Thottal Thodarum

Aug 18, 2014

கொத்து பரோட்டா-17/08/14

பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள், பெரிய இயக்குனர் என்ற டேக்குடன் அஞ்சான் வருவதால் உடன் எந்த படமும் வராது என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் பார்த்திபன் ராதாகிருஷ்ணனின் "கதை திரைக்கதை வசனம், இயக்கம்" படமும், பத்திரிக்கையாளர் முத்துராமலிங்கத்தின் சிநேகாவின் காதலர்கள்" படமும் உடன் வெளியாகி உள்ளது ஆச்சர்யமில்லை. ஏனென்றால் ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்திபன் சார்.. மற்றும் முத்து ராமலிங்கம் இருவரையும் சந்தித்த போது  இருவருமே உறுதியாய் இருந்தார்கள். 25 வருடங்களுக்கு முன் இதே போல புதிய பாதை படத்தை ரெண்டு மூன்று படங்களுக்கு இடையே வெளியிட்டு வெற்றி பெற்ற அனுபவத்தை சொன்னார். மீண்டும் அதே கான்செப்டோடு "அஞ்சானுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வாங்க என்று விளம்பரம் செய்து இன்று வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். இன்னும் நான் படம் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு படத்தை பற்றி சொல்லுகிறேன் வாழ்த்துகள் பார்த்திபன் சார்.  முத்துராமலிங்கம் சார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@


