Thottal Thodarum

Aug 1, 2016

கொத்து பரோட்டா - 01/08/16

என் ட்வீட்டிலிருந்து
நள்ளிரவு பன்னிரண்டு மணி முதல் போன், ஈமெயில், பேஸ்புக், டிவிட்டர், நேரில் என கிடைத்த கேப்பில் எல்லாம் வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் சிரம் தாழ்ந்த அன்பு வணக்கங்கள். நன்றி.

பாம்ப பிடிச் சா அரஸ்ட் பண்ணுவாங்களா என்ன? 350 பாம்புகளை பிடித்த பிடாரர்களை கைதாம்...

ஜெயிலுக்கு போகணுங்கிறதுக்காக சும்மா நின்னுட்டு இருந்தவரை குத்தி கொன்னுருக்கான் ஒருத்தன். சாவு எப்படியெல்லாம் வருது பாருங்க மக்களே 

குழந்தை திருமணத்தையும், ஜல்லிக்கட்டையும் இணைச்சு பேசியிருக்கிற நீதிபதிய நினைச்சா.. அவரு குறீயீட்டுல பேசுறவரோன்னு தோணுது
@@@@@@@@@@@@@@@@@@@
யாருக்கு விருது கொடுத்தாலும் அதைப் பற்றி ஆளாளுக்கு மாற்றி மாற்றி ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து சொல்வது என்பது இணைய உலகின் வழக்கமாய் போய்விட்டது. அப்படியான ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாய் ஜாதிப்  பிரச்சனையாய் வேறு மாற்றிவிடப்படுகிறது. கடைசியில் தலித், ப்ராமணன், தேவன் என படித்தவர்கள் தான் ஜாதியை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். கபாலிக்கு பிறகு தலித்தியம் பற்றி பேசுவது ஃபேஷனாகிவிட்டிருக்கிறது என்றே கூட சொல்ல வேண்டும். படம் நன்றாக இருக்கிறது என்பவனை ஒரு மாதிரி திட்டியும் பிடிக்கவில்லை என்பவனை அவன் ஜாதியையெல்லாம் தேடி கண்டுபிடித்து அதனால் தான் உனக்கு கபாலி பிடிக்கவில்லை என்பது போல லைக் கல்லா கட்டி வருகிறவர்களை காணும் போது ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்த முடியாது என்பது உண்மைதான் என்று தெரிகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆளாளுக்கு ஏதேதோ விடீயோக்களை வெளியிட்டாலும் சில சமயம் முத்துக்களாய் பிரபலாமாக வீடியோக்கள் கிடைக்கும் அப்படி கிடைத்த வீடியோதான் இது. அலைபாயுதே படத்தில் வரும் எவனோ ஒருவன் பாடலின் ஒளிப்பதிவைப் பற்றிய ஒரு டீடெயில் கண்ணோட்டம். இதை நான் பல முறை பேசியிருக்கிறேன். ஒரு விஷயம் ரசிக்கப்படும் போது அது பலவிதமான பர்செப்ஷன்களில் புரிந்து கொள்ளப்பட்டு, கருத்துக்களாய் வெளியிடப்படும்.  பட்.. அதை வீடியோவாக பதிவிட்ட இவரை பாராட்டியே ஆக வேண்டும். இந்த வீடியோவை பார்த்துவிட்டு நீங்கள் பாட்டை பார்த்தீர்களானால் இன்னும் ஆழகாய், ஆழமாய் இன்வால்வாகி ரசிக்க முடியும் என்பது என் எண்ணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் -ஆதி
வித்யாசமான விஷயங்களை போரடிக்கும் அடிக்காது என்பதைத் தாண்டி முயற்சி செய்ய முடிகிற இடம் குறும்பட உலகம். பெரும்பாலான குறும்பட இயக்குனர்கள் முயற்சிக்காத விஷயம். இதில் அரவிந்த் குழு கொஞ்சம் வித்யாசம் 12ஏ.எம் என்றொரு குறும்படத்திற்கு பிறகு அந்த அவரின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதிய குறும்படம் ஆதி. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்து இளைமை தொலைக்காதவன் நான் எனும் ஆதியைப் பற்றிய கதை. ஏன் மகாபாரதத்தில் கிருஷ்ணணே நான் தான் என்கிறான். உண்மையா? இல்லையா? என்பது தான் கதை. இம்மாதிரி கதைகளில் இருக்கும் ஒர் சுவாரஸ்யம் முரண்கள் மட்டுமே. அதை விளக்க, விஷுவலாய் போக முடியாது.. ஏனென்றால் பட்ஜெட். எனவே பெரும்பாலானவர்கள் வசனத்தினாலேயே கதை நகர்த்தி விடுவார்கள். அதையேத்தான் இதிலும் செய்திருக்கிறார் அரவிந்த். பட். பெரும்பாலும் புத்திசாலித்தனமான வசனங்கள். அடிப்படை சுவராஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் அமெச்சூரிஷான நடிப்பு. ஷாட்ஸ் எல்லாவற்றையும் மீறி சிங்கப்பூரில் இருக்கும் நான்கைந்து சினிமா ஆர்வர்வலர்களின் வெளிப்பாடு எனும் போது நல்லபடைப்பே.. மீண்டும் சொல்கிறேன் வித்யாசமான விஷயங்களை முயற்சிப்பவர்களுக்கு மட்டுமே.. மத்தவங்க வேற ஆட்டத்துக்கு போங்க..
@@@@@@@@@@@@@@@@@@@
சென்னையில் டி.சி.சி.எல் நெட்வொர்க்கில் சங்கமம் என்றொரு சேனல் ஒளிபரப்பாகிறது. லேகியம், யுனானி மருத்துவம், டெலி மார்கெட்டிங் இதன் நடுவே ட்ரைலரையும் பாடல்களையும் போட்டு காசு பண்ணும் குடிசைத் தொழில் டிவிக்கள் இருக்க, இவர்கள் முழுக்க, முழுக்க, குறும்படங்களாய் போட்டு சேனல் நடத்துக்கிறார்கள். சந்தோஷமான விஷயம் தானே இதில் என்ன இருக்கு என்று கேட்டீர்களானால் குறும்படம் எடுத்தவர்களின் அனுமதியில்லாமலேயே யூட்யூபிலிருந்து டவுன்லோட் செய்து அதை ஒளிப்பரப்புவதுதான். இது ஆபத்தான விஷயம். சம்பந்த பட்ட படைப்பாளிக்கே தெரியாமல் ஒளிபரப்பி காசு பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்?. அட்லீஸ்ட் ஒரு முறை ஒளிபரப்ப, ஒரு குறிப்பிட்ட தொகையாவது கொடுக்கலாம் இல்லையா? 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Adult Corner
A couple is attending an Art exhibit and they are looking at a portrait that has them a little taken aback. The picture depicts 3 very black, very naked men sitting on a park bench; 2 have a black penis and the one in the middle has a pink penis. As the couple is looking somewhat puzzled at the picture, the Irish artist walks by and says, "Can I help you with this painting? I'm the artist who painted it." The man says "Well, we like the painting but don't understand why you have 3 African men on a bench, and the one in the middle has a pink penis, while the other two have a black penis." The Irish artist says, "Oh you are misinterpreting the painting. They're not African men, they are Irish coal miners and the one in the middle went home for lunch."

Post a Comment

9 comments:

Amaranathan Suriyanathan said...

The short movie aadhi is a rip off from the movie, man from the earth. Watch it and you will feel the real suspense build up just with talks and bgm.

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் பரோட்டா அருமை....

குரங்குபெடல் said...

அண்ணே . . .BFG , லைட்ஸ் அவுட் , 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விமர்சனங்கள் . . .. .?

Jagadeesh P B said...

That short film is a remake of http://www.imdb.com/title/tt0756683/?ref_=fn_tt_tt_67

Kumar said...

Cable sir, have you seen the original version of 'The man from earth'.? Wonderful movie, I expect a review for that movie from you. Aadhi is a good try but after watching the original version, I feel something is missing.

Unknown said...

"Comedy of the year"

Unknown said...

Mariana mokkai

Unknown said...

sankar have you got ticket, not online for a while?

R. Jagannathan said...

Congrats and best wishes for your ensuing serial Kothu Parotta in Kumudham!