Thottal Thodarum

Jan 4, 2010

கொத்து பரோட்டா –04/01/10


suicide machine பேஸ்புக், ஆர்குட், மை ஸ்பேஸ், டீவிட்டர் போன்ற சோஷியல் நெட்வொர்க்கிங் வெப்சைட்டிலிருந்து வெளிவர முடியாமல் தினம் காலை எழுந்ததிலிருந்து அதே வேலையாய் கையில் லேப்டாப்புடன், டேடா கார்டுடன் அலைபவரா? உங்களுக்காக ஒரு சைட்டை உருவாக்கி இருக்கிறார்கள். http://suicidemachine.org என்கிற இந்த சைட்டில் நீங்கள் வழக்கமாய் தினமும் அடிக்டாய்  உலவும் வெப்சைட்டுகளிலிருந்து நீங்கள் வெளி வர விரும்பி இந்த சைட்டில் ரிஜிஸ்டர் செய்தால் உங்களது லாகின் ஐடி, பாஸ்வேர்ட்,  பிரண்ட்ஸ் லிஸ்ட் என்று எல்லாவற்றையும் உங்கள் கண் முன்னே அவர்களுடய டேட்டா பேஸுக்கு போய் அழிக்கிறது. இதுவரை 52,000துக்கும் மேற்பட்ட, பேஸ்புக்கிலிருந்து வெளீவந்திருக்கிறார்களாம். 1,75.000 பேர் டீவிட்டரிலிருந்து வெளிவந்திருக்கிறார்களாம். வெளிவந்த ஆட்கள் தாங்கள் இப்போதுதான் மனநிம்மதியுடன், ரிலாக்ஸாக இருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள். இவர்களின் தொல்லை தாங்காமல் பேஸ்புக் இவர்களது சர்வரிலிருந்து ஐபியை கண்டுபிடித்து அவர்கள் சர்வருக்குள் அனுமதிக்காமல் ப்ளாக் செய்துவிட்டார்களாம்.
***************************************************************************************
Alison Bartlett Credit: SONJA BARTLETT Biblimania என்பது ஒருவிதமான மனநோய். புத்தகங்களின் மீது வெறி கொண்டு அப்சசீவ் காதலால் தன்னுடய கலக்‌ஷனில் சிறந்த புத்தகங்களை வைத்திருக்க ஆசை கொண்டு, பல சமயம் திருடக்கூட செய்வார்கள். அப்படி பட்ட ஒரு திருடன் தான்.ஜான் கில்கி. சுமார் இரண்டு லட்சம் டாலர் மதிப்புள்ள புத்தகங்களை கொஞ்சம் கொஞ்சமாய் போலி கிரெடிட் கார்டுகளை வைத்து, உலகின் மிகச் சிறந்த புத்தகங்களை ஏமாற்றி கலெக்ட் செய்துள்ளான். அவனை ஒரு வழியாய் பிடித்துவிட்டார்கள். அவனின் கதையை ஆலிசன் பார்ட்லெட் என்கிற பெண் எழுத்தாளர் புத்தகமாய் எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர்    The Man Who Loved Books Too Much.

**************************************************************************************
செவிக்கினிமை

ரஹ்மான் – கவுதம் வாசுதேவ் மேனனின் விண்ணைதாண்டி வருவாயா திரைப்படத்தின் பாடல் வெளியீடு லண்டனில் நடந்ததாய் சொல்கிறார்கள். பிபிசியில் முதன் முதலாய் பாடல் ஒன்றை வெளியிட்டு, ரஹ்மானுடம் பேட்டியும் எடுத்திருக்கிறார்கள். “ஹலோ” என்று தொடங்கும் பாடலின் க்ளிப்பிங்கை பார்த்ததும், பாடலுக்கு பின்ணனியில் உள்ள கிடாரை கேட்டதும், உடனே கேட்க வேண்டும் என்று மனசு அலைய ஆரம்பித்துவிட்டது. I Can’t Wait.. எப்பய்யா ரிலீஸ் செய்யப் போறீங்க..?


