Thottal Thodarum

Aug 17, 2015

கொத்து பரோட்டா -17/08/15

10 எண்றதுக்குள்ளே
சமீபத்தில் பார்த்த அட்டகாசமான டீசர்.
வாழ்த்துக்கள் விஜய் மில்டன். போன வாரம் ஆபீஸுல பாத்த போது கூட காட்டவேயில்லை .. இருக்கட்டும் இருக்கட்டும்.
@@@@@@@@@@@@@@@@@@
ப்ரகாஷ் ராஜை வைத்து கொடுக்கப்பட்ட கே.எப்.ஜேவின் கல்யாண வயசுல டென்ஷன் விளம்பரம் பார்த்து, சமூக ஆர்வலர்களும், பெண்ணிய வாதிகளும், பெற்றோர்களால் டென்ஷனுடன் கல்யாணம் செய்து வைக்கப்பட்ட நளிர் நங்கைகளும் கொதித்தெழுந்தனர். என்ன இது அநியாய்ம் பெண்ணைப் பெற்ற அப்பன் டென்ஷனுடன் தான் அலைவானா? பெண்களை அவமதிக்கும் செயல் ப்ரகாஷ்ராஜை அவமானப் படுத்தி திட்டியும், கேஸ் போட வேண்டுமென்றும் ஆளாளுக்கு சமூக வலை தளங்களில் கூவியிருந்தார்கள். இவர்களில் எத்தனை பேர் குடும்பங்களில் டென்ஷன் இல்லாமல் நயா பைசா செலவு செய்யாமல் தங்கள் பெண்களை கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்? அல்லது கட்டிக் கொண்டிருக்கிறார்கள்?. ஒரு வகையில் அவர்கள் செய்தது சீப் விளம்பரமாய் இருந்தாலும் கூட தங்கள் பெண்களின் எதிர்கால வாழ்க்கைக்காக சிறுகச் சிறுக சேர்க்கும் எத்தனையோ தந்தையர்கள் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். எனவே சமூகம் மொத்தமும் மாறும் போதுத்தான் இத்தகைய விளம்பரங்கள் எடுபடாமல் போகும். இப்படி விளம்பரங்களூக்காக போராடுவதை விட்டுவிட்டு, நிஜ வாழ்க்கையில் சமூக வலைதளங்களில் பொங்காமல் நிஜத்தில் பொங்கி வாழ்ந்து காட்ட ஆரம்பித்தால் அடுத்த தலைமுறை மாறும். விளம்பரமும் மாறும் என்பது என் எண்ணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@
மெஹர்
இயக்குனர் தாமிரா இயக்கிய டெலி பிலிம் விஜய் டிவீயில் சனி மதியம் போட்டார்கள். நான் ஹாட் ஸ்டாரில் பார்த்தேன். கிட்டத்தட்ட ஒரு முழு சினிமாவை எடுக்க முயற்சி செய்தாலும், லெந்தியான மைண்ட் வாய்ஸ் காட்சிகளால் அது சினிமாவாக மாறவில்லை. பட்.. அருமையான கருத்தை சொன்ன படமாய் அமைந்தது. கவிஞர் சல்மாவின் முகம் ஏழை தாய்க்கு பொருத்தமாய் இருந்தாலும், நடிப்பென்று பார்த்தால், அவரின் மகனாய் நடித்தவரும், கல்யாண பெண்ணும் முக்யத்துவம் பெறுகிறார்கள். மணீஷின் ஒளிப்பதிவு நன்றாகவே இருந்தது. ஆங்காங்கே வசனங்கள் பளிச் சாட்டை.  முக்கியமாய் ஏழை இஸ்லாமியர்களின் வாழ்வு. அப்பெண்களின் சுதந்திரம். அவர்கள் அதிகபட்சமாய் எதிர்பார்க்கும் கல்யாணம் என்கிற விஷயத்தின் மூலமாய் எதிர்பார்க்கும் விடுதலை. இஸ்லாம் சொல்லும் மார்க்கம் வழி நடக்காமல் ஊருக்காக வாழும் ப்ரச்சனைகள் என நிறைய விஷயங்களை தைரியமாய் தொட்டிருந்தார். இன்னும் கொஞ்சம் சுருக்கியிருந்தால் நிச்சயம் இன்னும் அழுத்தமாய் தாக்கியிருக்கும் என்பது என் எண்ணம். பிரபஞ்சனின் கதைக்கும், எழுதி இயக்கிய தாமிராவுக்கும் வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து 
என்னத்த சொல்ல... சிரிக்க ட்ரை பண்ணிட்டேயிக்கேன். வரத்தான் மாட்டேங்குது

நேற்று நண்பருடன் ஈ.சி.ஆர் பயணம். மோசமான ரோடு. இரவு பார்த்த மிஷன் இம்பாஸிபிள் ஆக்‌ஷன் ப்ளாக் நிஜமாய் நடந்துவிடக்கூடிய அத்துனை சாத்தியங்களூடன்

நேத்து டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டமாம். ஆனா கடை நடந்திச்சு. வேலைக்கு ஆள் வச்சிக்கிற அளவுக்கு சம்பாதிக்கிறாய்ங்க.

