Thottal Thodarum

Oct 12, 2016

கொத்து பரோட்டா -2.0-3

 சமீபத்தில் ஒரு படத்தின் வெற்றி விழா பார்ட்டியில் தயாரிப்பாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவருடய சமீபத்திய படம் கூட ஹிட் தான். எனக்கு ரொம்பவே பயமாயிருக்கு சார் என்றார்ஏனென்று கேட்டதற்கு படம் போட்ட பணத்து பழுதில்லாம ரிட்டன் வந்திருச்சுத்தான் அனா இந்த பேஸ்புக்குல டிவிட்டர்ல போடுற கலெக்ஷனை பார்த்தா இன்கம்டேக்ஸ் ரைட் வந்திருமோன்னுதான் பயமா இருக்கு என்றார். அவரின் பயம் நியாயம் தான். தமிழ் சினிமாவில் படம் ஓடுகிறதோ இல்லையோ ரெண்டாவது நாளே முப்பது கோடி, நாப்பது கோடி வசூல் என பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் அள்ளிவிடுவார்கள். அதுவும் பெரிய நடிகர்கள் படமென்றால் கேட்கவே வேண்டாம் தியேட்டர் வாசலில் டிக்கெட் கிழித்து கணக்கு பார்த்த ரேஞ்சில் எழுதுவார்கள். இப்படி ரசிகர்கள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த நிலையில் இப்போதெல்லாம்  காசு வாங்கிக் கொண்டு கலெக்ஷன் ரிப்போர்ட் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்இதன் பின்னுள்ள வியாபாரம் அறியாமல் பொத்தாம் பொதுவாய் எழுதுவதைப் பார்த்தால் பாவமாய் இருக்கிறது. டிவிக்களில் எந்த படத்தை போட்டாலும் சூப்பர் ஹிட் திரைப்படம் என்று சொல்வதைப் போல தற்காலத்தில் பேஸ்புக்கில் மட்டும் சூப்பர் ஹிட்டான படங்கள் லிஸ்ட் அதிகம்ஒரு படம் முப்பது கோடியில் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருந்தால். முப்பது கோடி வசூல் ஆனதாய் சொன்னால் அது ஹிட் கிடையாது ஏனென்றால் தியேட்டரில் வசூலாகும் பணத்தில் 60-50 சதவிகிதம் தான் தயாரிப்பாளருக்கோ அல்லது படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கோ கிடைக்கும் ஸோ. முப்பது கோடி ரூபாய்க்கு வாங்கிய படம் அட்லீஸ்ட் 60 கோடி வசூல் ஆனால் தான் போட்ட பணம் திரும்பும். அது தான் நிஜ சூப்பர் ஹிட்.
@@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டுக்கடை – மாரி ஹோட்டல் - வடகறி
சைதாப்பேட்டை என்றால் உடனடியாய் நினைவுக்கு வருவது வடகறிதான். ஏதோ ஒரு படத்தில் கமல் கூட சைதாப்பேட்டை வடகறி என்று பாடியதாய் நினைவுஅப்படியாப்பட்ட வடகறிக்கு பேர் போன கடைமாரி ஓட்டல்கிட்ட த்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது  சைதாப்பேட்டை வி.எஸ். முதலி தெருவில் தான் உள்ளது இக்கடை. டிபால்ட்டாக உட்கார்ந்த மாத்திரத்தில் இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தி என எதை ஆர்டர் செய்தாலும் டிபால்ட்டாக வடகறியோடவா? என்று தான் ஆர்டர் எடுப்பார்கள் அல்லது ஆர்டர் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு பேமஸ். இட்லிக்கு தொட்டுக்க வடகறி என்பது போய் வடகறிக்கு தொட்டுக்க இட்லி என்றாகிவிடும். தோசையின் மேல் வடகறியை ஊற்றி மெல்ல அதன் எண்ணையும், மசாலாவும் தோசையில் இறங்கி ஊறியிருக்க, அந்த கடைசி விள்ளல் தோசையை சாப்பிடும் போது கிடைக்கும் சுகாபனுவத்திற்கு பெயர் தான் டிவைன்ஆயில், பருப்பு மந்தம் என்றெல்லாம் யோசிப்பவர்கள் ரெண்டடி தள்ளிப் போய் உட்காருங்க..  https://www.youtube.com/watch?v=3PMD_Mgj800
@@@@@@@@@@@@@@@@@@
 Sully