*************************************************************************************
சாப்பாட்டுக்கடை
பாந்தியன் ரோடிலிருந்து கமிஷனர் ஆபீஸுக்கு போகும் ரோடில் ரவுண்டானாவை தாண்டியவுடன் இடது பக்கமாய் ஒரு பெரிய ஓட்டல் இருக்கும் கல்யாண பவன் பிரியாணி என்று உள்ளே போனால் முஸ்லிம் திருமணங்களில் போடுவதை போல தலை வாழை இலை போட்டு, திருமணம் மற்றும் விஷேஷங்களுக்கு போடப்படும் கேசரி போன்ற ஒரு ஸ்வீட்டுடன் பிரியாணியை பரிமாறுகிறார்கள். மட்டன், சிக்கன், 65 பிரியாணி என்று பிரியாணி வகைகள் மட்டுமே கிடைக்கும். செம சுவை. மத்யான நேரத்தில் போனால் நிச்சயம் காத்திருக்க வேண்டியது நிச்சயம் அதனால் கொஞ்சம் முன்னால் போவது உசிதம்.
**************************************************************************************
சந்தோஷ செய்தி
dinamani தினமணியில் புத்தாண்டு அன்று நம்மை பற்ரி  ஒரு சந்தோஷ செய்தியை போட்டிருப்பதாய் பதிவர் நித்யகுமாரன் போன் செய்து சொன்னார். உடனடியாய் பேப்பரை வாங்க ஆளை அனுப்பினால் எங்கேயும் கிடைக்கவில்லை. அப்புறம் ஆள்,அம்பு, படையெல்லாம் ஏவி ஒரு வழியாய் பேப்பரை வாங்கி பார்த்தேன். வலையுலக படைப்பாளிகள் என்று என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டு இன்னும் பல பிரபல பதிவர்களை பற்றி எழுதி பெருமை படுத்தியிருந்தார்கள். தினமணிக்கு நன்றி..

**************************************************************************************
காமெடி
எண்டர் கவிதைகள்னு கவிதை எழுத ஆரம்பிச்சவுடனே.. நிறைய கவிஞர்கள் காண்டு ஆகி.. இதெல்லாம் ஒரு கவிதையா என்று  உடனடியா நிறுத்துன்னு போர் கொடி தூக்கி மின்னஞ்சல், தொலைபேசி, நேரில் என்று ஆளாளுக்கு மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி பிரபல கவிஞர்களின் எதிர்ப்பை மீறி நான் எழுத வேண்டிய கட்டாயம் என்னன்னா.. (எத்தனை “ன”) இந்த மாதிரி பாசக்கார பய புள்ளைங்களுக்கா நான் எண்டர் கவிதைகள் எழுதித்தான் ஆவணும் போலருக்கே.. சரி.. வேற வழி.. எழுதறேன். நீங்களே பாருங்க..
*************************************************************************************
இந்த வார குறும்படம்

************************************************************************************
ஏ ஜோக்
ஒரு விவசாயியின்  நிலத்தில் விண்கலத்திலிருந்து இரண்டு கணவன் மனைவி ஜோடி கீழிறங்க, அதை பார்த்த விவசாயி அவர்களை வரவேற்று, அவர்களுடன் விருந்து சாப்பிட, அன்று இரவு அவர்கள் வீட்டிலேயே விண்வெளி ஜோடி தங்க, அப்போது விண்வெளி ஜோடி அவர்களின் விருந்தோம்பலை மெச்சி, எங்கள் விண்வெளியில் நட்பை பாராட்டுவதற்காக மனைவிகளை மாற்றி கொள்வோம் என்று சொல்ல அவன் மனதை புண்படுத்த விரும்பாததாலும், மனதுக்குள் விண்வெளி பெண்ணையும் பார்ப்போம்ன்னு விவசாயி சரி சொல்ல, இரவில் விண்வெளி மனிதன், விவசாயியின் மனைவியிடம் தன்னுடய லுல்லாவை காட்டி இது போதுமா? என்று கேட்க, இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றாள். வின்வெளி மனிதன் தன் காதை ஒரு முறை திருக அவனுடய லுல்லா பெரிதாக, மீண்டும் உறவு கொள்ள, இப்போது போதுமா என்று கேட்க, அவள் இன்னும் கொஞ்சம் என்று சொல்ல, மீண்டும் அவன் தன் காதை திருக, லுல்லா இன்னும் பெரிதானது. அடுத்த நாள் காலையில் விவசாயி மனைவியிடம் “நேற்று எப்படியிருந்தது? என்று கேட்க அவள் “ம்.. நன்றாக இருந்தது. உங்களுக்கு எப்படி?” என்று கேட்டாள். அதற்கு அவன் “சனியன் பிடிச்சது ராத்திரி பூராவும் என் காதை திருகி, திருகி உயிரை எடுத்துட்டா என்றான்.
**************************************************************************************



தமிலிஷிலேயும், தமிழ்மணத்துலேயும் குத்துங்க எஜமான்.. குத்துங்க
Post a Comment

41 comments:

கார்க்கிபவா said...

நம்ம பதிவெல்லாம் ரெகுலரா படிக்கிறதில்லைன்னு தெரியுது.. நான் போன வாராமே வி.தா.வ. எழுதிட்டேன். நேத்து நைட்டு முழுப்பாடலையும் கேட்டாகிவிட்டது..

எண்டர் கவிதையா?உங்க காதை திருகுனாத்தான் சரிப்பட்டு வருவீங்கன்னு நினைக்கிறேன்

குடுகுடுப்பை said...

ரகுமான் பெரிய மனுசந்தான்.கண்டிப்பா தென்னிந்திய சினிமாவையும் உலகுக்கு எடுத்து செல்வார் என நம்புவோம்

பிரபாகர் said...

எண்டர் கவிதை ஏந்தல் கேபிள் அண்ணா வாழ்க... பின்ன இத வெச்சே ஒரு இடுகை வந்திருக்குன்னா சும்மாவா?

சகாவுக்கு பதில் சொல்லுங்கண்ணா!

பிரபாகர்.

சைவகொத்துப்பரோட்டா said...

//அடிக்டாய் உலவும் வெப்சைட்டுகளிலிருந்து நீங்கள் வெளி வர விரும்பி//

இத்த பத்தி நம்ம பதிவுலகின் குழந்தை நேற்று ஒரு கதை போட்டிருக்கு, நேரம் கிடைச்சா படிச்சு பாருங்க.

ரஹ்மான் வழக்கம் போல் கலக்கல்.

வாய், காது வரை விரிய வைக்கும் "காது ஜோக்."

Cable சங்கர் said...

எண்டர் கவிதையா?உங்க காதை திருகுனாத்தான் சரிப்பட்டு வருவீங்கன்னு நினைக்கிறேன்
//

காதை திருகினா இன்னும் பெரிசா இல்லை வரும் .... எண்டர்கவிதை..:))

ஜெட்லி... said...

என்டர் கவிதை புக் தனியா போடுற ஐடியா எதுவும் இருக்கா அண்ணே??

ரோஸ்விக் said...

அண்ணா. நீங்கள் சொன்ன அந்த சாப்பாட்டு கடையில் மூன்று முறை சாப்பிட்டிருக்கிறேன். மிகவும் அருமையாக இருக்கும்.

என்டர் கவிதைகளும் நல்லா தான் இருக்கு... ஆனா உங்களுக்கு என்கவுண்டர்களும் அதிகமாத்தான் இருக்கு....

ஆத்தாடி இந்த காதை திருகிற விஷயத்த ரொம்ப பொண்ணுங்க படிச்சா பல பயபுள்ளைக கதை என்னா ஆகுறது??? :-))))

நமக்கு இங்க பிரச்சனை இல்லப்பா... ஆத்தாடி ஆனா, உடனே போயி விண்வெளிக்கு போக முன்பதிவு செஞ்சதை கேன்சல் பண்ணிடனும்.... இல்லையினா சிக்கல் தான்....:-))))

Ashok D said...

//காதை திருகினா இன்னும் பெரிசா இல்லை வரும் .... எண்டர்கவிதை..:))//
தலைவரே நீங்க விவசாயி தானே :)))

Unknown said...

உங்க எண்டர் கவிதையைப் பாத்து இம்ப்ரஸ் ஆன விசா எழுதுன இடுகையப் படிச்சு இம்ப்ரஸ் ஆன நான் எழுதுன பின்நவீனத்துவக் கவிதை

மணிஜி said...

கொத்தை இன்னும் நல்லா..கொத்தியிருக்கலாம் கேபிள்.கல்யாண பிரியாணி பாரிசில் ஒரு கடை இருக்கிறது.அங்கு இன்னும் நல்லாயிருக்கும்.

sathishsangkavi.blogspot.com said...

எத்தனை என்கவுண்டர் வந்தாலும் நீங்க என்டர் கவிதைய போட்டுத்தாக்குங்க தல....

CS. Mohan Kumar said...

முதல் மாட்டரே செம interesting-ஆ இருந்தது!!

இராஜ ப்ரியன் said...

நல்ல சுவையாயிருக்கு ...........

Unknown said...

கேபிள் அண்ணா,
இது மொக்கை குறும்படம் அண்ணா,
மிகுந்த ரசனை உள்ள நீங்கள் இதையெல்லாம் எப்படி?

அன்புடன்,
கே.ஆர்.பி.செந்தில்

Unknown said...

கேபிள் அண்ணா,
இது மொக்கை குறும்படம் அண்ணா,
மிகுந்த ரசனை உள்ள நீங்கள் இதையெல்லாம் எப்படி?

அன்புடன்,
கே.ஆர்.பி.செந்தில்

மரா said...

கொத்து சூப்பர் ஆனா நீங்க சூடான போட்டோ மாத்தலைனா நாளைக்கு comment போட மாட்டேன்......

பரிசல்காரன் said...

எனக்கு ஜனவரி ஒண்ணு கூப்ட்டு தினமணி தகவலைச் சொன்னது நீங்கதான். சும்மா விளையாடறீங்கன்னு நெனைச்சேன்..

ரொம்ப நன்றி நண்பரே!

Ganesan said...

சென்னை புத்தகக்கண்காட்சி EXCLUSIVE புகைப்படங்கள்

http://kaveriganesh.blogspot.com

butterfly Surya said...

எண்டர் கவிதைக்கு நோ எக்ஸிட்.

கலக்குங்க..

Paleo God said...

பதிவு தானே.. PHD யே வரும் பாருங்க...:))

Paleo God said...
This comment has been removed by the author.
Prabhu said...

கதை எழுதிட்டாங்களா? அடுத்து படம்தான்!

பெசொவி said...

வானமே இடிந்தாலும்
பூமியே பிளந்தாலும்
காடே எரிந்தாலும்
கடலே வற்றினாலும்
காற்றே வீச மறந்தாலும்
கேபிள் அண்ணே,
கவிதை,
என்டர் கவிதை
எழுதறதை
நிறுத்தாதீங்க,
ப்ளீஸ்!

ஆரூரன் விசுவநாதன் said...

//வெளிவந்த ஆட்கள் தாங்கள் இப்போதுதான் மனநிம்மதியுடன், ரிலாக்ஸாக இருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள். இவர்களின் தொல்லை தாங்காமல் பேஸ்புக் இவர்களது சர்வரிலிருந்து ஐபியை கண்டுபிடித்து அவர்கள் சர்வருக்குள் அனுமதிக்காமல் ப்ளாக் செய்துவிட்டார்களாம்.//

ஆஹா...இது நல்லாயிருக்கே

//I Can’t Wait.. எப்பய்யா ரிலீஸ் செய்யப் போறீங்க..?//

ரீப்பீட்டேய்...........

//ந்த மாதிரி பாசக்கார பய புள்ளைங்களுக்கா நான் எண்டர் கவிதைகள் எழுதித்தான் ஆவணும் போலருக்கே.. சரி.. வேற வழி.. எழுதறேன். நீங்களே பாருங்க.. //

எண்டர் கவிதைகள் மேல எல்லாத்துக்கும் காண்டு தல...நீங்க அடிச்சி ஆடுங்க......

மணிப்பக்கம் said...

அருமை ... !

குறும்படத்திற்கு நன்றி. (வெகு சுமார்)

கார்க்கிபவா said...

