Posts

Showing posts from November, 2026

Enemy of the Smuggler - Review

Image
 Enemy of the Smuggler - Review இந்தப் படத்தை எழுதி இயக்கியதோடு மட்டுமில்லாமல், பின்னணி இசையும் அவரே செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், ஒரு Customs Officer கதாபாத்திரத்திலும் அவரே நடித்திருக்கிறார். முக்கியமாக, அவர் நிஜமாகவே Customs துறையில் தொடர்புடைய ஒரு மனிதர் என்பதால், இந்தப் படத்தை மிகவும் passionate-ஆக எடுத்திருக்கிறார் என்பது படத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது. ஆரம்பத்தில், Customs Officer ஒருவர் முதல் முறையாக ஒரு படம் எடுக்கிறார் என்றால், அந்தத் துறையைப் பற்றிய விஷயங்களை மேலோட்டமாகத்தான் காட்டியிருப்பார் என்று நினைத்தேன். ஆனால், Customs சார்ந்த விஷயங்கள் மிகவும் detailed-ஆக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. உதாரணமாக, ஒரு parcel-ஐ வெளியே அனுப்பும்போது அதில் GPS tracker வைத்து, அதை track செய்து மீண்டும் கண்டுபிடிப்பது போன்ற விஷயங்கள் மிகவும் நுணுக்கமாகக் காட்டப்பட்டிருக்கிறது. அவருடைய field-ல் தெரிந்த விஷயங்கள், எப்படி illegal activities நடக்கின்றன, அவற்றை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்ற ஒரு முயற்சி அவரிடம் இருந்திருக்கிறது. அது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒரு வி...