Thottal Thodarum

Apr 23, 2012

கொத்து பரோட்டா -23/04/12

மாவோயிஸ்டுகளின் கடத்தல் சமீப காலமாக அதிகமாகி வருகிறது.  அதில் லேட்டஸ்ட்டாய் மாவட்ட கலெக்டர் கடத்தப்பட்டிருப்பது. அவர் தமிழ் நாட்டுக்காரர் என்பதால் தமிழ்நாட்டு மீடியா கொஞ்சம் சீரியஸாய் கவர் செய்து வருகிறார்கள். மாவோயிஸ்டுகள் கடத்தி விட்டார்கள், கடத்திவிட்டார்கள் என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்களே தவிர மாவோயிஸ்டுகளின் ப்ரச்சனை என்ன? எதற்காக கடத்துகிறார்கள், அரசு தரப்பு சொல்லும் விளக்கமென்ன என்பதைப் பற்றியெல்லாம் விளக்க வேண்டும் என்ற அக்கறை கூட இல்லாமல் ஜெயலலிதாவின் அறிக்கையையோ, அல்லது தாத்தாவின் அறிக்கையையோ படிக்க போய்விடுகிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



சந்தானத்தின் மீது பத்து லட்ச ரூபாய் மோசடி வழக்கு போட்டிருக்காங்க.. கேஸைப் பார்த்தாலே தெரியும் அட்டு கேஸுன்னு ரெண்டு கோடி சில்லரை ஒர்த்தான பில்டிங்கை ஒரு கோடியே என்பது லட்சத்துக்கு முடிச்சிருக்காங்களாம். அதுவும் மிரட்டி. அதில பத்து லட்சம் பாக்கியாம். அது மட்டுமில்லாமல் வீட்டுல இருந்த 50 லட்சம் ரூபா பெறுமானமுள்ள பொருட்களை திருடிட்டாராம் சந்தானம். என்னடா இது படம் இவ்வளவு தூரம் ஹிட்டாயிருச்சே எலிப்புழுக்கை காய ஆரம்பிக்கலையேன்னு பார்த்தேன் காய ஆரம்பிச்சிருச்சு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மார்டின் திமுக ஆட்சியில் நெருக்கமாய் இருந்த காரணத்தினால இந்த ஆட்சியில் தொடர்ந்து கேஸா போட்டு சத்தாய்ப்பதை எதிர்த்து இன்று பேப்பரில் அவரது வக்கீல் ஒரு அறிக்கை விட்டிருக்காரு. சுமார் 52 லட்சமோ, கோடியோ வருமான வரி கட்டின எங்க கட்சிக்காரர் மீது வெறும் பத்து ரூபா மோசடி செய்தார்னு எல்லாம் கேஸு போட்டிருக்கிறதை அனுமதிக்க முடியாதுன்னும், மீறி இந்தமாதிரி கேஸு போட்டா அவங்க மேல ஆக்‌ஷன் எடுப்போம்னு அறிக்கை விட்டிருக்காரு.. பார்த்து போடுங்கப்பா.. கேஸு கொடுக்குறதுக்கும் ஒரு மரியாதை மட்டு இல்லை..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ரெண்டு நாள் முன்னால் நானோவில் மகாபலிபுரம் வரை போக வேண்டியிருந்தது. அருமையான ட்ரைவ். அதுவும் ஈ.சி.ஆரில் நூறு வரை போகிறது.  வழியெங்கும் பட்டப்பகலில் ஜோடி ஜோடியாய் முகத்தில் துப்பட்டாவுடன் பெண்களும், ஹெல்மெட்டுடன் ஆண்களும் பைக்குகளில் விர்விர் என பறக்கிறார்கள். ஆங்காகே போலீஸும் நிறுத்தி வைத்து ஏதோ விசாரித்துத்தான் அனுப்புக்கிறது. ஒரு விசாரணை இடத்தை க்ராஸ் பண்ணும் போது பைக் ஓட்டுய இளைஞன் போலீஸிடம் “சார். பப்ளிக்கா நாங்க என்ன செக்ஸா வச்சிக்கிட்டோம். பைக்ல தானே போனோம்? இதுக்கெல்லாம் எங்களை மிரட்ட ரூல்ஸ் கிடையாது தெரியுமா?” என்று கத்திக் கொண்டிருந்தான். அந்த கான்ஸ்டபில் மிரளமிரள