Thottal Thodarum

Mar 12, 2012

கொத்து பரோட்டா - 12/03/12

சென்ற வாரம் பாண்டியில் கருணாஸ் நடிக்கும் சந்தமாமா படத்தில் பல வருஷங்களுக்கு பிறகு நடிக்கப் போனதால் கொத்து பரோட்டா எழுத முடியவில்லை. அதற்காக தொலைபேசியிலும், மெயிலிலும், டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் துக்கம் விசாரித்தும்,அப்பாடி வரவில்லை என்று சந்தோஷப்பட்டவர்களுக்கும் நன்றி. இதை சொன்னதுக்கு அரைப் பெடல் அடித்துக் கொண்டு யாராவது ஒருவர் ஒயர் பிஞ்சு போச்சு என பின்னூட்டமிடுவார் அவருக்கும் என் நன்றிகள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


பாண்டிச்சேரியிலும் வெய்யில் கொளுத்துகிறது. தானே புயலுக்கு என்ன செய்தீர்கள்? ஷூட்டிங் எடுக்க மட்டும் வந்துவிடுகிறீர்களே என்று ஒரு மாணவர் அணி கும்பல் ஒன்று படப்பிடிப்பை நடத்த விடாமல் சரியாய் லஞ்ச் டயத்தில் போராடியது. ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு, சாப்பிடப் போய்விட்டார்கள். தினசரிகளில் எல்லாம் செய்தி வந்தது. இலவச பப்ளிசிட்டி 
###################################
பாண்டியில் திருட்டு டிவிடி மிக அநியாயமாய் கிடைக்கிறது. அரவான் ரிலிசாகி ரெண்டாவது நாள் பப்ளிக்காய் மார்கெட்டில் கூவிக் கூவி விற்கிறார்கள். பெரும்பாலான ப்ரிண்டுகள் கேமரா ப்ரிண்டுகளாகவே இருக்கிறது. இல்லாவிட்டால் படமேயில்லாத வெறும் சிடியைக் கவர் போட்டுக் கொடுக்கிறார்கள். இவர்களை விட நல்ல ப்ரிண்டுகள், நல்ல தரத்துடன் சென்னையிலேயே சல்லீசாய் கிடைக்கிறது. இதை ஒழிக்காமல் சினிமா விளங்காது என்பது நிதர்சனம். இருப்பதிலேயே நல்ல தரமான ஒலி ஒளியுடன், டால்பி டிஜிட்டல் ப்ரிண்ட்கள், பலான பட டிவிடிக்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது. நான் வாங்கிய மூன்று சினிமா படங்களின் ப்ரிண்டுகளும் திராபை. ஒன்றைத் தவிர. எனக்கொரு சந்தேகம் எல்லோரும் ஏன் எப்போது சாக்ஸ் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
படங்களின் ப்ரோமோவுக்கு எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று ஆளாளுக்கு இந்தியாவெங்கும் பரபரத்துக் கொண்டிருக்க, ஒரு போஸ்டர் வட இந்தியாவை திரும்பப்பார்க்க வைத்திருக்கிறது. பூஜாபட் இயக்கத்தில் எடுக்கப்படவிருக்கும் ஜிஸ்ம் 2 என்கிற இந்தி படத்திற்குத்தான் இவ்வளவு பரபரப்பு. உடலில் பொட்டுத்துணியில்லாமல், ஒரு மெல்லிய ஈர வெண்நிற துணியில் மூடிய உடல் தான் போஸ்டர் மாடல். கிட்டத்தட்ட போர்ன் பட டிசைன் போல் இருக்கிறது. ஜிஸ்ம் மெச்சூர்டான காதல் கதை எனும் பூஜாபட். ஜிஸ்ம்2 இன்னும் பண்பட்ட காதல் கதை என்கிறார். இப்படத்தில் நடிக்கவிருக்கும் சன்னி லியோன் ஒரு போர்ன் ஸ்டார்.
####################################
சல்லிசான சரக்குக்காக இங்கிருந்து பாண்டி போய்வந்தவர்கள் இனி விரைவில் குறைந்து விடுவார்கள். ஏனென்றால் அங்கேயும் இங்கேயும் பத்திலிருந்து பதினைந்து ரூபாய் தான் வித்யாசம். ஒன்லி குவாலிட்டிக்கு முக்யத்துவம் கொடுப்பவர்கள் மட்டும் விலையைப் பற்றி யோசிக்காமல் பலவிதமான சரக்குகளை வாங்கிக் கொள்கிறார்கள். வழியில் பெரும்பாலும் யாரும் எதையும் செக் செய்வதில்லை. அதுவும் விலை ஏறியதால் யாரும் மொத்தமாய் வாங்கிப் போவதில்லையாம். கடைக்காரர் சொன்னார்கள். ஆனாலும் நல்ல டேஸ்டியான, குவாலிட்டியான, கலப்படமில்லாத சரக்கை கொடுப்பதால் குடி வெறியர்களுக்கு கொண்டாட்டம் தான். எனக்கில்லை. அங்கேயும் நம்மூர்க்காரர்களைப் பார்த்தால் எம்.ஆர்.பிக்கு அதிகமாய் சொல்கிறார்கள். நான் அங்கேயும் போய் கேட்டால் கிடைக்கும் என்ற தைரியத்தில் கேட்க, 55 சொன்ன பீர் ஒரிஜினல் விலை 50 ரூபாய்க்கு கிடைத்தது. அங்கேயும் கேட்டேன் சரியான விலையில் கிடைத்தது.
