Thottal Thodarum

Jul 7, 2011

Delhi Belly

delhi-belly-reviewசமீபத்தில் இவ்வளவு உற்சாகமாய் சிரித்து படம் பார்த்தது ஹாங் ஒவர் 2 வில் தான் என்று ஞாபகம். இந்தப்படம் ஹாங் ஓவருக்கான இந்திய பதில் என்று கூட சொல்லலாம். அமீர்கான் தயாரிப்பில், யூடிவி அளித்திருக்கும் படம். கேட்கவே வேண்டாம் ஹைப்புக்கு. அத்தனை ஹைப்புக்கும் சரியான ரிசல்ட்டை அளித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


மிக சிம்பிளான கதைதான். சோனியா என்கிற ஏர்ஹோஸ்டஸ் தன் நண்பரின் நண்பருக்கு உதவுவதற்காக விளாடிமிர் எனும் ஆளிடமிருந்து ஏர்போர்ட்டிலிருந்து ஒரு பார்சலை வாங்கிக் கொண்டு டெலிவரி செய்ய ஒப்புக் கொள்கிறாள். அந்த பார்சலை தன் பாய் ப்ரெண்ட் தஷியிடம் கொடுத்து ஒப்படைக்கச் சொல்லிவிட்டு, தன் அப்பா அம்மாவை பார்க்க அழைக்கிறாள் அவர்களது திருமண நிச்சயதார்த்த விஷயமாய் பேச. அந்த பார்சலை தன் சாப்பாட்டு ராமன் நண்பனான நிதினிடம் கொடுத்து  விடச் சொல்ல, அவன் ரோட்டோரம் விற்கும், கண்ட இடத்தில் சொறிந்து விட்டு கொடுக்கும் சாப்பாட்டு அயிட்டத்தை சாப்பிட்டு விட்டு வயிறு ப்ரச்சனையாகி வீட்டிலிருக்க, தன் காதலி வேறு வெளிநாட்டில் செட்டிலான ஒருவரோடு கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதால் மனம் நொந்து போய் வீட்டிற்கு வரும் அரூபிடம் தனக்கு உடம்பு சரியில்லை, டாக்டரிடம் போனேன் புட் பாய்சன் ஆகிவிட்டது என்று சொல்லி, போகிற வழியில் labபில் தன் ஸ்டூல் டெஸ்ட செய்வதற்கான சேம்பிளையும், அந்த கவரையும் அட்ரஸையும் கொடுக்க, முறையே சரக்கை அரூப் மாற்றிக் கொடுத்துவிடுவதால்  வருகிறது ப்ரச்சனை. அந்த பார்சலில் இருப்பது வைரங்கள். வைரத்துக்கு பதிலாய் வில்லனிடம் நிதினின் “ஆய்” சாம்பிள் போக, விளாடிமிரை அடித்து பின்ன ஆரம்பிக்கிறார்கள். அதற்கு அப்புறம் நடப்பதெல்லாம் கூத்தேன்றால் கூத்து அப்படி ஒரு கூத்து.
delhi-belly-13-8x6 படத்தின் முதல் ஷாட்டிலிருந்தே நம்மை எங்கேஜ் செய்துவிடுகிறார்கள். முக்கியமாய் அந்த நலிந்த  பேச்சுலர் அறை. ஆர்ட் டைரக்‌ஷனை பாராட்டாமல் இருக்க முடியாது. தண்ணீர் வரும் போது டர்ன் போட்டு பிடிக்க போட்டிப் போட்டுக் கொண்டு எல்லோரும் தூங்க, வயிறு ப்ரச்சனையாகி வரும் நிதினுக்கு அலம்ப, தண்ணீர் இல்லாமல், ப்ரிட்ஜில் இருக்கும் ஆரஞ்சு ஜூஸை உபயோகிப்பதில் ஆரம்பித்து, படம் நெடுக “ஆய்” மேட்டர்கள் அதிகமாக இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது. வைரம் கையில் கிடைத்தவுடன் ஆரம்பமாகும் பரபரப்பு படம் முடியும் வரை தொடர்கிறது நகைச்சுவையுடன்.

