Enemy of the Smuggler - Review
Enemy of the Smuggler - Review
இந்தப் படத்தை எழுதி இயக்கியதோடு மட்டுமில்லாமல், பின்னணி இசையும் அவரே செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், ஒரு Customs Officer கதாபாத்திரத்திலும் அவரே நடித்திருக்கிறார். முக்கியமாக, அவர் நிஜமாகவே Customs துறையில் தொடர்புடைய ஒரு மனிதர் என்பதால், இந்தப் படத்தை மிகவும் passionate-ஆக எடுத்திருக்கிறார் என்பது படத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது. ஆரம்பத்தில், Customs Officer ஒருவர் முதல் முறையாக ஒரு படம் எடுக்கிறார் என்றால், அந்தத் துறையைப் பற்றிய விஷயங்களை மேலோட்டமாகத்தான் காட்டியிருப்பார் என்று நினைத்தேன். ஆனால், Customs சார்ந்த விஷயங்கள் மிகவும் detailed-ஆக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. உதாரணமாக, ஒரு parcel-ஐ வெளியே அனுப்பும்போது அதில் GPS tracker வைத்து, அதை track செய்து மீண்டும் கண்டுபிடிப்பது போன்ற விஷயங்கள் மிகவும் நுணுக்கமாகக் காட்டப்பட்டிருக்கிறது. அவருடைய field-ல் தெரிந்த விஷயங்கள், எப்படி illegal activities நடக்கின்றன, அவற்றை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்ற ஒரு முயற்சி அவரிடம் இருந்திருக்கிறது. அது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒரு விஷயம்.
இந்தப் படத்தில் lead role-ல் நடித்திருப்பவருடன், மேலும் பல திறமையான நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, smuggling தொடர்பான விஷயங்கள் மற்றும் அதற்குப் பின்னால் நடக்கும் செயல்பாடுகள் சில இடங்களில் surprise-ஆக இருந்தது. Background Score நல்லாவே இருக்கிறது. குறிப்பாக fight scenes போன்ற காட்சிகளில் ஒரு unique layer இருந்தது. சில இடங்களில் அந்த Background Score fresh-ஆகவும் புதுசாகவும் இருந்தது. நிறைய இடங்களில் Background Score உண்மையிலேயே நன்றாக செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக படக்குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். Dialogues-லும் சில இடங்களில் practical-ஆன அணுகுமுறை இருக்கிறது. இது ஒரு debut முயற்சி என்பதால், மிகவும் critical-ஆக அணுக வேண்டிய அவசியம் இல்லை. Direction-ல் ஒரு பெரிய இயக்குனரின் style-ஐ அப்படியே copy செய்யாமல், தனக்கான ஒரு முயற்சியாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஒரு படத்தை நன்றாக செய்ய வேண்டும் என்ற தெளிவான முயற்சி இதில் இருக்கிறது. எனக்கு பெரிய அளவில் work ஆகாத விஷயம் என்றால், இன்னும் Screenplay-க்குள் பல layers சென்றிருக்க வேண்டும் என்பதுதான். Script-ஐ இன்னும் பல முறை refine செய்து, drafting, script reading போன்ற வேலைகளை அதிகமாக செய்திருக்க வேண்டும். ஒருவேளை இது ஒரு debut film என்பதால், அந்த விஷயங்களில் கொஞ்சம் focus குறைந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
அதை மட்டும் இன்னும் கொஞ்சம் focus செய்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், ஒரு debut director-ஆக பார்க்கும்போது, நிறைய விஷயங்களை fight scenes-ல் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதே மாதிரி Dialogues-ம் நன்றாக இருக்கிறது. Casting-ம் decent-ஆக இருக்கிறது. படத்தின் setup சரியாக அமைந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி சில விஷயங்களை செய்திருந்தால், இந்தப் படம் இன்னும் better-ஆன ஒரு படமாக இருந்திருக்கும். இருந்தாலும், இது ஒரு decent-ஆன படம். எந்த vulgarity-யும் இல்லாமல், யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் தேவையில்லாத கருத்துக்களை முன்வைக்காமல், ஒரு Customs Officer-ன் பார்வையில் நாட்டிற்கு தேவையான சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறார். இது மிகவும் முக்கியமான விஷயம். ஏனென்றால் ஒரு Director என்பவர் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை இருக்கும்போது, அதைப் பயன்படுத்தாமல், smuggling என்பது ஒரு நாட்டை எப்படி பாதிக்கிறது, மனிதர்களை எப்படி பாதிக்கிறது என்பதைப் பற்றி மிகவும் தெளிவாகவும் நிதானமாகவும் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்.