சென்ற வாரம் கும்பகோணம். இந்த வாரம் சேலம். சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி,  பார்க் ப்ளாஸா எனும் 4ஸ்டார் ஓட்டலுடன் சேர்ந்து விழா நடத்தினார்கள். அவ்விழாவிற்கு இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் தலைமையில், ஹரிதாஸ் இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேல், எழுத்தாளர், வசனகர்த்தா அஜயன் பாலா, மதுபானக்கடை இயக்குனர் கமலக்கண்ணன், நெடுஞ்சாலை கிஷோர்,  ஆகியோருடன் நானும். விடியற்காலை 5 மணிக்கு கிளம்பி, மதியம் பன்னிரெண்டு மணிக்கு மெல்லப் போய் சேர்ந்தோம். நிகழ்ச்சி அமைப்பாளர் கைலாஷ் வரவேற்று அருமையாய் நகரத்தார் எனும் ஒர் புதிய உணவகத்தில் விருந்தளித்தார்கள். மாலை நிகழ்ச்சி எஸ்.பி.எம் பேச்சுடன் ஆரம்பித்தது. அடுத்தடுத்து, ஒவ்வொருவராய் பேசினோம். அஜயன் பாலா விரைவில் மைலாஞ்சி என்ற பெயரில் படம் இயக்கப் போவதாய் அறிவித்தார். அப்படத்தின் கதாநாயகனாக கிஷோர் நடிக்கவிருப்பதாய் சொன்னார். மகிழ்ச்சியாய் இருந்தது. விழாவில் ஒவ்வொருவராய் அழைக்கும் போது அவர்கள் சம்பந்தப்பட்ட விடியோக்களை ஒளிபரப்பினார்கள். என் முறை வரும் போது  தொட்டால் தொடரும் ட்ரைலரையும், பாஸு பாஸு பாடலையும் ஒளிபரப்பினார்கள். கிட்டத்தட்ட 600க்கும் மேற்ப்பட்டவர்கள் குழுமியிருந்த அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள். நிகழ்ச்சியில் பல சிறுவர்கள் பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, தாவணிக் கனவுகள் என்று இளம் பெண்கள் தாவணியில் வளைய வரும் போட்டி என கலர் கலராய் பல நிகழ்வுகள் நடத்தினார்கள். அடுத்த நாள் விடியற்காலை வழக்கம் போல கிளம்பி பேக் டு சென்னை. விழாவின் இரவின் போது அனைத்து நண்பர்களுடன் கலந்து கொண்டு சினிமா, அரசியல், என கலந்து கட்டி பேசியது மகிழ்ச்சியாய் இருந்தது. குமாரபாளையத்திலிருந்து வாசகர், இணைய நண்பர் ivptele என்கிற பெயரில் வலம் வரும் வரதராஜன் குமாரபாளையம் புகழ் லுங்கிகளோடு வந்திருந்தார். குறுகிய நேரத்தில் போன் செய்துவிட்டு வந்து சந்தித்தது நெகிழ்ச்சியாய் இருந்தது.நன்றி தலைவரே.. என்ன இம்பூட்டு தூரம் போய், செல்வி மெஸ்ஸிலும், சேலம் மங்களத்திலும் சாப்பிடாமல் வந்ததுதான் பெரும் சோகம். ம்ஹும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
காரில் பயணம் செய்யும் போது முன் வண்டியை பார்த்துக் கொண்டு போவது சுவாரஸ்யமான விஷயம். நேற்று அப்படித்தான். முன்னால் போன பஸ்ஸில் பின் பக்கம் பெரிய ஓட்டையுடன் அதன் நடுவில் உட்கார்திருந்த மக்களின் கால்கள் தெரிந்தது. அதை எப்படியாது செல்லில் படம்பிடிக்க முயற்சி செய்து அவ்வண்டியை துறத்தி போன அனுபவம் ஒர் சுவாரஸ்யம் என்றால், டெம்போக்களின் பின்னால் வீடு காலி செய்து கொண்டுப் போகும் தம்பதிகளின் ரொமான்ஸ் செம.. முழுக்க, முழுக்க சாமான்களால் நிரப்பப்பட்ட வண்டியின் பின்பக்கம், கணவன் மனைவி இருவர் மட்டுமே உட்கார்ந்திருக்க,  யார் பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில் கணவன் அவளை கண்ணால் சீண்ட, அவளோ..பதிலுக்கு கண்ணிலேயே .. சீ.. போங்க வில் ஆரம்பித்து, ஒதைப் படப் போறே என்று செல்ல அதட்டல் வரை செம்ம க்யூட் ரியாக்க்ஷன்கள். அதே போல போன வாரம் வரும் போதும் ஒர் குடும்பம் டெம்போவில் போய்க் கொண்டிருந்தது.  உறவினர்கள் கூட்டம் தான் என்றாலும், அக்குழுவில் இருந்த பெண்ணும் பையனும் விட்ட லவ்ஸ் இருக்கிறதே அட.. அட..அட.. வண்டியின் முனையில் பையன் உட்கார்ந்திருக்க, உட்பக்கமாய் உட்கார்ந்திருந்த பெண் தலையை அவளுடய அம்மாவாக இருக்க வேண்டும் அவளின் மடியில் தலை வைத்து படுத்தபடி, அவனை பார்த்த பார்வையில் ஆயிரம் டயலாக்குகள், பதிலுக்கு பையன், அவளை கண்டு கொள்ளாதது போல பக்கத்தில் உள்ள ஒர் பெருசுடன் பேசிக் கொண்டே அவளை பார்க்க, கொஞ்சம் வெளிப்பக்கமாய் சாய முற்படும் போது அவள் முகத்தில் தெரிந்த கலவரம், அக்கலவரத்தைப் பார்த்து அவன் கொடுத்த ரியாக்ஷங்கள் எல்லாம் அட்டகாசம்.. காதல் எப்பவுமே சுவாரஸ்யமானதுதான்.. மத்தவங்க பண்ணும் போது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
திடீரென கீபோர்டில் என்.எச்.எம்மில் டைப் அடிக்கும் போது ஷிப்ட் கீ போட்டால் வர வேண்டிய எழுத்துக்க\ள் எல்லாம் வர மாட்டேன் என்கிரது.. என்ன செய்ய/ /??
 • ரிலீசான எந்த படத்தையும் பார்க்காம விமர்சனம் மட்டுமே படிச்சிட்டு கருத்து சொல்றது இண்ட்ரஸ்டிங் 
  • எப்படியிருக்கீங்கன்னு கேட்டா நல்லாயிருக்கேன்னு என்னைக்கு சொல்றோமோ அன்னைக்குத்தான்யா இந்தியா வல்லரசாகும்.
   • I Coudnt control my tear after watching Ashiqui2 and Tumbi ho.Though it hurts a lot like LOVE.. i keep on listening. Love keep us alive 
    • அன்னகொடி படம் கேடிவில.. தகவல் சொல்லுறேன்

