Thottal Thodarum

Jan 13, 2014

கொத்து பரோட்டா - 13/01/14 -Dhrishyam, Nenokkadaine, வீரம், ஜில்லா, புத்தக கண்காட்சி


புத்தக கண்காட்சி -3
இன்று என் மகன்களுடன் செல்வதாய் ப்ளான்.  தயாரிப்பாளர் சி.வி. குமாரும் அழைத்திருந்தார். கடந்த வருடம் போலவே இந்த வருடமும். பன்னிரெண்டு மணிக்கு காரில் சென்றால் பார்க்கிங் செய்ய இடமில்லை என்று திரும்ப அனுப்பிக் கொண்டிருந்தார்கள். வேறு வழியேயில்லாமல் வண்டியை யூ டர்ன் செய்து கொண்டு, எதிர் சைடில் இருந்த ஒர் கடையின் பார்க்கிங்கில் பார்க் செய்துவிட்டு உள்ளே சென்றேன். ஞாயிறு என்பதால் சாத்தியமானது. செம கூட்டம். இன்று வெய்யில் கொஞ்சம் இருந்ததால் வியர்த்துக் கொட்டியது. மினிமல்ஸ் அமெரிக்க ஐஸ்கிரீமோடு எங்கள் ஷாப்பிங் ஆரம்பமானது. ஒரு பக்கம் மகன்கள் ஒவ்வொரு கடையாய் சுற்றிப் பார்த்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நானும் சிவியும், தற்கால சினிமா, அவரின் தயாரிப்புக்கள், என் படத்தின் தற்போதையை நிலை என்று தமிழ் சினிமாவை ஒர் அலசு அலசினோம். கவிஞர் கீதாஞ்சலி எங்கள் இருவரையும் அடையாளம் கண்டு வாழ்த்தினார். மூத்த மகன் ஒர் ஆங்கில நாவலை செலக்ட் செய்ய, சின்னவனிடன் கேட்டதில் பார்த்த வரையில் ஏதும் இம்ப்ரஸ் செய்யலை என்றான். முடியலை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@Dhrishyam
ரொம்ப நாளாய் டிக்கெட் கிடைக்காமல் போராடி பார்த்த படம். படம் பார்த்த பின் தான் போராட்டம் எவ்வளவு நியாயமானது என்று புரிந்தது. நாலாம் க்ளாஸ் மட்டுமே படித்த ஒர் கேபிள் ஆப்பரேட்டரின் மகளை ஐஜியின் மகன் ஸ்கூல் டூரின் போது நிர்வாணமாய் போட்டோ எடுத்து, தன்னுடன் படுக்காவிட்டால் இண்டெர்நெட்டில் விட்டு விடுவேன் என்று மிரட்டுகிறான். அவனின் மனைவி ஐஜி பையனிடன் கெஞ்ச, சரி உன் பொண்ணு வேணாம் நீ வா என்று சொல்ல மகள் கோபத்தில் இரும்பு கம்பியாய் அவன் மண்டையில் ஒர் போடு போட, ஆள் காலி. பின்பு எப்படி அக்குடும்பத்தை குடும்பத்தலைவன் போலீஸ், அரசியல் ப்ரஷர் எல்லாவற்றையும் மீறி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை. ஒர் சாதாரண குடும்பக்கதையாய் ஆரம்பித்து தகதக திரில்லராய் பதைக்க வைக்கிறது. மோகன்லால் எனும் மாபெரும் கலைஞனை ஜில்லா போன்ற படத்தில் நடிக்க வைத்து அவமானப் படுத்துவதை விட திரிஷ்யம் போன்ற படத்தை இன்னும் நான்கு முறை பார்த்து சென்னையில் ஓட்ட வைப்பதுதான் அவருக்கு நாம் செய்யும் மரியாதை. அவருக்கும் மீனாவுக்குமிடையே இரண்டு பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆன பிறகும் மிஞ்சமிருக்கும் ரொமான்ஸை பார்க்க ஆயிரம் கண் வேண்டும். அவ்வளவு க்யூட். கொஞ்சம் ஆங்காங்கே மிடில் க்ளாஸ் மனசாட்சிகளான நாம் கேட்கும் கேள்விகளுக்கு இயக்குனர் சரியான பதிலை கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்.  குழந்தைகளை போலீஸ் இன்வெஸ்டிகேஷனுக்கு தயார் படுத்தும் போது லைஃப் இஸ் பூயூட்டிபுல் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. படம் முடிந்து வரும் போது எப்ப இப்படி ஒரு படம் தமிழ்ல வரும்? என்று ஆதங்கப் படாமல் இருக்க முடியவில்லை. ம்ஹும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜில்லா
படத்தில் ஒர் காட்சியில் மோகன்லாலும், விஜய்யும், காரில் வந்து கொண்டிருப்பார்கள். மோகன்லால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பார். வில்லன்கள் சுத்துப் போட, சத்தமில்லாமல் விஜய் கீழிறங்கி அவ்வப்போது வாயில் கை வைத்து “உஸ்..உஸ்” என்று சொல்லியபடி வில்லன்களை எலும்பு ஒடிய அடித்து துரத்திவிட்டு காரில் ஏறுவார். அப்போது தியேட்டரில் ஒர் ஆடியன்ஸ் “ இப்ப மோகன்லால் சொல்லுவான் பாரேன். என்னடா ஆச்சுன்னு கேட்பாரு. விஜய் ஒண்ணுமில்லைன்னு சொல்லுவாரு.. அதான் சத்தமில்லாம அடிச்சு தூள் கிளப்பிட்டியேன்னு மோகன்லால் சொல்லுவாரு பாரேன்’ என்றார். இம்மி பிசகாமல் அப்படியே சொன்னார் மோகன்லால் திரையில். சீரியஸான காட்சியில் தியேட்டரில் எல்லோரும் சிரித்தார்கள். இப்படி ஒரே ஒரு காட்சியில் ஐ.