
ஒரு சாதாரண டாக்ஸி டிரைவராக இருக்கும் மகேஷின் வாழ்க்கையில் ஒரு சுபாஷிணி என்ற பெண் வருகிறாள். அவள் ஒரு கட்டை கால் பார்ட்டி. கால் வச்ச எடத்தில் எல்லாம் ப்ரச்சனை ஏற்படுத்துபவள். பெரிய பணக்காரி. ஒரு துப்பாக்கி சூட்டிலும், இன்ன பிற சம்பங்களினால் மகேஷ் ராஜஸ்தானுக்கு பயணப்பட வேண்டியிருக்க, இன்னொரு பக்கம் சுபாஷிணியை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரகாஷ் ராஜின் மகன், சுபாஷிணியை அலேக்காக ஹெலிக்காப்டரில் தூக்கிக் கொண்டு போய் ராஜஸ்தான் பாலைவனத்தில் மூன் லைட் டின்னரும், வெட்ட வெளி ஹனிமூன் கொண்டாட, ஆசைப்பட, அதை அவன் பாக்கெட்டிலிருக்கும் காண்டம் பாக்கட்டை வைத்து கண்டு பிடித்த சுபாஷிணி அங்கிருந்து தப்பிக்க, மீண்டும் சந்திக்கிறார்கள் மகேஷும், சுபாஷினியும். ஒரு கட்டத்தில் இருவரையுமே ஒரு கும்பல் தாக்க, ஒரு கிராமத்தில் மகேஷ் கண் முழிக்கிறான். அந்த கிராமமே அவனை கடவுளாக பார்க்கிறது. தங்களை காக்க வந்த கடவுள் அவன் தான் என்று நம்புகிறது. அவன் நிஜமாகவே கடவுளா? இல்லை சாதாரண மனிதனா? அவனை ஏன் அப்படி சொல்கிறார்கள்? அதன் பின்னணீ என்ன? என்பது போன்ற சில பல கேள்விகளூக்கு தியேட்டர்லோ வெள்ளி சூடண்டி…
வழக்கம் போல மகேஷ் தன் ஸ்கிரீன் ப்ரெசென்ஸில் மனதை கொள்ளை கொள்கிறார். இம்முறை காமெடியிலும், வசனம் பேசுவதிலும் இன்னும் கேர் எடுத்திருப்பது நன்றாக தெரிகிறது. அதிலும் அந்த ஓப்பனிங் சேஸிங், மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் மகேஷின் பர்பாமென்ஸும், ஆக்ஷ்னும் அட்டகாசம். ஆனால் அந்த சீனினால் பெரிய இம்பாக்ட் இல்லாவிட்டாலும் விஷுவல் ட்ரீட்.

ப்ரகாஷ் ராஜ்.. வழக்கம போல கொடுத்த பாத்திரத்தில் நச். ஆலி, தனிகல பரணி, ப்ரம்மானந்தம் ஆகியோர் தங்கள் தங்கள் வேலைகளை திறம்பட செய்திருக்கிறார்கள். யாஷ்பட்டின் ஒளிப்பதிவு, பீட்டர் ஹெயின், ராம்-லஷ்மனின் சண்டைக்காட்சிகள், மிகவும் ஸ்லீக்கான எடிட்டிங் என்று டெக்னிக்கலாக மிரட்டியிருக்கிறார்கள். கதை திரைக்கதை வசனமெழுதி இயக்கியிருப்பவர் திரிவிக்ரம்.
ஆரம்ப காட்சிகளில் கமல், கவுதமியின் அபூர்வ சகோதரர்கள் காட்சி ஞாபகப்படுத்தினாலும் இண்ட்ரஸ்டிங். அதே போல ஒரு கிராமத்திலிருந்து ஒரு சாமியார் நம் கிராமத்தை காக்க ஒரு கடவுள் இவ்வழியில் வருவான் என்றது அந்த ஒற்றை காலில் நிற்கும் இளைஞன் பாடி லேங்குவேஜும், டயலாக் டெலிவரியும் ஸ்பைன் சில்லிங்.. ஆனால் அடிக்கடி மஹாதேவ் என்று இழுத்து சொல்லும்போது சில்லிங் குறைந்து எரிச்சலே வருகிறது. முதல் பாதி ஓகே.. இரண்டாவது பாதியில் தான் படம் தொங்கிவிடுகிறது. ஆனாலும் தன்னை எப்படி எல்லோரும் கடவுள் என்று நினைக்கிறார்கள் என்பதை டெஸ்ட் செய்யும் காட்சிகளும், அதற்கான லாஜிக்கல் விஷயங்களை ரிலேட் செய்வதும் அருமை. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்
Khaleja – Strictly For Mahesh And Anushkaaaaaaaaa. hmmmm..
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..கேபிள் சங்கர்
Post a Comment
7 comments:
// இன்னொரு பக்கம் சுபாஷிணியை திருமணம் செய்வதற்கு முன்னே அவரை திருமணம் செய்ய ஆசைப்படும் பிரகாஷ் ராஜின் மகன் அலேக்காக ஹெலிக்காப்டரில் தூக்கிக் கொண்டுபோய் ராஜஸ்தான் பாலைவனத்தில் மூன் லைட் டின்னரும், வெட்ட வெளி ஹனிமூன் கொண்டாட, ஆசைப்பட, அதை அவன் பாக்கெட்டிலிருக்கும் காண்டம் பாக்கட்டை வைத்து கண்டு பிடித்த சுபாஷிணி அங்கிருந்து தப்பிக்க, மீண்டும் சந்திக்கிறார்கள் மகேஷும், சுபாஷினியும்.//
இதை கொஞ்சம் தெளிவா எழுதலாமே?
chennaila enga oduthu?
மகேஷ் பாபுகிட்ட ஒரு ஹிட் எதிர்பார்த்தேன்..சொதப்பி விட்டாரா...
We escaped from another remake movie from Ilaiyathalapathi Vijay. கெட்டதுலயும் ஒரு நல்லது நடக்குதுனா இதுதான்.
முதல் தடவை ஒரு தெலுங்குப் படத்தை தியேட்டரில் சென்று பார்த்தேன் (நண்பர் தொந்தரவால்). ..முடியல..
தங்களது பார்வை நல்லாயிருக்கு... அருமை...
:)
Post a Comment