Thottal Thodarum

Jan 26, 2009

இஸ்ரேல், பாலிஸ்தீன பதிவர் சந்திப்பு 25/01/09


N.R.I கோவி கண்ணன்(ஸ்வீட் மேன்), விஜய் ஆனந்த்( :):))முரளிகண்ணன் , அரையிருட்டில் பத்ரி கிழக்கு பதிப்பகம்.கணேஷ் படித்துறை என்கிற பெயரில் எழுதுபவர். ராம் சுரேஷ் புதிய பதிவர் அவர்களே வருக..வருக..

லக்கிலுக், மீண்டும் முரளி, அதிஷா.. முரளிக்கு பின்னால் யாருங்க அது..?

அக்னிபார்வை, சின்னதிரை இயக்குனர், டாக்டர் புருனோ..
அக்னிபார்வையிடம் நான்

இந்த முறை புத்தக கண்காட்சியில பிரபாகரன் புக்கை தடை பண்ணிட்டாங்களாமே..?

அட நீ வேற அவங்க பட்டுக்கோட்டை பிரபாகர் புக்கையே எடுத்து வச்சுட்டாங்களாம்!!!
இது அக்னியின் பதில். ஆனாலும் நம்ம ஆட்களுக்கு நகைச்சுவை உணர்சி ரொம்பத்தான் அதிகம்.

இயக்குனர் ஷண்முகப்பிரியன்.. புதிய பதிவர்.. வருக.. வருக..

லக்கிலுக், சென்னை தமிழன்..புதிய பதிவர் வருக.. வருக என வரவேற்கிறோம்.

இவர்களை தவிர, பாலபாரதி, பெண் பதிவர் லஷ்மி, நர்சிம், கிழக்கு பதிப்பகம் பத்ரி, அருண் என்கிற வாசகர், வெண்பூ, கோவி கண்ணனின் நண்பர்,அகிலன், மற்றும் பலரும் வந்திருந்தார்கள், மற்ற பதிவர்களை படமெடுக்கும் முன் இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சனை உருவெடுத்து பெரும் போராய் மாறி ஏவுகணைகளை வீசியதால் படமெடுக்க முடியவில்லை. போரின் நடுவே படமெடுக்க நான் ஒன்றும் சி.என்.என் நிருபரில்லை ஆதலால் மற்றவர்கள் படஙக்ள் எடுக்க முடியவில்லை.

மொட்டை மாடியை கொடுத்த அன்பு பத்ரி சாருக்கு நன்றிகள் பல..
Post a Comment

32 comments:

சிம்பா said...

இது எப்போ நடந்தது...

நட்புடன் ஜமால் said...

தலைப்பே பயமுறுத்துதே.

எப்படிங்க இது.

புருனோ Bruno said...

//தலைப்பே பயமுறுத்துதே.//

நாங்கலெல்லாம் துண்ட காணோம் துணியைக்காணோம்முன்னு ஓடினது அங்க வந்திருந்தீங்கன்னா தெரியும்

Cable சங்கர் said...

அத நான் என் வாயால எப்படி சொல்லுவேன்.? சிம்பா..

Cable சங்கர் said...

//எப்படிங்க இது.//

அது அப்படித்தான்.. ஜமால்..

Cable சங்கர் said...

//நாங்கலெல்லாம் துண்ட காணோம் துணியைக்காணோம்முன்னு ஓடினது அங்க வந்திருந்தீங்கன்னா தெரியும்//

அதான புருனோ.. சொல்லுங்க..

அத்திரி said...

NICE PHOTOS.

☀நான் ஆதவன்☀ said...

இன்னும் நீங்க கேமராவை மாத்தவே இல்லையா????

Cable சங்கர் said...

நன்றி அத்திரி அதுக்குள்ள ஆபீஸ் வந்தாச்சா..?

Cable சங்கர் said...

//இன்னும் நீங்க கேமராவை மாத்தவே இல்லையா????//

இஸ்ரேல்.. பாலஸ்தீன போர் நடுவே எடுத்ததால்.. லைட் இல்லை.. தலைவரே..

(இது செல்போனில் எடுத்தது)

கோவி.கண்ணன் said...

நண்பர் சங்கர்,

சுறுக்கமான, அழகான தொகுப்பு !

Cable சங்கர் said...

//சுறுக்கமான, அழகான தொகுப்பு !//

ரொம்ப நன்றி தலைவரே..

Anonymous said...

