Thottal Thodarum

Sep 10, 2012

கொத்து பரோட்டா 10/09/12

திரும்பவும் பெட்ரோல் விலை உயரப்போகிறது போலிருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளை விட டீசல் விலை நம் நாட்டில்தான் குறைவாம். பெட்ரோல் விலை மிக அதிகம் என்பதை சொல்லக் காணோம். கேஸ் சிலிண்டர் விலை வேறு ஏற்றியாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குடும்பத்திற்கு நான்கிலிருந்து ஆறு சிலிண்டர்கள்தான் செலவாகிறதாய் கணக்கெடுப்பில் கண்டு பிடித்திருக்கிறார்களாம். எனவே ஆறுக்கு மேல் சப்ளை செய்யப்படும் சிலிண்டர்களுக்கு அரசின் சகாயவிலை இல்லாமல் மார்கெட் விலைக்குத்தான் தருவார்களாம். நம்ம வீட்டுல எத்தனை சிலிண்டர் ஆவுதும்மா ஒரு வருஷத்துக்கு என்று மனைவியிடம் கேட்டதற்கு பன்னெண்டு என்றார். ‘அட பரவாயில்லையே வீட்டுல எத்தனை சிலிண்டர் யூஸ் பண்றது எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டீங்க?” என்று ஆச்சர்யப்பட்டு ஒரு பார்வை பார்த்தார். விலை ஏறப் போவது என் பர்சை பதம் பார்க்கும் விஷயமாய் இருந்தாலும், அந்த ஒரு பார்வையில் இருந்த ஆச்சர்யத்திற்காகவும், லேசான காதலுக்காகவும், விலையேற்றத்திற்கு காரணமான அரசை திட்டுவதை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படியெல்லாம் நம்மளை சகஜமாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



