Thottal Thodarum

Feb 21, 2011

கொத்து பரோட்டா-21/02/11

சில பேருக்கு தமிழில் கொஞ்சம் காதல், காமம், வன்முறையோடு படமெடுத்தால் உடனே காச்மூச்சென கத்துவார்கள். ஏதோ எல்லா தமிழ் திரைப்படங்களும் சமுதாயத்தை மாற்றும் நோக்கோடுதான் படமெடுக்கப்படுவதாக நினைத்துக் கொண்டு.  அடுத்த காமெடி, ஆங்கில படத்தில் டபுள் மீனிங், ட்ரிபிள் மீனிங் டயலாக்கெல்லாம் வந்தால் புரியாமலேயே அஹா ஓஹோ என்று பாராட்டுவார்கள். அதுவே தமிழ் படத்தில் வந்தால் சீலீங்கிற்கும், தரைக்குமாய் குதிப்பார்கள். அதற்கடுத்த ஒன்று, ஆங்காங்கே வரும் வசனங்கள், நெளிய வைக்கிறது. குடும்பத்தோடு படம் பார்க்க முடியாது என்று எழுதுவது. என்னவோ ஒரு படம் நன்றாக இருக்கிறது என்றவுடன் மொத்த குடும்பத்தையும் தியேட்டருக்கு கூட்டிக் கொண்டு போய் படம் பார்க்கிறார் போல். ஏ சர்டிபிகேட் படத்திலென்ன யூ சர்டிபிக்கேட் மேட்டரையா காட்டுவார்கள்? இம்மாதிரியான உண்மைத்தமிழர்கள் இருக்கும் பட்சத்தில் ஆயிரம் ஏன் லட்சம் பேர் வந்தாலும் திருத்த முடியாதுஙக. (அண்ணே மறக்காம வந்து மைனஸ் ஓட்டு போடுங்கண்ணே.)
######################################

