இரண்டு இளைஞர்கள். அண்ணன் தம்பி. பந்தல் போடும் காண்ட்ரேக்ட் வேலை செய்கிறார்கள். பகலில் கூட குடிக்கிறார்கள். இரவிலும் குடிக்கிறார்கள். அவர்களின் அம்மா அதைவிட, தன் மூத்த பிள்ளைக்கு தன் அண்ணன் பெண் தர மாட்டேன் என்று சொன்னதால் செத்து போய்விட்டதாக நடிப்பவள். இப்படிப்பட்ட குடும்பத்தில் உள்ள ஒருவனை சப்ரிஜிஸ்ட்ராராக உள்ள நாச்சியப்பன் என்பவரின் செல்ல மகள். நீ வயசுக்கு வந்த பொண்ணு போல இல்லையே.. அதுக்கான அம்சம் இல்லையென்று சொன்னதால் ஹீரோவை காதலிக்க ஆரம்பிக்கிறார். அவர்கள் காதல் ஜெயித்ததா? இல்லையா? என்பதை நம் பொறுமையை சோதித்து நோகடித்து சொல்லியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு கேரக்டருக்குமான அறிமுகப் படலமே நாடகத்தனத்தின் உச்சமென்றால் அதை படம்பிடித்த முறை அதைவிட அமெச்சூர் தனம். டிவி சிரீயல்களிலேயே நல்ல அருமையான ஷாட்டுகள் எல்லாம் வைக்கிறார்கள்.
நடிப்பு என்று யாரையும் பாராட்ட முடியாதபடி திரைக்கதையிருப்பதால் ஏதும் சொல்ல முடியவில்லை. வழக்கமாய் அட்லீஸ்ட் இரண்டு பாடல்களையாவது ஹிட் கொடுப்பவர் இதில் அதிலும் சோடை போய்விட்டார். மணவாளனின் ஒளிப்பதிவு பற்றி சொல்ல ஏதுமில்லை. டிஜிட்டலில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் கலர் கரெக்ஷன் வேலைகளில் மெனக்கெட்டிருந்தால் கொஞ்சம் வீடியோ ஃபீலை தவிர்த்திருக்கலாம்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று எல்லா டிபார்ட்மெண்டிலும் கோட்டை விட்டிருக்கிறார். இயக்குனர் எஸ்.எஸ். குமரன். அவ்வளவு ஸ்ட்ரிக்டான தகப்பன் தன் பெண் காதலிக்கும் பந்தல் போடுபவனை தெரிந்தே தன் வீட்டு விழாவிற்கு பந்தல் போட விடுவாரா? க்ளைமாக்ஸில் அவர் செய்வது காமெடி என்று நீங்கள் சொன்னாலும், லாஜிக்கிலலாமல் இடிக்கிறதே? என்னவோ போங்க சார்.
தேனீர் விடுதி- பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
Comments
மீசை வளரவே இல்லையாமே . . . ?
நன்றி
நன்றி
who is the best director of tamil cinima என்பதில் ஓட்டு போட மறந்து விடாதீர்.
http://kobirajkobi.blogspot.com/
இந்த வார ஜூவியில் வந்தது. உங்கள் காமாண்ட் என்ன? வழக்கமாக ஒரு quarterly report தருவீர்களே? 2 வது quarter முடிந்துவிட்டது... reportஐ அளியுங்கள்
http://yithudummy.blogspot.com/2011/07/for-cablesan.html