Thottal Thodarum

Dec 16, 2008

எல்லாம் அவன் செயல் - திரை விமர்சனம்.


இருக்கிற கெட்டவர்களையெல்லாம் சட்டத்தின் உள்ள ஓட்டையை கண்டு பிடித்து அவர்களை விடுதலை செய்து, பின்பு அவர்களை கொல்கிறார் கதாநாயகன் எல்.கே. அவனின் பேருக்கு விளக்கமாய் Licence to Kill என்று சொல்லபடுகிறது.

ஏற்கனவே மலையாளத்தில் வந்து சக்கை போடு போட்ட “சிந்தாமணி கொலை கேஸ்” என்கிற படத்தின் தமிழாக்கம்தான். மளையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த கேரக்டரில் ஓரு புதுமுகம்.. பார்பதற்கு இவரும் ஆஜானுபாகுவாய்.. மலையாள ஹீரோ போலவே இருக்கிறார். என்ன நடிக்கத்தான் வர மாட்டேன்கிறது.. எப்போது பார்த்தாலும் க்ளோசப் காட்சிகளில் எதிரே யாரோ சிரிப்பு காட்டி கொண்டிருப்பதை அடக்கி கொண்டு சீரியஸாய் பார்பது போலிருக்கிறது.. கொஞ்சம் உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிடுங்கள்.. அவர் எப்படி இருப்பார் என்று புரியும்..

சிந்தாமணி என்கிற ஓரு ஏழை பெண் மெரிட்டில் மெடிக்கல் காலேஜ் சீட் கிடைத்து வருகிறாள். அங்கே காலேஜில் இருக்கும் ஸ்பைஸ்கேர்ள் என்று அழைக்கபடும் 9 பெண்கள் அவரை ராகிங் செய்து.. நம்ம ஊர் நாவரசன் போல் துண்டு துண்டாய் அறுத்து கொலை செய்துவிடுகிறார்கள். அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து எல்.கே எவ்வாறு வெளி கொண்டு வருகிறான். அந்த ஒன்பது பெண்களையும் கொன்றானா..? உண்மையான குற்றவாளி யார்..? என்பதை பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

படத்திற்கு தேவையேயில்லாத வடிவேலுவின் காமெடி ட்ராக்.. பார்ட்டிக்கும் சரக்கு குறஞ்சிருச்சோ.. ஹீரோவின் கேரக்டரை சொல்கிறேன் பேர்விழி என்று ஓவர் பில்டப் செய்தற்க்கு பதிலாய் நேராக சிந்தாமணி விசயத்துக்கு வந்திருந்தால் இன்னும் கிரிஸ்பாக படம் இருந்திருக்கும். புது ஹீரோவுக்கு இவ்வளவு பில்டப் அவசியமா..?

என்ன செய்வது பணம் போடுவது அவர்.. படத்துல டுயட், காதல்னு தான் எதுவும் இல்ல.. இது கூட இல்லைன்னா எப்படி.? வடிவேலுவின் காமெடியை விட, கொலை செய்ய போகும் பொது கூட வக்கீல் கோட்டை போட்டு கொண்டு போகும் எல்.கே.. படு காமெடி.

இராஜ ரத்தினத்தின் கேமரா துல்லியம்.. பிண்ணனி இசை ஆங்காங்கே பரபரப்பு, பல இடங்களில் டிவி சீரியல்.. படத்தில் சுகன்யா, மணிவண்ணன், சங்கிலி முருகன், ஆஷிஷ்வித்யார்தி, நாசர், ரகுவரன் என்று நடிகர்கள் கூட்டம் ஏகப்பட்டதாய் இருக்கிறது. யாரும் மனதில் நிற்கவில்லை.. மனோஜ் கே.ஜெயன் மட்டும் பரவாயில்லை.

பிரபாகரின் வசனம் பல இடங்களில் மலையாளத்திலிருந்து டிரான்ஸுலேஷன் செய்தது போல் இருக்கிறது.. ஒரே கொழ.. கொழ.. இயக்குனர் ஷாஜி கைலாஷ் போன்ற சிறந்த டெக்னிஷியன்களின் தயவால்.. இன்னொரு ஜே.கே.ரித்தீஷ் ஆக வேண்டிய ஆர்.கே.. மயிரிழையில் தப்பியிருக்கிறார்.

