சட்டம் உன் கையில்


பொது இடத்தில் புகை பிடிக்க தடை போன்ற சட்டங்களை பொது புகை பிடிப்பவர்கள் கூட முணுமுணுத்துக் கொண்டே ஆதரித்தாலும், எல்லோரும் பயப்படுவது அதை நடைமுறை படுத்தும் போது நடக்க போகும் அராஜகத்தை நினைத்துதான். ஏன் என்றால் நம் நாட்டில் குற்றம் நடப்பதை தடுப்பதற்காக காவல் துறை இல்லாமல், அது நடக்க விட்டுவிட்டு அப்புறமாய் வந்து தண்டிப்பது அவர்க்ளது வாடிக்கை..

உதாரணமாய் ஓருவன் ஃபிரி லெப்ட் இல்லாத இடத்தில் திரும்ப முயற்சிக்கும் போதே அந்த டிராபிக் கான்ஸ்டபிள் அந்த தெருவின் முனையிலேயே நின்று அவனை தடுத்து அறிவுறுத்த வேண்டியதுதான் அவர் கடமை. ஆனால் அவர் என்ன செய்கிறார்.. ரோட்டின் உள்பக்கத்தில் ஓளிந்து நின்று கொண்டு அவனை மடக்கி “டேக் த 25” வாங்கி அவனை திரும்ப அனுப்பாமல் தவறான பாதையிலேயே அனுப்பி வைக்கிறார்.

அதே போல் அவர்கள் போடும் சட்டங்களூம் அவ்வளவு ஈஸியாக மக்களுக்கு புரியும் படி இருக்காது. உதாரணமாய் புகை பிடிக்கும் சட்டத்தை எடுத்து கொள்ளுங்கள், அதில் பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது.. என்று சொல்லி பல இடங்களை சுட்டி காட்டி இருக்கிறார்கள். ஆனால் தெரு, மற்றும் பார்க் எல்லாம் பொது இடம் தானே..அங்கே புகைக்கலாம் என்கிறது விதி. ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் இந்த் விதி எல்லாம். போகிற போக்கில் 4 ரூபாய் சிகரெட்டுக்கு 25 ரூபாய் கட்டிங் கொடுக்க வேண்டியிருக்கும்.

இப்படி எல்லோரும் சட்டம் என்ன என்பதை புரிந்து கொள்ளகூடிய முறையில் சட்டத்தை இயற்றுவது என்ற பழக்கமே இல்லை..நம் தமிழக அரசு ஹெல்மெட் விஷயத்தில் அடித்த குழப்படி சட்டம் இருக்கிறதே அதைவிட குழப்பம் ஏதாவது இருக்கிறது. பின்னாடி இருக்கிறவங்க போடணும், போடகூடாது, பெரியவர்கள் போட் வேண்டாம்னு ப்பா.. அந்த சட்டத்தை பற்றி நான் ஓரு டிராபிக் சார்ஜெண்டுடன் சண்டை போட்டது பற்றி ஓரு பத்திரிக்கை போகிற போக்கில் எங்களுக்கு தெரியாமலே நானும் அந்த அதிகாரியும் வாதாடும் காட்சியை புகைபடமாய் எடுத்து வெளியிட்டது. உலக புகழ் நமக்கு எப்படியெல்லாம் கிடைக்கிறது.

இன்னொரு உதாரணம் .. ஓரு வயது வந்த பெண்ணும், ஆணும் இருவரும் இஷ்டப்பட்டால் எந்த விதமான நிர்பந்ததிற்கும் ஆட்பாடாமல் அவர்களுக்கு உடலுறவு கொண்டால் அதை சட்டம் தடுக்க முடியாது.. ஆனால் கணவன் மனைவி அல்லாத ஓரு ஆணும், பெண்ணும் ஓன்றாக இருந்து உடலுறவு கொண்டால், அந்த பெண்ணின் கணவனோ, அந்த ஆணினின் மனைவியோ புகார் கொடுக்காத வரை அவர்கள் மீது கேஸ் போட முடியாது. ஆனால் அவர்களை போலீஸ் பிடித்தால் விபசார வழக்கு போட்டு விடுவோம் என்று மிரட்டுகிறார்கள் அல்லது போட்டு விடுகிறார்கள். வயது வந்த இருவர் அவர்க்ளுக்கு இருவரின் சம்மதத்தின் பேரில் உடலுறவு கொண்டால் தவறு அல்ல என்று சட்டத்தில் இருந்தாலும், சமுதாயத்தில் தங்களது பெயர் கெட்டுவிடுமே என்று பயந்து யாரும் போராடுவது இலலை..

விபசாரம் செய்பவர்களை கூட போலீஸ் செய்திதாளகளில் வருவதை போல் ரோட்டில் விபசாரத்துக்கு அழைத்தார்கள், போலீஸ் மாறு வேடம் அணிந்து அவர்களுக்கு பணம் கொடுத்து அதை வாங்கும் போது சுற்றி வளைத்து பிடித்ததாகதான் கேசை ஜோடிப்பார்கள். ஏன் என்றால் சட்டப்படி மேற்சொன்ன விதிகளின் படி அங்கிருக்கும் ஆண், பெண் இருவரையும் உடலுறவு கொண்டார்கள் என்று கைது செய்ய முடியாது.. அதனால் ஜோடித்து தான் கேஸ் எழுதுவார்கள்.. கன்னட ப்ரசாத் போன்றவர்கள் என்ன ரோடில் அழகிகளை வைத்து கூவிக் கூவியா ஆள் பிடிக்கிறார்கள்.(அவர்கள் அழகிகளா என்பது வேறு விஷயம்?)

