கொத்து பரோட்டா - 28/07/14
கேட்டால் கிடைக்கும்
எனக்கும் தலப்பாக்கட்டி ரெஸ்ட்டாரண்டுக்கும் ஏழரைப் பொருத்தம் ஏனென்றே தெரியவில்லை. ஆரம்ப காலத்தில் பிரியாணி நன்றாக இருந்தாலும், போகப் போக படு மோசமாய் போனது. அதுவும் 150 ரூபாய்க்கு ரெண்டு கரண்டி பிரியாணியை கொடுத்துவிட்டு, பீசை தேடி கலைத்துப் போய் எங்கய்யா பீசு என்று கேட்டால் மட்டுமே நான்கைந்து பீஸை கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் வேறு வழியேயில்லாமல் நானும் எங்கள் ஹீரோவும் பெசண்ட் நகர் தலைப்பாக்கட்டியில் சாப்பிட போயிருந்தோம். இரவு நேரமாக இருந்தாலும் செம ஹூமிடிட்டி. வியர்த்துக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்ததும் ஏசியே இல்லை. ஏசி இல்லையா என்று கேட்டவுடன் மேல உக்காருங்க என்றார். அங்கிருந்தவர். மேலே ஏதோ ஒண்ணுத்துக்கில்லாத வகையில் குளூமை இருக்க, சாப்பிட வழக்கம் போல பிரியாணி ஆர்டர் பண்ணிவிட்டு காத்திருந்தோம். வியர்க்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் தொப்பலாய் நனைய ஆரம்பித்துவிட்டோம். பிரியாணி வேறு சகிக்கவில்லை. பில் வந்தது 180 மேனிக்கு ரெண்டு பேருக்கு பிரியாணி பில்லோடு, சர்வீஸ் டேக்ஸ், மற்றும் வாட் போட்டிருந்தார்கள். இதற்குள் பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த குடும்பம் வியர்த்து கொட்டி, சர்வரிடம் கத்த ஆரம்பித்திருக்க, என் பில் கொண்டு வந்தவரிடம் இது எதுக்கு டேக்ஸ் என்றேன். இருங்க மேனேஜரை வரச் சொல்லுறேன் என்று சொல்லிவிட்டு, போனவர் ஐந்து நிமிடம் வரவேயில்லை. ஏற்கனவே வியர்த்துப் போய் தொப்பலாய் நினைந்து கொண்டிருக்க, இப்ப வரலைன்னா நான் கிளம்பிட்டேயிருப்பேன் என்றதும். ஒர் சிறு வயது பையன் வந்தார். நீங்கதான் மேனேஜரா? என்றதுக்கு தலையாட்டினார். இந்த டாக்ஸ் எதுக்கு? சார் இது கவர்மெண்ட் வாங்க சொல்லியிருக்காங்க சார்.. என்றார் புத்திசாலித்தனமாய். கவர்மெண்ட் ஏசி ரெஸ்ட்டாரண்டா இருந்தா வாங்க சொன்ன சர்வீஸ் மற்றும் வாட் இது. ஏசியேயில்லாத ஹோட்டலுக்கு நான் ஏன் கொடுக்கணும் என்றவுடன், சார்.. ஏசி ஃப்யூஸ் போயிருச்சு. சரி பியூஸ் சரி பண்ண எவ்வளவு நேரம் ஆகும்? தெரியலை.. அப்ப ஏசி எப்ப ஒர்க் ஆகும்னும் தெரியாது அப்படித்தானே? என்றதும் விழித்தார். சரி.. ரெண்டு பிரியாணியும் படு கேவலம். வாய்ல வைக்க வழக்கலை. இருந்தாலும் சாப்பிட ஆர்டர் பண்ணினதுனால, காசு கொடுக்கிறேன். ஏசி யில்லாத ஹோட்டலுக்கு எல்லாம் நான் அதுக்கான டேக்ஸ் பே பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டு, பிரியாணிக்கு உண்டான காசை மட்டுமே வைத்தேன். அவன் பதிலே சொல்லவில்லை. அடுத்த நாள் முழுவதும் பிரியாணி தன் வேலையை காட்டியது. இதையெல்லாம் மீறி ரெண்டொரு நாள் முன்னால் நானும் எங்கள் படத்தில் நடித்த பாலாஜியும், தமனும் டி.நகர் தலைப்பாகட்டிக்கு போக நேர்ந்தது. வழக்கம் போல பிரியாணி மொக்கையாக மட்டுமல்ல. பிரியாணி பூராவும் பட்டை, லவங்கம் ஏலாக்காயாய் வாய் பூராவும் ஜிவு ஜிவுஎன இருந்தது. இந்த லட்சணத்துல 19வது கிளை வேற திறக்குறாங்களாம். ம்ஹும். சரத்குமார் இவங்க கடை பிரியாணிய சாப்பிட்டதில்ல போல..
