கொண்டான் கொடுத்தான்
என்னதான் சீரியல் காலமாய் இருந்தால் குடும்ப உறவு, செண்டிமெண்ட் படங்களுக்கு ஒரு மார்கெட் இருக்கத்தான் செய்கிறது. எல்லோரும் அடிதடி, குத்து வெட்டு, காதல் என்றிருந்த காலத்தில் சத்தமில்லாமல் வந்த மாயாண்டி குடும்பத்தார் பிழிய பிழிய செண்டிமெண்டை கொடுத்தாலும், பி, சி செண்டர்களில் நல்ல வசூல் தந்ததால் கொண்டான் கொடுத்தான் சாத்தியமாகியிருக்கிறது.
வெளுத்துக்கட்டு நாயகன் கதிருக்க நல்ல கேரக்டர். பல இடங்களில் கதையை நகர்த்திக் கொண்டு போக வேண்டிய இடத்தில் நன்றாக செய்திருக்கிறார். இயல்பாக நடிக்கிறார். பெரிய ஸ்கோப்பில்லாவிட்டாலும் நிறைவான பர்பாமென்ஸ். இவருக்கும் அத்வைத்தாவுக்குமான ஆன்ஸ்கீரின் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது.
பாடல்களை கேட்டதும் ரொம்பவும் கேட்ட, ஆனாலும் இனிமையான பாடல்களாய் தோன்றியது. யாரு இசையமைப்பாளர் என்று பார்த்தால் நம்ம தேவா. எஸ்.பி.பி. நா.முத்துகுமார், காம்பினேஷனில் வரும் தஞ்சாவூரு கோபுரம் அழகு நிஜமாவே அழகு. குத்துப்பாட்டு அட்டகாசம். தேவா பஞ்ச்.

ஒளிப்பதிவு இயக்கும் ராஜேந்திரன். இவர் வி.சேகரின் படங்களுக்கு ஒளிப்பதிவாளராய் பணியாற்றியவர். இவரது படமும், அதே ஜெனரில் குறைந்த பட்ஜெட்டில் சுமார்25 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட படம். வழக்கமான குடும்ப செண்டிமெண்ட் படம் தான் என்றாலும், செண்டிமெண்ட், காமெடி என்று பி, சி ஆடியன்ஸை மனதில் வைத்து அடித்த அடி சரியாகத்தான் வந்திருக்கிறது.
வழக்கமான தமிழ் சினிமா க்ளீஷேக்கள் அத்துனையும் ஒருங்கே ஒரே படத்தில் பார்க்க வேண்டுமென்றால் இப்படத்தில் பார்க்கலாம். குடும்பபாட்டு, இரண்டு காதல், டூயட், டெம்ப்ளேட் குடும்ப உறவுகளிடையேயான வில்லன், வளவளவென எல்லோரும் மொத்த கதையும் நகர்த்துவதற்காக மாய்ந்து, மாய்ந்து பேசிக் கொண்டேயிருப்பது. வெகு சப்பையான காரணத்தை வைத்துக் கொண்டு கதையை சுவாரஸ்படுத்த பில்டப் கொடுத்தே இழுப்பது. க்ளைமாக்ஸில் ஏதாவது ஒரு ப்ரச்சனையை வைத்து அழுவாச்சியாய் முடிப்பது போன்ற பல டெம்ப்ளேட்டுகளின் ஒட்டு மொத்த கலவைத்தான். இந்த கொண்டான் கொடுத்தான்.
கேபிள் சங்கர்
Comments
நல்ல வரி!
http://www.youtube.com/watch?v=CzWmcq24yj4