Thottal Thodarum

Apr 8, 2012

அஸ்தமனம்.

asthamanam-movie-stills-001 போர்களம் என்ற ஒரு படத்தை எடுத்த பண்டி சரோஜ்குமார் என்ற இளைஞரின் அடுத்த படம்.  போர்களம் படத்தின் மேக்கிங்கிற்காக பேசப்பட்டார். அடுத்த படத்தில் கண்டெண்டுக்காகவும் பேசப்படுவார் என்ற நம்பிக்கையை ஊட்டினார். அதை தக்க வைத்துக் கொண்டாரா என்றாரா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்.



மூன்று இளைஞர்கள், இரண்டு பெண்கள், ஒரு கைடு ஆகியோர் டிரெக்கிங் போகிறோம்னு என்று ஆளில்லாத காட்டுக்கு போகிறாரக்ள். அங்கே மனித கறி சாப்பிடும் ஆட்களிடம் மாட்டிக் கொண்டு ஒவ்வொருவராக சாகிறார்கள். கடைசியில் ஹீரோவும் இரண்டு பெண்களும் மட்டுமே தப்பிக்க, பின்பு என்ன ஆனது என்பதை படு அசுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறார்கள்.
asthamanam-movie-stills-005 ஒரு கேனான் 5டி, அல்லது 7டி கிடைத்தால் இல்லை விலைக்கு வாங்கிவிட்டால் போதும், நான்கு நடிகர்கள், காடு என்று லைட் ஏதும் தேவைப்படாத இடத்திற்கு போய் லோ ஆங்கிள், வைட் ஆங்கிள், ஃபோர்க்ரவுண்டில் கிளி, பாம்பு, நட்டுவாக்கிளி, நத்தை போன்றவற்றை வைத்து, அருமையான ஷாட்டுக்களை ஒரு நூறு எடுத்துவிட்டு அதை எடிட் செய்துவிட்டால் ஒரு படம் ரெடி. இவ்வளவையும் தயார் செய்கிறவர்கள் கொஞ்சமே கொஞ்சம் கதையையும், திரைக்கதையையும், தயார் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். asthamanam-movie-stills-002 இதில் நடித்த நடிகர்களின் நடிப்பைப் பற்றியோ, அல்லது அவர்களது குறைபாடுகளைப் பற்றியோ ஏதும் சொல்ல முடியாது. ஏனென்றால் தவறு முழுக்க, அவர்களை வெளிப்படுத்த சான்சே இல்லாத கதையில் அவர்கள் என்ன செய்தாலும் எரிச்சலாய்த்தானிருக்கும்.  எல்லோரும் ஹைஸ்பீடில் ரியாக்ட் செய்கிறார்கள். ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு அஞ்சு கிலோ மீட்டர் இடைவெளி விட்டு பேசுகிறார்கள். ஜோக்குக்கு மட்டும் இரண்டு கிலோ மீட்டர். இவர்களில் ஒவ்வொருவரும் சாகும் போதும், அவர்களின் சாவு நம்மை உருக்க வேண்டுமென்று அவர்கள் வைத்த காட்சிகளிலிருந்து ரீகேப் செய்யும் போது சரி அப்புறமென்ன என்று யோசிக்கும் அளவிற்கே இருப்பதால் இன்னும் போர் அடிக்கிறது.
படத்தில் நல்ல விஷயம் என்று பாராட்ட இரண்டே இரண்டு விஷயங்கள் தான் இருக்கிறது அதில் ஒன்று சி.ஜே.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு மட்டுமே குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது அநியாயம். படத்தில் பெரும்பாலும் தரையிலேயே ஷாட்கள் வைத்திருப்பதால் கால்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருப்பதும், ஃபோர்க்ரவுண்ட் ஷாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்தியிருப்பதும் ஒரு மைனஸ்.  ரெண்டாவது பாராட்டுக்குரிய விஷயம் 75 நிமிடங்களில் படத்தை முடித்தது. பண்டி சரோஜ்குமாரின் த்ரில் என்று போட்டிருக்கிறார்கள். கொட்டாவி தான் மிஞ்சியது.
கேபிள் சங்கர்

Post a Comment

9 comments:

CS. Mohan Kumar said...