######################################
வர வர தமிழ்நாட்டில் மாணவர்களுடன் ஓடிப் போகும் டீச்சர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஓடிப் போனதற்கு பிறகு போலீசார் விசாரணையில் இருவரும் காதலித்துக் கொண்டிருந்ததாகவும், யாரோ ஒருவரின் வீட்டில் தெரிந்துவிட்டதால் ஓடிப்போய் விட்டதாகவும் சொல்கிறார்கள். இதை எப்படி காதல் என்று சொல்ல முடியும் என்ற கேள்வி எழாமல் இல்லை. என்னதான் சச்சின், காந்தி என்று உட்டாலக்கடி காரணங்கள் சொல்லி ஜல்லியடித்தாலும்,  எனக்கென்னவோ ஆதீத செக்ஸுவல் ஸ்ட்ரெஸ் என்றே தோன்றுகிறது. முப்பதுகளில் இருக்கும் பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய செக்‌ஷுவல் வெளிப்பாடு, கிடைக்காததினாலும், இருபது வயது இளைஞனின் ஆக்ரோஷமான செயல்பாடுடைய தேடலும் தான் இதற்கு காரண்ம் என்று தோன்றுகிறது. முப்பது நாளில் அலுத்துப் போய் திரும்பி விடுவார்கள். வீணாக போலீஸ் அது இது என்று அலைய வேண்டாமென்று அவர்கள் பெற்றோர்களுக்கு சொல்ல வேண்டும் போல இருந்தது. பேப்பருக்கு நியூஸும், போலீஸுக்கு இன்னொரு கேஸ் என்பதைத் தவிர பெரிய இம்பாக்டை ஏற்படுத்தாது என்று தோன்றுகிறது.
###################################
இந்தியா டுடேவில் தெர்மக்கோல் தேவதைகள் புத்தகத்திற்கான விமர்சனம் வந்திருக்கிறது. “வலைப்பதிவுலகில் கேபிள் சங்கர் என பிரபலமாகியிருக்கும் சங்கர் நாராயணனின் சிறுகதை தொகுப்பு. வாசகர்களை துன்புறுத்தாத- அல்லது -சிந்திக்க வைக்கும் வேலை எதையும் செய்ய முனையாத எளிமையான கதைகள். காமன் மினிமம் சுவாரஸ்யம் கியாரண்டி என்றிருக்கிறார்கள். மகிழ்ச்சி. சிந்தனையைத் தூண்ட நான் என்ன இலக்கியவாதியா என்ன? வாசகர்களை துன்புறுத்தாத என்றிருக்கிறார்கள். பாவம் இதை எழுதியவர் வேறேந்த புத்தகத்தை படித்து துன்புற்றிருந்தால் இப்படி எழுதியிருப்பார்?ஆனால் சுவாரஸ்யத்திற்கு மினிமம் கியாரண்டி கொடுத்திருப்பது தான் புத்தகம் விற்பதற்கான நல்ல விமர்சனம். நன்றி இந்தியா டுடே.
#######################################
என்ன தான் தாத்தாவை பல சமயங்களில் ஆதரித்தாலும், இலங்கை தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் செய்த அட்டூழியங்களை கொண்ட வீடியோவைப் பார்த்து கண்ணீர் வழிந்தோடுகிறது என்று அறிக்கை விட்டிருப்பது இருக்கிற மரியாதையை குறைப்பது போலத்தானிருக்கிறது. யாராவது கேட்டார்களா? திடீரென இம்மாதிரி அறிக்கைகள் தான் தாத்தாவின் மனநிலையை கேள்விக்குறியாக்கும் விஷயங்களாய் படுகிறது.  வீடியோ ஒன்று வந்ததே இப்போதுதான் அவருக்கு தெரியுமா? இனி காங்கிரஸுக்கு சொம்படித்து பிரயோசனமில்லை என்பதால் அறிககி மற்றும் அந்த வீடியோவெல்லாம் கலைஞர் தொலைக்காட்சியில் போடுகிறார்கள். இவர்கள் டிவியும் இவரைப் போலத்தானிருக்கிறது. என்ன கொடுமைடா இது.
####################################