தஷியாக இம்ரான் கான். இண்டெலெக்டும் இல்லாமல் பெரும் மாற்றத்திற்கான அர்ஜும் இல்லாமல் அலையுமொரு பத்திரிக்கையாளன் கேரக்டர். சரியாக பொருந்தியிருக்கிறார். இவரது ஏர்ஹோஸ்டஸ் காதலியாய் ஷானாஸ் திமிரும் மார்பகங்களோடு நம்மை அவ்வப்போது டிஸ்டர்ப் செய்கிறார். ஆனாலும் நன்றாகத்தான் இருக்கிறது. கார்டூனிஸ்ட் அரூப், உடன் வேலை செய்யும் டைவர்ஸி பத்திரிக்கையாளினி மோனிகாவாக வரும் பூர்ணா நல்ல மெச்சூர்டு பெர்மாமென்ஸ். இதில் கலக்குவது கடத்தல் காரன் விஜய்ராஸ் தான். என்னா ஒரு பர்மாமென்ஸ். இவரிடம் இன்னும் வர வேண்டியது நிறைய இருக்கிறது. இன்னொரு இம்பரஸிவ் பர்பாமென்ஸ் நிதினாக வரும் குணாலின் நடிப்பு.  மிக இயல்பான நடிப்பு. அந்த குண்டு உடம்போடு முகத்தின் தாடியினுள் தெரியும் இன்னொசென்ஸ் அட அட்டகாசம். க்ளைமாக்ஸ் துரத்தலின் போது மீண்டும் வயிற்று ப்ராப்ளம் வந்துவிட, கிடைத்த வீட்டின் கக்கூஸுக்கு போய் உட்காருவது என்று மூக்கை பிடித்துக் கொண்டு சிரிக்க வைக்கிறார்.
delhi-belly-12-8x6 டெக்னிக்கலாய் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் குறை சொல்ல முடியாது. முக்கியமாய் ராம் சம்பத்தின் பின்னணி இசையும், பாடல்களும் இண்ட்ரஸ்டிங். இயக்குனர் அபினய் டியோவின் இரண்டாவது படம்.  முதல் படமான கேம் சரியாக போகவில்லை. ஒரு சிலீக்கான லைனை வைத்துக் கொண்டு, ஒரு சுவாரஸ்யமான காமெடி அட்வென்சர் கொடுத்திருக்கிறார். படம் நெடுக வரும் மூக்கை பிடிக்கும் டாய்லெட் வீச்சத்தை மீறி சிரிக்க வைத்திருப்பது இவரது வெற்றியே. ஹேங் ஓவர் படத்திற்கு நம் சைடிலிருந்து ஒரு இண்ட்ரஸ்டிங் வர்ஷன் என்றும் சொல்லலாம். முக்கியமாய் அந்த தாடிக்கார குண்டு, அப்பாவி இளைஞர் கேரக்டர். வீட்டு ஓனர் ப்ராத்தலில் போய் மேட்டர் செய்ய அதை போட்டோ எடுத்து வீட்டு வாடகைக்கு பதிலாய் ப்ளாக் மெயில் செய்வது, பூர்ணாவின் முன்னாள் கணவன், ஷானாஸுக்கும் இம்ரானுக்கும் நடக்கும் செக்ஸ் காட்சி, அவ்வளவு பரபரப்பிலும் சட்டென ஓடுகிற காரில் பூர்ணாவுக்கும், இம்ரானுக்கும் நடக்கும் முத்தம். சேஸிங்கில் ஓடிப் போய் ஸ்டார் ஓட்டலில் யாரோ ஒருவர் அறையில் போய் புகுந்து கொண்டு, செய்யும் அட்டகாசங்கள்,  டெல்லியின் கசகச தெருக்கள், ஐ லவ் யூ (ப்ராக்கெட்) ஐ ஹேட் யூ பாடல். அமீர்கானின் ஐட்டம் சாங் என்று பல சுவாரஸ்யங்கள் அடங்கிய அட்டகாச பொக்கே தான் டெல்லி பெல்லி. ENJOY..

Delhi Belly –   A Must See.. Hinglish Reply For Hang over.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

8 comments:

அன்பேசிவம் said...

avvvvvvvvvv.. kadupethuringa thala...:-)

குரங்குபெடல் said...

Intresting Review

Thanks

sarav said...

good review , but there was a controversy regarding Bhaag bhaag D.K bose song. aamir is one of my fav actor , i hope that his film(as a producer) makes money for him

Cable ji when is vengai's review i saw its banner in avm rajeswari theatre

R. Jagannathan said...

இந்த சப்ஜெக்ட் கமலுக்கு (ஆய்)அல்வா! ஏற்கனவே ‘பேசும் பட’ த்தில் கொஞ்ஜம் காட்டிவிட்டார். இந்தப் படத்தை எடுத்தால் விஸ்தாரமாகக் காண்பிப்பார்! விமர்சனத்தை ப்படிக்கும்போதே மூக்கைப் பொத்திக் கொண்டேன். எப்படி படத்தைப் பார்த்தீர்களோ? - ஜெ.

கேரளாக்காரன் said...

Super review. Waiting for ur review from last friday.

Unknown said...

//இவரது ஏர்ஹோஸ்டஸ் காதலியாய் ஷானாஸ் // தல, அது ஷெனாஸ்.. முன்னாள் MTV VJ..

அருண் said...

கட்டாயமா பார்க்கணும்,பிக் பி யின் புது படம் ரிலீஸ் ஆகிருக்கு,பூரி ஜகன்னாத் டைரக்ஷன்ல,அத பத்தியும் எழுதுங்க!
-அருண்-

Ashok D said...

:)