்லவில்லை ??
எப்படியாவது அவர்கள் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்றுதானே முக்கால்வாசி பேர் எதிர்பாக்கிரார்கள் ??
உங்கள் பொது புத்தி கடைசிவரை மாறாமல் இருக்கும் என்று நினைக்கின்றேன்.
தினத்தந்தியில் வந்த இரண்டு விஷயத்துக்கு நீங்க பொங்கி இருக்க வேண்டாம்...
கடித்த்தில் அந்த பெண் எதையும் குறிப்பிடவில்லை என்று சொன்னீர்கள் பாருங்கள் அந்த இடத்தில் உங்கள் பொது புத்தி நன்றாக வேலை செய்கின்றது....
ஏன் தற்கொலை செய்து கொள்ளும் பெண் கடித்த்தில் கமா புல்ஸ்டாப் வைக்கவில்லை என்ற கேள்வி இல்லாத வரை சந்தோஷமே...
- இல்லை புரூனோ...இதில் யார் தூண்டினார்கள் என்பதுதான் கேள்வி. ஆசிரியர்கள் Mature-ஆக handle செய்திருந்தாலும் அந்த மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறேன். மன அழுத்தத்தில் செய்யும் செயல்களுக்கு தனி மனிதன் பொறுப்பை நான் கேள்வி கேட்கவில்லை. ஆனால் ஒருவரால் மன அழுத்தம் தூண்டப்ப்ட்டு செய்யும் செயல்கள் அவ்வாறு செய்ய வைத்தவரையும் பொறுப்பேற்க வேண்டும்.
அதை சங்கர் சுட்டவில்லை என்பதே என் வாதம்.
நன்றி.
அல்லது
அது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமா
என்ற கேள்விக்கு யாரிடமாவது விடையுள்ளதா
-- புரூனோ...பின்னூட்டங்கள் எதுவும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை (இதுவரை) என்று நினைக்கிறேன்.
அதீதமாக அலட்டும் ஆசிரியர்களைப் பற்றிதான் (including the one who instigated this death) இங்கே ஆட்சேபங்கள். மன அழுத்தம் எவ்வகையான் வன்முறைகளுக்கு மாணவர்களை இழுத்து செல்லும் என்பதற்கு அமெரிக்காவில் பள்ளிகளில் வருடத்திற்கு ஒரு முறையாவது நடக்கும் துப்பாக்கி சூடுகள் உதாரணம். இந்தியாவில் அது தற்கொலையாக வெடிக்கிறது. ஆசிரியர்களின் பழைய குருகுல mentality இதற்கு ஒரு காரணம் (’நாங்க எல்லாம் டீச்சர்கிட்ட அடி வாங்கித்தான் படிச்சோம். உனக்கென்ன..’).
இது மாறும் வரை எதுவும் செய்ய முடியாது.
இதை வழிமொழிகிறேன்
ஆனால்
அதே நேரம்
அந்த ஆசிரியரின் பணிமாற்றல் உத்தரவிற்கு எதிராக யாராவது பொங்கினார்களா என்றும் தெரிந்து கொள்ள ஆவல் :) :)
//
நடவடிக்கை எடுத்து
அந்த மாணவர் தற்கொலை செய்தால்
ஏன் அந்த ஆசிரியரை குறை சொல்கிறீர்கள்
இதையும் படிங்க: இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி .....
இது இரண்டுமே மாணவிகள் தற்கொலை என்றாலும்,வெவ்வேறு சூழலால் தற்கொலை செய்து கொண்டது.