அன்புமணி ராமதாஸ் சமீப காலமாய் தான் படித்தவன், படித்தவர்கள் அரசியலுக்கு வந்திருக்கும் போது அவர்களை ஆதரிக்காமல் சினிமாக்காரர்களை 40 வருடங்களுக்கு மேலாக ஆதரித்துக் கொண்டிருப்பது அநியாயம் என்று பேசியிருக்கிறார். இவருடய அப்பா மிகவும் கஷ்டப்பட்டு டாக்டருக்கு படித்ததாகவும், தான் அப்படியில்லாமல் சுகமாய் படித்து வந்ததாகவும் சொல்லியிருக்கிறார். இரண்டு ரூபாய்க்கும் மூன்று ரூபாய்க்கும் மருத்துவம் பார்த்தே பல நூறு கோடிகளுக்கு அதிபதியாய் இருக்கும் பெரிய டாக்டரைப் பார்த்தும் எப்படி படிச்சவங்களுக்கு ஓட்டுப் போடுவாங்க மக்கள்.  வாரா வாரம் அறிக்கை விடறதோட சரி. டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போடப் போறேன்னு அறிக்கை விட்டுட்டே ஆறு மாசம் ஆவப் போவுது. இது வரைக்கும் பூட்டே கிடைக்காம அல்லாடுறாரா? சினிமாக் காரங்களை எதிர்க்கிறதுனால தாங்கள் கவனிக்கப் படுகிறோம் என்பதை புரிந்து கொண்டு மூணு மாசத்திற்கு ஒரு முறை அவங்களை திட்டுறாங்க. சினிமாவே இல்லாது இருந்த மக்கள் டிவில, உலகப் படம் போடுறாய்ங்க.. ஏன் அதுகூட இல்லாம தமிழ் வளர்க்கலாமே?. அவங்க கட்சிக்காரங்க படமெடுக்கிறாய்ங்களே அதை என்ன செய்வாங்க? அவங்க கட்சிக்காரங்க சரக்க்டிச்சிட்டு பண்ற அலும்புகளை வீடியோ எடுத்து போட்டுக் காட்டினா? எங்க போய் மூஞ்சிய வச்சிப்பாங்க? படிச்சவன்.. படிச்சவன்னு பொலம்பி பிரயோசனமில்லை. படிச்சவனாட்டம் நடந்துக்கணும். அப்பத்தான் நம்புவாய்ங்க..
######################################
குறும்படம்
இந்தப் படத்தைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருப்பீர்கள். கொத்து பரோட்டாவில் கூட பகிர்ந்திருக்கிறேன். மிக சுவாரஸ்யமான திருப்பத்துடனான ஃபீல் குட் குறும்படம். ஆனால் இந்தக் குறும்படத்தை பற்றி சொல்வதற்காக இதை எழுதவில்லை. காதலில் சொதப்புவது எப்படி? பாலாஜி மூன்றாவதாக வந்த நாளைய இயக்குனர் முதல் எபிசோடில் இரண்டாவது இடம் பிடித்தவர் இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ். கமர்ஷியல் சினிமாவில் நிச்சயம் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கக்கூடிய திறமையானவர்களில் இவரும் ஒருவர். விரைவில் இவரது இயக்கத்தில் "Pizza" என்கிற திரைப்படம் வெளிவர இருக்கிறது. அதற்கு சாம்பிள் தான் இந்தப் படம். வாழ்த்துக்கள் கார்த்திக்.
##########################################
செவிக்கினிமை
டி. ராஜேந்தர் போல ஒரு பத்து ட்யூன்களை மட்டுமே வைத்து பத்து வருஷத்துக்கு மேலாக ஹிட்டடித்துக் கொண்டிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இன்னும் கொஞ்சம் காலம் தள்ள வேண்டுமானால் புதிதாய் பத்து ட்யூன்களை எடுத்தாள வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டார் என்பதை ஒரு கல் ஒரு கண்ணாடி படப் பாடல்கள் மீண்டும் மீண்டும் நிருபிக்கிறது. சமுராயின் பாடலொன்றை மீண்டும் அழகே அழகே என்று சக்கை பிழிந்திருக்கிறார். வேணாம் மச்சான் கூட ஏற்கனவே ஒரு விஷால் படத்தில் போட்ட பங்கனப்பள்ளி என வருமென்று நினைக்கிறேன் அந்தப் பாடலின் ரிப்ளிக்காதான். இன்னும் கொஞ்சம் உத்துக் கேட்டால் எல்லா பாடல்களும் கேட்ட, ஏற்கனவே ஹாரிஸ் போட்ட பாடல்களை லிஸ்ட் போட்டுவிடலாம்.  ஒரு வேளை ஏற்கனவே கேட்ட பாடல்களாய் இருப்பதால் ஈஸியாய் ஹிட்டாக்கிவிடலாம் என்று நினைக்கிறாரோ..?

