Thottal Thodarum

Nov 30, 2010

கனிமொழி

kanimozhi-movie-still-tamildigitalcinema-1-200x300 படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்தவர்கள் எல்லாரும் ஆளாளுக்கு பயமுறுத்தி விட்டிருந்தார்கள். படு மொக்கை, உட்கார முடியவில்லை என்றெல்லாம். அவனா நீ படத்தையே பார்த்த வீரனாகிய எனக்கு இதெல்லாம் சும்மா.. என்று தைரியமாய் படம் பார்க்க போய்விட்டேன்.
kanimozhi-movie-still-tamildigitalcinema-16-300x199  சில பேர் நல்ல நாட் வைத்திருப்பார்கள் ஆனால் அதை சரியாய் சொல்ல முடியாமல் சொதப்பியிருப்பார்கள். சில பேருக்கு மொக்கையான ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாய் சொல்ல தெரிந்திருப்பார்கள். இப்படத்தின் இயக்குனர் முதல் வகையில் மாட்டிக் கொண்டார்.  இரண்டு இளைஞர்கள் ஒருவன் ஜெய், இன்னொருவர் வசந்த. ஜெய் ஒரு இண்ட்ரோவர்ட், வசந்த ஒரு எக்ஸ்ட்ரோவர்ட், ஜெய் தன்னுள் எழும்பிய காதலை அந்த பெண்ணிடம் சொல்ல தயங்கி அவனுள்ளே ஒரு கற்பனை கதையை வடித்துக் கொண்டிருப்பவன். அடுத்த நிலைக்கு கொண்டு போக முடியாமல், இழுத்தடித்துக் கொண்டிருப்பவன். அதே நேரத்தில் வசந்த எல்லா விஷயங்களிலும் தடாலடி. வீட்டிலாகட்டும், காதலாகட்டும் தாட் பூட் தஞ்சாவூர்தான்.  கல்யாணம் வரைக்கும் வந்து வாழ்க்கையில் வெற்றி பெருகிறான். இரண்டு காண்ட்ராஸ்டான கேரக்டர்கள். மிக அருமையாய் செய்திருக்க வேண்டிய படம்.. சவ சவ ஜெய் கேரக்டர் போல படமும் சவசவத்து போய்விடுவதுதான் கொடுமை.
kanimozhi-movie-still-tamildigitalcinema-300x200 ஒரு சூப்பர் பிகரோடு ஒரு சுமார் பையன்.. ஏன் மொக்கை பையன் ஜோடி போட்டுக் கொண்டு போகும்போது நமக்கு தோன்றும் எப்படி இவனையெல்லாம் லவ் பண்றாளோன்னு..? இம்மாதிரி பெருமூச்சுவிட்டுக் கொண்டு அலையும் ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் தான் அதிகம். அப்படிப்பட்ட கேரக்டர் தான் ஜெய்யின் கேரக்டர். இடைவேளை வரை கொஞ்சம் கூட சுவாரஸ்யமில்லாமல் இயல்பான காட்சிகள் என்று பீல் செய்து இவர்கள் வைத்திருக்கும் காட்சிகள் படு ஸ்லோ அண்ட் சொதப்பல். இவ்வளவு இளைஞர்கள் இருக்கிறார்களே கொஞ்சமாவது இளமை துள்ளல் இல்லாமலா போகும்?. அவ்வளவு டிரை.. அதை விட கதாநாயகி விளம்பரத்தில் வருவது போல ஆங்காங்கே.. நடந்து கொண்டேயிருக்கிறார். மற்றபடி ஒன்றும் பெரிதாய் இல்லை. இமமாதிரியான கதைகளுக்கு அட்லீஸ்ட் ஹீரோயின் கேரக்டரையாவது சரியாக செய்திருக்க வேண்டும். அதிலும் மிஸ்ஸிங்.
kanimozhi-movie-still-tamildigitalcinema-4-300x200 டெக்னிகலாக படம், ஒளிப்பதிவு, பின்னணியிசை என்று எல்லாமே ஓக்கேவாக இருந்தாலும் கண்டெண்டில் கோட்டை விட்டதால் சுவாரஸ்யமில்லாமல் தியேட்டரில் பல பேர்களை புலம்ப வைத்துவிட்டார்கள். Better Luck Next Time sripathi..
கனிமொழி- படத்திற்கும் டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம்.
கேபிள் சங்கர்
Post a Comment

36 comments:

பிரபாகர் said...

//கனிமொழி- படத்திற்கும் டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம்.
//
நல்ல கேள்விண்ணே!... உங்களின் துணிச்சல் உண்மையிலேயே பாராட்டக்கூடியது....

பிரபாகர்...

வெற்றி நமதே said...

I am back

Palani

வெற்றி நமதே said...

பிரபாகர் said...

//கனிமொழி- படத்திற்கும் டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம்.
//
நல்ல கேள்விண்ணே!... உங்களின் துணிச்சல் உண்மையிலேயே பாராட்டக்கூடியது....

