Thottal Thodarum

Nov 6, 2010

மைனா

Maina _1_ சாதாரணமாக ரிலிஸாகியிருந்தால் மக்களிடம் சென்று சேரவே ஒரு வாரமாகியிருக்கும். தொடரவங்க தொட்டா, கல்லும் பொன்னாகும்ங்கிறா மாதிரி ரெட் ஜெயண்டும், கல்பாத்தி அகோரமும் தொட்டு தொலங்கிய கறுப்பு குதிரை மைனா.

வழக்கமாய் பிரபு சாலமனின் முத்தைய படங்களான கண்ணோடு காண்பதெல்லாம், கிங், லீ, கொக்கி போன்ற படங்களில் எல்லாமே கொஞ்சம் விதயாசமான கதை களனை யோசித்திருப்பார். ஆனால் திரைக்கதையாக்கும் போது கொஞ்சம் மெனக்கெட்டிருக்க மாட்டார். அதனால் அப்படஙக்ளுக்கு கிடைக்க வேண்டிய சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போயிருக்கும். விக்ரம் நடித்து அவர் இயக்கிய கிங் திரைப்படம் எங்கள் திரையரங்கில் மட்டும் சுமார் 30 நாட்களுக்கு மேல் ஓடியது. அதற்கு காரணம் எங்கள் திரையரங்கில் மட்டும் க்ளைமாக்ஸ் மாற்றியமைக்கப்பட்டிருந்தது தான் .

மைனா இரண்டு காதலர்களுடனான வித்யாசமான பயணம். சுருளியும், மைனாவும் சிறு வயது முதலே ஒன்றாய் சுற்றித் திரிபவர்கள். மைனா பெரிய பெண்ணானவுடன், அவளை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க நினைக்கும் அவளது அம்மாவை அடித்து கல்லை தூக்கி போட்டு கொலை செய்ய முயன்றான் என்று போலீஸில் கேஸ் கொடுத்து பதினைந்து நாள் ரிமாண்ட் செய்யப்பட்டதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. ரிலீஸாவதற்கு ஒரு நாள் முன் மைனாவுக்கு திருமணம் செய்ய சதி நடப்பது தெரிந்து ஜெயிலிருந்து தப்பிக்கிறான். அவனை தேடி இன்ஸ்பெக்டரும், ஜெயிலரும் கிளம்புகிறார்கள். தீபாவளிக்கு முதல் நாள் ஆரம்பித்து, தீபாவளியன்று முடியும் கதை தான் மைனா.
Maina _17_ நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். ஒரு போலீஸ்காரர் அவர் கையுடன்  கைதியின் கையில் விலங்கிட்டு பஸ்ஸில், ரயிலில் பயணப்படுவதை. அப்படி பயணப்படும் ஒவ்வொரு கைதியின், போலிஸுக்கு பின் ஒரு கதை நிச்சயம் இருக்கும். அப்படி பட்ட ஒரு கதை களன் தமிழ் சினிமாவுக்கு புதுசுதான். பெரியகுளம், மூணாறு, குரங்கணி என்று அடர்ந்த காடுகளில் கிடைத்த வெளிச்சத்தில் லைட்டுகள் பயண்படுத்தாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுகுமார். முக்கியமாய் பாராட்ட வேண்டிய காட்சி, ஒரு மலையுச்சியிலிருந்து தமிழ் நாடு கேரளா பார்டரையும், தேனி, பெரியகுளம் வழியை டாப் ஆங்கிளிலிருந்து காட்டும் காட்சியும். காடுகளில் பயணிக்கும் காட்சிகளையும் தான்.
வித்தார்த் தொட்டுப்பார் படத்தில் ஏற்கனவே  வந்திருந்தார். இதில் கொஞ்சம் நடித்திருக்கிறார். மனதை கொள்ளை கொள்பவர் அமலா பால் தான். அந்த மேக்கப்பில்லாத பரு முகமும், பெரிய விழிகளும் ஆயிரம் கதை சொல்கிறது. கண் நிறைய ஏக்கங்களும், கனவுகளூமாய் மிக பாஸிட்டிவான ஒரு வாழ்க்கையின் எதிர்பார்பை கண்ணுக்குள் தெரிய வைத்தது சிறப்பு.