சமீபத்தில் கேட்ட பாடல்களில் அட்டக்கத்தி படத்தில் சந்தோஷ் சுப்ரமணியனின் இசையில் “ஆசை ஒரு புல்வெளி” என்றொரு ஸூத்திங் மெலடி இருக்கிறது. சிம்பிளான ட்யூனில் தாளம் போட வைக்கும், ஹாண்டிங் பாடல். பாடலின் நடுவிலும், முடிவில் வரும் புல்லாங்குழல் அழகு.
#########################################
எக்ஸ்பட்டேஷன் மீட்டர்
எவ்வளவோ படங்கள் வாரா வாரம் ரிலீஸாகிறது. ஆனால் ஒரு சில படங்களுக்கு மட்டும் மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. பெரிய நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் விதிவிலக்கு. ஆனால் சின்ன படங்களுக்கு கூட இம்மாதிரியான எதிர்பார்ப்புகள் ஏற்படத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட சில படங்களை இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்தி உங்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதில் என்னாலான ஒரு சிறு தொண்டு . இந்தப் படங்களை நான் ஏற்கனவே  வியாபாரரீதியான காட்சிகளில் பார்த்துவிட்டபடியால் என் கருத்தை சொல்கிறேன். அவ்வகையில் சமீபத்தில் பார்த்த படம் “ராட்டினம்” அருமையான காதல் கதை. நிச்சயம் வரண்டிருக்கும் தமிழ் சினிமா சின்ன பட்ஜெட் படங்களில் ஒரு கருப்பு குதிரையாகப் போகும் வாய்ப்புள்ள படம். 
#########################################
ப்ளாஷ்பேக்
மீண்டும் மொட்டையின் இசையில் வந்த பாடல் தான். மணிரத்னத்தின் முதல் படமான பல்லவி அனுபல்லவி என்கிற கன்னடப்படத்திலிருந்து ஒரு அற்புதமான மெலடி. பாடலின் முதலில் ஹம்மிங் ஆரம்பித்ததும் ப்ரீலூடாக வரும் வயலின் மேகங்களை தாண்டி வரும் எஸ்.பி.பியின் ஹாண்டிங் குரலும், கூடவே வரும் கிடாரும்.. வாவ்.. இசை ஒரு போதைன்னு சொன்னவன் ஞானிடா..
###################################
அடல்ட் கார்னர்
புதிதாய் திருமணமான கணவன் மனைவியிடம், இதோ பார் நான் ரொம்பவும் ஸ்ட்ரிக்ட். தினமும் நான் குளிப்பதற்கு வெந்நீர் போட வேண்டும். தினப்படி சாப்பாடு என் டேஸ்டுக்கு என்னிடம் லிஸ்ட் கேட்டுவிட்டுத்தான் செய்ய வேண்டும். நான் எப்போது கூப்பிட்டாலும் வெளியே போக தயாராக இருக்க வேண்டும். நான் என் நண்பர்களுடன் நினைத்த நேரத்தில் வெளியே போவதை பற்றி ஏதும் கேட்கக்கூடாது. சில சமயம அவர்களுடன் தண்ணியடித்துவிட்டு வந்தால அதைப் பற்றி கண்டு கொள்ள கூடாது. நான் நினைச்ச நேரத்துக்கு வீட்டிற்கு வருவேன் போவேன். என்ன புரியுதா?’ என்றான். மனைவி ஏதும் ரியாக்‌ஷன் காட்டாமல் ‘ ஒன்றும் ப்ரச்சனையில்லை. ஆனால் ஒரு விஷயம் நான் உன்னிடம் சொல்லிவிடுகிறேன். தினமும் மாலை ஏழு மணி முதல் எனக்கு செக்ஸ் வேண்டும். நீ இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை இப்பவே சொல்லிடறேன்.” என்றாள்.
கேபிள் சங்கர்