என் ட்வீட்டிலிருந்து
நீ எனக்கு எவ்வளவு முக்கியமானவன் என்பதை சொல்ல ஆசையாய்த்தான் இருக்கிறது. ஆனால் நீ என்ன ரியாக்‌ஷன் காட்டுவாயோ என்று பயமாய் இருக்கிறது
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ப்ளாஷ்பேக்
சின்ன பட்ஜெட்டில், மிகக் குறைந்த நாட்களில் படமாக்கப்பட்டு மாபெரும் வெற்றியடைந்த படம். ப்ளாக் அண்ட் வொயிட்டில்  வித்யாசமான கோணங்களை நமக்களித்த ஒளிப்பதிவு மேதை வின்செண்ட் ஒளிப்பதிவு செய்த படம்.முக்கியமாய் 1:58லிருந்து 2:10 வரையிலான ஷாட்டையும்,2:30 டூ 2:35 வரையிலான ஷாட் கம்போஷிஷனை பாருங்கள். க்ளாஸ்.. காலத்தால் அழியாத இப்படத்தின் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.என்ன தான் காஸாப்ளாங்காவின் உட்டாலக்கடி என்று இன்று உலக சினிமா டிவிடியைப் பார்த்து சொல்பவர்கள் எல்லோரும் ஒரு முறை இந்தப்படத்தை பார்த்துவிட்டு, உட்டாலக்கடியைப் பற்றிப் பேசலாம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஞாயிறு காலையில் வரும் டாப் டென் மூவிஸ் லிஸ்டை பார்த்தால் கண் முழியெல்லாம் பிதுங்கி வருகிறது. அதுவும் ஒவ்வொரு சேனலும் கொடுக்கும் முதல் மூன்று இடங்களின் லிஸ்ட் செம காமெடி. முக்கியமாய் தாங்கள் ரைட்ஸ் வாங்கிய படங்களை முன்னணியில் வைக்கும் சேனல்கள், இரண்டாவது மூன்றாவதுக்கு பிறகு காட்டும் படங்கள் எல்லாம் தியேட்டரிலேயே இல்லாதவையாய் இருப்பது அவர்களுக்கு தெரிந்தேதான் போடுகிறார்களா? 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஆயிரம்தான் நாம் நம் பிரதமரை, முதலமைச்சரை திட்டினாலும், அவர்களை மிக தரக்குறைவாக திட்ட, கார்டூன் வெளியிட எந்த ஒரு நாட்டிற்கும் அனுமதி கிடையாது. படு கேவலமான கார்டூன் வெளியிட்டிருக்கும் இலங்கை பத்திரிக்கைக்கு நாம் நம்முடைய கண்டனக் குரலை எழுப்பியே ஆகவேண்டும். அவர்கள் வரைந்த படத்தை இங்கே வெளியிடுவதால் நாம் மேலும் அந்த கார்டூனை விளம்பரப்படுத்தும் கேட்டலிஸ்டாய் மாறிவிடுவோம் என்பதால் என் கண்டனங்களை மட்டும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். பேஸ்புக்கில் கிடக்கிறது. வேண்டுமானால் தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள்.
########################################
தோழர் செங்கொடி என்கிற ஆவணப் படத்தை பார்த்தேன். அதன் ஒளிப்பதிவாளர் என்னிடம் பார்க்கச் சொல்லி கொடுத்திருந்தார். எனக்கு அப்பெண்ணின் தற்கொலையில் உடன்பாடு இல்லை. அதை தியாகம் என்று சித்தரிப்பதை ஏற்க முடியாது, அதனால் அப்படத்தை பார்கக் விருப்பமில்லை என்று சொன்னேன். பரவாயில்லை நீங்கள் இதை ஒரு ஆவணப்படமாய் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்  என்றார். அந்த வகையில் சரியான ஆவணப்படமாய் அது தெரியவில்லை. ஒரு மணி நேரம் ஓடக்கூடிய அந்த படத்தில் செங்கொடியின் மரணத்தை உருக்கமாய் காட்ட மிகைப்படுத்தப்பட்ட விஷயமாகவே தெரிகிறது. என்னால் முத்துகுமாரின் தற்கொலையையே ஜீரணிக்க முடியாமல் இன்று வரை தவித்துக் கொண்டிருக்கிறேன். இவர்களுக்கெல்லாம் தியாகியான அவன் எங்களுடன் பணிபுரிந்த உதவி இயக்குனன். இப்படத்தில் உட்சபட்சமாய் கண்ணகி கோவலன் மாதவி என்று ஆன்மிக கம்பேரிசன் வேறு. கிட்டத்தட்ட சொல்லச் சொல்லி எடுக்கப்பட்ட படமாகவே எனக்கு தெரிந்தது. ஒளிப்பதிவும் மிக சுமார்தான். தயவு செய்து தற்கொலைகளை தியாகங்கள் ஆக்காதீர்கள்.
#################################################
இணையமெங்கும் மீண்டும் அடிதடி சண்டை ஆரம்பித்திருக்கிறது. நடந்து முடிந்த பதிவர் சந்திப்பை வைத்து.  காசு கேட்டது தவறு. இவ்வளவு செலவு செய்திருக்க வேண்டுமா? இதை வைத்து உருப்படியாய் பல விஷயங்கள் செய்திருக்கலாம் என்று எல்லாம் ஆளாளுக்கு  விழா நடந்து வாரங்களாகியும் உருப்படியாய் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இணைய வழக்கப்படி காப்பி பேஸ்ட் பின்னூட்டமிடுபவரை கலாய்க்க, சம்பந்தப்பட்டவரும் ஜாலியாய் எடுத்துக் கொள்ளாமல் சீரியஸ் ஆனதாய் செவி வழி செய்தி. அதற்கு வரிந்து கட்டிக் கொண்டு இன்னொரு இணைய நண்பர் ஒருவர் விவாதத்தில் இறங்கி சென்றவிடமெல்லாம் சம்பந்தமில்லாமல் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். கோர்ட்டில் கேஸ் போடப் போகிறார் என்று சம்பந்தப்பட்டவர் சொன்னதாய் இவர் பதில் சொல்கிறார். எப்போ பார்த்தாலும் இணையத்திலேயே இருக்கிறார். கன்னாபின்னாவென மணக்கிற தமிழில் ஓட்டு வாங்க உழைக்கிறார். விரைவில் இவரது ஆர்வ மேலிட ப்ரச்சனை சரியாக இறைவனை பிரார்த்திக்கிறேன்.:) # நான் அவரைச் சொல்லலை..:))) 
###############################################
செவிக்கினிமை.
சென்ற வாரம் பிட்ஸா பட ஆடியோ வெளியீட்டிற்கு போயிருந்தேன். புதிய ட்ரைலர் அசத்தலாய் இருக்கிறது. முக்கியமாய் ரீரிக்கார்டிங். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும் இன்ஸ்பயரிங்.ஒரே ஒரு பாடலை மட்டும் ஒளிபரப்பினார்கள்.வாஷ்பேசின் குழாய் உடைந்துவிட, அதில் பீய்ச்சியடிக்கும் தண்ணீரில்  ரம்யா நம்பீசனும், விஜய் சேதுபதியும் ஒரு விளையாட்டு விளையாடுகிறார்கள். சூடாய் இருக்கிறது.  பாடல்களில்  அட்டக்கத்தி புகழ் கானா பாபு பாடிய கனக்குதே என்கிற ஜாஸ் ஸ்டைல் பாடல் மட்டும் சுவாரஸ்யம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
லேட்டஸ்ட் ஹிட்
ஹிப் ஆப் தமிழா என்கிற பெயரில் பிரபலமாகியிருக்கும் இந்த வீடியோவுக்கு எதிராய் பல வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டேயிருக்கிறது. இதுவே இந்த பாடல் வீடியோவுக்கான வெற்றிய, பிரபலத்தை சொல்லுகிறது. வீடியோ மேக்கிங் அவ்வளவு சுகமாய் இல்லாவிட்டாலும் பாடலும், அதன் வரிகளும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. போட்டி பாடலும் படு சுவாரஸ்யம். அதுவும் பெண் வர்ஷன்..