அதே போல இன்ஸ்பெக்டராய் வரும் சேது, ஜெயிலர் தம்பி ராமையா, மைனாவின் அம்மா போன்ற கேரக்டர்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார்கள். அது போல சின்ன சின்ன கேரக்டரக்ளாய் அறிமுகமாகும், இன்ஸ்பெக்டரின் மனைவி, அவரது அண்ணன்மார்கள், மதனிமார்கள், சுருளியின் அப்பா, அம்மா, என்று எல்லா கேரக்டர்களும் நச்சென நடித்திருப்பது பாராட்டத்தக்கது.
Maina _2_ இமானின் இசையில் பயணத்தில் நிச்சயம் இது சொல்லிக் கொள்கிறார்போல படம் தான். இரண்டு மெலடிகளும், ஒரு சின்ன ப்ளோக் பாடலும், அருமையான பின்னணியிசையுமாய் மனிதர் மெனக்கெட்டிருக்கிறார். அதிலும் அந்த ஜிங்கு..ஜிங்கு..பாடல்.. ம்...

கதை திரைக்கதை வசனமெழுதி இயக்கியவர் பிரபு சாலமன்.  படம் முழுவதும் க்ளீஷேக்களான தொகுப்பாய்த்தான் இருக்கிறது. முக்கியமாய் மைனாவுக்கும் சுருளிக்குமான சின்ன வயது பாடல்,  மைனா படிக்க சைக்கிள் டைனமோவை சுருளி ஓட்டிக் கொண்டேயிருப்பது, பருத்திவீரன் பாதிப்பில் தலையாட்டிக் கொண்டே பாடிக் கொண்டு போவது, பருத்தி வீரன் போல்வே ஒரு அராத்து கேரக்டராய் வலம் வருவது. பெத்த அப்பனையே கலாய்த்துக் கொண்டு அலைவது, கூடவே வயதுக்கு மீறி பேசும் ஒரு பையனுடன் அலைவது, க்ளைமாக்ஸின் திணிப்பு என்று பல இடங்களில் க்ளீஷேகளாகவே அமைந்திருப்பது நெளியத்தான் வைக்கிறது

அவ்வூரிலிருந்து ஜீப் டிரிப் அடிப்பதுதான் வேலையாக இருக்கும் சுருளிக்கு தெரியாதா..? குறுக்கு வழி, தேவையில்லாமல் கதையை வளர்க்க, ராமையாவை காமெடி பீஸாக்கி அலைவது. யாருமற்ற அனாதையாய் தன் ஐந்து வயது மகளுடன் நடுத்தெருவில் நிற்கும் அநாதையாய் நின்றவளை தன் ஊருக்கு கூட்டி வந்து புகலிடம் கொடுத்து ஒரு நல்ல நிலைக்கு வர காரணமான சுருளியை மருமகனே மருமகனே என்றழைத்து நெருக்கமாய் சிறுவயது முதல் பழகியிருந்து ஏன் வேறு ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு திருமணம் செய்ய முயற்சி செய்கிறாள்?. அதே போல க்ளைமாக்ஸ் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவுடன் திணிக்கப்பட்ட காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை. .

myna-movie-review
ஒரு வித்யாசமான ட்ராவல் படமாய் அமைந்துவிட்டது இந்த மைனா. படம் நெடுக இயக்குனரது உழைப்பு தெரிகிறது. ஒவ்வொரு சின்ன மேட்டரிலும் கவனம் செலுத்தியிருக்கிறார். ஜெயிலில்லிருந்து ஒரு கைதி தப்பிவிட்டால் அதற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு என்ன பிரச்சனைகள் வரும், தலை தீபாவளிக்கு கிளம்ப தயாராக இருக்கும் கசகசவென அரிக்கும் மனைவி, கொஞ்சம் கூட மாப்பிள்ளை மேல் மதிப்பேயில்லாத சின்னத்தம்பி அண்ணன்கள், எப்போ பார்த்தாலும் போனிலேயே பேசும் குரல் கூட கேட்காத தம்பி ராமையாவின் மனைவி கேரக்டரான செந்தாமரை. மைனாவின் அம்மா குருவம்மா கேரக்டர். பஸ்ஸில் பயணிக்கும் அந்த கும்பிடு கோவிந்தன். ரியல் எஸ்டேட் ஏஜண்ட், ஹோட்டலில் வரும் மனித உரிமை கழக ஆள், என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார். முக்கியமாய் அந்த பஸ் விபத்து காட்சியில் சரியான பில்டப்.  அதை படமாக்கியிருக்கும் விதமும் நன்றாகவேயிருக்கிறது. அக்காட்சியின் மூலமாய் சுருளி, மைனா, இன்ஸ்பெக்டர், ஜெயிலருக்குமிடையே வரும்  பிணைப்பு அருமை.ஒரு அருமையான காதல் கதையாய் வரவேண்டிய படம். ஒரு நல்ல ட்ராவல் கம் லவ் படமாய் அமைந்துவிட்டது. படத்தில் பஞ்ச் லைனாக வரும் “லவ் பண்ணுங்க சார்.. லைப் நல்லாருக்கும்” என்பது போலவே இருந்திருந்தால் இன்னும் நல்லாருந்திருக்கும்

இக்குறைகளையெல்லாம் மீறி ஒரு வித்யாசமான களத்தில் ஒரு நான்கு கேரக்டர்களுடனான ஒரு பயணத்தை, அந்த அந்த கேரக்டர்களுடனான மனோபாவத்துடன், அவரவர்களின் உணர்வுகளோடு பயணப்பட வைத்த இயக்குனரையும், இம்மாதிரியான சின்ன படங்களுக்கு ஆதரவு கொடுத்து பெரிய படமாக்கிய ரெட் ஜெயண்ட், ஏ.ஜி.எஸ். நிறுவனங்களின் முனைப்பையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.
மைனா-  A Film to Watch.
கேபிள் சங்கர்
Post a Comment

33 comments:

CS. Mohan Kumar said...

முதல் வடை எனக்கு தான்

Unknown said...

நல்லா இருக்கு பாஸ்! ஆனா வெயிட் பண்ணனும் DVD வரும் வரையும்...! :)

CS. Mohan Kumar said...

இது வரை வாசித்த பல விமர்சனங்களில் பலர் நல்லா இருக்குன்னும் சிலர் போர் அப்படின்னும் சொல்றாங்க. ம்ம்ம் பார்க்கணும்

Unknown said...

மைனா.. மைனா நெஞ்சுக்குள்ளே பாடல் எனக்கு பிடித்த பாடல் ..

கார்த்திகைப் பாண்டியன் said...

//மொத்தப் படமுமே க்ளிஷேக்களின் தொகுப்பாகத்தான் இருக்கிறது.//

தலைவரே.. இது நேத்து நான் எழுதுனது.. why blood? same blood..:-)))

எனக்கு படம் பிடிக்கல..:-((

Ganesan said...

இந்த படத்துக்கு விமர்சனம் எழுத் மெனகெட்ருப்பதை பாராட்ட தான் தோன்றுகிறது..

சிவராம்குமார் said...

இன்னைக்கு நைட் ஷோ டிக்கட் எடுத்திருக்கு... பாக்கலாம்...

சைவகொத்துப்பரோட்டா said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

R.Gopi said...

"மைனா” உயர பறக்குமா?

லெட்ஸ் வெயிட் & வாட்ச்....

Arun said...

Nice work by the team, worth to watch..

Suthershan said...

விமர்சனம் அருமை.. பாராட்டுக்கள்..
@ கேபிள் சங்கர் : அதென்னவோ காதல் தோத்தால் தான் அந்த வலி மனசுல நிக்குமா??? அங்காடி தெருவுல ஜெயித காதலும் நிக்குதே..
Check my review :

http://suthershan.blogspot.com/2010/11/blog-post.html

Unknown said...

//சாதாரணமாக ரிலிஸாகியிருந்தால் மக்களிடம் சென்று சேரவே ஒரு வாரமாகியிருக்கும். தொடரவங்க தொட்டா, கல்லும் பொன்னாகும்ங்கிறா//

விமர்சனம் நன்றாக வர காரணமும் இதுவோ ?

கவின் இசை said...

ம்ம்ம் பார்க்கணும்

Rishoban said...

Good review. I did not read any of your reviews after reading your critics on Kalavani; so, after a long time, I read this review. Its very rare to see you appreciating a good movie!

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் அருமை.

Cable சங்கர் said...

//Good review. I did not read any of your reviews after reading your critics on Kalavani; so, after a long time, I read this review. Its very rare to see you appreciating a good movie!//

எனக்கு பிடித்த படத்தை நிச்சயம் நான் என் மனசாட்சிக்கு துரோகமில்லாமல் பாராட்டியே தீருவேன். ரிஷபன்..

Krishna said...

Wonderful talking to you on Deepavali
thanks for your time
keep in touch
Nidarshana Kathai arumai arumai

krishna

Prem S said...

Superb review .continue ur job

Cable சங்கர் said...

@மோகன் குமார்
படம் பார்த்துட்டு சொல்லுங்க
@கே.ஆர்.பி.செந்தில்
ஓகே.. ரைட்டு அப்புறம்

@கார்திகை பாண்டியன்
:((

Cable சங்கர் said...

#காவேரி கணேஷ்
ஏன்?

@சிவா
பார்த்துட்டு சொல்லுங்க

@சைவ கொத்துபரோட்டா
நன்றி

@ஆர்.கோபி
பறக்கும்

@அருண்
ஆமாம்.

Cable சங்கர் said...

@சுதர்சன்
ம்

@ஆகாயமனிதன்
நிச்சயம் இல்லை

@கவின் இசை
பாருங்க

Cable சங்கர் said...

@சே.குமார்
நன்றி

@கிருஷ்ணா
எனக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.. அடிக்கடி தொடர்புகொள்ளவும். நன்றி

@எஸ்.பிரேம்குமார்
நன்றி

ரோகிணிசிவா said...

தேங்க்ஸ் பார் ஷேரிங் ,
நீங்க சொன்ன மாதிரி அவங்க நாலு பேருக்காக கட்டாயம் பார்க்கலாம்

pranavramesh said...

ஏங்க, ஏசி சேர்ல உட்கார்ந்துகிட்டு ஒரு படத்தை விமர்சனம் பண்ணுறப்ப ஒரு நல்ல படத்தையும் அதில் நடித்தவர்களையும் பாராட்ட கூட வேண்டாம். தயவு எதிர்மறை விமர்சனம் செய்யாதீங்க. உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க இப்ப முன்னனியில் உள்ள விஜய் அஜீத் விட மைனா படத்துல விதார்த் நல்லாவே நடிச்சு இருக்கார் ஏனோ உங்களுக்கு மட்டும் தான் சுமாரா நடிச்சு இருக்கார்.

DR said...

படம் நல்லா தான இருக்குது. அதுலயும் இத்தனை குறை சொல்றீங்களே தல.. ?

மைனஸ் ஓட்டு குத்திட்டேன்...மன்னிச்சிடுங்க...

Anonymous said...

what is new climax in King Film
Gm_dinesh@live.com
pls tell me

Unknown said...

I didnt watch this movie.Bcoz, TN BIG BROTHERS trying to push their views into us.They get big shots and make sure they are making good comment about the film.Those so called BIG SHOTS in Tamil fim Industry also did that.Because, they have hope that thesse TN BIG BROTHERS will give chance to them to make movies.Bcoz, these TN BB have good wealth and advt media.


Patriot

குழலி / Kuzhali said...

"மைனா" திரைப்படம் கதை - வலைப்பதிவிலிருந்து திருடப்பட்டது
http://kuzhali.blogspot.com/2010/11/blog-post_27.html

sivasenthilkumar said...

தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் மைநாவுக்கும் இடம் உண்டு. அருமையான விமர்சனம். ஆனால் சாதாரணமாக ரிலிஸாகியிருந்தால் மக்களிடம் சென்று சேரவே ஒரு வாரமாகியிருக்கும், தொடரவங்க தொட்டா, கல்லும் பொன்னாகும்ங்கிறா வார்த்தையில் உடன்பாடில்லை. நாளை தமிழ் சினிமாவே இவர்கள் தொட்டால் தான் பொன்னாகும் என்ற நிலைமையை ஆதரிப்பது போல் உள்ளது.

robin said...

wow what a super film. i like very very much this film. i feel good
mynaa mynaa song very super

Unknown said...

maina is very super film.....

ஷண்முகா said...

படம் பார்த்து முடித்து 2 மணி நேரம் ஆகிறது இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீள முடிய வில்லை

As you said...A film to watch

tamilcinemablog said...

மிக அருமையாக விமர்சனம், படம் சூப்பர்

இவன்
http://tamilcinemablog.com/