விழித்துக் கொண்டிருந்தார். நிஜத்தில் ரூல்ஸ் பேசினால் நிறைய போலீஸுக்கு தெரியாது என்பதை இந்த இளைஞர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். திரும்ப வரும் போது ஒர் இளைஞன் வண்டி ஓட்டியபடியே தன் ஹெல்மெட்டை கழட்ட முயல, பின்னால் இருந்த பெண் அதை தடுக்க, அவன் தடுமாறினான். கிட்டே போய் திட்டலாம் என்று கதவை திறந்து ஸ்லோ பண்ணி எட்டிப் பார்த்த போது அவள் அவனிடம் சொன்னாள் “யாராச்சும் என்னை இங்க வச்சி பார்த்தேன்னு சொன்னாலும், ஆமா என் வீட்டுக்காரரோட போயிருந்தேனு சொல்லுவேன். நீ வேற கழட்டிட்டு வர்றேன்னு என் வயித்துல நெருப்ப அள்ளிப் போடுற? “ என்றாள். நான் ஏதும் திட்டாமல் வண்டியை கிளப்பிவிட்டேன்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஓகே ஓகே படத்திற்கு யு சர்டிபிகேட் வாங்கியும் வரி விலக்கு இதுவரை கொடுக்கப்படவில்லை. தணிக்கை குழுவினர் பார்த்த பிறகு அதை வரி விலக்கு கொடுக்கும் ஒரு குழுவினர் பார்த்து அதற்கு வரி விலக்கு கொடுக்கலாம் என்று பரிந்துரைத்தால் தான் வரிவிலக்கு கொடுக்கப்படும். ஆனால் இந்த படத்தை பார்க்க அக்குழுவினர் ஒருவரும் அவைலபிளாய் இல்லை. பாதி பேருக்கு உடம்பு சரியில்லை என்று லெட்டர் கொடுத்திருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் ரிலீஸ் செய்துவிட்டார்கள். இன்று வரை டாக்ஸ் ஃபீரி தரப்படவில்லை. ஊரை ஏய்ச்சு கொள்ளையடிச்சவன் பணம் அவங்களூக்கு டாக்ஸ்ப்ரீ தரலைன்னா? என்ன? என்று கேட்பவர்களுக்கு. என்னைப் பொறுத்தவரை டாக்ஸ் ப்ரீ என்பது மக்களுக்கு இம்ப்ளிமெண்ட் ஆகாத போது கொடுக்கவே வேண்டாம் என்று தான் சொல்லி வருகிறேன். ஆனால் 3 படத்தில் ரொமான்ஸ் காட்சிகள், வயலண்ட் காட்சிகள், முத்தக் காட்சிகள், ஹீரோ தன் கழுத்தை தானே அறுத்துக் கொள்ளூம் காட்சி என்று சிறுவர்கள் யாருமே குடும்பத்தோடு கூட உட்கார்ந்து பார்க்க முடியாத காட்சிகள் உள்ள படத்திற்கு “யு” சர்ட்டிபிகேட்டும், வரி விலக்கும் அளித்திருக்கிறார்கள். விளம்பரத்தில் வேறு சிறுவர்கள் படத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று போடுகிறார்கள். என்ன மம்மி இது?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டரிலிருந்து
உறவுகள் சந்தோஷமாய் இருப்பதற்கேயன்றி அழுது வடிவதற்கல்ல.

காதல் ஒரு குழப்பமான எரிச்சலூட்டக்கூடிய ஒன்றாய்த்தான் தெரியும்.கை கூடும் வரை.

தவறான வாழ்க்கையை சரியாய் வாழ முடியாது. #தியோடர் அடர்னோ

என் புன்சிரிப்பு என்னுள் உண்டான பயத்தை மறைக்க, என் சந்தோஷம் என் கண்ணீரை மறைக்க..

எந்த பெண்ணையும் மரியாதை குறைவாய் நினைக்காதே. அவள் அதுக்கு சரிப்பட மாட்டாள். # நகைச்சுவை.

எல்லோருக்கும் உண்மை வேண்டியிருக்கிறது. ஆனால அவர்கள் நம்பிக்கையாய் இருப்பதில்லை.

எப்போதும் நம்பிக்கை வை ஆனால் எதிர்பார்க்காதே..