###########################################
குறும்படம் டூ திரைப்படம்
மீடியா ஒர்க்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்தில் சினிமா டிவிஷனில் ஆலோசனையாளராய் இருக்கிறேன். இந்நிறுவனத்தின் சார்பில் ஒரு குறும்படப் போட்டி நடைபெற இருக்கிறது. பத்து நிமிடங்கள் ஓடக்கூடிய படமாய் இருத்தல் வேண்டும். இந்தப் போட்டியில் வெல்கிறவர்களுக்கு திரைப்படம் எடுக்க வாய்ப்பளிக்க போவதாய் அறிவித்திருக்கிறார்கள். நுழைவுக் கட்டணம் ஆயிரம் ரூபாய். மேலும் விவரங்களுக்கு கீழுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
#########################################
சிவகாசி விபத்துக்குள்ளானவர்களுக்காக மலையாள நடிகர் மம்முட்டி அவர்களுக்கான  சில லட்சங்கள் மதிப்புள்ள் மருந்துகளை கொடுத்திருப்பதைப் பாராட்டி தமிழக நடிகர்களை சிலர் சாடி வருகிறார்கள். அது ஒரு புறம் இருக்க, வரும் 14ஆம் தேதி வெளிவரப் போகும் நெல்லை சந்திப்பு என்கிற படத்தின் முதல் நாள் மாலைக் காட்சிக்கான வசூலை சிவகாசி விபத்துக்குள்ளான மக்களுக்கு அளிக்கப் போவதாய் அறிவித்திருக்கிறார்கள் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குனர் மூவரும் இணைந்து. நல்ல முயற்சி. 
#####################################
கேட்டால் கிடைக்கும்
கேட்டால் கிடைக்கும் என்பதை மீண்டும் நண்பர் ஐய்யப்பன் தனது முயற்சியின் மூலம் நிருபித்திருக்கிறார். அவரது போராட்டத்திற்கான வெற்றிக்கு கேட்டால் கிடைக்கும் குழுவினரின் வாழ்த்துக்கள். அவரது அனுபவத்தை படிக்க
##################################################
அடல்ட்கார்னர்
கணவன் மனைவி அடிக்கடி சமையல் நிகழ்ச்சியையே பார்த்துக் கொண்டிருப்பதை  கவனித்து.” நீயும்தான் தினமும் விதவிதமான சமையல் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறாய். ஆனால் சமையலில் ஒன்றும் பெரிதாய் இம்ப்ரூவ்மெண்ட் இல்லையே?’ என்று கேட்க. “நீ கூடத்தான் தெனம் செக்ஸ் படம் வீடியோவுல பாக்குற நான் ஏதாவது கேக்குறேனா?” என்றாள்.


Post a Comment

46 comments:

Sen said...

இன்றைய கொத்து பரோட்டா சுவையாக இருந்தது..

தகவலுக்கு நன்றி !!

ஜோகில் said...

In USA the average gasoline cost is $3.90 per gallon (A gallon is 3.875 liters). Which comes to $1 per litre.

When you compare this price Indian Gasoline prices are way expensive.

நம்பள்கி said...

த.ம. 1

பட்டிகாட்டான் Jey said...

தங்களின் பதிவு படித்தேன் அண்ணா. அருமையான வரிகள். மனப்பாடம் செய்து கொள்கிறேன். ஏனென்றால், டுயூசன் பீஸு கெடுக்க என்னால் இயலாது , நான் ஒரு பரம ஏழைப்பதிவர். காந்திசிலை கீழே அமரும்போது கூட சிங்கிள் டீ யை ஓசியில்தான் சாப்பிட முடிந்தது.

இப்படிக்கு,
நானில்லை. அவரேதான்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது...


அவங்க எவ்வளவு முக்கியம்ன்னு சொல்லிடுங்க என்ன ரியாக்ஸன்னு அப்புறம் பார்க்கலாம்...

rajamelaiyur said...

//ஞாயிறு காலையில் வரும் டாப் டென் மூவிஸ் லிஸ்டை பார்த்தால் கண் முழியெல்லாம் பிதுங்கி வருகிறது. அதுவும் ஒவ்வொரு சேனலும் கொடுக்கும் முதல் மூன்று இடங்களின் லிஸ்ட் செம காமெடி. முக்கியமாய் தாங்கள் ரைட்ஸ் வாங்கிய படங்களை முன்னணியில் வைக்கும் சேனல்கள், இரண்டாவது மூன்றாவதுக்கு பிறகு காட்டும் படங்கள் எல்லாம் தியேட்டரிலேயே இல்லாதவையாய் இருப்பது அவர்களுக்கு தெரிந்தேதான் போடுகிறார்களா? //

// 100% உண்மை

rajamelaiyur said...

இன்று

திருமணம் செய்த , செய்ய போகின்ற அனைவருக்கும் ( 18 +)

சஹஜமொழி said...


படு கேவலமான கார்டூன்

வன்மையான கண்டனங்கள்

அஞ்சா சிங்கம் said...

நீ எனக்கு எவ்வளவு முக்கியமானவன் என்பதை சொல்ல ஆசையாய்த்தான் இருக்கிறது. ஆனால் நீ என்ன ரியாக்‌ஷன் காட்டுவாயோ என்று பயமாய் இருக்கிறது

ADMIN said...

கொத்து பரோட்டான்னா இதுதானா...?

ADMIN said...

கொத்து பரோட்டாவில் நிறைய விஷயங்களைக் கொத்திப் போட்டிருக்கிறீங்க.. குறிப்பா சொல்லனும்னா..சிவகாசி வெடி விபத்துக்கு உதவுகிற செய்தி. அடுத்து குறும்படம் டூ திரைப்படம்... இதை இரண்டையும் சொல்லலாம்.