சஞ்செய்யின் திருமணத்திற்காக மொரப்பூருக்கு இரண்டு நாள் இனிமையான பயணம்.  திரளாய் தமிழ்நாட்டின் பல பாகங்களிலிருந்து பதிவர்கள் வந்திருந்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. சென்னையிலிருந்து நான்,ஆதி, சிங்கப்பூர் ஜோசப், சென், கார்க்கி, பாதியில் ஏதோ ஒரு ஊரிலிருந்து ஏறிய சந்தோஷ். உ.தமிழன், லக்கி பிரதர்ஸ்,ஜாக்கி, அண்ணாச்சி வடகரை வேலன், வானம்பாடிகள் பாலா, எறும்பு ராஜகோபால், தினேஷ், டாக்டர் புருனோ, காயத்ரிஜி, டாக்டர் ரோஹிணி ரெண்டு முன்னதாகவே திருமணத்தை நடத்தி வைக்க கிளம்பிய நம்ம தண்டோரா மணிஜி, அகநாழிகை வாசு, மயில்ராவணன். குடும்பத்தோடு வந்திருந்த, வெண்பூ, பரிசல், ஜீவ்ஸ், அப்துல்லா. ஈரோட்டிலிருந்து, கார்த்தி,கதிர்,ஆரூரான், ஜாபர். திருப்பூரிலிருந்து வந்திருந்த ஈரவெங்காயம் சுவாமிநாதன், வெயிலான், முரளிகுமார் பத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். இந்த இனிமையான சந்திப்புக்கு காரணமான சஞ்செய் வாழ்வில் பதினாறும் பெற்று வளமோடு வாழ வாழ்த்துகிறோம். யாராவது இப்படி எல்லாரையும் வரவழைக்கிறாப் போல சீக்கிரம் இன்னொரு கல்யாணம் பண்ணுங்கப்பா.. இல்லாட்டி.. நான் பண்ணலாமான்னு யோசிக்கிறேன்.
#######################################
பாடகர் மலேசியா வாசுதேவன் மறைந்த செய்தியைத்தான் இன்று காலையில் முதலில் கேட்டேன். மிகவும் வருத்தமாய் இருந்தது. மற்ற பாடகர்களை விட இவரது குரல் தனித்தன்மை பெற்றது. ஆசை நூறு வகை, வா வா வசந்தமே, முதல் மரியாதை, பூவே இளைய பூவே இதெல்லாம் இவரது மாஸ்டர் பீஸ்களில் ஒரு துளி. ஆழ்ந்த இரங்கல்கள்.
#######################################
அறிவிப்பு
இணையத்தில் புத்தக கண்காட்சியை நடத்திவரும் பதிவர்.குகனின் முயற்சிக்கு பாராட்டுக்கள். இக்கண்காட்சியில் 230 ரூபாய் மதிப்புள்ள என்னுடய மூன்று புத்தகங்களையும் 200 ரூபாய்க்கு அளிக்கிறார். என் புத்தகங்களைத் தவிர பலரது சிறந்த நாவலகள் கண்காட்சியில் வைத்திருக்கிறார். மேலும் தகவல்களுக்கு…. http://guhankatturai.blogspot.com/2011/02/we-can-books.html
#########################################
ப்ளாஷ்பேக்
The Eagles. எழுபதுகளில் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க பேண்ட். கடந்த முப்பது வருடங்களில் ஐந்து முதன்மை சிங்கிள்களும், ஆறு கிராமி விருதுகளையும், ஐந்து அமெரிக்க இசை விருதையும், ஆறு சூப்பர் ஹிட் ஆல்பங்களையும் கொடுத்தவர்கள். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த, முக்கியமான ஆல்பங்களில் இவர்களது இந்த Their Greatest Hits (1971–1975) and Hotel California,வும் உண்டு.
############################################
தத்துவம்
பொய்களால் கட்டப்பட்ட பிம்பங்களை பார்த்து வியந்து, ஆச்சர்யப்பட்டு, அதிசயத்து அண்ணாந்து பார்க்கும் போது இருக்கும் சந்தோசம், அதிலிருக்கும் ஒரு பொய்யை உருவியதால் கட்டவிழ்ந்து போய் நொறுங்கும்போது   கிடைப்பதில்லை.
####################################
ஐன்ஸ்டைனுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் உள்ள வித்யாசம் என்ன?
ஐன்ஸ்டைன் – Everything is relative
கலைஞர் – Relative is everything.
####################################
ஒரு வழியா 31 சீட்டு வாங்கிட்டாரு டாக்டரு.. ஆனா இந்த சீட்டெல்லாம் முக்கியமில்லை அவருக்கு. அவருக்கு முக்கியம் அந்த ஒரே ஒரு சீட் தான். ராஜ்யசபா சீட்டு. பின்ன தேர்தல்ல ஜெயிக்காம மந்திரியாவுறதுன்னா சும்மாவா?
########################################
குறும்படம்
ச.
அறிவழகனின் சிறுகதையை குறும்படமாக்கியிருக்கிறார் நண்பர் ரவிக்குமார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் என்னுடய போஸ்டர் கதையை எடுத்தவர். சாதாரண கதையாக இருந்தாலும் அதை சிறப்பாய் கொடுப்பதற்கு முயற்சிப்பதில்  முனைபவர் ரவிக்குமார். இக்குறும்படத்தில் என்னை ஆச்சர்யப்படுத்தியது சி.ஜி ஒர்க் தான். ஏனென்றால் பிணம்தான் இக்கதையின் நாயகன். அது சரியாக காட்டப்படாவிட்டால், கதைக்கான இம்பாக்ட் வந்திருக்குமா என்று தெரியவில்லை. இப்படமும் அந்நிகழ்ச்சியில் பாராட்டு பெற்றது. இப்படத்தில் நான் ஒருவருக்கு குரல் கொடுத்திருக்கிறேன். முடிந்தால் கண்டு பிடியுங்கள்
################################################
நூறு ரூபாய்க்கு சேஞ்சு வேணும். பத்து நோட்டுலதான் சில்லரை கொடுக்கணும். ஆனா அதுல ஒரு பத்து ரூபா நோட்டுக் கூட இருக்ககூடாது எப்பூடின்னு ஒருத்தன் எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிச்சி இம்சை படுத்திட்டிருக்கான். தயவு செஞ்சு மக்களே சொல்லி என் மானத்தை காப்பாத்துங்க.
########################################
அடல்ட் கார்னர்
புதியதாய் கல்யாணம் ஆன சிங்குக்கு முக்கிய சம்பவத்துக்கு முன்னயே ஸ்கலிதமாகிவிட நொந்து போய் டாக்டரை பார்க்க சொன்னாள் மனைவி. அவர்கள் இருந்தது 20 மாடி பில்டிங். அங்கு லிப்ட் கிடையாது. டாக்டர் 20வது மாடியிலும், சிங் தரைத்தளத்திலும் இருந்தார்கள். டாக்டர் ஒண்ணும் ப்ரச்சனையில்ல இந்த மாத்திரையை மேட்டருக்கு முன்னாடி சாப்ட்டு போ.. எல்லாம் சரியாயிரும் என்று சொன்னார். எதுக்கும் இப்பவே சாப்பிட்டா கீழே போய் மேட்டர் முடிக்க சரியாயிருக்கும்னு நினைச்சு அப்பவே போட்டாரு சிங். பதினெட்டாவது மாடியிலேயே டன்சனாயிருச்சு. கண்ட்ரோல் பண்ணவே முடியலை வழியில வந்த ஒரு ஐம்பது வயது பெண்ணை மேட்டர் பண்ணிட்டாரு. சரின்னு திரும்ப டாக்டர் கிட்ட போய் நடந்ததை சொன்னாரு. அவரும் மாத்திரைய கொடுத்து வீட்டுக்கு போய் போடுன்னு சொன்னார். சிங் 15 மாடி வரும் போது யோசிச்சி ஏற்கனவே ஒரு ரவுண்டு முடிஞ்சி போச்சி. அதனால இப்ப மாத்திரைய போட்டா சரியாயிருக்கும்னு நினைச்சி போட, திரும்பவும் அதே ப்ராப்ளம். வழியில வந்த ஒரு முப்பது வயசு பெண்ணை போட்டாரு. அடுத்து திரும்பவும் டாக்டர்.. மாத்திரை.. இப்ப சரின்னு கண்ட்ரோல் செஞ்சிட்டு மூணாவது மாடியில மாத்திரை போட, திரும்பவும் அதே ப்ரச்சனை கண்ட்ரோல் செய்ய முடியல.. வழியில முத மாடியில வந்த ஒரு சின்ன பொண்ணை மேட்டர் பண்ணிட்டாரு. கட் பண்ணா டாக்டர் வீடு. டாக்டர் அழ ஆரம்பிச்சிட்டாரு.. “வாடா.. முத மாத்திரைக்கு எங்கம்மாவை, இரண்டாவதுக்கு, என் பொண்டாட்டிய, மூணாவதுக்கு என் பொண்ணை இப்ப திரும்ப மாத்திரை கேக்குறே மிச்சம் நான் தான் இருக்கேன் வா.. என்று அழுதார்
########################################
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

