Thottal Thodarum

Dec 25, 2008

Neninthe - Telugu Film Review


Neninthe- ரவிதேஜா,பூரி ஜெகன்னாத் இணைந்து கொடுத்திருக்கும் பட்ம். சினிமா உலகை சுற்றி பின்னப்பட்ட கதை, இயக்குனராகும் எண்ணத்தில் அஸிஸ்டெண்ட் டைரக்டராக, பிரபல டைரக்டர் ‘இட்லி’ விஸ்வநாத்திடம் வேலை பார்க்கிறார்.

தன் குடும்பத்தை காப்பாற்றவும், தன் மாமாவின் வற்புறுத்தலுக்காகவும் குருப் டான்ஸராக வரும் சந்தியா. கேன்சரில் அவதிபட்டு கொண்டு எங்கே அது தெரிந்தால் தன் மகனின் குறிக்கோள் கலைந்துவிடுமோ என்கிற் எண்ணத்துடன் வாழும் ஹீரோவின் அம்மா, தன் மச்சினியை கூட்டி கொடுக்க கூட தயங்காத மாமா, ஜூனியர் ஆர்டிஸ்ட் அக்கா, ஹீரோயின் மீது வெறி கொண்டு அலையும் தாதா வில்லன. வெறிபிடித்த ரசிகர் மன்ற தலைவன், சூப்பர் ஹீரோ, ஹீரோயின் முமைத்கான். டைரக்டராகும் ஆசையில் தன் பெயரை செந்தில் என்று மாற்றிக் கொண்டு தமிழ் டைரக்டர் என்று அலையும் அஸிஸ்டெண்ட் டைரக்டர் வேணு அரவிந்த் என்று எல்லா கேரக்டர்களூம் சினிமாவை சுற்றியே வருகிறது.

ரவிதேஜாவின் கேரக்டர் மிக குழப்பமான கேரக்டராய் வலம் வருவதால் அவரின் குறிக்கோள்கள் நீர்த்து போன மாதிரி தெளிவில்லாமல் இருக்கிறது. ஹீரோயின் குறைந்த அளவுள்ள ஆடை அணிய மறுக்கும் காட்சியில் ரவிதேஜா பேசும் வசனம் சூப்பர்..
ஹீரோயின் ஷியா.. கிழடு தட்டிய முகம்.. அவரை மிகபெரிய ஹீரோயின் ஆவது கொஞ்சம் ஓவர். அதே போல் தயாரிப்பாளர் தன் படத்தை பற்றி இண்டர்நெட்டில் விமர்சனம் செய்பவர்களை பற்றி கத்தும் காட்சி இயக்குனர் மனதில் நினைத்து இருப்பதை வெளி கொட்டியிருக்கிறார். அதிலும் விமர்சனம் படித்துவிட்டு படம் பார்க்க கூடாது என்கிறார். கிசு கிசு எழுதும் பத்திரிக்கைகள், இணையதளங்களை முமைத்கானின் எபிஸோடில் எதிர்க்கிறார்.

ரசிகர் மன்ற தலைவர் எபிஸோட் அருமை. அந்த ரசிகர் மன்ற தலைவராக வரும் நடிகரின் நடிப்பு அருமை.

சினிமா பற்றிய படம் எடுப்பதில் இரண்டு வழி இருக்கிற்து முழுவதும் அதில் உள்ள பிரச்சனைகளை சொல்லி க்ளாஸாக எடுப்பது ஒரு வழி, இன்னொரு வழி பக்கா கமர்சியலாய் படமெடுப்பது.. இதில் இரண்டு வழியும் இல்லாமல் நடுவாக சென்றிருப்பதால் ஒரே சவ..சவ..

சக்ரியின் இசை சுமார் ரகம், ஷ்யாம் கே.நாயுடுவின் ஒளிப்பதிவு ஒ.கே. இயக்குனருக்கு தமிழ் சினிமா டைரக்டர்களின் மேல் உள்ள காழ்புணர்ச்சி நன்றாக தெரிகிறது. பொறாமை படுவதை விட்டு படமெடுப்பதை பற்றி யோசிப்பதே மேல்.

சினிமாவை பற்றியே படம் முழுவதும் இருப்பதால், சினிமாவின் மீது வெறி கொண்ட ரசிகர்களூக்கும், சினிமா சம்மந்தபட்டவர்களுக்கு மட்டுமே புரியும். மற்றவர்களுக்கு அவர்கள் அளவுக்கு ரிலேட் செய்ய முடியுமா.. என்று தெரியவில்லை..
Post a Comment

8 comments:

நட்புடன் ஜமால் said...

அப்படியே படத்தின் சுட்டி எங்கேனும் கிடைத்தால் போடுங்களேன்.

Cable சங்கர் said...

முடிந்தால் செய்கிறேன். எனக்கு தியேட்டரில் பார்த்தால் தான் திருப்தி..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//டைரக்டராகும் ஆசையில் தன் பெயரை செந்தில் என்று மாற்றிக் கொண்டு தமிழ் டைரக்டர் என்று அலையும் அஸிஸ்டெண்ட் டைரக்டர் //



ஸ்பீல்பர்க் என்று கூட பெயரை மாற்றியிர்க்கிறார்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கிழடு தட்டிய முகம்.. அவரை மிகபெரிய ஹீரோயின் ஆவது கொஞ்சம் ஓவர். //


ஐஸ்வர்யா வை மனதில் வைத்து செய்திருப்பார்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சினிமா சம்மந்தபட்டவர்களுக்கு மட்டுமே புரியும்.//


ரெகுலரா படம் பார்க்கிற எல்லாரும் சினிமா சம்பந்தப் பட்டவங்களா. சார்

Cable சங்கர் said...

//ஸ்பீல்பர்க் என்று கூட பெயரை மாற்றியிர்க்கிறார்கள்//
மாற்றியிருக்கலாம்.. ஆனால் இந்த படத்தில் தெலுங்கில் வெற்றி வலம் வரும் தமிழ் டைரக்டர்களின் மீதுள்ள பொறாமையை தான் இப்படத்தில் இந்த கேரக்டர் மூலம் வெளிப்படுகிறது.

Cable சங்கர் said...

//ரெகுலரா படம் பார்க்கிற எல்லாரும் சினிமா சம்பந்தப் பட்டவங்களா. சார்//

சினிமா பார்பவர்களின் ஆர்வம் வேறு.. அதில் வேலைபார்பது வேறு சுரேஷ்..

Cable சங்கர் said...

//ஐஸ்வர்யா வை மனதில் வைத்து செய்திருப்பார்//

:)????????