மதுரை, அல்லது அந்த ஏரியா ஆட்கள் எடுக்கும் படமென்றால் மார்க்கை அள்ளிப் போடும் விகடனிடம் இருப்பதும் ஒரு வித பார்பனியம் சாரி தேவரினியம்.:)

என் வாழ்க்கை பக்கங்களில் நீ நிச்சயம் இல்லை ஆனால் முதல் பக்கத்திலும் கடைசி பக்கத்திலும் உன் பெயர் இருக்கிறது அது எப்படி என்று புரியவில்லை.

உன் தேவையில்லாத எவனு(ளு)ம் உனக்கு தேவையில்லை என்பதை புரிந்து கொள்.

எல்லா மொழிகளிலும் சொல்ல கஷ்டமான வார்த்தை “Iam Sorry"

யாராலும் உன்னை மாற்ற முடியாது. நீயாகவே மாற வேண்டும் என்ற எண்ணம் கொள்ளும் வரை.

ஒரு மனிதனை முழுமையாக தெரிந்துகொள்ளவும் கொண்டாடவும் வேண்டுமென்றால் அவன் இறக்க வேண்டியிருக்கிறது. # அப்படி என்னை தெரிஞ்சிக்கவே வேண்டாம்டா

விமர்சனம் என்பது இரண்டு பக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தி போல விமர்சிக்கும் நம்மையும் வெட்டும்.

உண்மை என்னவென்று தெரிந்த பின் அவர்கள் என்னிடம் சொல்லும் பொய்யை கேட்க மிகவும் பிடிக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
எனக்கு ஹிந்தியில் மிகவும் பிடித்த டைரக்டர் மன்சூர் கான். இவரது படங்கள் எல்லாமே ஒரு விதமான க்ளாஸ் தனத்தோடு இருக்கும். இவரது முதல் படமான கயாமத்சே கயாமத்தக், ஜோ ஜீத்தா ஓஹி சிக்கந்தர், ஜோஷ், அகேலே ஹம் அகேலே தும் போன்ற படங்களின் லிஸ்ட் சொல்லலாம். இந்த பாடல் ஆனந்த் மிலிந்தின் இசையில் வந்த ஒரு க்ளாசிக்கான பாடல். பாடலில் பெரும்பாலும் பல ஷாட்கள் ஹைஸ்பீடில் எடுக்கப்பட்டிருக்கும். அது பாடலில் இருக்கும் உற்சாகத்தை மேலும் தூண்டுவதாய் அமையும். ஒரு நல்ல பாடல் அருமையான விஷுவலோடு அமைவது மேலும் அப்பாடலை மெருகேற்றிவிடும். அவ்வகையில் இந்தப்பாடல் ஒரு விஷுவல், மெலடி ட்ரீட்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மை கார்னர்
மசாலா கஃபே என்ற பெயரை தமிழ் பெயர், டாக்ஸ் ப்ரீ கந்தாயங்களுக்காக கலகலப்பு @ masala cafe  என்று புதிய நாமகரணம் சூட்டப்பட்டு, நேற்று முன் தினம் ஆடியோ வெளியீடு செய்தோம்.  ஏஞ்சலீனா, இவளுங்க இம்சை தாங்க முடியலை ஆகிய பாடல்கள் கேட்டவுடன் பிடித்திருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்.
எல்.எம்.எம். தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் அஷோக்குமாரின் முதல் குறும்படம். சுமார் ஆறு விருதுகளுக்கு மேல் வாங்யிருக்கிறது இந்தக் குறும்படம். ரொம்பவும் ஸ்ட்ராங் மெசேஜைத்தான் சொல்லியிருக்கிறார். நடிகர்களின் நடிப்பு, க்ளைமாக்ஸில் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். அவ்வளவு பெரிய விஷயத்தை ஏதோ மனப்பாடமாய் ஒப்பிப்பது போல இருப்பதை தவிர்த்திருக்கலாம். ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. அதே போல பின்னணியிசையும். நடுநடுவே வெறுமையாய் காட்டப்படும் வெளிர் வான ஷாட் எதற்காக என்று தெரியவில்லை. இந்தக்கதையை கொஞ்சம் திரைக்கதையில் வேலை செய்திருந்தால் இன்னும் பெட்டராய் வந்திருக்கும் என்று தோன்றுகிறது. பட் சொல்ல வந்த விஷயத்தை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். முதல் குறும்பட முயற்சிக்கு நல்ல ரிசல்ட்டே வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் அஷோக் வெள்ளித்திரையில் உங்கள் வெற்றி பவனி வரட்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வீடியோ லிங்கை பார்த்துவிட்டு மண்டை காய்ந்து போனாலோ, பெருமூச்சுவிட்டு உங்க மானிட்டர் எரிந்து போனாலோ, அல்லது உங்கள் வயிறு எரிந்து பொசுங்கினாலோ நான் பொருப்பல்ல. ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு ஆசை. இதில் இவருக்கு ஆயிரம் மார்பகங்களை பிடித்துப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ஆயிரத்தையும் வீடியோவா எடுத்து போட்டிருக்கான் மனுஷன். அவரை விட ஒவ்வொரு பெண்களின் ரியாக்‌ஷன்களை பாருங்க.. ச்ச்ச்ச்சோ... க்யூட் http://www.youtube.com/watch_popup?v=rXOtYPcC4tQ
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
நிர்வாணமாய் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மனிதனின் லுல்லாவைப் பார்த்து அங்கே வந்த யானை கேட்டது “ நல்லாத்தானிருக்கு ஆனா இதை வச்சி கீழே கிடக்குற பட்டாணிய எடுக்க முடியுமா? “ என்று.
கேபிள் சங்கர்

Post a Comment

18 comments:

kanagu said...

3 படத்துக்கு 'U' சர்டிபிக்கெட்டா??? அநியாயமா இருக்கே :(

மசாலா கபே படம் ட்ரைலர் பார்த்தேன் அண்ணா.. நல்லா இருந்துது.. சில காமெடி வசனங்கள் சூப்பர் :)

Anonymous said...

உதயநிதி தயாரித்து சந்தானம் நடித்த ஓகே ஓகே படத்துக்கே வரி விலக்கு தரல.. அப்புறம் திமுகவின் பிரசார பீரங்கி குஷ்பு தயாரித்து சந்தானம், சிவா, விமல் நடிச்ச படத்துக்கு மட்டும் வரிவிலக்கு குடுத்துட போறாங்கலா.. பேரை மாத்துனதே தேவலங்குறேன்.. மசாலாகபேன்னே இருந்துருக்கலாம்

Philosophy Prabhakaran said...

// கிட்டே போய் திட்டலாம் என்று கதவை திறந்து ஸ்லோ பண்ணி எட்டிப் பார்த்த போது அவள் அவனிடம் சொன்னாள் “யாருக்காச்சு என்னை இங்க வச்சி பார்த்தேன்னு சொன்னாலும், ஆமா என் வீட்டுக்காரரோட போயிருந்தேனு சொல்லுவேன். நீ வேற கழட்டிட்டு வர்றேன்னு என் வயித்துல நெருப்ப அள்ளிப் போடுற? “ என்றாள். நான் ஏதும் திட்டாமல் வண்டியை கிளப்பிவிட்டேன். //

கற்பனை குதிரை பீறிட்டு ஓடுது போல...

Philosophy Prabhakaran said...

ட்ரைலர் அருமையா இருக்கு...

Philosophy Prabhakaran said...

யோவ் முந்தின கமென்ட் எங்கய்யா...???

ஹாலிவுட்ரசிகன் said...

மசாலா கஃபே ட்ரெயிலர் நல்லாயிருக்கு. வெயிட்டிங்...

தருமி said...

//வெறுமையாய் காட்டப்படும் வெளிர் வான ஷாட்..//

கைக்கு எட்டாத தொலைவில் அந்த வானம் ...

தருமி said...

தொடர்புக்கு ...

புதுகை.அப்துல்லா said...

// யாராச்சும் என்னை இங்க வச்சி பார்த்தேன்னு சொன்னாலும், ஆமா என் வீட்டுக்காரரோட போயிருந்தேனு சொல்லுவேன். நீ வேற கழட்டிட்டு வர்றேன்னு என் வயித்துல நெருப்ப அள்ளிப் போடுற? “ என்றாள். நான் ஏதும் திட்டாமல் வண்டியை கிளப்பிவிட்டேன்

//


சங்கமம் நிகழ்ச்சி பார்த்துட்டு நம்ம ரென்டுபேரும் மெரினா பீச் போனோம். அப்ப அங்க பைக்கில் ஒரு ஆணும், ஸ்கூட்டியில் இரு பெண்ணும்.. ஞாபகம் இருக்கா கேபிள்? :))

Unknown said...

//“யாராச்சும் என்னை இங்க வச்சி பார்த்தேன்னு சொன்னாலும், ஆமா என் வீட்டுக்காரரோட போயிருந்தேனு சொல்லுவேன். நீ வேற கழட்டிட்டு வர்றேன்னு என் வயித்துல நெருப்ப அள்ளிப் போடுற? “ என்றாள். நான் ஏதும் திட்டாமல் வண்டியை கிளப்பிவிட்டேன்//

காதலுக்கு மரியாதை கொடுத்திருக்கீங்க பாஸ்!! :-)

Unknown said...