Post a Comment

31 comments:

Lakshman said...

Kindly listen to Harmonize Projekt in youtube which comprises of Pradeep, Kalyani Nair etc. who performed the above Attakathi song... Serious talent..

Philosophy Prabhakaran said...

படம் வெளியாகி இரண்டாவது நாளே கிடைக்கும் கேமரா ப்ரிண்டுகளை நான் ஒருபோதும் விரும்புவதில்லை... பெரும்பாலானவர்கள் இப்படித்தான்... பார்த்தால் தியேட்டர்... இல்லையெனில் பார்ப்பதே இல்லை...

வவ்வால் said...

கேபிள்,
புதுவையிலும் ஒரு 15 நாட்களாக விலை ஏத்தீடாங்க,அது மலிவு விலை மது குடிப்பவர்களையே பாதிக்கும், நல்ல சரக்கு தமிழ்நாட்டில் விலை அதிகமாக இருப்பது அங்கே கட்டுப்படியான விலையில் இருக்கும்.

புதுவையிலும் கலப்படம் எல்லாம் உண்டு 1/4 வாங்கினால் பெரும்பாலும் அப்படி டூப்ளிகேட் ஆக இருக்க வாய்ப்புண்டு,(பார்டர் கடைகளில் நிறைய கலப்ப்பட சரக்கே ) 1/2 அல்லது ஃபுல்லாக வாங்குவதே நல்லது.எம்.சி வாங்கி மோந்து பாருங்க புதுவையின் தரம் தெரியும் :-)) மேலும் புதுவைக்குனே இருக்கும் சில சரக்குகளான ஆப்பிசர் சாய்ஸ், பஞ்ச், ஒன் அப், ஜெப்ரிஸ் னு இருக்கிற சரக்கை எல்லாம் மோந்து பார்த்தாலே வாந்தி வந்துடும் :-))

புதுவையில் வைன்ஸ் அப்புறம் வைன்ஸ் & பார் னு இரண்டு விதமாக கடைகள் உண்டு, பார் என போட்டு இருக்கும் கடையில் விலை அதிகமாக இருக்கும், வைன்ஸ் என்ற கடையில் கேஷ்& கேரி தான் அமர்ந்து குடிக்க இடம் இருக்காது விலை குறைவாக இருக்கும். ஹோல் சேல், ரிடெயில் என்று சொல்வார்கள் , ஆனந்தா ஹோட்டல் அருகில் நிறைய இருக்கு.ஒரு பீர் பாரை விட 7 ரூ கம்மியாக கொடுப்பாங்க.

பார்னு போட்டு இருக்கும் வைன் ஷாப்பிலா விலையை குறைக்க சொல்லிக்கேட்டிங்க? அவங்க குறைக்க மாட்டான்ங்களே.

ஓ.கே, புதுவைல கேட்டா கிடைச்சுது, எங்கே தமிழ் நாட்டில ஒரு 1/4 அல்லது பீர் அஹ் எம்.ஆர்.பிக்கு வாங்கிக்காட்டுங்க பார்ப்போம்?

thiyaa said...

super

shortfilmindia.com said...

//ஓ.கே, புதுவைல கேட்டா கிடைச்சுது, எங்கே தமிழ் நாட்டில ஒரு 1/4 அல்லது பீர் அஹ் எம்.ஆர்.பிக்கு வாங்கிக்காட்டுங்க பார்ப்போம்?//

இன்று வரை நான் எம்.ஆர்.பிக்கு மேல் கொடுத்ததில்லை. என்னுடன் வரும் நண்பர்களுக்கு தெரியும்.

Babu said...

Harris jeyaraj mela en sir ivlo vayitherichal... avar ondrum sirpi pola vishayam illadhavar illai..copy paste seirathukkum oru thiramai vendum.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை :-)))

Jayaprakash said...

information is nice:)

மாயவரத்தான் said...

//ஓ.கே, புதுவைல கேட்டா கிடைச்சுது, எங்கே தமிழ் நாட்டில ஒரு 1/4 அல்லது பீர் அஹ் எம்.ஆர்.பிக்கு வாங்கிக்காட்டுங்க பார்ப்போம்?//

நான் எம்.ஆர்.பி.க்கு தான் வாங்குகிறேன். வாங்குவேன். வேணும்னா மதுரைக்கு வாங்க ஒரு தபா. எப்படி எம்.ஆர்.பி.க்கு கேட்டு வாங்கணும்னு டெமோ காட்டுறேன். ;)

பிரபல பதிவர் said...

நானும் பிரபல பதிவரும்

நேற்று ஒரு போன் வந்தது.... நான் நன்றாக எழுதுவதாகவும் ஜாக்கியை கலாய்ப்பதாகவும் பேசினார்கள்...
எனக்கு ஒன்றும் புரியவில்லை.. இருந்தாலும் பேசி விட்டு வைத்தேன்...