37 comments:

Jana said...

1st...

Jana said...

மலேசியா வாசுதேவனின் மறைவு சோகமான ஒரு செய்தி. பலவேறு தரப்பட்ட பாடல்கள் அவர் குரலில் அற்புதமான பாவங்களே..
ஒரு மூடன் கதை சொன்னால்..
அயிரம் மலர்களே மலருங்கள்
ஆகாய கங்கை
முதல்மரியாதையின் மக்கியமான பாடல்கள்..
என்று சொல்லிக்கொண்டே போகலாம்..

Rishoban said...

"சில பேருக்கு தமிழில் கொஞ்சம் காதல், காமம், வன்முறையோடு படமெடுத்தால் உடனே காச்மூச்சென கத்துவார்கள். ஏதோ எல்லா தமிழ் திரைப்படங்களும் சமுதாயத்தை மாற்றும் நோக்கோடுதான் படமெடுக்கப்படுவதாக நினைத்துக் கொண்டு. அடுத்த காமெடி, ஆங்கில படத்தில் டபுள் மீனிங், ட்ரிபிள் மீனிங் டயலாக்கெல்லாம் வந்தால் புரியாமலேயே அஹா ஓஹோ என்று பாராட்டுவார்கள். அதுவே தமிழ் படத்தில் வந்தால் சீலீங்கிற்கும், தரைக்குமாய் குதிப்பார்கள். அதற்கடுத்த ஒன்று, ஆங்காங்கே வரும் வசனங்கள், நெளிய வைக்கிறது. குடும்பத்தோடு படம் பார்க்க முடியாது என்று எழுதுவது. என்னவோ ஒரு படம் நன்றாக இருக்கிறது என்றவுடன் மொத்த குடும்பத்தையும் தியேட்டருக்கு கூட்டிக் கொண்டு போய் படம் பார்க்கிறார் போல். ஏ சர்டிபிகேட் படத்திலென்ன யூ சர்டிபிக்கேட் மேட்டரையா காட்டுவார்கள்? இம்மாதிரியான உண்மைத்தமிழர்கள் இருக்கும் பட்சத்தில் ஆயிரம் ஏன் லட்சம் பேர் வந்தாலும் திருத்த முடியாதுஙக. "

