Thottal Thodarum

Mar 23, 2013

மறந்தேன் மன்னித்தேன்

மோகன்பாபுவின் மகள் லஷ்மி மஞ்சுவின் தயாரிப்பில் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் வெளி வந்திருக்கும் படம் என்று சொல்லப்பட்டாலும் டைட்டில் தவிர டப்பிங் படம் தான். தெலுங்கில் குண்டல்லோ கோதாவரி என்கிற பெயரில் சென்ற வாரமே வெளியாகி திரிசங்கு ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாய் தகவல்.


80களில் ஆந்திராவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினிடையே மாட்டிக் கொண்ட புது கல்யாண ஜோடிகள். இருவருக்கும் இடையே அழுக்காய் இருக்கும் பழைய நினைவுகள். நாளை நாம் உயிருடன் இருப்போமா? இல்லையா? என்று தெரியாத நிலையில் தங்கள் காதல் ப்ளாஷ்பேக்குகளை பகிர்ந்து கொள்கிறார்கள். 

கதையாய்ஒரு பிரிமிசசை வைத்து அதன் பின்னணியில் காதல் கதைகளை சொல்ல விழைந்திருப்பது தெரிகிறது. ஆனால் அதை சொன்ன விதத்தில் தான் கோட்டை விட்டிருக்கிறார்கள். திருமணத்தின் போது ஆதிக்கு டாப்ஸி கழுத்தில் தாலியோடு வந்து மோதிரம் ப்ரசெண்ட் செய்ய, மஞ்சுவுக்கு அவரது முதலாளி துரைபாபு செயின் ப்ரெசெண்ட் செய்ய, ஊரே வெள்ளம் வருவதால் களேபரப்பட்டு ஓட, இவர்கள் மட்டும் இடிந்துப் போய் உட்கார்ந்திருக்கிறார்கள். பின்பு வெள்ளத்தில் மாட்டி ஒரு வைக்கோல் போரின் மேல் அமர்ந்தபடி இருவரும் தம் தம் கடந்த கால வாழ்கையை சொல்லிவிட்டாவது இறக்கலாம் என்று முடிவு செய்து ஆதி தனக்கும் டாப்ஸிக்குமான கதையை சொல்கிறார். ஆதி மீனவர். அவரது முதலாளி பெண் டாப்ஸி இவரின் மேல் அபார காதல் கொண்டு பின்னலைகிறார். ஒரு கட்டத்தில் அவரது அப்பாவுக்கு தெரிந்து ஆதியின் மேல் திருட்டுப் பட்டம் கொடுத்து போலீஸில் மாட்ட வைக்கிறார். அதனால் கோபத்தில் டாப்ஸியின் அப்பாவை பழிவாங்க வீடு தேடி வரும் ஆதியை டீஸ் செய்து அப்பாவை பழிவாங்கதானே வந்தாய் அவரில்லை என்றால் என்ன என்னை அடைந்து அவரை பழிவாங்கிக் கொள் என்கிறார். அடைகிறார்கள். டாப்ஸி வேறு திருமணம் செய்து கொள்கிறார். டாப்சியின் இளமை செம க்யூட். ஆதிக்கு பெரிதாய் ஏதும் சொல்லும் படியான காட்சிகள் ஏதுமில்லை.

மஞ்சுவின் கதை பழைய பதினாறு வயதினிலே கதைதான். காஞ்சிபுரத்தில் தொலைந்த அவரை ஒர் தம்பதி எடுத்து வளர்க்கிறது. எடுத்து வளர்க்கும் பெண் தன் கணவனின் குடியின் காரணமாய் ஒர் டாக்டருடன் தொடுப்பில் இருந்து கொண்டு குடும்பத்தை காப்பாற்றுகிறார். அவளின் மகன் மீது  உடன் வளரும் மஞ்சுவுக்கு காதல். இவர்களின் காதலின் மீது இடியாய் அம்மாவிடம் தொடர்பிலிருக்கும் டாக்டருக்கும் மஞ்சுவுக்கும் தொடர்பு என்ற சந்தேகம் விழுகிறது. பின்பு இவர்களின் கதையில் என்ன ஆனது என்பதை கொஞ்சம் ஆற அமர சொல்லியிருக்கிறார்கள். காதலனாய் வரும் மகேஷ் நன்றாகவே செய்திருக்கிறார். இவருக்கு சற்றும் பொருந்தாத ஜோடி மஞ்சு.தயாரிப்பாளராய் போய்விட்டதினால் வேறு வழியில்லாம் இயக்குனர் இவரை போட்டிருப்பார் என்று தெரிகிறது. என்னதான் நடிப்பு ஆசை அரித்தாலும், தான் இந்த கேரக்டருக்கு சூட் ஆவோமா என்று யோசிக்காமல் நடித்தது தனக்கு தானே தலையில் மண் அள்ளி போட்டுக் கொண்டதற்கு சமம்.
டெக்னிக்கலாய் வெள்ளம் வரும் காட்சிகளும், ஆர்ட் டைரக்‌ஷனும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இளையராஜா இசை. என்பதுகளின் படம் என்பதால் என்பதுகளின் பின்னணீயிசை, பாடல்கள் என்று ரொம்ப பழசாயிருக்கிறார். எழுதி இயக்கியவர் குமார் நாகேந்திரா. இரண்டு பேர் வாழ்க்கையில் ஆதி டாப்ஸி கதை சுர்ரென்று இருக்கிறது. தங்கள் காதல் நிச்சயம் நிறைவேறாது என்று தெரிந்தே தன்னை டாப்ஸி ஆதியிடம் இழப்பது ஒரு விதத்தில் தன் தந்தை செய்த தவறுக்கான தண்டனை எனப்தைப் போலவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இரண்டாம் பாதியில் எடுத்த கதையில் மிகவும் பழைய பட சாயல்கள். க்ளிஷேக்களான் காட்சிகள். கொஞ்சம் கவனமாய் திரைகக்தையமைத்து, நல்ல கேஸ்டிங்கில் கவனம் செலுத்தியிருந்தால் நல்ல திரைப்படமாய் அமைந்திருக்கும்.
கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

குரங்குபெடல் said...

"தெலுங்கில் குண்டல்லோ கோதாவரி என்கிற பெயரில் சென்ற வாரமே வெளியாகி திரிசங்கு ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாய் தகவல். "


சங்கு ரெஸ்பான்ஸ் . . . .

in tamil . . . . !?

Hemanth said...

padam parkkalama venama?

மதுரை சரவணன் said...

நல்ல விமர்சனம் .. வாழ்த்துக்கள்