பி.எஸ் ஆவதெல்லாம் சார்.. விட்ட்ருங்க. முடியலை.. படத்தின் டிவிஸ்டாய் போலீஸே பிடிக்காத விஜய் போலீஸாவதும், அப்பா மகனுக்கிடையே ஆன கன்பர்ண்டேஷந்தான் என்கிற போது, மோகன்லாலை போட்டதால் அவரின் கேரக்டரை ஒர் வில்லனாய் காட்ட முடியாமல் அரை குறை கேரக்டராய் போனதால் சூப்பராய் வர வேண்டிய மோதல் சவசவ..
@@@@@@@@@@@@@@@@@@@@@@
வீரம்
வழக்கமாய் சூட் போட்டுக் கொண்டு நடப்பதற்கு பதிலாய் இதில் வேஷ்டி சட்டை. கொஞ்சம் முரட்டுக் காளை, கொஞ்சம் விக்ரமன், நிறைய தெலுங்கு மாஸ் படங்கள், என கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். என்ன மிக்ஸிங் கொஞ்சம் சரியாய் செய்திருக்கிறார்கள். முதல் பாதியை காப்பாற்றுவது சந்தானமென்றால், இரண்டாம் பாதியில் மீண்டும் சந்தானம் வந்து தமிழ் ப்ரம்மானந்தமாய் தம்பி ராமையாவை வைத்து கும்மியிருக்கிறார்கள். அவையனைத்து பல தெலுங்கு படங்களின் காட்சிகள். ஜில்லாவிற்கும் வீரத்திற்கும் நிறைய ஒற்றுமை உண்டு. ரெண்டுமே மொக்கை மசாலாக்கள், ஒரே விதமான காட்சிகள். உதாரணத்திற்கு வீரத்தில் அஜித் காரோட்டிக் கொண்டு வர, அருகில் அமர்ந்திருக்கும் நாசர் தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரை எழுப்பாமல் சேஸ் செய்ய அஜீத் போராட ஒரு கட்டத்தில் மயிரிழையில் தப்பிக்குமிடத்தில் நாசர் எழுந்துவிடுகிறார். இங்க தான் நிக்குது அஜித்தின் படம். ம்க்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@
பாண்டிபஜாரில் மீண்டும் ப்ளாட்பாரக்கடைகள் வர ஆரம்பித்துவிட்டது. தனியாய் இடம் கொடுக்கப்பட்டவர்கள் கூட மீண்டும் ரோட்டில் கடை போட ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது இவர்களை விட ஆரம்பித்தால் ஐந்து வருடங்களில் இவர்களுக்காக மீண்டும் ஒர் கட்டிடம் கட்டி அதில் அவர்களை குடி வைக்கிறேன் என்று சில பல கோடிகளை மக்கள் வரிப்பணத்தில் இழக்க வேண்டியிருப்பதைத் தவிர வேறேதும் நடக்காது. மாநகராட்சியின் துணையோடுதான் இப்படி நடக்கிறது என்கிறார்கள் ஏரியா வாசிகள். இதை பற்றி இன்று இந்துவில் கூட ஒர் செய்தி வந்திருக்கிறது. தின வாடகை வசூலிப்பதாய்க் கூட சொல்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@
மெயின் ரோட்டில் ஓடும் ஆட்டோக்கள் எல்லோரும் மீட்டர் போட்டு ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள். லோக்கல் ஆட்டோக்கள் வழக்கம் போல அராஜகம் தான். அதில் ஏறும் பயணிகளும் ஏன் மீட்டர் போடவில்லை என்று கேட்பதில்லை. போலீஸோ.. மக்கள் மீட்டர் போடாத ஆட்டோக்களைப் பற்றி புகார் கொடுத்தால்தான் சிறப்பாக செயல்பட முடியுமென்கிறார்கள். கேளூங்க நண்பர்களே.. உங்களது உரிமை.. கேளுங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Nenokkadaine
படம் ஆரம்பித்ததிலிருந்தே பெரிய எக்ஸ்பெக்டேஷனை டீசர் மூலம் ஏற்படுத்தியிருந்தார்கள். வழக்கமான மசாலா தெலுங்கு படமாய் இல்லாமல் கொஞ்சம், கஜினித்தனமான கதை. முழுக்க, முழுக்க, மகேஷ்பாபுவின் ஸ்கிரீன் ப்ரெசன்ஸ் தான் படத்தை காப்பாற்றுகிறது. வீக்கான கதை, மற்றும் திரைக்கதை, ரத்னவேலின் அபாரமான விஷுவல்களை மீறி போரடிக்கிறது. வில்லன் கேரக்டரில் நாசர். ரொம்பவே வீக்கான வில்லன். லண்டனில் எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் டீசரை விட மோசம். வழக்கமான மசாலா தெலுங்கு படங்களிலிருந்து வேறு பட்டு வந்திருக்கும் மகேஷின் படம் என்பதைத் தவிர.. வேறேதுமில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
 • ஏன் சினிமாவுல சென்டிமெண்டுக்கு வேல்யு இருக்குன்னு நீயா நானா பார்க்கும் போது தெரியுது 

