Thottal Thodarum

Oct 28, 2010

ப்ளூ பாக்ஸ் ஸ்ரீதர்

Blue Box  - K.R. Sridharbluebox
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி?என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.

அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.

அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டியபோது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.

ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரியஅளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர்இந்த ஜான் டூயர்.

அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப்,அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால்,ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப்பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான்.காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.

எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம்தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர்உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கைஎரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம் அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக்கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள்மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும்என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம்பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும்400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bayநிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்.

சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதேஎன்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

டிஸ்கி: இது எனக்கு மின்னஞ்சலில் வந்த விஷயம். இதை உங்களுடம் பகிரவே பதிவேற்றியிருக்கிறேன்.


கேபிள் சங்கர்

Post a Comment

24 comments:

Tech Shankar said...

thanks 4 sharing this gr8 news boss

முசமில் இத்ரூஸ் said...

Sir.idhayellam namma oor mediakkal kondadathadhu vedhanai.pakirnthathukku nandri.

பொன்கார்த்திக் said...

நண்பா அருமை :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

இது ஏதோ ஃபெயில்னு மெயில்லாம் வருதே.. கன்ஃபர்ம் பண்ணிட்டீங்களா.?

மோகன் said...

அது Blue Box அல்ல.. Bloom box...

for more details.

http://en.wikipedia.org/wiki/Bloom_Box

thanks,
Mohan

கே.ஆர்.பி.செந்தில் said...

தொழில்நுட்ப பதிவெல்லாம் போட ஆரம்பிச்சிடீங்க...

ILA(@)இளா said...

மின்னஞலில் வருவதை பதிவாக மாற்றுவதை தவிருங்க கேபிள். அந்த வியாதிதான் இன்று நம் பதிவுலகத்தை நீர்த்துப் போக செய்திருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்னால் இது சாதாரணமாக பட்டது, இன்று சுலபமாக எல்லாரும் செய்துவிடுகிறார்கள். "இன்னைக்கு சரக்கு இல்லை, அதனால ஏதாவது பதிவு போடுவோம்"னு நினைச்சுகிட்டு இருக்கும்போது இப்படி ஏதாவது செய்யறது உண்டுங்க. இது என் எண்ணமே, அது எப்படியாப்பட்ட மடலாகவும் இருக்கட்டும். தயவு செய்து இதைத் தொடராதீர்கள்

Suthershan said...

நல்ல செய்தியை எப்படி தந்தாலும் தப்பில்லை... GOOD WORK

சிவா said...

தமிழனாய் இது மிகப் பெருமையான விஷயம்! ஆனால் அவர் இங்கேயே இருந்திருப்பானால் இந்த மாதிரி முயற்சிகளுக்கு எந்த அளவு நம் அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைத்திருக்கும்? நாம் எண்ணி வருத்தப் பட வேண்டிய விஷயம்!

சே.குமார் said...

நல்ல செய்தி.
பெருமையான விஷயம்.

கெக்கே பிக்குணி said...

கேபிள் சங்கர், இந்த பதிவுக்கு நன்றி. தலைப்பில் ப்ளும் (bloom) பாக்ஸ் என்பதே சரி. ப்ளு (blue) பாக்ஸ் என்பது தவறு.

இளா, மின்னஞ்சலில் வந்தாலும், இவை போன்ற அறிவியல்/துறை சார்ந்த விஷயங்களைப் பகிர்வதில் தப்பே கிடையாது. பொதுவாகவே நம் மக்கள் துறை சார்ந்தது பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இல்லை, அதனால், ரெண்டு மூணு முறை எல்லாருக்கும் சொல்லிக்குவோம்.

சிவா, //ஆனால் அவர் இங்கேயே இருந்திருப்பானால் இந்த மாதிரி முயற்சிகளுக்கு எந்த அளவு நம் அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைத்திருக்கும்? நாம் எண்ணி வருத்தப் பட வேண்டிய விஷயம்! //

வீட்டுக்கு வீடு ஒரு வாசப்படி. நாட்டுக்கு நாடு ஒரே அரசியல். பதிவுலயே பாருங்க: //ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
// கண்டுபிடிப்பாளர் எங்கிருந்தாலும் ஓய்வதில்லை.

vinu said...

இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.


vendaamea intha pguppnai, oru kazainanai mozippaagupaadodu paakka ungalukku eppadi pidikaatho appadiyeaa, or kandupidippaalanaiyum, thaavu seaithu ivaaraana paagupaadugalai kurippiduvathai thavirungaleaan....

சிவா said...
தமிழனாய் இது மிகப் பெருமையான விஷயம்! ஆனால் அவர் இங்கேயே இருந்திருப்பானால் இந்த மாதிரி முயற்சிகளுக்கு எந்த அளவு நம் அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைத்திருக்கும்? நாம் எண்ணி வருத்தப் பட வேண்டிய விஷயம்!


ithu pondraa vendaathaa ennangaliyum thavirpoom, puthiya thalaimurai puthiya nambikkaiyodu ellaavatraiyum paatkirathu rndra pimbaththai naam eaan kedukka veandum......

vinu said...
This comment has been removed by the author.
தமிழ்ப் பையன் said...

ஒன்னிமே புரியலபா. நல்லாருந்தா சரி தான்...

வெடிகுண்டு வெங்கட் said...

தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்

காவேரி கணேஷ் said...

ஒரு நல்ல தகவலை பகிர்ந்தற்கு நன்றி கேபிள்...

க.மு.சுரேஷ் said...

நல்ல பகிர்வு..

விட முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றி...

அரசு உதவ வேண்டியதில்லை..

முயற்ச்சிகளை முடக்காமல் இருந்தால் சரி..

ரோஸ்விக் said...

அவரது கண்டுபிடிப்பு தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகள்.

பகிர்ந்தமைக்கு நன்றி.

Cable Sankar said...

@tech shankar
thanks

முசமில் இத்ரூஸ்
:((

@பொன்கார்த்திக்
நன்றி

@ஆதிமூலகிருஷ்ணன்
கன்பார்ம் பண்ணிட்டேன்

@மோகன்
வேண்டும் என்றே தான் அப்படி போட்டேன் தலைப்பை..:))

@கே.ஆர்.பி.செந்தில்
பின்ன நாங்களும் இஞினியர் இல்ல..

@இளா
நிச்சயம் சரக்கில்லாமல் போட்டதில்லை இளா. எனக்கென்னவோ.. எதை எதையோ பகிர்ந்து கொள்கிறோம் இதை செய்தால் என்ன என்று தோன்றியது அதனால்தான்

@சுதர்சன்
நன்றி

@சிவா
விடுங்க.. அவரு நல்லாருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா..?

@சே.குமார்
நன்றி

@கெக்கே பிக்குணி
ரொம்ப ரைட்

@வினு
நான் அவர் ஒரு இந்தியர் என்பதிலே தான் முதலில் பெருமையடைகிறேன்.

@தமிழ்ப்பையன்
ஓகே ரைட்

2வெடிகுண்டு வெங்கட்
பார்த்துடலாம்

@காவேரி கணேஷ்
ரைட்

@க.மு.சுரேஷ்
ஆமாம்

@ரோஸ்விக்
நன்ரிங்கோ...

deepan said...

ivarathu kandupidipu perum varaverpey thanthullathu,nattukkum,nattumakkalukum payan tharathakkathu.ivarthu vettri thodara enathu vazthukal.
DEEPANSAKRAVARTHY S

okyes said...

இலவச மின்சாரம் என நினைத்தேன்; இருந்தாலும் குறைந்த செலவில் எங்கும் எப்போதும் மின்சாரம் எனும் வகையில் இஃதொரு நற்பதிவே.

indianist said...

I love Puthiya Thalaimurai, this is good for all people.This Puthiya Thalaimurai TV growing good for the people

vimala rani said...

The news of Puthiya Thalaimurai is very nice and how to get Puthiya Thalaimurai live in mobile is there any software.....

S.Selvamurugan. said...

Very nice and useful post!
ThankQ