Thottal Thodarum

Apr 18, 2012

பச்சை என்கிற காத்து

PEK200510_1 சட்டென பெயரைப் பார்க்கும் போது ஏதோ இருக்கும் போலருக்கு என்ற எண்ணம் எழாமல் இல்லை. அதை நிருபிப்பது போலவே ஒரு ஆணின் கழுத்தில் ஒரு பெண்ணில் கால் வைத்து அழுத்திக் கொல்வது போன்ற ஒரு போஸ்டர் டிசைன் வேறு..சரி.. போய் பார்த்துவிடுவோம் என்று முடிவு செய்துவிட்டேன்.


பச்சை என்கிற ஒரு இளைஞன் இறந்துவிட்ட செய்தியோடு படம் ஆரம்பிக்கிறது. செத்த வீட்டில் அவனின் பெண்டாட்டி சிக்கன் பிரியாணியை லெக் பீஸோடு சாப்பிடுவதும், அதே வீட்டில் கல்யாண பேச்சு பேசிக் கொண்டும், அரசியல் பேசிக் கொண்டு ஆட்கள் இருக்க, அவனைப் பற்றி கவலைப் படும் மூன்று ஜீவன்ங்கள் மட்டும் அவனின் நினைவுகளோடு சுடுகாட்டில் உட்கார்ந்திருப்பதில் தான் ஆரம்பிக்கிறது கதை. அவன் யார்?. எப்படிபட்டவன்? எதற்காக ஊரில் ஒருவன் கூட அவனின் சாவுக்கு உண்மையாய் அழவில்லை என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலை சொல்லியிருக்கிறார்கள்.
PEK200510_4 எதையோ சீரியஸாய் சொல்லப் போகிறார்கள் என்ற பில்டப் போடு ஆரம்பிக்கும் படம். ஆரம்பித்த முதல் ஷாட்டிலேயே எளவு வீட்டிலேயே தெரிந்து விடுகிறது இன்னொரு பருத்தி வீரன் வகையரா லைவ் மதுரை பட முயற்சி என்று. பச்சை என்கிறவன் சிறு வயதிலேயே படிப்பு வராமல் அரசியல்வாதியாகும் முயற்சியில் இறங்குபவன். அப்படி இறங்கி தறி கெட்டு போய்விடுகிறவனுக்கு காதல் வேறு. வழக்கமாய் சண்டியர்தனம் பண்ணும் ஆட்களை ஊர் பெண்கள் காதலிக்கும் எல்லாம் வழக்கமும் இதிலும் இருக்கிறது. வீடு தேடிப் போய் டார்ச்சர் செய்பவனை ஒரு பெண் காதலிப்பதாய் எத்தனைப் படத்தில்தான் காட்டுவார்களோ தெரியவில்லை.
PEK300410_4
நடிப்பென்று பார்த்தால் பச்சையாக நடித்திருக்கும் வாசகரும், அவரின் தம்பியாக வரும் துருவன், மற்றும் அந்த அல்லக்கை நடிகரையும் சொல்லலாம்.ஹீரோயின் தேவதை  ஆண்டி  போல  இருக்கிறார்.   தேவையில்லாத பாட்டுக்கள் எரிச்சலடைய செய்கிறது. எடிட்டிங், ஒளிப்பதிவு, பின்னணி இசை என்று எல்லா டிபார்ட்மெண்டுகளுமே ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை.டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் இரண்டு மூன்று விதமான கேமராக்களில் படம்பிடிக்கப்பட்டிருப்பதால் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு குவாலிட்டியில் இருப்பதும், ஒரு பெரிய மைனஸாய்த்தான் இருக்கிறது.
PEK200510_14 எழுதி இயக்கியவர் கீரா. மீண்டும் ஒரு பழைய பருத்திவீரன் வகையரா லந்து செய்து கொண்டு சுற்றியலையும் ஒர் இளைஞனை முன் வைத்து சொல்லப்பட்ட கதைகள் வழக்கொழிந்து போய் ரொம்ப வருஷமாகிவிட்டதனாலும், பச்சை ஏன் இப்படியானான் என்பதற்கான தெளிவான கேரக்டரைசேஷனையும், உருவாக்க விட்டதினால் அவனின் சாவோ, அல்லது காதலோ, எதுவும் மனதில் ஏறவில்லை. உயிருக்கு உயிராய் காதலிக்கும் பெண்ணை பயமுறுத்த தண்ணீரில் முக்கும் அளவிற்கு கொடுரனாக காட்டப்படும் அதே கேரக்டர்.. அப்பாவின் சின்ன வீட்டு பெண்ணை தங்கச்சியாய் ஏற்று திருமணமெல்லாம் நடத்தி வைக்கிறார். உடன் இருப்பவனின் வாழ்க்கையை நினைத்து அவர்களுக்கு உதவுகிறார் என்பது போன்ற காட்சிகள் எல்லாம் வரும் போது அந்த கேரக்டரின் மீது வர வேண்டிய ஒரு இரக்கம் நமக்குள் வராமல் போய்விடுகிறது. உட்கட்சி பூசல் அதில் மாட்டி கொண்டு அல்லாடுவது, ஜாமீன் எடுத்ததற்காக கொலைகாரனாய் மாறுவது போன்ற விஷயங்களை ஏற்கனவே பல மதுரை படங்களில் பார்த்ததினால் அதுவும் பெரியதாய் எடுபடவில்லை.  ஹீரோயின் செத்து பல வருடங்களுக்கு பின் அவளது தங்கச்சியும் அவளைப் போலவே இருப்பதெல்லாம் பெரும் பூச்சுற்றல். என்ன ஒரு வித்யாசமான படத்தை கொடுக்க ஆனானப்பட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். அதை தெளிவான திரைக்கதையோடு இறங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான்கு வருடங்களுக்கு மேலாக வெளிவராமல் தவித்துக் கொண்டிருந்த படத்தை ரிலீஸ் செய்த ஸ்ரீராம் ஸ்டுடியோவிற்கு வாழ்த்துக்கள்.
கேபிள் சங்கர்

Post a Comment

15 comments:

கோவை நேரம் said...