2006 ஜனவரி மாதம் 155 பயணிகளுடன் பயணப்பட்ட அமெரிக்க விமானத்தை பறவைகள் மோதியதால் இரண்டு இன்ஜின்களும் கெட்டுப் போக வேறு வழியேயில்லாமல் ஹுஸ்டன் ஆற்றில்  லேண்ட் செய்த சல்லி எனும் அனுபவப்பட்ட பைலட்டின் மீது நடக்கும் விசாரணையே இந்த பயோகிராப்பிக்கல் படம். சல்லியாக டாம்ஹேங்ஸ்.  மனுஷன் நல்லா நடித்திருக்கிறார் என்று சொன்னால் அது அபத்தம். மனைவியிடம் விசாரணைப் பற்றி பேசும் போதாகட்டும், தன்னை ஹீரோவாய் கொண்டாடும் மக்கள், அவரின் பெயரில் ஒரு பாரில் ட்ரிங்  ஒன்றை கண்டுபிடித்திருப்பது கண்டு அழுவதா சிரிப்பதா என்று யோசனையுடன்  பார்க்கும் பார்வை, 155 பயணிகளும் பிழைத்துவிட்டார்களா? என்று பதட்டத்துடன் எண்ண துடிக்கும் அவரது பார்வை. அத்தனை பேரும் பிழைத்துவிட்டார்கள் என தெரிந்ததும், வெடித்து அழுதோ, கண் கலங்கி பெருமூச்சு விட்டோ கொஞ்சம் பிசகினாலும் ட்ராமாவாகிவிடக்கூடிய இடத்தில் மனுஷன் ஒரு சின்ன லுக்கில் சட்டென வெளிப்படுத்தினாரே அந்த நடிப்பு.. அட்டகாசம்.   விபத்தை எடுத்தவுடன் டீடெயிலாய் காட்டாமல் விசாரணையின் இடையே காட்டிய விதம், நறுக் நறுக் வசனங்கள், என  படத்தை இயக்கிய இளைஞர் வேறு யாருமல்ல நம் 86 வயது க்ளீண்ட் ஈஸ்ட்வுட்தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கார் பயண விருப்பம் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். அதில் எனக்கு பிடிக்காத விஷயம் டோல். அதிலும் பல நேரங்களில் பெரிய க்யூ வரிசை மட்டுமில்லாமல், கொஞ்சம் கூட ரோட் சென்ஸ் இல்லாமல் குறுக்கே புகுந்து பிரச்சனை பண்ணும் அடாவடி ட்ரைவர்களைக் கண்டால் இன்னும் எரிச்சலாக இருக்கும். சென்னை டூ திருப்பூருக்கு போவதற்குள் கிட்டத்தட்ட 350 ரூபாய் டோலுக்கு மட்டுமே ஆகிவிடுகிறது. சில்லரைக்கு பதிலாய் மிட்டாய் கொடுத்தவர்கள் எல்லோரும் தற்போது சில்லரை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பரனூரில் இருக்கும் டோல் லீஸ் முடிந்து காலமாகிவிட்ட து சொல்லி கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அடாவடியாய் டோல் பணம் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தனைக்கும் அங்கே பேரிகேட் கேட் கூட கிடையாது. கையில் நயா பைசா இல்லாமல் ஒரு அவசரத்தில் கிளம்பிவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்படி டோல்சாலையை பயன்படுத்த முடியும்?. க்ரெடிட் கார்ட் வசதி கிடையாதுவேண்டுமென்றே ஒரு முறை கும்பகோணத்திலிருந்து சென்னை வரை கையில் காசு இல்லை என்ன செய்யலாம் என்று கேட்டுக் கொண்டே வந்தேன். பேஸ்தடித்துப் போய் குசுகுசுவென பேசினார்களே ஒழிய,  யாரிடம் பதில் இல்லை. வண்டியை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்கிறார்களேயன்றி அதற்கான தீர்வு இல்லவேயில்லை. ஆனால் நண்பர் ஒருவரிடம் கேட்ட போது வண்டி நம்பரை நோட் செய்து கொண்டு, அனுப்பிவிட்டு பணம் கட்ட சட்டம் உண்டு என்கிறார். விசாரிக்கணும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வாரம் சொன்னது போல வெப் சீரீஸ்கள் தமிழிலும் வரத் தொடங்கிவிட்டது. அதில் சமீபத்திய குவாலிட்டியான வரவு இந்த  Cntrl+ Alt + Del