பகிர்வுக்கு நன்றி..!

யுவகிருஷ்ணா said...

என்னதாங்க அப்படிப்பட்ட கார்ட்டூன்? யாராவது கண்ணுலே காட்டுங்களேன்.

யுவகிருஷ்ணா said...

என்னதாங்க அப்படிப்பட்ட கார்ட்டூன்? யாராவது கண்ணுலே காட்டுங்களேன்.

CS. Mohan Kumar said...

கேபிள்: உங்களை நண்பர் என்று நினைத்தேன். நண்பர் என்றால் எதுவாய் இருந்தாலும் என்னிடம் பேசலாம் அதை விட்டு விட்டு இங்கு வந்து தாக்குவது என்ன அரசியல் என்று தெரியவில்லை.

தமிழ் மணம் ரேங்கிங் தவறு என்று தான் எப்போதும் சொல்லி வருகிறேன். அலெக்சா மட்டுமே எல்லாராலும் ஏற்று கொள்ளப்படும் ஒன்று. அதில் நீங்கள் எல்லாம் எங்கோ இருக்கிறீர்கள்

தனபாலன் அப்படி சொன்னாரா என நீங்கள் கூட அவருக்கு போனில் பேசலாமே ? அவர் வழக்கு போடுகிறாரோ இல்லையோ அவரும் அவர் குடும்பமும் மனம் வருந்துகிறார்கள் என்று ஆரம்பத்திலயே பிளஸ்சில் சொன்னேன். அவர் உங்க கோஷ்டி தானே அதான் அப்படி சொல்கிறாய் என்று இன்னும் விகரஸ் ஆக கிண்டல் செய்தனர்.


வர வர உங்களுக்கு என் மீது எதோ ஒரு பொறாமை வருவதை உணர முடிகிறது. நண்பனுக்கு நல்லது நடக்க இறைவனை பிரார்த்திப்பதாக இங்கு சொல்வதை விட,நண்பனிடமே பேசி விடலாம் :((

CS. Mohan Kumar said...

செருப்பு தைப்பவர், கூர்க்கா போன்ற சாதாரண மனிதர்களை பேட்டி எடுத்து போடுவதை " ரோடில் ஆயி போறவனை எல்லாம் பேட்டி எடுத்து போடுறே" என்று நீங்கள் பேசும் போதே உங்கள் எண்ணத்தை நான் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் :((

arasan said...

கொத்து பரோட்டா என்னைக்கும் இல்லாம கொஞ்சம் சூடாகவும் , சுவையாகவும் இருக்குங்க அண்ணே

கலைக்கோவன் said...

/அட்டக்கத்தி புகழ் கானா பாபு பாடிய/ Thala...athu 'Gana Bala' illa

Muthu Pandi said...


He is the Cartoonist of Lakbima news .........


https://www.facebook.com/hasantha.wijenayake

Muthu Pandi said...

தமிழக முதல்வரை கேவலமாக சித்தரித்து சிங்கள நாளிதழ் வெளியிட்டு இருக்கும் கார்ட்டூன் ....இந்த செயல் மிகவும் கண்டனத்திற்கு உரியது...இது சிங்களனின் மோசமான கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது....முதல்வரை மட்டுமல்ல வேற எந்த பெண்ணையும் இப்படி கேவலமாக சித்தரித்தாலும் அது கண்டிக்கதக்கதே .... ஒரு மாநிலத்தின் முதல்வரான ஒருவருக்கே இந்த நிலை எனில் சிங்களன் கையில் சிக்கிய தமிழ் பெண்களையும்...போரில் சிக்கிய போராளி தமிழச்சிகளின் நிலையை எண்ணி பாருங்கள்.

Durai said...

Nenjil or aalayam is my favorite movie.
Do you want watch Naan Movie Online
http://www.funtamilvideos.com/naan

R. Jagannathan said...

Gas cylinder consumption is only 12 per year in your house as you don't eat at home mostly:-)

We become too emotional when some body else write badly about our leaders while we justify the same when written by our own people. The foreign journalists also read our press / see our TV networks and come here to feel the pulse of the people before they write in their papers. I think Washington Post's article on MMS is to be taken as it is unless if there are are factual errors. I haven't seen the cartoon in the Srilankan medium. If it is objectionable, it is condemnable. At the same time we should not be like Mamta Banerjee.

Bloggers' meet: I think it is unfair to find fault with Mohan Kumar. I read his blog on this only last night and felt it is not fair to comment on his initiation to conduct the meet and his efforts to raise funds. It is one thing not to pay / not wanting to pay and finding fault that the organiser / well wisher should not even approach people for funds towards legitimate expenses. Your support to Mohan will go a long way in the future success of such meets. Or, it will be another case of typical Tamilian attitude of the frog pulling other flog's legs when trying to get out of the well.

-R. J.

தணல் said...