    • ஆடி மாசம் முடிஞ்சாத்தான் ஆபீஸ் பக்கம் போய் நிம்மதியா போய் உக்கார முடியும். கோயில் நோட்டீஸ் தொல்லை தாங்கலை. 
    • @@@@@@@@@@@@@@@@@@@@@@
    • கதை திரைக்கதை வசனம் இயக்கம்
    • நேற்று மாலை இப்படத்தை பார்க்க சென்று கொண்டிருந்த போது சன் நியூஸ் சந்தோஷிடமிருந்து போன். "இரவு 9 மணிக்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படக்குழுவினருடன் லைவ் பேட்டி இருக்கிறது. வந்து கலந்து கொள்ள முடியுமா? என்று கேட்டார். நான் இப்போதுதான் படம் பார்க்க சென்று கொண்டிருக்கிறேன் என்றேன். பரங்கிமலை ஜோதி தியேட்டரில் நல்ல கூட்டம். 100 -80 என்று இரண்டு க்ளாஸ் விற்றுக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட 80 சதவிகிதம் புல். கதையே இல்லாமல் படமெடுக்க விழையும் உதவி இயக்குனர் படையை வைத்து ஒர் சுவாரஸ்ய கதகளியே நடத்தியிருக்கிறார் ராதாகிருஷ்ண பார்த்திபன். பல சுவாரஸ்ய கேரக்டர்கள். கணவன் இயக்குனர் ஆக வேண்டுமென்று தான் வேலைக்குப் போய் சம்பாதித்து, டிஸ்கஷனுக்கு வீட்டையே கொடுத்து, அதனால் நடக்கும் இம்சைகளை தாங்காமல் காதலுக்கும், நிஜத்துக்குமிடையே அலைபாயும் மனைவி, மனைவியின் கஷ்டம் புரிந்தாலும் வேறு வழியில்லாமல், காதலையும், சர்வைவலுக்காக படும் அவமானங்களோடு வலையவரும் கணவன், 58 வயதான இன்னும் உதவி இயக்குனராகவே வளைய வரும் சீனு வாய் வரும் தம்பி ராமைய்யா கேரக்டர். திருடனாய் இருந்துவிட்டு, அஸிஸ்டெண்ட் டைரக்டராக முயற்சி செய்யும் நக்கல் பையன், எப்பப் பாரு கேமராவும் கையுமாகவே திரியும் கேமராமேன், குண்டு ப்ரொடியூசரும், அவரின் கதையறிவும், பேயுடன் பேசும் வாட்ச்மேன், எதிர் வீட்டு ட்வின்ஸ், ஆர்யா, அமலாபால், விஷால், டாப்ஸி, தனஞ்செயன், கலைஞானம், தண்ணீர் கேன் போட வந்து கதை சொல்லும் கேரக்டர், இத்தனை கேரக்டர்களை உள்ளடக்கி, ஒவ்வொரு காட்சிக்கும் ப்ரயத்தனப் பட்ட  பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய திரைக்கதை, பட்டாசாய் கைதட்டி, சிரித்து, புத்திசாலித்தனமான நக்கல், க்ளைமேக்ஸ் நெகிழ்ச்சி தரும் வசனங்கள், குறையாய் சொல்ல ஒர் சில விஷயங்கள் இருந்தாலும், அதையெல்லாம் மீறி கதை என்ற ஒன்று இல்லை என்று சொன்னாலும்,  சுவாரஸ்ய காட்சித் தொகுப்புகளை மட்டுமே வைத்துக் கொண்டு, ஜல்லியடிக்காமல்,  புத்திசாலித்தனத்தோடு, படம் பார்பவர்களை அவங்களுக்கும் எல்லா விஷயமும் தெரியும்டா.. என்று மதித்து,  இயக்கியிருக்கும் ராதாகிருஷ்ண பார்த்திபன் சாருக்கு வாழ்த்துகள். வெண்மேகம் போலவே ஹாண்டிங்
    • @@@@@@@@@@@@@@@@@@@@@. 
    • அடல்ட் கார்னர்
    • 5 Ways for a man to be happy with women
     1. Be with a woman who makes u laugh
    • 2. Be with a woman who gives u her time
    • 3. Be with a woman who takes care of you
    • 4. Be with a woman who really love u
    • 5. Finally, make sure these four women dont't know each other.

     • கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

maithriim said...

அருமை :-) உங்கள் அடுத்தப் படத்தின் காதல் காட்சிகளின் trailer இந்தப் பதிவில் உள்ளது :-))

amas32

Unknown said...

compare to review live story car traveler super

கரந்தை ஜெயக்குமார் said...

பார்த்திபனின் படத்தினைப் பார்க்கத் தூண்டுகிறது தங்களின் விமர்சனம்

Thulasidharan V Thillaiakathu said...

கொத்து பரோட்டா வழக்கம் போல அருமை சார். பார்த்திபன் ஒரு வித்தியாசமான டைரக்டர்.....உங்கள் விமர்சனம் பார்த்தாயிற்று ஸோ பார்க்கணும் சார்.

அந்த வீடு காலி பன்னற டெம்போ, உறவினர் பயணித்த டெம்போ கொடுத்த விஷுவல்ஸ் உங்களுக்கு நிறைய கதை சொல்லியிருக்குமே சார்!

கே. பி. ஜனா... said...

உங்க படத்தில் காதல் காட்சிகள் பிரமாதமாக இருக்கும்னு தோணுது...