சட்டத்தை பற்றி தெரிந்தாலும் போராடாமல் பல பேர் அசிங்கம், நம்கேன் வம்பு என்று விட்டு விடுவார்கள் .ஆனால் சில ஆண்டுகளூக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் ஓரு அரசாஙக உத்யோகத்தில் இருந்த ஓரு நபர் தான் காதலித்த பெண்ணுடன் வெளியூர் சென்று அங்கிருந்த ஓட்டலில் தங்கியிருக்க, அப்போது அங்கே ரெய்டுக்கு வந்த போலீஸார் அவர்களையும் கைது செய்து, விபசார வழக்கு போட்டுவிட்டார்கள்.. அதனால் அவருக்கு அரசாஙக வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஆனால் அவர் விடவில்லை.. கோர்ட்டில் போலீசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து மேலே சொன்ன சட்டத்தை வைத்து வாதாடி இழந்த தன் அரசாஙக் வேலையை திரும்ப பெற்று, தன் காதலியை மணந்தார்..எல்லோரும் தங்களது உரிமையை தெரிந்து கொண்டால நம்முடைய சட்டம் எந்த அளவுக்கு நமககு ஆதரவாக இருக்கிறது, அதை போலீஸ் அத்துமீற்ல் செய்யும்போது எதிர்கவும் துணிய வேண்டும்.

எதற்காக நான் இந்த உதாரணத்தையெல்லாம் சொல்கிறேன் என்றால், வெளியே சொல்ல அசிங்க படுகிற விஷயமாய் இருப்பினும் ஓரு தனிமனிதன் தன் உரிமையைக்க்காக, போராடி வென்ற்து, நம் சட்டத்தில் எந்த அளவிற்கு நம்க்கு ஆதரவாக உள்ளது என்பது புரியும். என்பதற்காகதான்.

அதற்காக நான் புகை பிடிப்பதையோ, அல்லது திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை ஆதரிக்கிறேன் என்றோ நீஙக்ள் நினைக்க்கூடாது. எல்லோரும் தங்களது உரிமையை விட்டுக் கொடுக்காமல் அதை தெரிந்து நடத்தால் நாமே தவறு செய்ய மாட்டோம்.. அதை மீறி நம் உரிமையை பறிக்க முயன்றால்.. அதான் சொன்னேனே.. சட்டம் உன் கையில்


Blogger Tips -SlumDog Millionare விமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்


உங்க ஓட்டை தமிழ்மணத்துலேயும், தமிலிஷிலும் குத்துங்க எசமான்.. குத்துங்க...

Comments

எல்லாம் சரி தலைவரே ஆனா ஏன் கடைசியில ஒரு பல்டி அடிச்சிட்டீங்க?
நான் முதலில் படத்தை பற்றி என்று நினைத்து வந்தேன்.. ஆனால், எதிர்பாரத ட்விஸ்ட்...

உங்கல் கைபேசி என்னை இந்த முகவரிக்கு அனுப்பவும் agnipaarvai@gmail.com
Rafiq Raja said…
கேபிள் சங்கரே, ரொம்பவும் சிந்திக்க வைத்து விட்டீர்கள். ஒரு Tea அடிச்சிட்டு நிதானமா இன்னொரு முறை படிக்கணும் போல... :)

ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
//வயது வந்த இருவர் அவர்க்ளுக்கு இருவரின் சம்மதத்தின் பேரில் உடலுறவு கொண்டால் தவறு அல்ல என்று சட்டத்தில் இருந்தாலும்,//



ரொம்ப உபயோகமான தகவலா இருக்கே அண்ணே....
//ரொம்ப உபயோகமான தகவலா இருக்கே அண்ணே....//
எப்படியோ உபயோகப்பட்டா சரி..
//கேபிள் சங்கரே, ரொம்பவும் சிந்திக்க வைத்து விட்டீர்கள். ஒரு Tea அடிச்சிட்டு நிதானமா இன்னொரு முறை படிக்கணும் போல... :)//

என்ன படிச்சாச்சா இல்லையா..? சார்..
தராசு said…
கடைசியில என்னதான் சொல்ல வர்றீங்க,

ரஜினி காந்த் மாதிரியே பேசறீங்களே, உரிமைக்காக போராடணுமா, அல்லது "டேக் த 25" ஐ ஆதரிக்கணுமா???

இன்னா சொல்ல வர்றீங்க??
ரொம்ப, ரொம்ப பயனுள்ள தகவல்களை வாரி வழங்கியுள்ள அண்ணன் கேபிள் சங்கருக்கு எனது நன்றிகள்..
//ரஜினி காந்த் மாதிரியே பேசறீங்களே, உரிமைக்காக போராடணுமா, அல்லது "டேக் த 25" ஐ ஆதரிக்கணுமா???

இன்னா சொல்ல வர்றீங்க??//

உரிமைக்காக போராடணும்னுதானே இவ்வளவு சொல்றேன்.
//ரொம்ப, ரொம்ப பயனுள்ள தகவல்களை வாரி வழங்கியுள்ள அண்ணன் கேபிள் சங்கருக்கு எனது நன்றிகள்..//

நிசமாவாண்ணே சொல்றீங்க.. ரொம்ப நன்றிங்கண்ணே...
25 ரூபாயா

அண்ணேன் எந்த நூற்றாண்டுல ...
//25 ரூபாயா

அண்ணேன் எந்த நூற்றாண்டுல //

எல்லாம் ஒரு பேச்சுக்கண்ணே.. நம்ம கவுண்டர் சொல்லி கொடுத்தது.

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.