இன்று காலை கூகுளாண்டவரிடம் செக் செய்த போதுதான் தெரிந்தது பிரபல பதிவர் என்ற பெயரில் ஜாக்கியின் ஸ்பூஃப் சைட் ஒன்று இருக்கிறது.... நான் அவன் இல்லை.... என்று தெரிவித்துக் கொள்கிறேன்...

பதிவு எழுதவே நேரம் இல்லை... இதுல இன்னொருத்தர் எழுதுறத கலாய்த்து எழுத வேண்டுமா???

கோவி.கண்ணன் said...

//என்றொரு ஸூத்திங் மெலடி இருக்கிறது.//

சூத்திங்க் :)

அட சாக்ஸ் மேட்டர் எழுதுன உங்களுக்கு 'சூ' மேல அவ்வளோ கூச்சமா ?
:)

Shan said...

He is not Harris Jeyaraj. He is Harris xeroxraj

Cable சங்கர் said...

Soothing இதை ஸூ என்று எழுதினால் தான் சரியான உச்சரிப்பு வருகிறது எனக்கு.

சமுத்ரா said...

good...

rajamelaiyur said...

//பெரும்பாலான ப்ரிண்டுகள் கேமரா ப்ரிண்டுகளாகவே இருக்கிறது. இல்லாவிட்டால் படமேயில்லாத வெறும் சிடியைக் கவர் போட்டுக் கொடுக்கிறார்கள்.
//

பலமுறை திருச்சி மலைகோட்டையில் இதுபோல ஏமாந்து உள்ளேன்

Uma Gandhi said...

வாழ்த்துகள் சங்கர் சார், மிக அருமையான பதிவு

keyven said...

//எனக்கொரு சந்தேகம் எல்லோரும் ஏன் எப்போது சாக்ஸ் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்?//

அது சாக்ஸ் இல்ல...stockings ..எல்லாம் ஒரு புளிப்புக்காக..மேலும்..ஹை ஹில் செருப்புகளுடன்....வேறு...முக்கால் வாசி நடிப்பு தான்...ரியல் ஒன்றும் இல்லை...

CS. Mohan Kumar said...

This time so many matters. May be to cover the missed out last week also

குரங்குபெடல் said...

வவ்வால் said...

ஓ.கே, புதுவைல கேட்டா கிடைச்சுது, எங்கே தமிழ் நாட்டில ஒரு 1/4 அல்லது பீர் அஹ் எம்.ஆர்.பிக்கு வாங்கிக்காட்டுங்க பார்ப்போம்?


shortfilmindia.com said...
இன்று வரை நான் எம்.ஆர்.பிக்கு மேல் கொடுத்ததில்லை. என்னுடன் வரும் நண்பர்களுக்கு தெரியும்.

மாயவரத்தான்.... said...

நான் எம்.ஆர்.பி.க்கு தான் வாங்குகிறேன். வாங்குவேன். வேணும்னா மதுரைக்கு வாங்க ஒரு தபா. எப்படி எம்.ஆர்.பி.க்கு கேட்டு வாங்கணும்னு டெமோ காட்டுறேன். ;)


"அருமையான" விவாதம் . . .

continue பண்ணுனா இன்னுமொரு புக் ரெடி


நன்றியுடன்


half பெடல் அடிப்பவன்

Marc said...

நல்ல கலவை பதிவு.

shortfilmindia.com said...

//அது சாக்ஸ் இல்ல...stockings ..எல்லாம் ஒரு புளிப்புக்காக..மேலும்..ஹை ஹில் செருப்புகளுடன்....வேறு...முக்கால் வாசி நடிப்பு தான்...ரியல் ஒன்றும் இல்லை...//

நிஜமாகவே என்னை ரொம்ப நல்லவன்னுநம்பி பதிலெல்லாம் சொல்லியிருக்காங்கப்பா.. :)

வவ்வால் said...

கேபிள்,

சரக்கு மேட்டர் கவனத்தை முதலில் இழுத்துவிட்டது:-))

நீங்க சென்னையிலவே எம்.ஆர்.பிக்கு வாங்கினால் பெரிய ஆள் தான், நான் அப்படி கேட்கப்போய் சாவுகிராக்கினு பாராட்டு பெற்றேன் :-))

அவர்கள் தரப்பு நியாயமாக சொன்னது,

குறைவான சம்பளம், அதிக வேலை நேரம்

*சரக்கு குடோனில் இருந்த்உ எடுக்க இன்டெண்ட் கொடுக்கும் போது லஞ்சம் கொடுக்க வேண்டும்.