எனக்கென்னவோ அதிகமா காசு வச்சி வித்த டாஸ்மாக் கடைக்காரங்க மேல இருக்குற கோபத்துலதான் மக்கள் அட்டாக் பண்றாய்ங்கன்னு தோணுது

மனதில் உள்ள பொறாமையும், கோபமும், வெளிப்படும் போது முகம் விகாரம் ஆகிவிடுகிறது நேத்து பார்த்தேன் 
@@@@@@@@@@@@@@@@@@@@@@
Yummy drives.com இணைய தளமும், ஆண்ட்ராய்ட் ஆப்பும், வெள்ளியன்று திவ்யமாய் நடந்தேறியது. நண்பர்கள், அனைவரும், வந்திருந்து சிறப்பாய் நடத்திக் கொடுத்தார்கள். சுரேஷ் குமாரை ஏற்கன்வே சந்தித்திருந்தாலும், ஜீவாவை அன்றுதான் சந்தித்தேன். மிக அமைதியான மனிதர். மிகக் குறைவாகவே பேசுகிறார். விழாவிற்கு அடுத்த நாள் நாங்கள் மூன்று பேரும் ஈஸிஆருக்கு ஒரு பயணம் மேற்க் கொண்டோம். மொத்த பயணத்தில் நானும் சுரேஷும் பேசியதில்  0.001 சதவிகிதம் அவர் பேசியிருந்தால் அதிகம். அம்பூட்டு அமைதி. படம் பார்க்கும் போதும், அவர்கள் அதிகம் பேசிய இடங்களில் தூங்கிவிட்டார் என்றார் பார்த்துக் கொள்ளுங்கள். சரி.. எல்லாரும் ஆஃப்பை டவுன்லோட் செய்திருப்பீர்கள். அதில் உள்ள நிறை குறைகளை எங்களுக்கு சொன்னால் நிச்சயம் மேம்படுத்த வசதியாய் இருக்கும். உங்கள் ஆதரவை தொடர்ந்து நல்கும் நண்பர்கள். 
https://play.google.com/store/apps/details?id=com.support.android.srujan
@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படங்களை தொடர்ந்து பல வருடங்களாய் ஆதரித்து வருபவன் என்கிற முறையில் குறும்படங்கள் எடுப்பவர்கள் அதை எடுப்பதற்காக ஆகும் செலவை விட மார்கெட்டிங் மற்றும் பப்ளிச்சிட்டிககாக ஆகும் செலவு அதிகம் என்பது அவர்களுக்கு பின்னாளில் தான் தெரிய வருகிறது. குறும்படம் எடுக்கும் அத்துனை பேரும் தங்களின் திரைப்பட முயற்சிக்கான ட்ரைலராகவே குறும்படங்களை நினைக்கிறார்கள், எடுக்கிறார்கள் ஆனால் இரண்டுமே வேறு வேறு ஜெனர். குறும்படங்கள் மூலமாய் பெரும் அவதானிப்பும், வருமானமும், அங்கீகாரமும் கிடைக்கும் பட்சத்தில் திரைப்படங்களில் செய்ய முடியாத, சொல்ல முடியாத பல விஷயங்களை குறுமப்டங்கள் மூலமாய் சொலல் முடியும்.  அப்படி அங்கீகாரம் மற்றும் வருமானம் வருவதற்காக ஒரு சின்ன முயற்சியாய் சில விஷயங்களை முயன்று கொண்டிருக்கிறேன். விருப்பமுள்ளவரக்ள் என் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் sankara4@gmail.com
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரிக் கால நண்பர்களை சந்தித்தேன். நிறைய பேர் மொத்தமாய் மாறியிருந்தார்கள். சில பேர் உத்துப் பார்த்தால் அடையாளம் தெரியக்கூடிய அளவில் இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருந்தாலும், சட்டென பார்த்த மாத்திரத்தில் மாணவ பருவத்திற்கு சென்றதும் பேசியதும் விளக்க முடியாத ஒரு சந்தோஷம். அக்கால விஷயங்கள் நிறைய பேசியதும், அவரவர் நிக் நேம்களை அன்று சொன்னால் சண்டைக்கு வந்தவர்கள் எல்லாம் தங்களது நிக் நேம்களை சொல்லி நியாபகங்களை நிரடியும் எந்தவிதமான போலி அன்பும், கொண்டாட்டமும் இல்லாத நான்கு மணி நேரம் டிவைன். எஅது நீடிக்க, என் வாழ்நாள் ஆசை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Kate was standing in the kitchen cooking dinner. Her husband Paul was in the living room drinking a beer and watching the game. "Honey, you need to come in here and fix the fridge. The door is broke and if you don’t fix it the food will go bad," Kate said. Paul yells back, "Who do I look like the GE man, I Don’t think so." A little while later Kate says, "Honey, you need to fix the hall light, it’s out." "Who do I look like an electrician, I don’t think so," Paul says. A few minutes later Kate says, "Honey, you need to fix the porch step before someone gets hurt on it." Paul quickly replies, "Who do I look like a carpenter, I don’t think so." Frustrated, he gets up and leaves. He decides to go to a bar down the road. After the game was over, he began to feel slightly guilty for the way he treated his wife so he went on home. He comes up the porch and realizes that the step is fixed. He walked into the house and noticed that the hall light was fixed. He walked into the kitchen to get a cold beer and noticed that the fridge was fixed. Paul sees his wife and says, "Babe, how did you fix all this." She looked at him and said, "Well after you left I began to cry on the porch." A fine young man walked past and noticed I was crying and he asked me what he could do to help. He fixed everything. I asked him what I could do for payment." He said "I could either bake him a cake or sleep with him." Paul says, LWell, what kind of cake did you bake him?" Kate looks at him and replies, "Who do I look like Betty Crocker, I don’t think so!"

கேபிள் சங்கர்


Post a Comment

3 comments:

கோவை நேரம் said...

தல ...வணக்கம்..நீங்க பேசினீங்க கேட்டுகிட்டு இருந்தேன்.மத்தபடி அமைதி ஒண்ணும் இல்ல..

nimmathiillathavan said...

Very fine joke. Yummydrive blog has come well. Congrats

Senthil said...

Yummy drive super and the joje is haaaahhha