Thottal Thodarum

May 16, 2016

கொத்து பரோட்டா - 16/05/16

ஓட்டு போட்டு வந்தாயிற்று. எங்கள் தெரு பூத்தில் அவ்வளவாக கூட்டமில்லை. எதிர் வரும் நபர்களிடமெல்லாம் தீபாவளி ஸ்நானம் ஆயிருச்சான்னு அந்த காலத்துல கேட்டா மாதிரி ஓட்டுப் போட்டாச்சா? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். நண்பரொருவர் சூசகமாய் ரெண்டுக்கோ, மூணுக்கோ ரெண்டுத்துல ஒண்ணைத்துக்குத்தான் செலக்ட் பண்ணணும் என்று அதிமுக, திமுகவின் வரிசையை சொல்லிவிட்டு சென்றார். யாரும் மொபைல் பேசவில்லை. விநாயகபுரம், பார்சன் நகர், ஹாஸ்பிட்டல் ரோடு ஏரியாக்களில் கொஞ்சம் கூட்டம். புதிதாய் ஓட்டுப் போடும் இளைஞர்களின் முகத்தில் ஆர்வம் அதிகமாய் இருந்தது.   இளைஞிகளுடன் வந்த அம்மாக்கள் “லீவு நாள்ல சீக்கிரம் எழுந்துருன்னா பதினோரு மணிக்கு எழுந்திருக்கிறவ இன்னைக்கு விடியற்காலையிலேயே எழுந்து மேக்கப் போட்டு ஓட்டு போட கிளம்பிட்டா.. எல்லாம் செல்பி எடுத்து போட்டு லைக் வாங்குறதுக்காக” என்றபடி போனார்கள். ஓட்டுப் போடும் இடம் தாண்டி வந்து புது ஓட்டர்கள் கூட்டமாய் விரல் உயர்த்தி க்ரூப் செல்பி எடுத்துக் கொண்டார்கள். பழைய ஓட்டர்கள் என்னத்த ஓட்டப் போடு, என்னத்த என்ற சலிப்போடு, வந்தாலும் தங்கள் ஜனநாயகக் கடமையை செவ்வனே செய்த திருப்தியோடு, வெளியேறினார்கள். பெண்கள் கூட்டம் ஏனோ கொஞ்சம் குறைவாகவே இருந்தது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாய் தெரிகிறது. எல்லாம் முகத்திலும் ஒரு அழுகுணி ஆட்டம் ஆடும் ஃபீல். குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் ரேஞ்சுல.. பார்ப்போம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எல்லா பஸ் ஸ்டாண்டுகளிலும் நல்ல கூட்டம் வார இறுதி மட்டுமில்லாது ஓட்டு போடுவதற்காக ஊருக்கு செல்லும் இளைஞர் கூட்டம். ஆனால் இம்மாதிரியான நேரங்களில் மக்கள் போக்குவரத்து சிறப்பான முறையில் இயங்க வேண்டும். நான் ஏசி பஸ்கள் கூட 1000 ரூபாய்க்கு குறையாமல் டிக்கெட் விலை சொல்ல, கடுப்போடுதான் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையாற்ற ஊருக்கு சொல்கிறார்கள். இன்று நேற்றல்ல பல வருடங்களாய் விடுமுறை தினங்களில் அதிக விலை வைத்து டிக்கெட் விற்பதை எந்த ஆட்சியாளர்களும் கண்டு கொண்டதில்லை. காரணம் ஆம்னி பஸ் ஓனர்களின் லஞ்சம். கூடவே எப்படி பல ஆட்டோக்களுக்கு லோக்கல் போலீஸ் காரர்கள் ஓனர்களாய் இருப்பது போல பல அரசியல்வாதிகளின் பினாமிக்கள் பஸ் ரூட் லைசென்ஸ் வைத்திருப்பதுதான். அட்லீஸ்ட் இந்த முறை ஓட்டுப் போடப் போகும் புது ஓட்டாளர்களின் கோபம் இவர்களுக்கு இந்த தேர்தலின் ரிசல்ட் மூலமாய் தெரிய வரட்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
தேர்தல்ல இலவச அறிவிப்பெல்லாம் கொடுக்கக்கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட் சொல்லிச்சே அது என்ன ஆச்சு?

எப்படியும் நாம யாருக்கு ஓட்டுப் போட்டாலும் அஞ்சு வருஷம் தலைய கழுவப் போறானுங்க.. அதனால ஓட்டு போட்டுட்டு தலை முடி வெட்டிட்டு வந்து நானே தலை முழுகிட்டேன் யாரு கிட்ட

கோபிச்செட்டிபாளையத்தில் வீட்டுக்கு ஆயிரம் ரூபாயாம். உறவினர்கள் சொன்னது. உபயம் அதிமுக

வழக்கமா க்யூவில நின்னா பக்கத்துல நிக்கிறவனைப் பத்தி யோசிக்காம சத்தமா பேசுறவங்க ஓட்டுக் க்யூவுல எவனும் பேசவேயில்லை ஆச்சர்யம்

1000, 2000னு பஸ்ஸுக்கு டிக்கெட் எடுத்து ஓட்டுப் போடப் போன அத்தனை பேருக்குள்ளேயும் ஒரு எதிர்ப்பு ஓட்டு உருவாக்கியிருக்கு

இலவச ரிப்போர்ட்டர்.. எல்லா வீட்டுக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை விளம்பரத்தோடு.. உள்ளே தேர்தல் கருத்துகணிப்பு ரிசல்ட்டோடு..நான்காவது தூணாம் தூ

எப்ப மாங்கனியப் பார்த்தாலும் மாஸா நியாபகம் வர்றது எனக்கு மட்டும் தானே ?

ஒட்டிக்கிட்டு இருந்த கட்சி புல் பேஜ விளம்பரம் கொடுக்கிறத பார்த்தா ஊழல் இவங்களும் பண்ணுவாங்க போலத்தான் தெரியுது? கன்ப்யூசிங்..

நேத்து ராத்திரி மூணு தடவை கரண்ட் கட்டு ஆனப்பவும் வெளியே போய் பார்த்தேன் எவனும் எதுவும் கொடுக்கலை.. தேர்தலுக்கு வேற ஒரு நாள் தான் இருக்குது

எங்க ஏரியாவுல ஃப்ளையிங் ஸ்கூவாடுன்னு ஒரு வண்டி தெனக்கும் ஒரே எடத்துல டேரா போட்டு இருக்கு. எப்ப பறக்கும்? லக்கானி சார்.

விடியோ பைரஸியை பற்றி தனித்தனியா பொலம்பி பிரயோஜனமில்லை

தமிழில் வந்திருந்தால் போல்டான படமாய் இருந்திருக்கும் பட். ஹிந்தியிங்கிலீஷில் சவசவ ‪#‎DearDad‬

காசு கொடுக்குறாங்க கொடுக்குறாங்கன்னு சொல்ங்களே தவிர கொடுக்க மாட்டேன்குறாங்களே. கொடுங்கய்யா.. நான் வெளிய சொல்ல மாட்டேன் 

நான் ஏசி பஸ்ஸெல்லாம் 1500 டிக்கெட் விக்குறானு்வ.. இதையெலாம் கேட்க ஒரு அரசு இல்லை.. இதுல ஜனநாயக கடமைஆற்ற போகும் நல்லுலங்களை நினைச்சா#தேர்தல்

திமுக ஜெயிச்சா மதுவிலக்கு அமலாயிருமோங்கிற காண்டுல கூட குடிமகன்கள் அதிமுகவுக்கு ஓட்டு போட வாய்ப்பிருக்கு

விலையேத்தணும்னா ஒண்ணு கூடி ஏத்துவாங்க.. மக்களுக்கு கால்ட்ராப்புக்கு பணம் கொடுக்கணும்னா கோர்ட்டுக்கு போவாங்க.அவங்களும் அதுக்கு தடை போடுவாங்க

டேய் தகப்பா, உன்னப் பத்திதான் எல்லாருக்கும் தெரியுமே. நீ அறிக்கை விட்டுநாளை பின்ன ஏதாச்சும் ஆச்சுன்னா. நான் தான் காரணம்னு சொல்லிருவாங்களே:(
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கோ2
பிரதிநிதி என்கிற தெலுங்கு படத்தின் ரீமேக். தெலுங்கு ஊரில் அரசியலை விமர்சித்து எடுப்பது எல்லாம் ரொம்பவே ஈஸி.. ஆனால் தமிழில் அதுவும் ஆளும் அரசின் பிரச்சனைகளை சொல்லி ஓபிஎஸை போலவே வேடமிட்டு, கிண்டல் செய்யும் படமெல்லாம் அதீத தைரியம். தேர்தல் நேரமாதலால் இப்படம் வெளிவரும் சாத்தியமாயிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இரண்டாம் பாதியில் வரும் அரசியல் விமர்சன வசனங்களைத் தவிர சுவாரஸ்யமாய் படத்தில் ஏதுமில்லை. பால சரவணன் ஆங்காங்கே கொஞ்சம் கிச்சு கிச்சுமூட்டுகிறார். 
@@@@@@@@@@@@@@@@@@@@
பென்சில்
4th Period Mystery என்றொரு கொரியன் படத்தின் உட்டாலக்கடி. ஜி.வி.பிரகாஷ்குமாரின் முதல் படமாய் ஆரம்பித்து மூன்றாவது படமாய் வந்திருக்கிறது. நிசத்தில் ஸ்ரீதிவ்யாதான் ஹீரோ ஹீரோயின் எல்லாமே. ரியாஸ்கானின் மகன் தான் வில்லன் நன்றாக நடித்திருக்கிறார். ஒரிஜினல் படத்தின் சாயல் முழுக்க தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக நீட்டி முழக்கப்பட்ட, லாஜிக் இல்லாத ஸ்கூல், அதன் பிரின்ஸிபல், மார்ஸில் வாழ தீஸிஸ் சம்மிட் செய்யும் ஹீரோ. எதோ ஒரு காட்சியில் அதிகம் புத்தகம் படிக்கும் மாணவி என்று சொல்லிவிட்டு இன்னும் கொஞ்ச்ம ஸ்ட்ராங்காக, கமிஷனரின் பெண் என்று வேறு சொல்லிவிட்டதால் ஒரு க்ரைம் சீனை விவரிப்பதிலிருந்து அதை கண்டுபிடிக்கும் வரை எல்லாவற்றையும் செய்கிறார் ஸ்ரீதிவ்யா. கடைசியாய் பத்து நிமிடங்களுக்கு கல்வியை விற்காதீர்கள் என்ற அட்வைஸ். டெக்னிக்கலாய் படம் குட். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு, ஆண்டணியின் எடிட்டிங்.. ஜிவியின் பாடல்களில் ஒன்று தேறுகிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@
Dear Dad

அரவிந்த் சாமியின் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஹிந்திங்கிலீஷ் படம். சவுத் இந்தியனாக வட நாட்டில் வாழும் அரவிந்த் சாமி தம்பத்க்கு டீன் ஏன் மகன், குட்டி மகள் என சந்தோஷ குடும்பம். ஆனால் அரவிந்த் சாமி தான் ஒரு “கே” என்று உணர்ந்து டைவர்ஸ் செய்யப் போகிறார். அதை தன் மகனிடன் சொல்லி புரிய வைக்க, அவனை ஹாஸ்டலில் கொண்டு போய் போய் விட, அவனுடன் ட்ரைவ் செய்வதுதான் கதை. பெரிய ட்விஸ்ட் டர்ன் எல்லாம் இல்லாத கதை. ஹிந்தி சினிமாவில் கே பற்றிய நிறைய கதைகள் வந்துவிட்டது. அதனால் புதிதாய் சொல்ல என்ன இருக்கிறது என்பது போன்ற எண்ணம் மோலோங்கியிருப்பது படம் நெடுக காண முடிகிறது. இண்டர்வெலோடு முடிந்த படத்தை அப்பா பையன் உறவை நெகிழ வைப்பதற்காக ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனின் கேர்ள் ப்ரெண்ட் ஹாஸ்டலுக்கு குடித்துவிட்டு நுழைந்து, ஏணியெல்லாம் வைத்து மகனின் காதலுக்கு தூது விடுவதெல்லாம் அபத்தக் களங்சியம். 
@@@@@@@@@@@@@@@@@
Money Monsters
ஜார்ஜ் க்ளூனி, ஜூலியா ராபர்ட்ஸ், நடிகை, ஜோடி பாஸ்டரின் இயக்கம் என ஈர்ப்புக்கான எல்லா விஷயமும் இருந்ததால் போய் உட்கார்ந்தாயிற்று. டிவியில் இந்த ஸ்டாக்கை வாங்கு, அந்த ஸ்டாக்கை வாங்கு என ரெகமெண்ட் பண்ணும் ஷோ ஹோஸ்ட் செய்பவராக கூளூனி. அவர் சொன்ன ஸ்டாக்கை வாங்க் நஷ்டப்பட்ட ஒருவன் சேனலின் உள்ளே நுழைந்து அவரை பணையக் கைதியாக்கி, நீ சொன்ன ஸ்டாக் எப்படி நஷ்டமானது என்று பப்ளிக்காக அந்த கம்பெனி ஓனர் பேச வேண்டுமென்ற கோரிக்கை வைக்க, கிட்டத்தட்ட எட்டு நூறு மில்லியன் தொகையை ஆட்டையைப் போட்டு சவுத் ஆப்பிரிக்காவில் இன்வெஸ்ட் செய்து தில்லாலங்கடியை எப்படி வெளிக்  கொணர்கிறார்கள் என்பதுதான் கதை. இம்மாதிரியான கதைகளில் எப்பவுமே ஹீரோ யாராக இருந்தாலும் காமன் மேன் தான் விக்டிம். பல படங்களில் இந்த மாதிரியனா கேரக்டரில் ஹீரோ இருப்பார். ஷார்ப்பான வசனங்கள், சுவாரஸ்யமான ப்ளாட், எல்லாம் இருந்தும் க்ளைமேக்ஸுன் போது கொஞ்சம் தெலுங்கு படம் போல சவ சவதான். ஸ்டாக் மார்க்கெட், அது இது என்று உட்டாலக்கடி அடித்தாலும் மீடியாவின் செய்தி வெறி, அதற்காக எப்படியெல்லாம் இயங்குகிறது என்பது அடிநாதமாய் ஓடுவது சுவாரஸ்யம். 
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
2 Funny Sex Jokes

Post a Comment

1 comment:

Aravinth Kannan said...

Blog heading is misleading.. It should be 16/05/2016 instead of 16/02/2016.