என்கிற யூத்புல் சீரீஸ் தான்.  அந்த சீரீஸ் போல அவுட்டாப் த பாக்ஸ் விஷயமில்லை என்றாலும், பாஷான ஐடி பேக்ட்ராப். அழகான பெண்கள். சைனர் சட்டைப் போட்ட பையன்கள். பப் என கிட்டத்தட்ட மல்ட்டி ப்ளெக்ஸ் ஹிந்தி படம் போல, கலர் கலராய் இல்லாமல் கவுதம் மேனம் படம் போன்ற செட்டப்பில் வழக்கமான ஆண் பெண் உறவு அவர்களின் கல்யாணம் பற்றிய வெப் சீரீஸ். ஜி.கே விஷ்ணுவின் நல்ல சினிமாட்டோகிராபி, எல்.டி.பியின் ஷார்ப்பான, நுனி நாக்கு தமிங்கிலிஷ் வசனங்கள். கேஸ்ட்டிங் சுவாரஸ்யம் மிடில் ஏஜ் நண்பனாய் வரும் அப்துலின் நடிப்பும், ரியாக்‌ஷனும் நிறைய இடங்களில் ரசிக்க வைக்கும். அபிராமி.. ப்பா.. செம்ம ஸ்கிரீன் ப்ரெசென்ஸ். க்யூட்டான கர்ள் ஹேர் தர்ஷனா ராஜேந்திரன், காதலிப்பதா? கல்யாணம் பண்ணலாமா என்று க்ளைமேக்ஸ் வரைக்கும் குழப்பமாகவே திரியும் ராகேந்திரன் என செம்ம டீம்.  இந்த வெப் சீரீஸின் இன்னொரு சுவாரஸ்யம் வைட் ஆக்டேவ்ஸின் ஆர்.ஆர். ஸூத்திங் ஹரிஹரனின் டைரக்‌ஷன் என இண்ட்ரஸ்டிங் எட்டு எபிசோட் வெப் சீரீஸ். மொத்த சீரீஸும் சீரியசாகவும் இல்லாமல் லைட்டாகவும் இல்லாமல் போனது. சீரீஸின் ஸ்பான்ஸர்கள் கிட்கேட்டும், மிராண்டாவும் என்பதற்காக கதையில் வரும் கேரக்டர்கள் எல்லோரும் எல்லா எபிசோடிலும் கிட்காட்டை தின்று, மிராண்டா குடிப்பது போல காட்டுவதும் அதைப் பார்ப்பதும் காலத்தின் கட்டாயம். எபிசோடை பார்க்கும் போது கொஞ்சம் எரிச்சல் வந்தாலும் இவர்களின் விளம்பர வருமானம் தான் இவர்களுக்கு பெரிய சப்போர்ட். இம்மாதிரியான சீரிஸ்களின் பார்வையாளர்கள் இளைஞர்கள் தான். நல்ல மார்கெட்டிங்கும், நல்ல கண்டெண்டும் , பட்ஜெட்டும் கிடைக்க, இன்னும் சிறப்பான சீரிஸ்கள் நம் டிவி சேனல் எபிசோடுகளிலிருந்து விடுதலையை அளிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. https://www.youtube.com/watch?v=RJEeTH3gQjU
@@@@@@@@@@@@@@@@@@@@@
பேஸ்புக் போன்ற சமூக வளைதளங்களினால் நல்லது நடக்கிறதோ இல்லையோ? கெட்டது நிறைய நடக்கிறது. அது இத்தனை காலமாய் நாம் ஜாதி பற்றி பப்ளிக்காய் பேசத் பயந்தது போய் ஆளாளுக்கு ஒரு ஜாதிக் குழுமத்தை பப்ளிக்காகவே வைத்துக் கொண்டு அலைவது அதிகமாக இருக்கிறது. யார் கொலை செய்தாலும், ரேப் செய்தாலும், அவன் யார் என்ன ஜாதி என்று தேடி கண்டுபிடித்துவிட்டுத்தான் அவனுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ கருத்து சொல்ல முடிவெடுக்கிறார்கள். இந்த ஜாதி பிரிவுகளில் நடுநிலைவாதிகளின், பெண்ணியவாதிகள் என சப்செக்டுகள் வேறு.  சமீபத்தில் ஒர் இளைஞர் கபாலி முதல் நாள் இரவுக் காட்சி முடித்துவிட்டு மூச்சா போக ஒதுங்கும் வேளையில் அங்கே புதர் நடுவில் ஒரு பெண்ணின் கூக்குரல் கேட்க, யாரோ நான்கைந்து பீகாரி பையன்கள் ஒரு பெண்ணை மானபங்க படுத்த முயற்சிக்க, அதை கேட்க போன போது அப்பையன்கள் கையில் வைத்திருந்த மூங்கில் கம்பால் அடித்ததாய் அடிபட்ட ைஅ அ  படம் போட்டு, கடைசியில் அந்த பெண்  போலீஸ் கம்ப்ளெயிண்ட் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று சொன்னதால் விட்டு விட்டு வந்தேன் என்று தன் வீர தீர பராக்கிரமத்தை போட, ஆளாளுக்கு தன் ஜாதிக்காரன், நண்பன், நடுநிலையாளர்களின் பாராட்டு, பெண்ணியவாதிகள் பொங்கல் என பரபரப்பாக ஷேர் செய்யப்பட்டு கொண்டிருந்த வேளையில், போலீஸ் அவரை அழைத்து சம்பவம் நடந்த இடத்துக்கு கூட்டிச் சென்று எங்கே நடந்தது? என்ன நடந்தது என்று விசாரித்தால் நான் சரக்கடித்திருந்தேன் அதனால் சரியாய் நியாபகமில்லை என்கிறிருக்கிறார்.  வாழ்க அவரது வீரம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குமுதம்  -12-10-16

அடல்ட் கார்னர்
What's the difference between your job and a dead prostitute?
Your job still sucks! 


Post a Comment

No comments: