Thottal Thodarum

Sep 10, 2015

சாப்பாட்டுக்கடை - குமார் மெஸ் - சென்னை

வடபழனி லஷ்மண் ஸ்ருதி சிக்னலை க்ராஸ் செய்யும் போதெல்லாம் சென்னையில் வாழும் 80 சதவிகித மதுரைக்காரர்களும், சாப்பாட்டுப் பிரியர்களும், எப்படா கடை திறப்பீங்க?ன்னு எதிர்பார்த்த மதுரை புகழ் குமார் மெஸ் ஒரு வழியாய் ஆரம்பித்தே விட்டார்கள். ஆரம்பித்த நாளிலிருந்து கூட்டமான கூட்டம். க்யூ கட்டி நிற்கிறது என்றும். டோக்கன் போட்டெல்லாம் சினிமா பிரபலங்கள் காத்திருக்கிறார்கள் என்று பேச்சாய் இருந்தது.




நேற்று மதியம் நண்பரொருவர் வாங்க ஒரு நடை போயிட்டு வந்திரலாம்னு கூப்பிட்டார்.. நான் பேலியோவிலிருக்கிறேன் என்று மனசு சொன்னாலும் குமார் மெஸ் என்ற பெயர் ஆழ் மனதினுள் ஓடியதால் வாங்க போயிரலாம் என்றேன். நான் ஏன் போயிரலாம்னு சொன்னேன் என்று அவர் கேட்கவில்லை. ஹால் நிரம்பியேயிருந்தாலும் டோக்கன் போட்டெல்லாம் நிற்கும் அளவிற்கு லஞ்சுக்கு கூட்டமில்லை என்றே சொல்ல வேண்டும்.  மீல்ஸும், மட்டன் சுக்காவும் ஆர்டர் செய்தோம்.
ஆர்டர் செய்த மாத்திரத்தில் பரபரவென தலைவாழை இலை போட்டு, தண்ணீர் ஒரு கீரையும், உருளைப் பொரியலும் வைத்துவிட்டு, சுடச்சுட பொல பொல சாதத்தை பரப்பினார்கள். எதுல ஸ்டார்ட் பண்ணுறீங்க மட்டனா, சிக்கனா, மீன் குழம்பா? என்று ஆர்வத்துடன் கேட்டான் நம்ம பய ஒருத்தன். மட்டனில் ஆரம்பித்தோம். காரம் அவ்வளவாக இல்லாத கொழுப்பு போட்ட குழம்பு. திவ்யமான ஆரம்பம். அடுத்து சிக்கன் குழம்பு, கொஞ்சம் கெட்டியில்லாமல் இருந்தாலும் நல்ல காரத்தோடு, ஏசி ஹாலில் லேசாய் வியர்த்தது. அடுத்ததாய் மீன் குழம்பு. அரும.. அரும.. அருமையாய் இருக்க, மீண்டும் மொதல்லேர்ந்து என்று ரீகேப் செய்துவிட்டு,  மீண்டும் ரசத்துக்கு வந்தோம். ரசம் ஓகேதான். பின்பு கெட்டித் தயிரோடு, கொஞ்சம் சாதத்தை போட்டு பிசைந்து, அதன் மேல் சிக்கன் கிரேவியை போட்டுக் குழப்பியடித்து டிவைனை அனுபவித்துவிட்டு, அஹா.. சொல்ல மறந்திட்டேனே.. ஆர்டர் செய்த மட்டன் சுக்கா.. நல்ல கார வத்தல் மிளகாயோடு, தாளிக்கப்பட்டு, கொஞ்சம் பெரிய பீஸ்களாய் நன்றாய் வேக வைக்கப்பட்ட துண்டுகளோடு, கொஞ்சம்போறு கிரேவியோடு, வீட்டு மசாலாவில் செய்யப்பட்ட அற்புதமான சைட் டிஷ். கொஞ்சமே கொஞ்சம் சாதத்தோடு கலந்தடித்தால் அஹா.. டிவைனோ டிவைன்.. மற்ற அயிட்டங்கள் பின்பொரு பேலியோ விடுமுறை தினத்தில் ..
கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

Senthil said...

அருமை அருமை ஆஹா என்ன ருசி...ரிபீட்டு...

குரங்குபெடல் said...

"டோக்கன் போட்டெல்லாம் சினிமா பிரபலங்கள் காத்திருக்கிறார்கள் என்று பேச்சாய் இருந்தது. "


ஆனா . . . நெறைய பிரபலங்கள் எடுக்குற படம் ஓடுற தியேட்டர் எல்லாம் காலியாய் கிடக்குது அண்ணே . . .

Desingh said...

ஐயா நானே பசில இருக்கேன். இப்போ இதவேற படிச்சிட்டு நாக்குல எச்சில் வருது. இவளோ சாப்பிட்டு எவ்வளோ பணம் குடுத்திங்க? ஒரு தீட்டு தீட்டிட்டாங்கலா,,?