அதற்காக இயக்குனர் மற்றும் எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள். இன்னும் சில விஷயங்களை சரி செய்திருக்கலாம். ஆனால், அதை அடுத்தடுத்த படங்களில் நிச்சயமாக சரி செய்வார் என்று நம்பலாம். மொத்தத்தில், இது ஒரு decent-ஆன debut. Editing-ஐப் பொறுத்தவரைக்கும், கதை ஆரம்பித்தவுடன் தேவையில்லாமல் wait செய்யாமல், நேரடியாக கதைக்குள் சென்று, கதையை அழகாக சொல்லி, முடிந்த அளவுக்கு speed-ஆக கொண்டு வந்து ஒரு conclusion-க்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவும் பாராட்டத்தக்க ஒரு விஷயம். Free time இருந்தால் இந்தப் படத்தை போய் பார்க்கலாம். இது ஒரு மோசமான commercial entertainer கிடையாது. பெண்களை உருவகப்படுத்தி கேலி செய்வது, சாதி ரீதியாக யாரையும் மட்டம் தட்டுவது, தேவையில்லாமல் துப்பாக்கி மற்றும் violence-ஐ வைத்து audience-ஐ மிரட்டுவது போன்ற விஷயங்கள் எதுவும் இல்லாமல், ஒரு நேர்மையான படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதை audience பார்த்து ரசிக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கமாக இருந்திருக்கிறது. அந்த நேர்மைக்காக படக்குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் சில விஷயங்களை better-ஆக செய்ய வேண்டியிருக்கிறது. குறிப்பாக Screenplay மிகவும் முக்கியம். அதை அடுத்தடுத்த படங்களில் நிச்சயமாக இன்னும் better-ஆக செய்வார் என்று எதிர்பார்க்கலாம். இந்த முயற்சிக்கு உண்மையிலேயே மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை ஒரு debut director-ன் முதல் முயற்சி என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும். எந்த பெரிய அனுபவமும் இல்லாமல், யாரிடமும் கற்றுக்கொள்ளாமல், இவ்வளவு தூரம் ஒரு படத்தை எடுத்துச் சென்று represent செய்திருப்பது பாராட்டத்தக்கது. இப்படிப்பட்ட புதிய முயற்சிகளை நாம் வரவேற்க வேண்டும்.
மேலும், படக்குழுவில் இருக்கும் அனைவரையும் எந்தக் குறையும் வைக்காமல், Artist முதல் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் வரை அனைவரையும் comfortable-ஆக வேலை செய்ய வைத்திருக்கிறார்கள் என்பதும் பாராட்ட வேண்டிய விஷயம். இப்படிப்பட்ட மனிதர்கள் நம்முடைய Cinema-விற்கு மிகவும் தேவை. இந்த முயற்சியில் இருந்து இன்னும் நிறைய கற்றுக்கொண்டு, தொடர்ந்து பல நல்ல படங்களை அவர் எடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மொத்தத்தில், சில குறைகள் இருந்தாலும், ஒரு புதிய முயற்சியாகவும், ஒரு debut director-ன் sincere attempt-ஆகவும் இந்தப் படத்தை வரவேற்கலாம்.





Comments