Thottal Thodarum

Jul 19, 2011

சாப்பாட்டுக்கடை – சிதம்பரம் நியூ மூர்த்தி கஃபே

Photo0272 சிதம்பரம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது தில்லை நடராஜன். அதை தவிர பெரிதாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளூம் அளவிற்கு ஏதுமிருப்பதாய் எனக்கு தெரியவில்லை. சமீபத்தில் எனக்கு பிடித்தது சிதம்பரம் பைபாஸ் சாலை. வெளிநாட்டு ரோட்டுக்கு இணையாய் அற்புதமாய் அமைத்திருக்கும் சாலை. சுமார் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பனின் திருமணத்திற்காக சிதம்பரத்தை கிராஸ் செய்யும் போது நண்பர்களின் ரெகமண்டேஷனால் அறியப்பட்ட கடை முர்த்தி கஃபே. அங்கே மிகப் பிரபலமான டிஷ் என்னவென்றால் பரோட்டாவும், பட்டர் சிக்கனும். கூடவே முட்டை சட்னி என்றொரு அயிட்டம்.  நான் அப்போது போன போது விஜிபி சாலை என்று நினைக்கிறேன் அதன் முனையில் அந்தக்கடை இருந்தது. ஊருக்குள் நுழைந்தவுடன் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். நாங்கள் அப்படித்தான் அங்கே டிராபிக் ஒழுங்கு செய்து கொண்டிருந்த கருத்த அழகிய கான்ஸ்டபிளிடம் விசாரித்தோம்.Photo0274 நான்கு பாய்களைவிரித்தார்ப் போல தோசைக்கல் விரிக்கப் பட்டிருக்க, குட்டிக் குட்டியாய் சந்திரனைப் போல பரோட்டாக்கள் வெந்து கொண்டிருந்தது. அந்த சாயங்கால நேரத்தில் அவ்வளவு கூட்டம். ஒரு பக்கம் மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பார்சல் கடலாய் போய்க் கொண்டிருந்தது.  போன வாரம் நண்பர் ஆயில்யன் திருமணத்திற்கு போய்விட்டு வரும் போது மீண்டும் அக்கடை ஞாபகம் வர, பைபாஸ் வழியாய் போகாமல் ஊருக்கு வண்டியை விட்டோம். முர்த்தி கஃபே இப்போது நியூ முர்த்தி கஃபே ஆகியிருந்தது. சிதம்பரத்தை சுற்றி மட்டும் சுமார் ஆறு பிராஞ்சுகள் இருப்பதாய் சொன்னார்கள். நான் சென்றது அதே பழைய கடை. ஆனால் முழுவதும் புதுப்பிக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல ஆளுக்கு நாலு பரோட்டா, மூன்று பட்டர் சிக்கன், மூன்று முட்டை சட்னி என்று பத்து பேருக்கு பார்சல் செய்து கொண்டு கிளம்பினோம்.

இவர்களின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் சூடான சாப்டான குட்டிக்குட்டியான பரோட்டாக்கள்.  பட்டர் சிக்கனும் ஏதோ கஞ்சத்தனமாய் தராமல் கிரேவி வெள்ளத்தில் போன்லெஸ் சிக்கன் பீஸை மிதக்க விட்டிருப்பார்கள். அதன் மேல் பைனல் டச்சாய் பட்டரை ஊற்றி விட்டிருக்க, சூடான பரோட்டாவையும், அந்தக் கிரேவியையும், சிக்கனையும் ஒரு சேர வாயில் போட்டால் அஹா.. என்ன சுவை..என்ன சுவை.. பட்டரும்,  கிரேவியின் லேசான காரமும், வாயில் போட்டால் கரையும் சிக்கனும். சற்றே முறுகலான கிரேவியில் ஊற வைத்த பரோட்டாவும். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்.. டிவைன்.