பச்சை என்கிற காத்து....ரொம்ப வீசலை..

Jayaprakash said...

//நான்கு வருடங்களுக்கு மேலாக வெளிவராமல் தவித்துக் கொண்டிருந்த படத்தை ரிலீஸ் செய்த ஸ்ரீராம் ஸ்டுடியோவிற்கு வாழ்த்துக்கள்.//

vunga encouragement nice sir!

Regards
JP

விஜய் said...

உங்களுக்கு இருந்தாலும் ரொம்ப பொறுமைதான்....

பார்ப்பான் said...

[[மசாலா கபேவிற்கு பிறகு சுந்தர்.சியின் அடுத்த படத்திற்கான வசனமெழுதும் வேலை நடந்து கொண்டிருந்தது.]]

மசலா கப்பே பட விளம்பரம் பேப்பரில் பார்த்தேன். உங்கள் பெயர் இல்லை. யாரை ஏய்ச்சி பிழைக்க இந்த பிழைப்பு பிழைக்கிறீர்கள் கேபிள் சங்கர்.

Sai said...

பார்ப்பான் நல்ல கேள்வி. சுஜாதாவின் எழுத்து நடையை ஜெராக்ஸ் போட்டு எழுதும் இவர் இயக்க போவதாக நீண்டடடட.. நாட்களாக சொல்லி கொண்டு இருக்கும் திரைப்படத்திற்காக நிறைய இயக்குனர்கள் வெயிட்டிங், கையில் சாணியோட.! அப்போ கிளியும் கேபிளின் டவுசர்!!

rajamelaiyur said...

காத்து வரட்டும்னு பல தியட்டார்ல படத்த துக்கிடான்கலாம்

rajamelaiyur said...

இன்று
கதம்பம் 19-04-2012

Cable சங்கர் said...

@பார்ப்பான்
@ சாய்
சொந்தமா பெயரே வைக்க முடியாம பின்னூட்டம் போடுறதுங்க டவுசரை அவுக்குதுங்களாம். செம காமெடி பீஸுங்க பா நீங்க.. மொதல்ல நீங்கடவுசரை போடுங்க.

நான் அப்படத்தின் உதவி வசனம். என்பதை அடிக்கடி சொல்லியிருக்கிறேன். சும்மா.. அவுக்குறதுக்கு முன்னாடி யார் கிட்ட எங்க அவுக்குறோம்னு பார்த்து தெரிஞ்சு சுதானமா அவுக்கணும். ஹி..ஹி.. நேத்து வந்து ப்ளாக் படிச்சிப்புட்டு இங்க்னவந்து வாந்தி எடுக்க கூடாது.. இல்லை வீட்டுல பெரிய்வங்க யாரையவது கூட்டிட்டு வந்து பேசுங்க..

Cable சங்கர் said...

@sai

சுஜாதாவின் எழுத்து நடையை ஜெராக்ஸ் போட்டு எழுதறனா.? அய்யோ.. சூப்பார்.. பாராட்டு.. நன்றி..

Unknown said...

[[மசாலா கபேவிற்கு பிறகு சுந்தர்.சியின் அடுத்த படத்திற்கான வசனமெழுதும் வேலை நடந்து கொண்டிருந்தது.]]

{{மசலா கப்பே பட விளம்பரம் பேப்பரில் பார்த்தேன். உங்கள் பெயர் இல்லை. யாரை ஏய்ச்சி பிழைக்க இந்த பிழைப்பு பிழைக்கிறீர்கள் கேபிள் சங்கர்}}



@பார்ப்பான் : அவரு மசாலா கபேக்கு அடுத்த படத்துல உதவி வசனம்ன்னா நீங்க மசாலா கபேல தேடினா எப்படி. நான்கூட கன்பிஸ் ஆயிட்டேன்

கீரா said...

நமது திரைப்படம் ஒரு சராசரி படமல்ல என பாராட்டிய தினமணி,தினகரன்,மாலைமலர் போன்ற தின இதழ்களுக்கு நன்றி..

கீரா said...

நமது திரைப்படம் பச்சை என்கிற காத்து ஒரு சராசரி படமல்ல என பாராட்டிய தினமணி,தினகரன்,மாலைமலர் போன்ற தின இதழ்களுக்கு நன்றி..

கீரா said...

நமது திரைப்படம் பச்சை என்கிற காத்து படத்தை பாராட்டி 42 மதிப்பெண்கள் அளித்த ஆனந்த விகடனுக்கு நன்றி..

aru(su)vai-raj said...

நீங்க இன்னும் பட விநியோகம் செய்றீங்களா.. செய்றீங்கன்னா ஒவ்வொரு பட விமர்சனத்தின் கீழயும் நீங்க அந்த பட வியாபாரத்தில் இருக்கீங்களா இல்லையா என்பதை தெளிவு படுத்தவும்...

aru(su)vai-raj said...

நீங்க இன்னும் பட விநியோகம் செய்றீங்களா.. செய்றீங்கன்னா ஒவ்வொரு பட விமர்சனத்தின் கீழயும் நீங்க அந்த பட வியாபாரத்தில் இருக்கீங்களா இல்லையா என்பதை தெளிவு படுத்தவும்...