Thottal Thodarum

Jan 12, 2010

எண்டர் கவிதைகள்-6

பதினெட்டே நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை கொடுத்து ஆறரை லட்சத்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் அன்பு பதிவர்களுக்கும், நண்பர்களூக்கும், வாசகர்களுக்கும் நன்றி..நன்றி


walking girls

அன்ன நடை

விசுக், விசுக்கென துரித நடை

குதித்தோடும் அவசர நடை

அலுங்காமல் நடக்கும் பதவிசு நடை

முலை குலுங்கும் ஓட்ட நடை

தடுக்கிவிழுவாளோ என பதறும் நடை

செல்பேசி தனக்குள் சிரிக்கும் வெட்க நடை

ஐபாட்டை காதில் சொருகி சத்தமாய் பாடும் நடை

கொட்டாவி விடும் பேரிளம் நடை

வாயால் மூச்சு விடும் பெருத்த நடை

நிமிடத்துகொருமுறை முந்தானை சரி செய்யும் நடை

பெண்கள் ஒரு மாபெரும் உந்து சக்திதான்

இல்லாவிட்டால் நான் எங்கே காலையில் எழுந்து நடப்பது.தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான்.. குத்துங்க...
Post a Comment

48 comments:

பாலா said...

நடையில் கூடவா???? :) :) :)

பாலா said...

கொலை வெறி படை எங்கப்பா??

வெற்றி said...

நல்லாத்தான் வாட்ச் பண்றீங்க.. :)

Punnakku Moottai said...

யப்பா தாங்கலடா சாமீ!!

கேபிள் eve teasing கேசுலே புடுச்சிபோட்டுட போறாங்கப்பா !! பார்த்து.

எங்கப்பா அந்த ராஜுவை காணோம்! காப்பாத்தப்பா இந்த cable ஐ, (அப்பிடியே நம்பளையும் தான்.)

Cable ,

சும்மா சொல்ல கூடாது, ஏதோ சொல்ல வறிங்க, ஆனா என்னன்னுதான் புரியுல. சரக்கு கொஞ்சம் ஓவராயிடுச்சி போல (எனக்கு). தெளிஞ்ச அப்புறம் போடுறேன் அடுத்த பின்னுட்டம்.

ரசிக்க முடியலன்னு சொன்ன விடவாபோறிங்க!! நடத்துங்க!!

க ரா said...

seriyana kavithai na...

Paleo God said...

ஹாலி பாலி எண்டர் வாசல்லயே கட்டில் போட்டு தூங்கறா போல இருக்கு.. மொத ரெண்டு வடயும்...தல இது சரியில்ல..அடுத்த செண்டர் கவிதக்கு எதுனா ரிசர்ச் நடக்குதா..??:))

Paleo God said...

//நடையில்
கூடவா//

ஏதோ கேபிள் ரசிச்சார் சரி யூத்து காலைல எழுந்துக்க முடியல, நீங்க என்ன ரெண்டு வார்த்தையில வேற ஏதோ சொல்றாப்பல இருக்கு...:)

Paleo God said...

ஹாலிவுட் பாலா said...
கொலை வெறி படை எங்கப்பா??//

எங்கப்பா??
எங்கப்பா??
எங்கப்பா??

பாலா said...

இந்திய நேரத்தில் 1.00-க்கு போஸ்ட் பண்ணினா.... நாங்கதான் வருவோம்! :) :)

செண்டர் கவிதையா?? செண்டர் அலைன் பண்ணி நானும் எழுத ஆரம்பிச்சிடவா???!! :)

பாலா said...

ரெண்டு வார்த்தையில்.. நான் சொன்னதை... இப்படி கவிதையா பிரிச்சிப் பாருங்க.

நடையில்
கூட
வா!!
--
ஹய்யோ.. எனக்கும் கவிதை வருதே!

பாலா said...

........நடையில்........
..........கூட...........
...........வா...........

மை செண்டர் கவிதை!

Paleo God said...

பாலா ..
அஹா... தேனமுது பரங்கியர் தேசத்திலிருந்து.... கோடு காட்டினா ரோடு போட்டு ரயிலே உட்டீங்களே..

ஜெட்லி... said...

நடக்கட்டும்.........

சுப தமிழினியன் said...

பாலா ஏற்கனவே என்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கவிதையே தாங்க முடியல, நீங்க வேற செண்ட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கவிதையா?


ஆனா, எ(செ)ன்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கவிதை நல்லாதான் இருக்கு.

ஆரூரன் விசுவநாதன் said...

kalakkal

சங்கர் said...