முட்டை சட்னி என்பது வெங்காயம் மற்றும் தக்காளி தொக்குடன் முட்டையை அடித்து கலந்து கொடுக்கிறார்கள். அதன் சுவையை பற்றி எழுத வேண்டுமென்றால் அதற்கு இன்னொரு பக்கம் வேண்டும். சிதம்பரம் பக்கம் செல்பவர்கள் கொஞ்சம் சோமபாமல் பைபாஸை விட்டு ஊருக்குள் சென்றால் எத்தனை வருடமானாலும் மறக்க முடியாத உணவு ரெடி. டோண்ட் மிஸ் இட்.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

20 comments:

muthukumaran said...

வெளிநாடு வந்த பிறகு சாப்பாடு கடை பற்றிய உங்க போஸ்ட் பாக்கறப்ப எல்லாம் எச்சில் ஊருது.. என்ன பண்றது. இப்போதைக்கு நாக்கு செத்து போய் அத அடக்கம் பண்ணி ஒரு வருசமாச்சி.

ஊருக்கு வந்து பரோட்டா குருமா சாப்பிடனும்ன்னு ஆசையா இருக்கு. :-(

Shankar said...

You have a gift for identifying good food and presenting in a good saliva drooling fashion.
I think you should organise a tour (Like temple tour) specially for eating. I will be the first member. Why dont you give it a serious thought.
Keep the good work going.

pradeep said...

இதே போல ஈரோடு பக்கம் உள்ள டாபாக்களில் ரொட்டிக்கு இந்த முட்டை சட்னி ரொம்ப பிரபளம்.இதை இங்கே முட்டை தக்காளினு சொல்லுவாங்க.

குரங்குபெடல் said...

"முரளிகபே இப்போது நியூ முரளிகபே ஆகியிருந்தது"

பேர் மாறிப்போற அளவு சுவையோ . . .?

நன்றி

Kesavan Markkandan said...

கேபிள் சார் ,

நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2000 முதல் 2004 வரை படித்தேன். அப்போது எல்லாம் வாரம் ஒரு முறை மூர்த்தி கபே சென்று விடுவோம். பரோட்டா 2 ரூபாய். முட்டை சட்னி 5 ரூபாய். கிரேவி இலவசம். நன்றாக மூக்கு பிடிக்க 10-15 பரோட்டகளை உள்ளே தள்ளுவோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு 15 ரூபாய் இருந்தால் நன்றாக சாப்பிடலாம். படிப்பு முடிந்தபின் சிதம்பரம் செல்ல வாய்ப்பு கிடைக்க வில்லை. என்றாவது ஒருநாள் அங்கு சென்று பரோட்டா சாப்பிட வேண்டும் என்ற ஆசை மனதில் எழுந்துள்ளது. இந்த உணவகத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள் பல.

கேசவன்.

'பரிவை' சே.குமார் said...

வெளிநாடு வந்த பிறகு சாப்பாடு கடை பற்றிய உங்க போஸ்ட் பாக்கறப்ப எல்லாம் எச்சில் ஊருது.. என்ன பண்றது. இப்போதைக்கு நாக்கு செத்து போச்சி.

பாண்டி-பரணி said...

ஒரு எட்டு சிதம்பரம் பக்கம் புத்தூர் ஜெயராமன் உணவகத்துக்கு மதிய வேளை சென்று வாருங்கள் பாஸ்

cute photos said...

சிதம்பரத்துல நெறைய நல்ல ஹோட்டல் இருக்கு, வாத்தியார் கடையில இட்லி தோசை ரொம்ப பிரபலம்..கமலா மெஸ், அப்புறம் கோவில் பக்கத்துல ஒரு சேட்டு கடையில சப்பாத்தி ரொம்ப பிரபலம்..இது எல்லாத்தையும் விட புத்தூர் ஜெயராமன் உணவகம் ஹ்ம்ம் chancea இல்லை..அப்புறம் நெறைய மெஸ்-ங்க மாரியப்ப நகர்ல இருக்கு..முர்த்தி கபே-ல சிக்கன் 88 ஒரு முழு கோழி-யா fry பண்ணி கொடுபங்க சூப்பர் அ இருக்கும்..