டைம்ஸ் ஆப இந்தியா இந்த படத்துக்கு மூணு ஸ்டார் தந்தது. (ஓகே என)

75 நிமிஷம் எனில் இடைவேளை கிடையாதா?

வவ்வால் said...

கேபிளாரே,

அமெரிக்கன் இன்டி படங்கள் எல்லாம் இப்படியானது தான் , ஒரு காடு ,ஒரு தனி வீடு,ஒரு நாளு ஜோடிங்க அப்புறம் கொஞ்சம் ,கில்மா , கொஞ்சம் ஹாரர்னு கலந்துக்கட்டி கல்லாக்கட்டுவாங்க, எவில் டெட் அப்படியான படம் தான் கலக்கு கலக்குனு கலக்கிச்சு.

இந்த படத்திலும் கொஞ்சம், அப்படி இப்படி எதாவாது காட்டுதுங்களா குட்டிங்க :-))

ஆங்கிலப்பட பாதிப்பில் எடுத்தா அதே போல ஜிவ்வுனு "காட்சி"கள் வைக்க வேண்டாமா?

75 நிமிஷம் வரைக்கும் தான் படம் எடுக்க காசு இருந்துச்சோ என்னமோ, போர்க்களம் தயாரிப்பாளரை ஏமாத்திட்டதா ,அவர் இந்த இயக்குனர் காரை எல்லாம் அடிச்சு நொறுக்கினு போலீஸ் கேஸ், அப்படினு எல்லாம் முன்ன நியூஸ் வந்துச்சு.

Anonymous said...

//அருமையான ஷாட்டுக்களை ஒரு நூறு எடுத்துவிட்டு அதை எடிட் செய்துவிட்டால் ஒரு படம் ரெடி//

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கூட பல ஷாட்கள் இப்படித்தான் எடுக்கப்படுகின்றன. சப்ஸ்டன்ஸ் இல்லாமல் ஸ்டைல் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது.

rajamelaiyur said...

//ரெண்டாவது பாராட்டுக்குரிய விஷயம் 75 நிமிடங்களில் படத்தை முடித்தது. பண்டி சரோஜ்குமாரின் த்ரில் என்று போட்டிருக்கிறார்கள். கொட்டாவி தான் மிஞ்சியது.
//

இதுதான் கேபிள் அண்ணன் பஞ்ச ..

vimalanperali said...

நல்ல விமர்சனம்,வாழ்த்துக்கள்.

Cable சங்கர் said...

mohan kumar..

சில சமயங்களில் டைம்ஸ் ஆப் இண்டியா சொதப்பி விடுகிறது.

Karthik Somalinga said...

முன்பெல்லே டைம்ஸ் ஆப் இந்தியாவில் பெரிய தலைகள் நடித்த அல்லது இயக்கிய தமிழ் படங்களுக்கு மட்டுமே விமர்சனம் செய்து வந்தார்கள். இப்போதோ, சின்ன பட்ஜெட் படங்களையும் மதித்து விமர்சிக்கிறார்கள்! பொதுவாகவே தமிழர்களுக்கு எதிரான பத்திரிகையாக இது திகழ்ந்தாலும் (குறிப்பாக அவர்களுது இணைய பதிப்பில்), இத்தகைய மாற்றங்கள் வரவேற்கபட வேண்டியவை! அதே நேரம் அவர்களின் விமர்சன தரம் ஒரு பெரிய கேள்விக்குறி!

Rafeek said...

சி.ஜே.ராஜ்குமாரின் பெயர் மட்டுமல்ல அவரின் ஒளிப்பதிவும் DI என்ற பெயரில் அநியாயத்திற்கு இருட்டடிக்கப்பட்டு இருக்கிறது.. Desaturated tone..அளவுக்கு அதிகமாக பண்டியின் போர்க்களமிலும் பயன் படுத்த பட்டிருக்கும்.
எடிட்டிங் டேபிளில் கதையை உருவாக்கும் கத்து குட்டி ஸார் இந்த இயக்குனர்.

தமிழ் பையன் said...

<< சி.ஜே.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு மட்டுமே குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது அநியாயம். >>

ஏன் என்று சொல்லவில்லையே?