//Cable Sankar said...
எண்டர் கவிதையா?உங்க காதை திருகுனாத்தான் சரிப்பட்டு வருவீங்கன்னு நினைக்கிறேன்
//

காதை திருகினா இன்னும் பெரிசா இல்லை வரும் .... எண்டர்கவிதை..://

அது சரி.. யார் கிட்ட என்ன இருக்கோ அதானே பெருசாகும்?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

உங்களுடைய என்டர் கவிதைகளை நானும் ரசிக்கிறேன்.எழுதுங்க தல .

Thamira said...

சிறப்பான தொகுப்பு.

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் கொத்து பரோட்டா..

ஏ ஜோக் படிச்சுட்டு வாய்விட்டு சிரிச்சேன்

எம்.எம்.அப்துல்லா said...

:)

சங்கர் said...

தமிழ் இலக்கியத்தில் பாடமாய் வைக்கப்படும் வரை, என்டர் கவிதைகளை விட்டுடாதீங்க

நர்சிம் said...

தினமணிக்கு வாழ்த்துக்கள்.

கலக்குங்க.

Anbu said...

\\\கார்க்கி said...

//Cable Sankar said...
எண்டர் கவிதையா?உங்க காதை திருகுனாத்தான் சரிப்பட்டு வருவீங்கன்னு நினைக்கிறேன்
//

காதை திருகினா இன்னும் பெரிசா இல்லை வரும் .... எண்டர்கவிதை..://

அது சரி.. யார் கிட்ட என்ன இருக்கோ அதானே பெருசாகும்?\\\\


:-)))))

joe vimal said...

பாத்தீங்கல்ல நான் சொன்னது சரின்னு .உங்கள் என்ட்டர் கவிதைக்கு ரசிகர்கள் ஜாஸ்தி நிறுத்தாதீங்கள் ப்ளீஸ் .

இரும்புத்திரை said...

// தண்டோரா ...... கொத்தை இன்னும் நல்லா..கொத்தியிருக்கலாம்//

அதுக்கு பதில் தான் நீங்க கொத்திக்கிட்டு இருக்கீங்களே..

வால்பையன் said...

அண்ணே, என்னையும் மனுசனா மதிச்சி பேரெல்லாம் போட்டுருக்காங்கண்ணே!

அழுவாச்சி அழுவாச்சியா வருது!

அறிவிலி said...

கேபிள்,

அது என்ன ஹாட் ஸ்பாட்டா இல்ல POT ஸ்பாட்டா?

காதை திருகவே வேணாம் போல இருக்கே.

:))))))

வெற்றி said...

// அறிவிலி said...

கேபிள்,

அது என்ன ஹாட் ஸ்பாட்டா இல்ல POT ஸ்பாட்டா?

காதை திருகவே வேணாம் போல இருக்கே.

:))))))//


ரிப்பீட்டு....

குப்பன்.யாஹூ said...

IN FACEBOOK, ORKUT IF I ERASE MY 1 ID, NEXT MINUTE I WILL CREATE ANOTHER ID AND BROWSE. THAT IS THE ADDICTION LEVEL I HAVE, THIS ADDICTION WILL GO AUTOMATICALLY OVER A PERIOD OF TIME.

NOWADAYS WHO CARRIES/USES LAPTOP, WE ALL CHANGED TO BLACKBERRY NOW.


DINAMANI , WHY TO BUY HARDCOPY, YOU CAN READ THAT ARTICLE IN EPAPER. WWW.DINAMANI.COM

மணிகண்டன் said...

ஒழுங்கான நல்ல குறும்படம் தான போடுவீங்க. இந்த வாரம் என்ன ஆச்சு ? முதல் ஏழு நிமிஷம் கஷ்டப்பட்டு பார்த்தேன். அடுத்தமுறை நல்ல படம் சஜஸ்ட் பண்ணுங்க.

பாரதி said...

//உடனடியாய் பேப்பரை வாங்க ஆளை அனுப்பினால் எங்கேயும் கிடைக்கவில்லை. அப்புறம் ஆள்,அம்பு, படையெல்லாம் ஏவி ஒரு வழியாய் பேப்பரை வாங்கி பார்த்தேன்.//
உங்களை போன்றவர்கள் சிரமம் இருக்காகூடாது என்றுதான் நான் என்னுடைய வலைபதிவில் தினமணி தலையங்கம் ,கட்டுரை தருகிறேன்