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடுக்களிலிருந்து என்ற தலைப்பில் சில நிஜக் கேரக்டர்களை வைத்து சிறுகதை எழுதியதுண்டு. அக்கதைகளில் என் கற்பனையின் அளவு எவ்வளவு என்று எனக்கு மட்டுமே தெரியும். அப்படி எழுதிய சிறுகதைதான் அமுதன். அந்த கதையில் வந்த ராகவாச்சாரிக்கு நிஜத்தில் ஒரு மகளும், மூன்று மகன்களும் இருந்தார்கள். அதில் மகளுக்கு பிறகு பிறந்த பையன் தான் அந்த அமுதன். அவனுக்கு பின்னால் இருந்தவன் ஒர் சுபயோக சுபதினத்தில் என்ன காரணமென்றே தெரியாமல் நோய்வாய்ப்பட்டு இறந்து போக, ராகவாச்சாரியும் இறந்து, அமுதனும் இறந்து மிச்சமிருந்தது கடைசி பையன், அவனின் அம்மா, அக்கா மட்டும்தான். அவன் வாழ்க்கையில் மிக முக்கியமானது கிரிக்கெட் மட்டுமே.. ஒல்லியாய் அவ்வப்போது இடது தோள்பட்டையை தூக்கி, தூக்கி பேசுவான். சவடாலாய் பேசக்கூடியவன். நல்லவன். அப்பாவி, படிப்பு பெரியாதாய் வரவில்லை. முகத்தில் கண் மட்டுமே பிரதானமாய் இருக்கும். படப்பிடிப்பு பிஸியினால் என் கேபிள் டிவி அலுவலகத்திற்கு போய் நாளாகியிருக்க, நேற்று சென்றிருந்தேன். எங்கடா அவனை காணவே காணம்? என்று கேட்டேன். அவன் செத்துட்டான் என்றான் என்னிடம் வேலையும் செய்பவர். அதிர்ச்சியாய் இருந்தது. என்னாச்சு? . ஏதோ உடம்பு சரியில்லைன்னு பார்மஸியில மருந்து வாங்கி சாப்டிருக்கான். அது அலர்ஜியாகி உடம்பெல்லாம் ஊதிப் போய் முகம் மாறி, பார்க்கவே பயமாயிருந்து, திடீர்னு ஒரு நாள் ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி அடுத்த நாள் செத்துட்டான் என்றான். எனக்கு புரியவேயில்லை. ஒரு குடும்பம் முழுவதும் வசதி வாய்ப்பு இருந்தும் ஏன் இப்படி அகாலமாய் இறந்து போகிறார்கள்? விதி, பாவம், புண்ணியம் எல்லாம் இருக்குத்தான் போல..ம்ஹும்.
@@@@@@@@@@@@@@@@@@@@
மோடியின் அரசில் பொதுமக்களும் கலந்து கொண்டு கருத்துக்களை சொல்ல, ஒர் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறாராம். எனக்கென்னவோ இன்னொரு உட்டாலக்கடியாத்தான் தோன்றுகிறது. மக்களின் கருத்துக் கேட்டுத்தான் ஆட்சி நடத்தப் போகிறார் என்றால் இவ்வளவு விலையேற்றம், பெட்ரோல்,டீசல் விலையேற்றம் ஆகியவை நடந்தேயிருக்காது. லுல்லுலாயிக்கு ஒரு சைட்டு.. பார்ப்போம்..
@@@@@@@@@@@@@@@@@@@@@
தூரத்து உறவினர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டு சென்றிருந்தோம். உறவினர் கல்யாணம், காட்சி, குடும்பம் எல்லாம் இருந்தும், தன் குடிப் பழக்கத்தின் காரணமாய் குடும்பம் பிரிந்து தனியாய் போய் பல வருடங்களாகிவிட்டது. உறவு என்று சொல்ல அவருடய பாரலைஸ்ட் தாயாரும், தம்பியும் மட்டுமே. அவரவர் சோகக் கதை தனி. போன போது வாசலில் ஷாமியானா போட்டு, தாரை தப்பட்டையுடன் தயாராயிருந்தார்கள். அவர்கள் பக்க உறவு என்று நாங்கள் மட்டுமே இருந்தோம். இறந்தவரின் தம்பியை அழைத்து செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு, எல்லா ஏற்பாடும் பண்ணிட்டயா? சாஸ்திரிகளை கூப்பிட்டியா? என்றேன். அதுக்கெல்லாம் எங்க காசு? எல்லா ஊர்காரங்களே ஏற்பாடு பண்ணிட்டாங்க அவங்க வழக்கப்படி. இறந்து போனவருக்காக அவருடய க்ளாஸ்மேட்ஸ் மேலும் சரக்கடித்துவிட்டு, ஆடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஊர் தலையாய் இருந்தவர் அருகில் வந்து உங்கள்ல ஏதாச்சும் சாங்கியம் இருந்தா அதும்படி கூட செய்யுங்க.. நம்ம ஊர்காரர் ஆளில்லாத வீடு, அதான் நாங்க ஏற்பாடு பண்ணிட்டம் என்றார். அவர் குரலில் லேசான தயக்கம் இருந்தது. “இல்லீங்க.. வாழ்றதுக்குத்தான் சாங்கியம் எல்லாம். போனப்புறம் என்ன?. யாரை எரிச்சாலும் சாம்பல்தான். ஏற்பாடு பண்ற மனச கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கானே அது தான் பெரிசு.” என்றேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
ஸ்கூல் பசங்க டூவிலர்ல வர தடை. நல்ல விஷயம். ஆக்ஸிடென்ண்ட் குறையும்

Comments
த ம 2
Best wishes,