 • மடிசாரோடு மடியாய் ஒர் அரங்கு சென்னை புத்தக கண்காட்சியில்
   • டெல்லி அப்பளம் நல்லாருக்கு - புத்தக கண்காட்சி 2
    • Though Excellent Making, Lavishly spend, Technically brilliant, breath taking Mahesh screen presence dosent give satisfaction# Nenokkataine
     • நிஜமெதுன்னு புத்திக்கு தெரியுது மனசுக்கு தெரியலயே..
      • சீனுக்கு சீன் ஷாட்டுக்கு ஷாட் படு புதுசா இருக்குன்னு சொல்லத்தான் ஆசை ஜில்லா
       • மீட்டர் போடாம வண்டியோட்டுறதுக்கு என்ன போராட்டம் வேணா செய்யுறவங்க.. ஓட்டுறது 

        • Though something cinematic. Dhirshyam gives me fantastic experience
        • @@@@@@@@@@@@@@@@@@@@@
        • அடல்ட் கார்னர்
        • TALKING DIRTY When a man talks dirty to a woman, it's sexual harassment. When a woman talks dirty to a man, it's $3.95 per minute
        • கேபிள் சங்கர்

Post a Comment

6 comments:

ajaysampath2012 said...

Both The Movies are really Worst.. Even 1 and Yavadu..Also Fail to mark In grab the audience..... Totally Dull Pongal

ajaysampath2012 said...

All the Best Cable Sankar.. For your Thottal Thodarum

saravanan selvam said...

Jilla மற்றும் வீரம் படத்தின் உங்களது கருத்து மிகவும் சரியே. ரெண்டு படமும் first half ல பாஸ் மார்க்கையும் விட கொஞ்சம் அதிகமாவே மார்க் வாங்குதுங்க. ரெண்டு படமும் செகண்ட் half ல fail ஆகுதுங்க. Jilla படத்துல அந்த NCC students-க்கு கிளாஸ் எடுக்குற scenes-அ கண்டிப்பா கட் பண்ணனும். அந்த scenes படத்தோட கதைக்கு சுத்தமா தேவையே இல்லை. என்னை பொறுத்த வரையில் ஜில்லா படத்தோட concept is far better than வீரம்.

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Barari said...

சன் தொலை காட்சியில் நீங்களும் மணிகண்டன் அவர்களும் நடத்திய கலந்துரையாடல் சிறப்பாக இருந்தது.தொட்டால் தொடரும் வெற்றிக்கு பின் தங்களின் பேட்டி சன்னில் வர வாழ்த்துகிறேன்.

Unknown said...

பர்பெக்ட் நம்பர் அப்படிங்கற கொரியன் படத்தோட உல்டா தான் திரிஷ்யம். இருந்தாலும் நல்ல தான் இருக்கு...!!!