*செக்கிங் என வரும் அதிகாரிகளை கவனிக்க வேண்டும்

*உடைந்த சரக்கு பாட்டிலுக்கும் இவர்கள் பணம் கட்ட வேண்டும்

இதெல்லாம் நான் பேசியபோது வந்தவை ,அதற்குள் மத்த குடிமகன்களே என்னை வந்துட்டாரு லார்டு என விரட்ட ஆரம்பித்து விட்டார்கள்

***

மாயவரத்துல இருந்து மதுரைக்கு போய் சரக்கடிக்ப்பீங்களா :-))

***

சரி கேட்டால் கிடைக்குமுக்கு ஒரு வேலை, சென்னை எக்மோரில் ஆல்பர்ட்தியேட்டர் அடுத்தே ஒரு பார் இருக்கு அங்கே , டேபிள்,சேர் போட்டு இருக்கும் இடத்தில் உட்காரந்து சரக்கடிக்கவே 10 ரூ/மணி,இத்தனைக்கும் ஏசி இல்லை, ஏசிக்கு ஒரு மணிக்கு 30 ரூ. சரக்கும் எம்.ஆர்.பி யில் கிடைக்காது. கேட்டால் கிடைக்கும் அங்கே செல்லுபடியாகிறதா எனக்கேட்டுப்பாருங்கள் :-))

---------

// பெரும்பாலான ப்ரிண்டுகள் கேமரா ப்ரிண்டுகளாகவே இருக்கிறது. இல்லாவிட்டால் படமேயில்லாத வெறும் சிடியைக் கவர் போட்டுக் கொடுக்கிறார்கள். இவர்களை விட நல்ல ப்ரிண்டுகள், நல்ல தரத்துடன் சென்னையிலேயே சல்லீசாய் கிடைக்கிறது.//

வெறும் சிடியவே கொடுக்கிறாங்கன்னா உங்களை தெளிவா புரிஞ்சுக்கிட்டான்னு அர்த்தம் :-))

கேமரா பிரிண்ட் விட கொஞ்சம் நல்லதாக திருட்டு விசிடி போன்ற இணைய தள பிரின்ட் தானே விற்பாங்க. நெட் பிரிண்டா ,ஒரிஜினலா என கேட்டு வாங்குவார்கள்.படம் வந்ததும் நெட் பிரிண்டும், ஒரு 10 நாள் போச்சுனா ஒரிஜினல் பிரிண்டும் கிடைக்கும்.20 ரூ தான்(வழக்கமானவர்கள் என்றால் 15க்கே கிடைக்கும்) சென்னையில் 20 க்கு எல்லாருக்கும் கிடைக்காதே.மேலும் சென்னைக்கு பாண்டியில் இருந்து தான் அதிகம் சப்ளை ஆகிறது.

// ஒன்றைத் தவிர. எனக்கொரு சந்தேகம் எல்லோரும் ஏன் எப்போது சாக்ஸ் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்?//

சாக்ஸோ, ஸ்டாக்கின்ஸோ , ஆனால் ஹை ஹீல்ஸ் கூட கழட்டமாட்டேன்கிறார்கள் :-)) இப்போ அமெரிக்காவில வேலை நிறுத்தம் செய்றாங்க, ஆணுரை கட்டாயம்னு சட்டம் போட்டதாலா!

வள்ளி நாயகம் said...
This comment has been removed by the author.
Anonymask said...

// பாண்டிச்சேரியிலும் வெய்யில் கொளுத்துகிறது. தானே புயலுக்கு என்ன செய்தீர்கள்? ஷூட்டிங் எடுக்க மட்டும் வந்துவிடுகிறீர்களே என்று ஒரு மாணவர் அணி கும்பல் ஒன்று படப்பிடிப்பை நடத்த விடாமல் சரியாய் லஞ்ச் டயத்தில் போராடியது. ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு, சாப்பிடப் போய்விட்டார்கள். தினசரிகளில் எல்லாம் செய்தி வந்தது. இலவச பப்ளிசிட்டி //

நீங்க மட்டும் நாட்டைத் திருத்துறேன் பேர்வழின்னு லஞ்சத்த ஒழி அதைக் கிழி இதைக் கிழின்னு பைசா பெறாத பிளாக்கில கூச்சல் போடலாம். சமூக நோக்கோட அவங்க கிளம்பி வந்து கேள்வி கேக்க கூடாதா? டொனேஷன் குடுத்துட்டு வந்திருக்கலாமே? யாரோ கத்தினாங்க.. நாங்க பொருட்படுத்தவே இல்ல.. ஜாலியா சாப்பிட்டுக்கிட்டிருந்தோம் ஹி ஹி..ன்னு பதிவு போடறீங்களே?

-ASG

ஜி.ராஜ்மோகன் said...