இணையமெங்கும் மீண்டும் கும்மாங் கொத்து ஆரம்பித்திருக்கிறது. நடந்து முடிந்த பதிவர் சந்திப்பை வைத்து. மற்றவர்களை கூகிள் ப்ளஸ்ஸில் ஓட்டியது தவறு. இவ்வளவு வம்பு செய்திருக்க வேண்டுமா? இதை விட்டுவிட்டு உருப்படியாய் பல விஷயங்கள் செய்திருக்கலாம் என்று எல்லாம் ஆளாளுக்கு விழா நடந்து வாரங்களாகியும் "செருப்படியாய்" விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இணைய வழக்கப்படி பிரபலம் என்று தலைகால் புரியாமல் ஆடுபவரைக் கீழே தள்ளிவிட, சம்பந்தப்பட்டவரும் ஜாலியாய் கீழே விழாமல் 'சீரியஸ்' ஆனதாய் செவி வழி செய்தி. அதற்கு வரிந்து கட்டிக் கொண்டு பிரபல பதிவர் ஒருவர் கொத்து பரோட்டாவில் இறங்கி சென்றவிடமெல்லாம் சம்பந்தமில்லாமல் குருமாவை மொண்டு குடித்துக் கொண்டு கொண்டிருக்கிறார். குருமா செரிக்காததால் கேஸ் போடப் போகிறார் என்று சம்பந்தப்பட்டவர் சொன்னதாய் இவர் ஆய் போகிறார். எப்போ பார்த்தாலும் கக்கூசிலேயே இருக்கிறார். கன்னாபின்னாவென மணக்கிற கூவம் ஆற்றின் கரையில் ஆய் போட உழைக்கிறார். விரைவில் இவரது 'கீழிட' ப்ரச்சனை சரியாக பெருங்குடலைப் பிரார்த்திக்கிறேன்.:) # நான் உங்களைச் சொல்லலை..:)))

# நானும் சும்மாதான் கலாய்ச்சிருக்கேன் பாஸ்

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் பரோட்டா நல்ல கலவை.

வருண் said...

***வர வர உங்களுக்கு என் மீது எதோ ஒரு பொறாமை வருவதை உணர முடிகிறது. நண்பனுக்கு நல்லது நடக்க இறைவனை பிரார்த்திப்பதாக இங்கு சொல்வதை விட,நண்பனிடமே பேசி விடலாம் :((***

மோகன் குமார்: அவருக்கு மட்டும் இல்லைங்க, நெறையப் பேருக்கு! ஆனால் "பொதுநலத் தொண்டு" னுதான் இதையெல்லாம் "அவா" சொல்லுவா! அதெல்லாம் என்னமாரி வேடிக்கை பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்- உண்மை என்னனு!

நீங்க சொல்வது உண்மைதான்! கேவலம் எல்லாரும் "மனுஷ ஜென்மம்" தானே? பொறாமை ஆட்கொள்வது இயற்கைதான்!

நீங்க இதை புரிந்துகொண்டு, வினையமாக சொல்லாமல் விட்டு இருக்கலாம். நீங்க வெகுளியாக அதை சொன்னதால நான் அதை உண்மைதான்னு சொல்ல வேண்டிய கட்டாயம் இப்போ! :)

வருண் said...

நல்லவர் உங்களை தேவையில்லாமல் விமர்சிச்சதுக்கு ஒரு மைனஸ் மதிப்பெண்கூட நீங்க போடல. நீங்க பெரியமனுஷன். ஆனால், நான் பொறுக்கி! :)

வருண் said...

நண்பனாவது மண்ணாங்கட்டியாவது! என்னத்தைப் பேசிக்கிட்டு இருக்கீங்க? இது பதிவுலகம்! எவனை வேணா போட்டு கவுத்துவா ரொம்ப ஒசரத்துக்குப் போனா! :)

வவ்வால் said...

கேபிள்ஜி,

வழக்கத்தை விட இப்பதிவும் , பின்னூட்டங்களும் மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் இருக்கிறது.

த.ம.2012.

Unknown said...

வவ்வால் said...

கேபிள்ஜி,
வழக்கத்தை விட இப்பதிவும் , பின்னூட்டங்களும் மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் இருக்கிறது.

உங்க தளத்தில இருக்குற நகைச்சுவைய விடவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

ஆமா வவ்வால்,

“அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்” இது தூய தமிழ் வார்த்தையான்னு கொஞ்சம் ஆராய்ஞ்சு சொல்லுங்களேன்...

வருண் said...

கூகிள் விஜய்:

ஆராய்ச்சி?? அப்படினா? கூகில் ஆராச்சியா இல்லை அகராதி பார்க்கிறதா? :))

ஆராச்சி தமிழ் இல்லையே?? ஏன் தமிழ்ல கேக்கப்படாதா? நேக்கு சுத்தமான தமிழ்தான் பிடிக்கும்.

வவ்வாலு தமிழா? அதாங்க அந்த பாலூட்டி!

உங்க பேரு விஜய், வடமொழி.. பாதிப்பேரு கூகிள் இங்லிலிபீஸு..அப்புறம் வார்த்தையே தூயதமிழ் இல்லை.. தூயவும் தூய தமிழு இல்லை.. நம்ம தமிழும் வடமொழி வார்த்தைதான்னு நெனைக்கிறேன். அப்புறம் நெனைக்கிறேன் ஆங்கிலத்தில் உள்ள வடமொழியிலே இருந்து பறந்து வந்து சம்ஸ்கிரத்தில் கலந்து நம்ம வடமொழியாகி எப்படியோ வந்து சேர்ந்தது. லத்தீன் தமிழ்ல்ல இருந்து வந்தது.