முரளிகண்ணன் said...

கேபிள்ஜி, சிதம்பரத்தில் நடராஜருக்கு அடுத்து அண்ணாமலை பல்கலைகழகம் பேமஸாச்சே. அந்தக் காலத்துல இருந்து இருக்கு பாஸ்

Arun said...

Moorthy cafe is my all time favourite....since my childhood. Andha taste idhu varaikum engayum na saptadhu illa. Thanks for posting this !!

Even velu cafe is quite good, its nearby the bus stand. But unlke moorthy cafe, they didnt maintain it wel !

Ashok D said...

ம்ஹும்... (வேறேன்ன பெருமூச்சுதான்)

கத்தார் சீனு said...

வணக்கம் கேபிள்ஜி...பகிர்வுக்கு நன்றி !!!!
நான் 89 முதல் 94 (ஆறு முதல் பத்து) வரை சிதம்பரத்தில் தான் படித்தேன்..
மூர்த்தி கபே மறக்கவே முடியாது...
சால்னா கேட்டா வெள்ளமா குடுப்பாங்க....அருமையான சுவை அந்த பரோட்டாவும் சால்னாவும்...
ரொம்ப வருடங்கள் ஆய்டுச்சி..ஒருக்கா லீவுக்கு வந்த கண்டிப்பா போகணும் !!!

சுதந்திரன் said...

hai sankar....

I am thamizhan. my blog is www.sethiyathope.blogspot.com. Sethiyathope is my native place near by Chidambaram. Our friends are going to Moorthy Cafe only for any party. We are our going to Moorthy Cafe atleast one time for a month. The taste of Parotta and All types of chickens like kadai, chettinad, buttor, garlic is chanceless. Thank you for your post.

Kannan said...

வக்காலி, பேரு தமிழனாம் ஆனா இங்கிலி பீசுல தான் பேசுவாராம். சரி அத விடுங்க. யோவ் கேபிள்.....receipe சைட் ஆரம்பிச்சா உதவி பண்ணுவீரா!

கோவை நேரம் said...

அடடா ...நான் போன போது இந்த மாதிரி கடை இருக்குன்னு யாரும் சொல்லலையே...மிஸ் பண்ணிட்டேனு நினைக்கிறேன்

சுதந்திரன் said...

அன்பு நண்பர் கண்ணன் அவர்களுக்கு...
தங்களுக்கு நேரம் இருந்தால் ஒரு முறை எனது வலைதளத்தை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதில் எங்கேனும் ஆங்கிலத்தை கண்டறிந்தால் உங்களின் இந்த பேச்சுக்களை ஏற்றுக்கொள்கிறேன். அன்றைய அவசரத்தால் ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன். இனி முடிந்தால் நாகரீகமாக சுட்டிக்காட்டவும். நன்றி...

கொங்கு நாடோடி said...

சங்கர்,
உங்கள் சாப்பாட்டு கடை படிக்கும்போது எல்லாம் வீட்டில் இன்னைக்கு என்ன டின்னெர்னு போன் பண்ணி மனைவிகிட்டே கேட்க வைக்கிறது. வெளிநாடுகளில் வாழும் எங்களை போன்றவர்களுக்கு எல்லா சாப்பட்டுகடையும் அவங்க அவங்க வீட்டம்மா தான் வீடம்மாகிடே கோவிச்சுகிட்டா
அவ்வளவுதான். உங்க சாப்பாட்டு கடை படிக்கும் போது எங்க வீட்டம்மா மேல மதிப்பு கூடுது. இந்தியா வரும்போது உங்கள் சப்பட்டுகடை லிஸ்ட் பிரிண்ட் எடுத்துட்டு வரணும்...

Unknown said...

Good hotel in Chidambaram.My son always like this hotel.

Unknown said...

Good hotel in Chidambaram. My son always like this hotel.

Unknown said...

Good hotel in Chidambaram. My son always like this hotel.