பிரபாகர்...
///////////////////

யோவ் அந்த ஆளு க்ளைமாக்ஸ் பஞ்ச் வைக்கணுமேன்னு சொன்னாரு அத போய் துணிச்சல் அது இதுனு சொல்லி அடி வாங்க வேச்சிடாத.

'பரிவை' சே.குமார் said...

//கனிமொழி- படத்திற்கும் டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம்.
//
நல்ல கேள்விண்ணே!...

படம் எப்படியோ நீங்கள் விமர்சித்த விதம் அருமை... நாயகியின் பெயர் கனிமொழியா?

வெற்றி நமதே said...

////////
நல்ல கேள்விண்ணே!... உங்களின் துணிச்சல் உண்மையிலேயே பாராட்டக்கூடியது....
////////


கேபிள் சங்கர் இதற்க்கு பதில் சொல்லி இருந்தால்

" இப்படி உசுப்பேத்தி விட்டே உடம்ப ரணகலம்மா ஆக்கிடுவானுங்க போல "

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

//சில பேர் நல்ல நாட் வைத்திருப்பார்கள் ஆனால் அதை சரியாய் சொல்ல முடியாமல் சொதப்பியிருப்பார்கள். சில பேருக்கு மொக்கையான ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாய் சொல்ல தெரிந்திருப்பார்கள். இப்படத்தின் இயக்குனர் முதல் வகையில் மாட்டிக் கொண்டார். //
படத்துக்கு விமர்சனம் இந்த வரியிலேயே முடிஞ்சிப்போச்சி..!!

Unknown said...

//ஒரு சூப்பர் பிகரோடு ஒரு சுமார் பையன்.. ஏன் மொக்கை பையன் ஜோடி போட்டுக் கொண்டு போகும்போது நமக்கு தோன்றும் எப்படி இவனையெல்லாம் லவ் பண்றாளோன்னு.//

:-))

Philosophy Prabhakaran said...

அதென்ன இண்ட்ரோவர்ட், எக்ஸ்ட்ரோவர்ட்... திடீர்னு சுஜாதா மாதிரி எல்லாம் எழுதுறீங்க...

பிரபல பதிவர் said...

என்னமோ போங்க...
ஜெய் நல்லா வருவார்னு எதிர்பாத்தேன்... ஒன் இயர் ஹீரோவாய்ட்டாரே....
சீரியல்ல எதிர்பாக்கலாம் சீக்கிரம்

அப்பாவி முரு said...

ஹிட்ஸ் பார்ப்பதற்காகவே வைக்கப்பட்ட தலைப்பு என்றே எண்ணுகிறேன்.


”கேபிள் அங்கிள் உங்களைத்தான்”

Cable சங்கர் said...

mister muru.. அன்பார்லிமெண்ட் வார்ட்தையெல்லாம் உபயோகிக்ககூடாது.. :))

Prabu M said...

//சில பேர் நல்ல நாட் வைத்திருப்பார்கள் ஆனால் அதை சரியாய் சொல்ல முடியாமல் சொதப்பியிருப்பார்கள். சில பேருக்கு மொக்கையான ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாய் சொல்ல தெரிந்திருப்பார்கள். இப்படத்தின் இயக்குனர் முதல் வகையில் மாட்டிக் கொண்டார். //

க்ளீன் போல்டு!

அப்பாவி முரு said...

மன்னிக்கவும்.,

தவறை உணர்ந்து திருத்திவிட்டேன்.


ஹிட்ஸ் பார்ப்பதற்காகவே வைக்கப்பட்ட தலைப்பு என்றே எண்ணுகிறேன்.


”சங்கர் மாமா உங்களைத்தான்”

Cable சங்கர் said...

மீண்டும்.. மீண்டும் முரு தாத்தாஆ.. அன்பார்லிமெண்ட் வார்த்தை உபயோகிக்கிறார்.. எனப்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்பாவி முரு said...

உங்களை மாமா அ அங்கிள் என சொல்லக்கூடாது என்றால், பக்கவாட்டில் எடுத்த முழ உருவபடத்தை வெளியிடும் பார்க்கலாம்.

shortfilmindia.com said...

miSter.. உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை.. எல்லாத்தையும் சிங்கை வரும் போது செட்டில் பண்ணிரலாம்.. ஓகே.. நானும் ஏதுவும் சொல்லலை. நீங்களும் எதுவும் சொல்லலை.. யூத்து யூத்தாயிருக்கணும்.. ஓகே.. ரைட்..:)))

cablesankar

செங்கோவி said...

அப்போ. கனிமொழி நல்லாயில்லேன்னா சொல்றீங்க..தொண்டர்களைக் கடுப்பேத்தாதீங்க யுவர் ஆனர்!

-செங்கொவி

அப்பாவி முரு said...

அப்பிடி வாங்க வழிக்கு.


போனதடவை மாதிரி கைகளை வீசிக்கொண்டு வராமல், வரும்போது மறக்காமல் தலைக்கு ஒரு கிலோ மிச்சர், முறுக்கு வாங்கி வரவும்.

இதோ மாற்றப்பட்ட வாசகம்.

ஹிட்ஸ் பார்ப்பதற்காகவே வைக்கப்பட்ட தலைப்பு என்றே எண்ணுகிறேன்.