நான் கல்லாததும் தமிழ். கற்றது கூகிலை தோண்டி எடுக்கிறது:)))

Unknown said...

வருண் said...

நம்ம தமிழும் வடமொழி வார்த்தைதான்னு நெனைக்கிறேன்.

“அய்யய்யோ..நான் நம்ம போண்டா மொழி வார்த்தைதான்னு இல்ல நெனைச்சிட்டு இருக்கிறேன்.”

வருணுக்கு mask போட்டால் வவ்வாலா? அல்லது வவ்வாலுக்கு mask போட்டால் வருணா?

ஹைய்யோ ஹைய்யோ ஹிட்ஸ்க்காக என்னென்னமோ செய்யறாங்கப்பா....

வருண் said...

வ - தமிழ்

வ் - தமிழ்

வா - தமிழ்

ல் - தமிழ்

வால்- தமிழ்

ஆனால், வவ்வாலு - எம் சி யாரு அடிவருடி, ரசினியோட விசிலடிச்சான் குஞ்சி

வ-தமிழ்

ரு- தமிழ்

ண்- தமிழ்

வருண்- சமஸ்கிரதம்/பார்ப்பான்/நடராசனோட அமெரிக்கப் பங்காளி

கே- தமிழ்

பி- தமிழ்

ள்- தமிழ்

ஜி- வடமொழி

கேபிள்ஜி- ஐந்தறிவோட அலையும் பாலூட்டிகள் ஒளறும் கேவலமான தமிழ்!

------------
கேபிள்: ஒரு பைத்தியம் உங்க தளத்தில் வந்து ஜி ஜி னு அலையிதாம். அதை ஒழுங்கா அடிச்சு வெறட்டலை. பின்னூட்டமெல்லாம், "கற்றது தமிழ்"போல் மட்டமாத்தான் வரும்.

பைத்தியத்தை அடிச்சு தொறத்துங்காணும்!

குட்டிபிசாசு said...

வருண்,

இப்படி அடுத்தவர் பதிவில் சம்பந்தமே இல்லாமல் வவ்வாலை வம்பிழுப்பதைவிட அவர் பதிவிலேயே பின்னூட்டம் இட்டிருக்கலாம். வவ்வால் அதை வெளியிடவும் செய்வார்.

சமுத்ரா said...

விபத்து நடந்ததும் உதவக் கூடிய இந்த நடிகர்கள் விபத்துக்கு முன்னே நான் சிவகாசி பட்டாசு கம்பெனியின் பாதுகாப்புக்கு பணம் கொடுக்கிறேன் என்று ஏன் கொடுப்பதில்லை? எல்லாம் பப்ளிசிடி!

வவ்வால் said...

குட்டிப்பிசாசு,

ஹா ...ஹா அதைப்போய் யாரு கிட்டே சொல்லுறிங்க, என்னை வச்சு பதிவு போடுவார், என்னை வம்பிழுப்பதாக நினைத்து போகிற இடமெல்லாம் பின்னூட்டமிடுவார், ஆனால் அவ்வப்போது நான் அவர் வழிக்கே போவதில்லை பின் ஏன் என்னை கலாய்க்கிறார் என புலம்பவும் செய்வார் , ஒருவகையான "ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி" ஆகிவிட்டார் என நினைக்கிறேன்.

எனவே நான் கண்டுகொள்வதில்லை, நீங்களும் ஃப்ரியா விடுங்க ,புலம்பிட்டு போகட்டும் :-))

நான் மட்டுறுத்தல் வைப்பதேயில்லை எனவே நான் வெளியிட வேண்டும் என்ற நிலை என்றும்,யாருக்கும் இருப்பதில்லை, ஆனால் மொன்னையாக பேசிக்கொண்டிருந்தால் மொத்திவிடுவேன் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும் :-))

வவ்வால் said...

சமுத்திரா,

//விபத்து நடந்ததும் உதவக் கூடிய இந்த நடிகர்கள் விபத்துக்கு முன்னே நான் சிவகாசி பட்டாசு கம்பெனியின் பாதுகாப்புக்கு பணம் கொடுக்கிறேன் என்று ஏன் கொடுப்பதில்லை? எல்லாம் பப்ளிசிடி!//

உங்கள் கூற்றினை எப்படி எடுத்துக்கொள்வது?

பட்டாசு தயாரிப்பது ஒரு தொழில், அதனை செய்பவர்கள் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருக்க வேண்டும், சரியான பாதுகாப்பு ஏற்பாடுடன் இருக்கிறதா என கண்காணிக்க வேண்டியது அரசு. ஆனால் அரசு நிர்வாகம் கட்டிங்க் வாங்கிக்கொண்டு கண்ணை மூடிக்கொள்கிறது, விபத்து ஏற்படுகிறது.

இப்போது மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தால் ,தொழில் பாதுகாப்புக்கு பணம் கொடுங்கள் என்ரால் எப்படி?

கார்கில் சண்டையின் போது நடிகர்கள் முதல் அனைவரும் நிதி திரட்டினார்கள், இதனால் ஆண்டு தோறும் ராணுவத்திற்கு நிதி திரட்டித்தாருங்கள் எனலாமா? ஏன் எனில் நாட்டின் பாதுகாப்புக்கு தானே கேட்கிறார்கள்.