Supperrrrr!!!!

Jana said...

ஐன்ஸ்டைனுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் உள்ள வித்யாசம் என்ன?
ஐன்ஸ்டைன் – Everything is relative
கலைஞர் – Relative is everything.

ha..ha..ha..:)

ஓஜஸ் said...

Puzzle Answer -
50 + 20 + 20 + 2 + 2 + 2 + 1 +1 +1 +1 = 100 (10 notes) ... Prize ethavathu irukka?

KARTHIK said...

// இல்லாட்டி.. நான் பண்ணலாமான்னு யோசிக்கிறேன். //

தல குழந்தை திருமணத்த தட பண்ணிருக்காங்க :-))

சஞ்சைக்கு நன்னி :-))

shortfilmindia.com said...

kaarthik
நண்பேண்டா..

Peter Arockiaraj said...

1+2+2+5+5+5+20+20+20+20=100

ஆர்வா said...

பொய்கள் பற்றின அந்த தத்துவம் சிலிர்க்க வெச்சது...

Peter Arockiaraj said...

1+2+2+5+5+5+5+5+20+50=100 (10 Notes)

Thirumalai Kandasami said...

அபியும் நானும் பார்த்ததில் இருந்து,சிங் ஜோக்குகளை நான் விரும்புவது இல்லை.நீங்கள் அடல்ட் கார்னர் ல் பயன்படுத்தியது ,மன வருத்தத்தை கொடுக்கிறது.
மாற்ற வேண்டும் என்று கட்டாயபடுத்தவில்லை ,,வேறு பெயரை உபயோகிக்க பரிந்துரைக்கிறேன்.

Indian said...

//சில பேருக்கு தமிழில் கொஞ்சம் காதல், காமம், வன்முறையோடு படமெடுத்தால் உடனே காச்மூச்சென கத்துவார்கள். ஏதோ எல்லா தமிழ் திரைப்படங்களும் சமுதாயத்தை மாற்றும் நோக்கோடுதான் படமெடுக்கப்படுவதாக நினைத்துக் கொண்டு. அடுத்த காமெடி, ஆங்கில படத்தில் டபுள் மீனிங், ட்ரிபிள் மீனிங் டயலாக்கெல்லாம் வந்தால் புரியாமலேயே அஹா ஓஹோ என்று பாராட்டுவார்கள். அதுவே தமிழ் படத்தில் வந்தால் சீலீங்கிற்கும், தரைக்குமாய் குதிப்பார்கள். அதற்கடுத்த ஒன்று, ஆங்காங்கே வரும் வசனங்கள், நெளிய வைக்கிறது. குடும்பத்தோடு படம் பார்க்க முடியாது என்று எழுதுவது. என்னவோ ஒரு படம் நன்றாக இருக்கிறது என்றவுடன் மொத்த குடும்பத்தையும் தியேட்டருக்கு கூட்டிக் கொண்டு போய் படம் பார்க்கிறார் போல். ஏ சர்டிபிகேட் படத்திலென்ன யூ சர்டிபிக்கேட் மேட்டரையா காட்டுவார்கள்?//

True.

Indian said...

//இருபதாம் நூற்றாண்டின் சிறந்த, முக்கியமான ஆல்பங்களில் இவர்களது இந்த Their Greatest Hits (1971–1975) and Hotel California,வும் உண்டு.//

Hotel California is a gem.

Ever heard of Hotel Keralafornia by The Yeagles? :)

Rajan said...

Cable Ji

Puzzle Answer :

20+20+20+20+5+5+5+2+2+1 = 100 (10 notes)

Regards

RAJAN.S.T
TUTICORIN

அகநாழிகை said...