வருக வருக என வரவேற்பு நல்கியதற்கு நன்றி,நண்பரே.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே என்னாது சந்திப்பில் சண்டையா??? சரி ஊருக்கு வந்ததும் உங்ககிட்ட போன் பண்ணி என்னானு கேட்டுக்குறேன்.

Cable சங்கர் said...

//அண்ணே என்னாது சந்திப்பில் சண்டையா??? சரி ஊருக்கு வந்ததும் உங்ககிட்ட போன் பண்ணி என்னானு கேட்டுக்குறேன்.//

சீக்கிரம் வாங்கண்ணே.. விஷயம் ரொம்ப பெரிசா போயிருச்சு..

Cable சங்கர் said...

//வருக வருக என வரவேற்பு நல்கியதற்கு நன்றி,நண்பரே.//

மிக்க நன்றி ஷண்முகப்பிரியன் சார்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

முரளிகண்ணன் said...

புகைப் படத்தை தவிர மீதி பதிவு அருமை.

சி தயாளன் said...

கோவியாரும் விஜய்யும் சிங்கையில் கூட இப்படி போஸ் கொடுத்ததில்லை..:-)

Cable சங்கர் said...

//புகைப் படத்தை தவிர மீதி பதிவு அருமை.//

என்ன பண்றது லைட் பத்தலை தல.. மிக்க நன்றி..

Cable சங்கர் said...

//கோவியாரும் விஜய்யும் சிங்கையில் கூட இப்படி போஸ் கொடுத்ததில்லை..:-)//

அப்படியா.. டோன்லீ.. மிக்க நன்றி உஙக்ள் வருகைக்கும் கருத்துக்கும்..

Athisha said...

உங்க செல்போனில் இடிவிழ.......

கணேஷ் said...

சார், அருமை. என் ஃபோட்டோல கண்ணுக்கு மட்டும் பேய் பட எஃபெக்ட் கொடுத்ததை வன்மையாக இல்லாவிட்டாலும் மென்மையாக கண்டிக்கிறேன்.

உங்களைப் போல பெரியவர்களை சந்திப்பில் சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி.

மேலே இருக்கும் சமீரா ரெட்டி ஸ்டில்க்கு ஏதாவது லிங்க் கொடுத்து பெரிசா காட்டுங்க சார். ஒண்ணும் தெரிய மாட்டேங்குது :) :)

பாலா said...

அந்த 2 பீஸ்-ல இருக்கற பொண்ணு போட்டோவும் உங்க செல் போன்ல எடுத்த மாதிரிதான் இருக்கு.

Cable சங்கர் said...

//உங்க செல்போனில் இடிவிழ.......//

ஏற்கனவே எதுவும் விழ மாட்டேங்குது.. இடியாவது விழட்டும்

Cable சங்கர் said...

//உங்களைப் போல பெரியவர்களை சந்திப்பில் சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி.//

என்னை பெரியவனாகிறதுல உங்களுகெல்லாம் என்னய்யா சந்தோஷம்.. ???

Cable சங்கர் said...

//மேலே இருக்கும் சமீரா ரெட்டி ஸ்டில்க்கு ஏதாவது லிங்க் கொடுத்து பெரிசா காட்டுங்க சார். ஒண்ணும் தெரிய மாட்டேங்குது :) :)//

உங்க மெயில் ஐ.டி கொடுங்க.. புல்லாவே அனுப்புறேன்.

Cable சங்கர் said...

//அந்த 2 பீஸ்-ல இருக்கற பொண்ணு போட்டோவும் உங்க செல் போன்ல எடுத்த மாதிரிதான் இருக்கு.//


ஹி..ஹி.. ஆனாலும் என்னை நீங்க இவ்வளவு பாராட்ட கூடாது..

தராசு said...

தலைவா,

அங்க எதுனா பேசினீங்களா, இல்ல வெறும் போட்டோ மட்டும்தானா,

ஊடில் இல்லாததால வர முடியல.

narsim said...

வணக்கம்ம்ம்ம்ம் தல‌

Cable சங்கர் said...

//வணக்கம்ம்ம்ம்ம் தல‌//

வணக்கத்துல உள்ள அழுத்தத்தை பார்த்தா.. ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே.. எதுக்கும் நாமளும் ஒரு வணக்கம் போட்டுடுவோம்..
வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... தலலலலலலலலலலலலல

Unknown said...

புதிய பதிவராக ஏற்று, வரவேற்பு வழங்கியமைக்கு நன்றி.

- சென்னைத்தமிழன்

குடுகுடுப்பை said...

எல்லாருக்கும் நல்ல காலம் பொறக்குது