தானம் கொடுத்த மாட்டுக்கு பல்லை பிடித்து பார்க்கலாமா?

ரிஷபன்Meena said...

//விபத்து நடந்ததும் உதவக் கூடிய இந்த நடிகர்கள் விபத்துக்கு முன்னே நான் சிவகாசி பட்டாசு கம்பெனியின் பாதுகாப்புக்கு பணம் கொடுக்கிறேன் என்று ஏன் கொடுப்பதில்லை? எல்லாம் பப்ளிசிடி!//

பப்ளிசிடியாய் வேண்டுமானால் கூட இருந்து விட்டுப் போகட்டுமே
பாக்கெட்டிலிருந்து பைசா நகருதில்லையா அது தான் முக்கியம்.
நம்மில் பல பேர் விளம்பரம் என்று கமெண்ட் அடிப்போம் ஆனால் விளம்பரத்துக்காக கூட நம்மிடமிருந்து ஏதும் பெயராது.

என் நண்பர் ஒருவர் வெறும் பெண்சில் மட்டும் நன்கொடையாக கேட்பார் அவரைப் பார்த்து ஏளனம் செய்பவர்கள் ஏராளம். அவரைப் பற்றிய செய்தி இங்கேhttp://gulfnews.com/life-style/people/helping-poor-students-through-donations-1.790516

வருண் said...

***குட்டிபிசாசு said...

வருண்,

இப்படி அடுத்தவர் பதிவில் சம்பந்தமே இல்லாமல் வவ்வாலை வம்பிழுப்பதைவிட அவர் பதிவிலேயே பின்னூட்டம் இட்டிருக்கலாம். ***

நீர் வவ்வாலுக்கு முழுநேர ஜால்ரா அடிக்கும் அடியாள்னு உன் பின்னூட்டத்தை இங்கே காட்டவா? திடீர்னு நியாயஸ்தானா ஆயிட்டீர்??

ஆளாளுக்கு நியாயம் பேசாதீங்கப்பா! பதிவுலகம் தாங்காது!

உம் அறிவுரை தேவைப்படும்போது வந்து கேக்கிறேன். அதுவரைக்கும் வவ்வாலுக்கு சிங்கி அடியும்!

கொ பொரட்டால சொல்லவேண்டிய கருத்தை சொல்லிப்புட்டு போயிட்டே இருக்கனும். புரியுதா??

***வவ்வால் அதை வெளியிடவும் செய்வார்.***

நீங்க என்ன வவ்வாலுக்கு கொ ப செ யா?

உம் கருத்தை சொல்லிட்டு போறதை விட்டுட்டு நீர் ஏன் இங்கே வந்து ஊருக்கெல்லாம் அறிவுரை?

ஏன்ப்பா ஆளாளுக்கு அறிவுரை வழங்கிக்கிட்டு??

யாரு, யாரை வம்புக்கு இழுக்கிறானு மூளையில்லாத பிசாசுக்கெல்லாம் தெரியாது.

அஜீம்பாஷா said...

ஏம்பா வீட்டுக்காரர் சத்தத்தையே காணோம், விருந்தாளிங்க கும்மி அடிச்சிகிட்டு இருக்கீங்க.
வீட்டுக்காரர் ONE MBலே சாப்பிட்டு விட்டு தூங்கிக்கிட்டுருக்கிறார் போலிருக்கிறது.

சமுத்ரா said...

வவ்வால், யார் யாருக்கு தானம் கொடுப்பது?நடிகர் சம்பாதித்த
காசு எல்லாம் தொழிலாளிகள் சினிமா பார்ப்பதால் வருவது.
நடிகர்கள் யாராவது விளம்பரத்தில் தோன்றி பட்டாசு வேண்டாம்
அது வளிமண்டலத்துக்கும் வெடிப்பவருக்கும் தயாரிப்பவருக்கும்
கெடுதல் என்று சொல்லத் தயாரா? இந்த மார்க் பட்டாசு வெடியுங்கள் அந்த மார்க் பட்டாசு வாங்குங்கள் என்று common sense இன்றி
தானே அவர்கள் விளம்பரங்களில் தோன்றி சொல்கிறார்கள்? பட்டாசு
தொழிலாளிகள் கதி என்ன ஆவது என்றால் லாட்டரி தடை செய்யப்பட்டதும் அதை விற்றவர்கள் என்ன இப்போது செத்தா போய் விட்டார்கள்? எனவே நடிகர்கள் செய்வது பப்ளிசிட்டி தான். குற்றமோ விபத்தோ அதன் வேரை அறுப்பது என்பது அதன் காயங்களுக்கு மருந்து
தடவுவதை விட மிக மிக மேலானது.

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

***azeem basha said...

ஏம்பா வீட்டுக்காரர் சத்தத்தையே காணோம்>***

அகத்துக்காரரர் செய்ய வேண்டிய முதல்ப்பணி என்ன தெரியுமா? கீழே கொடுக்கப் பட்டுள்ள பின்னூட்டத்தை ("instigating response by a trouble-maker" ) அகற்றனும்!!!

***வவ்வால் said...

*** கேபிள்ஜி,

வழக்கத்தை விட இப்பதிவும் , பின்னூட்டங்களும் மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் இருக்கிறது.