”கேபிள் சங்கர் ”யூத்” உங்களைத்தான்”

பித்தனின் வாக்கு said...

//சில பேர் நல்ல நாட் வைத்திருப்பார்கள் ஆனால் அதை சரியாய் சொல்ல முடியாமல் சொதப்பியிருப்பார்கள். சில பேருக்கு மொக்கையான ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாய் சொல்ல தெரிந்திருப்பார்கள். இப்படத்தின் இயக்குனர் முதல் வகையில் மாட்டிக் கொண்டார். //
படத்துக்கு விமர்சனம் இந்த வரியிலேயே முடிஞ்சிப்போச்சி..!!

repeaaaaatai.....

shortfilmindia.com said...

appaavi.. முரு.. உங்களுக்கில்லாததா.. ஒரு மூணு கிலோ.. மைசூர்பா கூட வாங்கிட்டு வந்திர்றேன்.. டிக்கெட் அனுப்பிடுங்க..:))

பித்தனின் வாக்கு said...

ennai maathiri chinna pasangalai vaiththuk kondu, ithu maathiri unparliamentry ellaam pesakk koodathu.

Enna yuuth enra vaarththaikku patendent en kittathaan irukku.

Venkat Saran. said...

படம் எவ்வளவு மொக்கையா இருந்தாலும் இந்த படத்த தயாரிச்சது என் தலைவி சோனா, அதுக்காகவாது நான் பார்பேன் :) வாழ்க சோனா , குறைக அவரது டிரஸ்.

shortfilmindia.com said...

நானே தலைவிக்காகத்தான் பார்த்தேன்.. ம்ஹும்.. சோனா.. என் சோனா..

அப்பாவி முரு said...

// shortfilmindia.com said...
appaavi.. முரு.. உங்களுக்கில்லாததா.. ஒரு மூணு கிலோ.. மைசூர்பா கூட வாங்கிட்டு வந்திர்றேன்.. டிக்கெட் அனுப்பிடுங்க..:))

//

அதுக்கு மணற்கேணி 2010க்கு எழுதணும்.


:)))

வெற்றி நமதே said...

///////அப்பாவி முரு said...

மன்னிக்கவும்.,

தவறை உணர்ந்து திருத்திவிட்டேன்.


ஹிட்ஸ் பார்ப்பதற்காகவே வைக்கப்பட்ட தலைப்பு என்றே எண்ணுகிறேன்.


”சங்கர் மாமா உங்களைத்தான்”///////

கீகீகீகீ.............

Ravikumar Tirupur said...

வாரவாரம் தவறாம படம் ரிலீஸ் ஆகிட்டே இருக்குனா இந்தமாதிரி படம் வரதுதான் காரணமோ

pichaikaaran said...

அட ச்சே.. இப்படி ஒரு படம் வந்ததே எனக்கு தெரியாது..
பதிவின் தலைப்பை பார்த்து , வேறு எதையோ எதிர் பார்த்து நுழைஞ்சேன்...
பார்த்தா , இப்படி ஒரு விமர்சனம்...
சரி..படம்தான் குப்பை.. அட்லிஸ்ட் ஒரு ஸ்டில்லாவது நம்ம டேஸ்ட்டுக்கு போட கூடாதா..
இப்படி தெரிஞ்சு இருந்தா, வந்து இருக்கவே மாட்டேன்..
அதி காலைல இப்படி ஒரு சோதனை

R.Gopi said...

கனிமொழி நல்லா இல்லை....மொக்கை என்று சொன்னதில் எந்த “அரசியலும்” இல்லையே ஷங்கர் ஜி?

சுரேகா.. said...

நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். படத்தின் தலைப்புக்கு சம்பந்தம் இருக்கு!!

கடைசிக்காட்சியில், அவர் மனைவி ரூமை அலங்கோலமாகப் போட்டிருக்கும்போது, ஒரு திருமணப்பத்திரிகை கிடக்கும்.

அதில் ‘ ராஜேஷ் / கனிமொழி’ன்னு இருக்கும். அதாவது..

அவர் மனைவி பெயர்தான் கனிமொழியாமம்மா!!

:))

pichaikaaran said...

கேபிள்ஜியின் பிளஸ் , மைனஸ் என் பார்வையில்...

எல் கே said...

சரி கேபிள் தாத்தா

VISA said...

கனிமொழி டைட்டில் கார்டு பாருங்கள் "அம்மா கிரியேஷன்ஸ்"

வினோ said...

பார்க்கும் லிஸ்டிலிருந்து இந்த படம் ட்ராப்.. நன்றி அண்ணா..

hayyram said...

சார், ஒரு சந்தேகம், இமேஜ் ஸ்பேஸ் மீடியா விளம்பர உத்தியை பயன்படுத்தி இருக்கிறீர்களே, ஏதாவது 'பிரயோஜனம்' இருக்கா?

Cable சங்கர் said...

ஹேய்ராம்.. பெரிசா ஏதும் இல்லை.. ரொம்ப மீகர் தான்.

hayyram said...

oh thanks for ur reply.