காப்பி அடித்தது தடித்தனம்.அதை தட்டிக்கேட்ட ஆசிரியர் செய்தது தவறல்ல
====
அந்த மீனவர் சமூக பெண்ணை ஏழை என்பதாலோ? சாதாரண தோற்றமுள்ளவள் என்ற கண்ணோட்டத்திலோ நிர்வாணப்படுத்தி சோதனையிட்டுள்ளனர். அப்படித்தானே எல்லா பத்திரிக்கையிலும் வந்தது, உங்களுக்கு மட்டும் அது அப்படி நடக்கவில்லை என எப்படி ஒரிஜினல் வெர்ஷன் தெரிந்தது தல? அதைச் சொல்லுங்கள்.அந்தப் பெண் மூன்றாம் ஆண்டு பிஎஸ்ஸி படித்துக் கொண்டிருந்தார்.21வயது நல்லது கெட்டது தெரிந்த வயது தான். மேலும் எத்தனையோ வறுமையையும் சோதனைகளையும் எதிர்கொண்டிருப்பார்.அப்படிப்பட்ட பெண் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு செல்லவேண்டுமென்றால் அன்றைய தினம் உடல்ரீதியாக எவ்வளவு அவமானத்தை சந்தித்திருக்கவேண்டும்? உங்கள் கூற்றுப்படி அந்தப்பெண் திருடியிருந்தால் அவள் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டாள், ஆசிரியர்கள் தன்னை லெஸ்பியன் உறவுக்கு அழைத்தனர் என்று புகார் சொல்லியிருப்பார். தயவு செய்து வெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்கள் தல.
உங்கள் பதிவுகள் அத்தனையையும் படிப்பவன் என்னும் முறையில் நீங்கள் சொன்னதனால் தான் நான் இங்கே வந்து பதில் சொன்னேன்.தவிர நீங்கள் சொன்ன முதல் பெண்ணுக்கான கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன், ஆனால் இந்தப்பெண்ணுக்கான உங்கள் கருத்தைப்பற்றி சிந்தியுங்கள்.
ithuthaan vikadanil vantha news.....veenaka antha teacharkalukku support bannathirkal
விகடனும் ஒரு பத்திரிக்கைதான். அவர்களுக்கும் வியாபாரம் வேண்டும். அவர்களும் பாலோஅப் செய்திகளை போட்டதில்லை.
ஒரு முறை ஜீவியில் என்னையும் என் நண்பர்களையும் பற்றி எழுதிய கட்டுரையை படித்து விட்டு நாங்கள் அவர்களுக்கு போன் செய்து கலாய்த்த விஷயம் இப்போ வெளியே சொல்ல முடியாது.. ஹா..ஹா
//
இப்படி காப்பி அடிப்பதை தட்டி கேட்பவர்களுக்கு பணி மாற்றம் என்றால் தேர்வு கூடத்தில் கண்காணிப்பாளரே வேண்டாமே... அனைவரையும் வீட்டிலேயே தேர்வு எழுதச்சொல்லலாமே
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=187012
நல்லா இருக்குங்க உங்க பேச்சு. காப்பி அடித்ததை தட்டிகேட்ட ஆசிரியர்மட்டும் நேர்மையான முறையில் படித்து லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக வேலையில் சேர்ந்திருப்பாரா என்ன? வளர்ந்த நாடான அமெரிக்காவிலேயே child abuse தவறு என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே
vijay
chennai
Nanga yenna thappu pannam? yethuvum pirachanaya udana engamelathan kovatha kattuvanuga.
ulagam romba perusu manusanoda kurura puththi valiyavan vaguththathuthan sattam.ithan unmai
Ellam therinchamari nenga eluthurathu nallava iruuku??inththananal unga blog padichatha ninacha kevelama irukku..
கண்டிப்பாக வந்திருப்பார்
அப்படி வந்திருக்காவிட்டால் கூட காப்பி அடிப்பதை தட்டி கேட்க ஒரு ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு என்பதே என் கருத்து
// வளர்ந்த நாடான அமெரிக்காவிலேயே child abuse தவறு என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே//
ஒரு மாணவன் / மாணவி தேர்வில் காப்பி அடிப்பதை தடுப்பது child abuse ஆ
என்ன கொடுமை சார் இது
ஆசிரியர்களும் பெற்றோர்களும் தத்தம் கடமைகளை ஒழுங்க்காகச் செய்கிறார்களா என்று யோசிக்க முற்படவேண்டும்.
http://lksthoughts.blogspot.com/2011/02/blog-post_15.html