த.ம.2012.

12:51 AM***


அதுக்கப்புறம் மற்றதை எல்லாம் கவனிக்கலாம். இல்லைனா அடிச்சுக்கிட்டு சாகுங்டா, எவன் செத்தாலும் எனக்குத்தான் இலாபம்னு இப்படியே அமைதி காக்கலாம்! :)))

குட்டிப்பிசாசு போல அடியாட்கள் பேசும் நியாய்ங்களை எல்லாம் "ஆத்துக்காரர்" கேட்க வேண்டிய அவசியம் இல்லை!

Unknown said...

வருண்,
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
I Accept Your Openion

இதே வவ்வால் மத்தவங்களுக்கு கொடுக்கிற மரியாதையைப் பாருங்க.
கூகிள் விஜய் said...

வவ்வால் தளத்தில் என் கமெண்ட்:
”ஹலோ வவ்வால் ஸார்! என்னங்க லக்கி போட்டோவை போட்டுடு "image name"மாத்தாம விட்டுட்டீங்க?”


வவ்வால் பதில்:

கூகிள் விஜய்,
ஆஹ் என்ன கொடுமை சார் இது.

டொக்டர் விஜய் கூட செமிச்சு போச்சு ஆனால்லும் இந்த கூகிள் விஜய் ரொம்ப ஓவர் :-))


போட்டோ என்ன தெரியாத போட்டோவ, சும்மா எடுத்துப் போட்டேன் பா, என்னமோ மதுரை நக்கிரார் போலவே கேள்வி கேளுங்க, ஆனால் ஒரு நாளும் நம்ம பதிவை படிக்கவே படிக்காதிங்க :-))

உங்களுக்கெல்லாம் பதிலை சொல்லிக்கிட்டு ... இதே மூதேவி அங்கே போய் சூப்பர் தலன்னு இன்ன்ப்ரு பேருல கமெண்ட் போடும் :-))


பதிவுக்கு கமெண்ட் போடுறவங்களை எல்லாம் ”மூதேவி” என்று சொல்ல இந்த - க்கு யார் அனுமதி கொடுத்தது?

Unknown said...

சில பேர் நம்ம வீட்டுக்கு வந்தா சந்தோஷம்.
சில பேர் நம்ம வீட்டைவிட்டு போனா சந்தோஷம்.
இதுல நீங்க எந்த ரகம் வவ்வால்?

வருண் said...

google vijay:

அந்த ஆளுக்கு முழு நேர வேலை, "தான் பெரிய இவன், தனக்குத்தான் நக்கலாப் பேசத் தெரியும்" தாந்தான் எல்லாம் தெரிந்த மேதை" னு வெட்கமே இல்லாமல் தம்பட்டம் அடிக்க வேண்டியது!!! என்ன ஜென்மங்களோ!

சரி, இந்தப் பதிவில், கேபிள் சங்கர், மோகன் குமாரை விமர்சிச்சது பிடிக்கலைனு நான் தெளிவா சொல்லியிருக்கேன். என் கருத்தை சொல்ல எனக்கு உரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு என்பது இயல்பு! இதில் நான் எதுவும் நகைச்சுவை பண்ணவில்லை. இந்தப் பதிவும் நகைச்சுவைப் பதிவு அல்ல!!!

என்ன மயிருக்கு இந்த வவ்வாலுனு திரிகிற லோ-லைஃப் வந்து இதுபோல் கேவலமான பின்னூட்டம் இடுறான்??

***கேபிள்ஜி,

வழக்கத்தை விட இப்பதிவும் , பின்னூட்டங்களும் மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் இருக்கிறது.

த.ம.2012.

12:51 AM****

செய்றதை செஞ்சுட்டு இவன் என்னமோ யோக்கியன்னு வெட்கமே சொல்லிக்கிட்டு திரிகிறான்.

இவனுக்கு ஜால்ரா அடிக்க குட்டிப் பிசாசுனு ஒரு கொடுக்கு வேற!!

எவன் நியாயம் பேசுறது இங்கே? நியாயம்னா என்னடா??? வந்துட்டானுக நியாயம் பேச!

வவ்வால் said...

சமுத்திரா,

உங்கள் கருத்தில் இருந்து மாறுபடுகிறேன்,

நடிகர்கள் என்றாலும் அது அவர்களின் உழைப்பிற்கு கிடைக்கும் வருமானமே ,அவர்கள் பணம் கொடுப்பதும் கொடுக்காததும் அவர்கள் இஷ்டம் எனலாம்.

ஆனால் கொடுத்தால் பாராட்டுக்கு உரியவர்களே, தமிழின் பிரபல நடிகர்கள் ஏன் எதுவும் கொடுக்கவில்லை என வருத்தப்படலாம் ,ஆனால் மலையாளத்தில் சம்பாதித்த மம்மூட்டி கொடுத்திருப்பது பாராட்ட வேண்டியதே(தமிழில் சொற்ப படங்களே செய்துள்ளார்)

அடுத்த முதல்வர் கனவில் இருப்பவர்கள் ஏன் செய்யக்கூடாது என கேளுங்கள் , உங்களை ஆதரிக்கிறேன்(நடிகர்களாக மட்டும் இல்லாமல் அரசியல் ஆசையில் இருப்பதாலேயே)