தலைவா ,
உங்களுக்கு பின்னூட்டம் போட்டு ரொம்ப நாளாச்சு . ஆனா தொடர்ந்து உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன் .உங்கள் பதிவுகளை படிப்பது என்னவோ ஒரு பழக்கமாகவே ஆகி விட்டது . மற்ற படி கொத்து பரோட்டா சரக்கு அடிச்சமாதிரி சூ சூ சூ பப்பப் ர்ர்.

Cable சங்கர் said...

//நீங்க மட்டும் நாட்டைத் திருத்துறேன் பேர்வழின்னு லஞ்சத்த ஒழி அதைக் கிழி இதைக் கிழின்னு பைசா பெறாத பிளாக்கில கூச்சல் போடலாம். சமூக நோக்கோட அவங்க கிளம்பி வந்து கேள்வி கேக்க கூடாதா? டொனேஷன் குடுத்துட்டு வந்திருக்கலாமே? யாரோ கத்தினாங்க.. நாங்க பொருட்படுத்தவே இல்ல.. ஜாலியா சாப்பிட்டுக்கிட்டிருந்தோம் ஹி ஹி..ன்னு பதிவு போடறீங்களே?//

பைசா பெறாத என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறிவிலித்தனம். தலைவரே..

அப்புறம்.. அரசாஙக் அனுமதிபெற்று, அதற்கான கட்டணத்தைக் கட்டித்தான் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஓசியிலல்ல.. அது மட்டுமில்லாமல். நிறைய பேர் நிறைய விதத்தில் தானேவுக்காக உதவியிருக்கிறார்கள். உதவியும் வருகிறார்கள். உதவியும் இருக்கிறேன். அனானியே முகமூடிதான் அதில் தனியாய் மாஸ்க் வேறு மூச்சு முட்டப் போகிறது.. கழட்டி காத்து வாங்கிக்கங்க.. :))

விநாயக முருகன் said...

அது சாக்ஸ் இல்லீங்க.. அதுக்கு நைலான்னு பெயர்.. இங்கே அமெரிக்காவில் அதை போட்டுக்கிட்டு நடக்காத பெண்களே இல்லை. அது கொஞ்சம் சதைகளை இறுக்கி பிடித்து கவர்ச்சியாக காட்டும்

புதுகை.அப்துல்லா said...

// வர வர தமிழ்நாட்டில் மாணவர்களுடன் ஓடிப் போகும் டீச்சர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது

//

ஒனக்கு ஏன் பொறாமையா இருக்கு??

Cable சங்கர் said...

எல்லாம் ஒரு ஆதங்கம்தாண்ணே.. ம்ஹும்..

Anonymask said...

//அரசாஙக் அனுமதிபெற்று, அதற்கான கட்டணத்தைக் கட்டித்தான் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஓசியிலல்ல..//

அரசாங்கத்திற்கு போகும் பணத்தில் எவ்வளவு வீதம் இப்படியான சேவைகளுக்கு செலவிடப்படுகின்றது என்பது உங்களுக்கும் தெரியும்.

//உதவியும் இருக்கிறேன்//

இதை அவர்களிடமும் சொல்லி நாசூக்காக அனுப்பி வைத்திருக்கலாமே? அப்படி அனுப்பி வைத்திருந்தால் இங்கே அதை தெரிவித்திருக்கலாமே? அதை விட்டுவிட்டு சமூக சேவை முயற்சிகளை கிண்டல் பண்றீங்களே....

//அனானியே முகமூடிதான் அதில் தனியாய் மாஸ்க் வேறு மூச்சு முட்டப் போகிறது.. கழட்டி காத்து வாங்கிக்கங்க.. :))//

:)) பத்திரிகைகளே அனானிகளை அனுமதிக்கும்போது இப்படி சில தமிழ்ப் பதிவர்கள்தான் அனுமதிப்பதில்லை.. அதுக்கு தனி அக்கௌன்ட் ஓபன் பண்ணி கருத்து சொல்ல வேண்டியதா இருக்கு. என்னோட கருத்து அநாகரீகமாக இருந்தால், நீங்கள் அதைத் தாராளமாக நீக்கலாம். அது உங்கள் உரிமை. அப்படியே, எனது பெயரை நான் மறைப்பது எனது உரிமை. சரிதானே?

தருமி said...

“ராட்டினம்” நீங்க சொல்றது மாதிரி இருக்குமான்னு அவங்க ட்ரெய்லர் பார்த்ததும் தோணிச்சி .. அட.. விளம்பரத்தையாவது அவங்க தமிழிலேயே செய்திருக்கலாம்; இங்கிலிபீசு புழச்சிருக்கும்!!