எல்லாம் அவன் செயல்..Blogger Tips -பரிசல்காரன் கதை -சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்,


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

16 comments:

Anonymous said...

ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவரு.. இல்லாட்டி எங்களுக்காக, இவ்வளவு கஷ்டப்பட்டு.. படமெல்லாம் பாப்பீங்களா.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அத்திரி said...

//இன்னொரு ஜே.கே.ரித்தீஷ் ஆக வேண்டிய ஆர்.கே.. மயிரிழையில் தப்பியிருக்கிறார்.//


ஒரு ஜேகே ரித்தீஸ்கே டமில் நாடு தாங்கலை..????????????///ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவரு.. இல்லாட்டி எங்களுக்காக, இவ்வளவு கஷ்டப்பட்டு.. படமெல்லாம் பாப்பீங்களா.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//


ரிப்பீட்டேய்!!!!!!!!!!!!!

Cable சங்கர் said...

நன்றி அத்திரி.. ஏதோ உஙகளை போன்றவர்களை காப்பாற்றும் பொறுப்பு இருப்பதால்.. என் கடமையை செய்கிறேன்.

ஷங்கர் Shankar said...

ஏனுங்கண்ணா! நம்ம ப்ளாக்குலையும் இதே விமர்சனத்தை போட்டு வச்சிருக்கேன் அதையும் பாருங்கோ!! http://shankarnews.blogspot.com/2008/12/blog-post_3029.html

சரவணகுமரன் said...

/வடிவேலுவின் காமெடியை விட, கொலை செய்ய போகும் பொது கூட வக்கீல் கோட்டை போட்டு கொண்டு போகும் எல்.கே.. படு காமெடி.//

:-))

Cable சங்கர் said...

//:-))//

நன்றி சரவணகுமாரன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..

ரிஷி (கடைசி பக்கம்) said...

helo sankar,

yaaru ivanga ellam

enga irunthu varaanga?

Cable சங்கர் said...

//yaaru ivanga ellam

enga irunthu varaanga?//

யாரை கேட்குறீங்க..? கடைசிபக்கம்..?

உண்மைத்தமிழன் said...

http://truetamilans.blogspot.com/2008/12/blog-post_6427.html

Cable சங்கர் said...

உங்கள் பதிவை ஏற்கனவே பார்த்துவிட்டேன் சார்.

ரிஷி (கடைசி பக்கம்) said...

sankar intha heros like J.K.R and now this film hero....ivanga ellam enga irunthu varaanga? appadinnu ketten

அக்னி பார்வை said...

நானும் படம் பார்க்காமல் தப்பித்தேன்..

எல்லாம் ‘கேபிள் சங்கர்’ செயல்..

Cable சங்கர் said...

//sankar intha heros like J.K.R and now this film hero....ivanga ellam enga irunthu varaanga? appadinnu ketten//

பணம் இருந்தா யார் வேணும்னா நடிக்கலாம் சார்..

Nilofer Anbarasu said...

Sunny Deolலும், Nikisha Patelலும் நடிக்க இந்த படத்தை K.S.அதியமான் ஹிந்தியில் ரீமேக் செய்கிறாராம். படத்தின் பெயர் Nine.

Cable சங்கர் said...

Sunny Deolலும், Nikisha Patelலும் நடிக்க இந்த படத்தை K.S.அதியமான் ஹிந்தியில் ரீமேக் செய்கிறாராம். படத்தின் பெயர் Nine//

ஹிந்தியில் எடுத்தால் ஓடக்கூடிய படம் தான். திரைக்கதையில் எந்த குறையுமில்லை.. நடிகரை தவிர..

Cable சங்கர் said...

இந்த பதிவை தமிழ்மணம் மகுடத்தில் வர பரிந்துரைத்த வாசகர்கள், பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி.. நன்றி. நன்றி..