கேபிள், எப்போ அறுபதாம் கல்யாணம் சொல்லவே இல்ல.. வாழ்த்துகள். :)

'பரிவை' சே.குமார் said...

//ஐன்ஸ்டைனுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் உள்ள வித்யாசம் என்ன?
ஐன்ஸ்டைன் – Everything is relative
கலைஞர் – Relative is everything.///

Ha...Ha...Haaa...


மலேசியா வாசுதேவனின் மறைவு சோகமான செய்தி.

FREIND-நண்பன் said...

/**நூறு ரூபாய்க்கு சேஞ்சு வேணும்.**/
20+20+20+20+5+5+5+2+2+1 = 100

Unknown said...

"நேத்துத்தானடா ரெண்டு பேர புதுசா வேலைக்கி சேத்துனேன்” அது உங்க குரல் தானே!

Unknown said...

//
கேபிள், எப்போ அறுபதாம் கல்யாணம் சொல்லவே இல்ல.. வாழ்த்துகள். :)
//

அட விடுங்க பாஸ் (கேபிள் அண்ணே), இந்த ஊரு உண்மைய எப்ப ஒத்துக்கிட்டிருக்கு...

KOTTAKUPPAM said...

(அண்ணே மறக்காம வந்து மைனஸ் ஓட்டு போடுங்கண்ணே.)

sema punch

பிரபல பதிவர் said...

அந்த சண்ட இன்னும் தீரலயா???

இன்னைக்கு போலாமான்னு யோசிக்கிறேன்.... நூறு ரூவாய நினச்சாத்தான் குழப்பமா இருக்கு.....

Senthil said...

50 1 50
20 1 20
5 5 25
2 2 4
1 1 1
Total 10 100

Anonymous said...

!!! மலேசியா வாசுதேவன் குறித்து ஒரு தனிப்பதிவை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

அறுபதாம் கல்யானத்துக்கு ரெடியாவறாரு நம்ம யூத்து...

அறுபது வயசுல தானே அறுபதாம் கல்யாணம்? இப்பதான் ரெடியாவறேன்னு சொல்றீங்க... ஏழு வருத்துக்கு முன்னாடியே நடந்திருக்கனுமே... ஏன் அப்ப மிஸ் பன்னிட்டீங்களா?

Shan said...
This comment has been removed by the author.
Shan said...

50 0 0
20 4 80
5 3 15
2 2 4
1 1 1
Total 10 100

பா.ராஜாராம் said...

அற்புதமான குறும்பட பகிர்வுஜி! அப்பா, மகன் இருவரின் expressions - ம் class! பகிர்விற்கு நன்றி!

சஞ்சய், வாழ்த்துகள்!

வணங்காமுடி...! said...

50 x 1 = 50
20 x 1 = 20
5 x 5 = 25
2 x 2 = 4
1 x 1 = 1

Notes 10= 100

R.Gopi said...

என்ன கேபிளுக்கு அறுபதா? எப்போ? எப்போ? இதுக்காகவே இங்க இருந்து சென்னை வந்துடறேன்...

தல

அந்த ஏ ஜோக்.... நெம்ப பழசு...

பரிசல்காரன் said...

ஐன்ஸ்டீன் - கலைஞர்: டாப்!

ரமேஷ் வைத்யா said...
This comment has been removed by the author.
ரமேஷ் வைத்யா said...

கலாசாரக் காவலர் உதவைக் கிண்டலடித்ததைக் கண்டிக்கிறேன்

ரமேஷ் வைத்யா said...

கலாசாரக் காவலர் உதவைக் கிண்டலடித்ததைக் கண்டிக்கிறேன்

ரமேஷ் வைத்யா said...

கலாசாரக் காவலர் உதவைக் கிண்டலடித்ததைக் கண்டிக்கிறேன்

ரமேஷ் வைத்யா said...

கலாசாரக் காவலர் உதவைக் கிண்டலடித்ததைக் கண்டிக்கிறேன்

ரமேஷ் வைத்யா said...

கலாசாரக் காவலர் உதவைக் கிண்டலடித்ததைக் கண்டிக்கிறேன்

ரமேஷ் வைத்யா said...

கலாசாரக் காவலர் உதவைக் கிண்டலடித்ததைக் கண்டிக்கிறேன்