உங்கள் பக்கம்

thirumanam

நமக்குத் திருமணமாகும்...ஒவ்வொருநாளும் நம் திருமணநாளாய்...ஒவ்வொரு இரவும் நம் முத........,,,நாம் சந்தோஷமாக வாழ்வோம்!

ஆசை ஆசையாய் அருகினில் வருவாய்...நான் நெருங்க நெருங்க...வெட்கமாய் விலகிப்போவாய்...
வீம்பாய் நான் திரும்பிப்படுக்க...
வந்தமர்வாய் வெகுஅருகில்!
விடியும் வரையிலும் தொடர்ந்திடும் விளையாட்டு...
விடியும் முன் விழிகள் தழுவும் உறக்கம்...
ஒவ்வொரு விடியலும் புதிய விடியலாய்!
நீ எழுப்ப வேண்டும் என்பதற்க்காய்...
அலாரம் வைக்க அவசியமற்றெழும்...
என் வழக்கம் தாமதிக்கும்!


முழுதும் விடிந்தப் பின் எழுப்ப வருவாய்...
உனைபற்றி எதுவுமே தெரியாதே எனக்கு...
எனைப்பற்றியும் எதுவுமே தெரியாதே உனக்கு...
எப்படி எழுப்பப் போகிறாய் எனை!
நேற்றுதான் உறவானோம்...
இன்றெப்படி அறிவாய்...
என் உறக்கம் கலைக்கும் உபாயத்தை!
ஆசை ஆசையான அன்பு முத்தத்தினாலா...
இல்லை ஆவி பறக்கும் அருமையான தேநீரோடா...
என்று ஏதேதோக் கற்பனையில் கண்மூடிக் கிடந்தேன்!


எங்கே இன்னமும் காணவில்லை...
அருகே நீ வந்த அரவம் கேட்டதே...
நேற்றைய ஊடலில் கிழிந்துபோன...
போர்வை ஓட்டை வழியே விழித்துப்பார்த்தேன்
திருட்டுத்தனமாய்!


இடுப்பில் கைவைத்துக் கொஞ்சும் கோபத்தோடு
எதிரே நீ நின்றிருந்தாய்...
என் தூக்க நாடகத்தை தொடர்ந்தேன்!
ஓரிரு மணித்துளிகள் ஓடியிருக்கும்...
இன்னமும் எனை எழுப்பவில்லை நீ!
ஏது செய்கிறாய் என அறிந்துகொள்ள
ஆவலாய் விழித்த என் விழிகளுக்கு
வெகுஅருகில் ()ன் காதல் முகம்
எனது போர்வைக்குள்ளேயே...
உன் உதட்டு எச்சிலால்
என் விழிஉறக்கம் கலைத்தாய்...
ஆமடி நான் உன்னை காதலிக்கிறேன்...
இப்படி ஓர் இன்ப அதிர்ச்சியை
நான் எதிர்ப்பார்க்கவே இல்லை
என்பதால்...


மீண்டும் மீண்டும்
நமக்குத் திருமணமாகும்...
ஒவ்வொரு நாளும் நம் திருமணநாளாய்...
ஒவ்வொரு இரவும் நம் முதலிரவாய்...
ஒவ்வொரு விடியலும் புதிய விடியலாய்...
நாமிருவரும் சந்தோஷமாக வாழ்வோம்...
-
என்றும் என்றென்றும்!


டிஸ்கி: உங்கள் பக்கம் பகுதியில் உங்கள் கதை, கட்டுரைகள், கவிதைகள் வெளிவர என்னுடய மின்னஞ்சலுக்கு உங்கள் படைப்புகளை அனுப்புங்கள்.  தெரிந்தெடுத்து வெளீயிடப்படும்.. நன்றி..

Comments

அருமையான வரிகள் அழகான ரசனை...

மீண்டும் மீண்டும்
நமக்குத் திருமணமாகும்...
ஒவ்வொரு நாளும் நம் திருமணநாளாய்...
ஒவ்வொரு இரவும் நம் முதலிரவாய்...
ஒவ்வொரு விடியலும் புதிய விடியலாய்...
நாமிருவரும் சந்தோஷமாக வாழ்வோம்...
-என்றும் என்றென்றும்!

சூப்பர்.......
அருமை நன்பரே..
a said…
நல்ல பகிர்வு தல ...........
R. Gopi said…
வினு சூப்பர்
vinu said…
wow wow wow, thanks cabel sir, ok unga filterla ennodathu filter aagudumnu ninaichean, thanks thanks a lot for you Introooooo.

thanks gopi,

thanks வழிப்போக்கன் - யோகேஷ்

thanks ஆல் இன் ஆல் அழகு ராஜா
[nammukkulla mattum secreat ungalukku poruthama irrunthuchaa, he he chumma villattukku keattean, kovichukkaatheenga]

thanks ருத்ர வீணை

thanks மாணவன்

all credits goes to our cabel annathea with respect, thanks annathae
அழகான ரசனை.

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்