இட்லிக்கு சட்னி கிடைக்காத
சொந்தக்கதை சோகக்கதைகள்
ஒவ்வொரு மாதமும்
புதுப்புது தொடர்ப்பதிவுகள்
ஒன்றுக்கு இரண்டாய்
ஒரே நாளில் பதிவுகள்
புத்தகக் காட்சி குறித்த
மொத்தப் பதிவுகள்
என்டர் கவிதைக்கு
சில எதிர் கவிதைகள்
இவையெல்லாம் இல்லாமல்
நானும் ஒரு மொக்கை பதிவர் ஆவதெப்படி

கேபிள் சங்கர் கொலைவெறிப் படை (புத்தகக் காட்சியில் தொடங்கப்பட்டது)

டக்ளசை கண்டுபிடிக்க முடியாததால், எழுதப்பட்டது

புலவன் புலிகேசி said...

பாத்து தல வீட்டுல அடி வாங்கிட போறீங்க...

பெசொவி said...

நல்லா இருக்கு உங்க எழுத்து "நடை"

அகநாழிகை said...

சூப்பர்

Raju said...

மெது வடை

கொழ,கொழவென சாம்பார் வடை

கும்மென உளுந்த வடை

அலுங்காமல் இருக்கும் ஆப்ப வடை

மிளகாய் இருக்கும் ஓட்டை வடை

தடிமனாயிருக்கும் பருப்பு வடை

சட்டிக்குள் குதித்து அடங்கும் சூடான வடை

சட்னியுடன் ருசிக்கும்,சரவணபவன் காஸ்ட்லி வடை

பிடிக்காது,இருந்தாலும் கீரை வடை

இரண்டு ரூபாய்க்கு கிடைக்கும் பெருத்த வடை

நிமிடத்துகொருமுறை உப்பு சரி பார்த்து மனைவி செய்யும் வடை

வடைகள் ஒரு உன்னதமான சைடு டிஷ்தான்

இல்லாவிட்டால் நான் எப்படி தெளிய தெளிய சரக்கடிப்பது.

by


கேபிள் சங்கர் கொலைவெறிப்படை.
(அரசி அங்கீ”காரம்” பெற்றது)

Raju said...

சங்கர் அண்ணே,
நீங்க எந்த கிளை. சென்னை புத்தக கண்காட்சி கிளையா..வாழ்க வளமுடன்.
:-)

Cable சங்கர் said...

வாய்யா. வாய்யா.. டக்ளஸு..

Raju said...

ரெட்டை ஜடை

மொழ,மொழவென நீள ஜடை

கும்மென ஒற்றை ஜடை

ரிப்பனுடன் இருக்கும் அழகிய ஜடை

முடித்து போட்டிருக்கும் கிராமத்து ஜடை

செயற்கையாயிருக்கும் சவுரி ஜடை

பள்ளிக்கென தனியாய் போடப்படும்
ரெட்டை ஜடை

கல்லூரி செல்லும் கன்னியின், கிளிப் ஜடை

திருமணத்திற்கு போடப்படும் பெருத்த ஜடை

சாமியார்கள் வைத்துக்கொள்ளும் அழுக்கு ஜடை

நிமிடத்துகொருமுறை கண்ணாடி பார்த்து மனைவி போடும் ஜடை

ஜடை போடுவது ஒரு அற்புதமான கலைதான்

இல்லாவிட்டால் நான் எப்படி தொழில் நடத்துவது.

by


கேபிள் சங்கர் கொலைவெறிப்படை.
(அரசி அங்கீ”காரம்” பெற்றது)

தராசு said...

அய்யோ, அய்யோ,

கொலைவெறிப்படையா.........

Raju said...

பெட்டிக் கடை

பள,பளவென நகைக் கடை

நாயரின் டீக்கடை

தெருமுக்கிலிருக்கும் பலசரக்குக் கடை

பெட்டி வைத்து போட்டிருக்கும் பீடா கடை

வாரமிருமுறை செல்லும் கறிக்கடை

திருவிழாவிற்கு துணியெடுக்கும் ஜவுளிக் கடை

மகனை அன்பாய் அழைத்துச் செல்லும், மிட்டாய் கடை

சாமிக்கென பவ்யமாய் பூவாங்கும் பூக்கடை

மணிக்கொருமுறை செல்லும் அரசின் மதுக்கடை

இவையெல்லாம் ஒரு நாள் அப்படியே அழிந்துவிடவேண்டும்

இல்லாவிட்டால் நான் எப்படி ஊரை விட்டு ஓடுவது..?

by


கேபிள் சங்கர் கொலைவெறிப்படை.
(அரசி அங்கீ”காரம்” பெற்றது)

geethappriyan said...

நடக்கட்டும் தலைவா,ஓட்டுக்கள் போட்டாச்சு

சங்கர் said...

//♠ ராஜு ♠ said...
சங்கர் அண்ணே,
நீங்க எந்த கிளை. சென்னை புத்தக கண்காட்சி கிளையா..வாழ்க வளமுடன்.
:-)//

சொல்லாமலே ஆரம்பிச்சிட்டோம், மன்னிச்சிக்குங்க தலைவரே

பரிசல்காரன் said...