//விமர்சனம் என்பது இரண்டு பக்கமும் கூர் தீட்டப்பட்ட கத்தி போல விமர்சிக்கும் நம்மையும் வெட்டும்//
அப்டீன்னா விரைவில டைரக்டராகப் போறீங்களா? அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பாஸ்!

அருண் said...

டிரெயிலர் கலகலப்பா இருக்கு,படம் எப்போ ரிலீஸ்??
குறும்படம் - impressive,இயக்குனருக்கு இது முதல் குறும்படமா?
அவருக்கு வாழ்த்துக்கள்...
-அருண்-
உங்க படம் எப்போ?

ARAN said...

CABLEJI

FYI Music director of Jo Jeeta Wohi Sikkandar film is Jatin-Lalit please correct this in your post.Definitely that song Pehla nasha (முதல் காதல் போதை என்னும் அர்த்தத்தில் தொடங்கும் பாடல் நிஜமாகவே போதைதான் .) one of the finest molodies of hindi songs.

naren said...

கேபிள்,

என்னது டிரெயிலர் “This is private Video" என்கிறது.

பட வசனத்தின் மொக்கை யூடியுப்புக்கே பொறுக்கலே போங்க, இப்போது அதை கேட்காத பார்க்காத நாங்கெல்லாம் அதிர்ஷ்டசாலி தாங்க போங்க.

ஸ்ரீகாந்த் said...

ஒருவர் முதல்வராக இருக்கிறார் என்பதற்காக எல்லா பிரச்சனைகளுக்கும் அவரையே குறை சொல்வது மிகவும் தவறான செயல் ஆகும்.......அந்த அந்த துறை சம்பந்த பட்டவர்கள் தான் இதற்கு நேரடி பொறுப்பு ஆவர்கள்......யு டூ கேபிள் !

arul said...

ECR road worst road

வெங்கி said...

சீனிவாசன் பெயரில் ஒரு பேஸ்புக் உள்ளது. அதில் ஏகப்பட்ட படம். அதில் ஒன்றாக இந்த ஸ்ரீனா இடம் பெற்றுள்ளது. அதில் இன்னொரு படம் பவர் பாட்டர் அதாவது ஹாரி பாட்டரை காப்பியடித்து ஒரு ஸ்டில். அதில் விளக்குமாற்றில் உட்கார்ந்து கொண்டு சீனிவாசன் பறப்பது போல உள்ளது.

பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனின் பேஸ்புக் பக்கம் போய்ப் பார்த்தால் ஸ்ரீனா என்ற ஒரு போஸ்டர் காணப்பட்டது. அதைப் பார்த்தபோது ஆச்சரியம் வரவில்லை, மாறாக திகிலடித்தது. காரணம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராணா படத்தை காப்பியடித்து மார்பிங் செய்யப்பட் படம் அது.

hayyram said...

///மாவோயிஸ்டுகள் கடத்தி விட்டார்கள், கடத்திவிட்டார்கள் என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்களே தவிர மாவோயிஸ்டுகளின் ப்ரச்சனை என்ன? எதற்காக கடத்துகிறார்கள், அரசு தரப்பு சொல்லும் விளக்கமென்ன///

மீடியாக்கள் அப்படித்தான், இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள். எல்லா மீடியாவும் அரசியல் சார்ந்ததே! அவர்களிடம் அதைத்தான் எதிர்பார்க்க முடியும்!

ஆனால் மாவோயிஸ்டுகளுக்கு என்ன பிரசனையாக இருந்தால் என்ன? அதற்காக பிழைப்பு நடத்த வந்த அரசு ஊழியர்களைக் கடத்துவதும் அப்பாவிகளைக் கொலை செய்வதும்தான் ஒரு இயக்கத்தின் குறிக்கோளா என்ன? 50 வருடங்களுக்கும் மேலாக யாருக்காகவோ போராடுகிறேன் என்கிறார்கள்! ஆனால் யாருக்காக போராடுகிறார்களோ அவர்களும் முன்னேரியமாதிரி தெரியவில்லை , இவர்களும் கடத்தலையும் கொலை செய்வதை நிறுத்துவது போலவும் தெரியவில்லை!