ஓடுங்க ஓடுங்க

அது கிழக்குப்பக்கமா நம்மளை நோக்கி வருது..

(நான் உங்க கொலவெறிப்படையைச் சொல்றேன்)

பரிசல்காரன் said...

@ ராஜூ

கேபிள் சங்கர் கொலைவெறிப் படைன்னா நீங்க கேபிளுக்காக மத்தவங்களை கொலை பண்ற படைன்னு நினைக்கறேன். ஆனா உங்க கொலையாயுதமான கவிதைதான் பயங்கரமா எங்களைத் தாக்குது!

Unknown said...

இதென்னையா இது இப்படி கிளம்பிட்டிங்க, தல நான் நடையை சொன்னேன்.

Raju said...

\\சங்கர் said...
சொல்லாமலே ஆரம்பிச்சிட்டோம், மன்னிச்சிக்குங்க தலைவரே\\

என்னாதிது..விட்டா பென்னாகரம் இடைத்தேர்தல்ல, வேட்பாளர் நாமினேஷன் பண்ணனும் போலயே...!

சிவகுமார் said...

Enter Kavithai - Cable - Good
Center Kavithai - Bala - Good

Killer Kavithai - Rajii - Please
Plz .. . Plz .. ... Save me.

But ellam Super Paaaaaaaaaa

Ganesan said...

பதிவர் சந்திப்பும், புத்தகக் கண்காட்சியும் PART 2


www.kaveriganesh.blogspot.com

இராஜ ப்ரியன் said...

ஆஹா ............ உங்கள் கவிதை என்ன நடை ..!............. அருமை .....

க.பாலாசி said...

எண்டெரர் கவிதை...ம்ம்ம்....

மரா said...

தல ‘சென்னை சங்கமம்’ கவுஜப் போட்டிக்கு கவுஜ அனுப்பனும்னா இத அனுப்பிருங்க.பரிசு உங்களுக்குதேன். எப்படில்லாம் யோசிக்கிறாங்கெ..

மகா said...

நடைய பத்தின உங்க நடை சூப்பர் ....

மணிஜி said...

துவைக்காத உள்ளாடை
துக்கலாய் அடிக்கும் கவுச்சிவாடை பிள்ளைக்கு பக்கத்து வீட்டுக்காரன்ஜாடை கெடுத்தது இன்ஷியல் மூடை
கடன் வாங்கின பன்னாடை
திருப்பி கேட்டால் நான் சாக்கடை மொக்கைகள் போடும் போடை தட்டி கேட்டால் நான் பாடை

Rajan said...

வெண்ண நடை

விசுக், விசுக்கென இஸ்பீடு நடை

குதித்தோடும் ஜம்பு நடை

அலுங்காமல் நடக்கும் ஜில்பான்சி நடை

முலை குலுங்கும் ஜல்சா நடை

தடுக்கிவிழுவாளோ என பதறும் நடை

செல்பேசி தனக்குள் சிரிக்கும் ஜில் நடை

ஐபாட்டை காதில் சொருகி சத்தமாய் பாடும் பிப்பா நடை

கொட்டாவி விடும் கெழட்டு நடை

வாயால் மூச்சு விடும் பப்ளிமாஸ் நடை

நிமிடத்துகொருமுறை முந்தானை சரி செய்யும் ஐட்டம் நடை

பெண்கள் ஒரு மாபெரும் புல்லிங் பவரு தான்

இல்லாவிட்டால் நான் எங்கே..................?!?!?!

Ravikumar Tirupur said...

சார் வாக்கிங் போறீங்க போல!
ஆன இந்த வாக்கிங்னால உடம்புக்கும் நல்லது மனசுக்கும் குளிச்சி ஆஹா....

Ashok D said...

யாரோ கவிதை எழுதியிருக்கறதா... சொன்னாங்கலே... ஒன்னும் கண்ணுல கான்லயே...

அன்பு ராஜு சூடான ரஸவடைய விட்டட்டப்பா... (நல்ல சைட் டிஷ்ஷு)

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

பித்தன் said...

eve teasing கேசுலே புடுச்சிபோட்டுட போறாங்கப்பா !!

அண்ணாமலையான் said...

.......நடையில்........
..........கூட...........
...........வா...........

மை செண்டர் கவிதை!"
இப்டி கூப்டா ’கால்’ செண்ட்டர்ல?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பயங்கரமான ஆளுங்க நீங்க.

கமலேஷ் said...

நீங்க மட்டுமா நடக்றீங்க எல்லாருமே அப்படிதான் நடக்றாங்க...நன்றாக இருக்கிறது ..உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

புலவன் புலிகேசி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Thamira said...

சுமார் ரகம்.