சந்தன் நகர் எனும் ஒரு காலனியில் அஞ்சலி படம் போல ஒரு கும்பல் சிறுவர்கள் அதகளப்படுத்திக் கொண்டிருக்க, அவர்கள் விளையாடும் ப்ளே க்ரவுண்டில் அந்த காலனியில் உள்ள ஒரு பொமரேனியன் நாய் தினமும் கக்கா போய் வைப்பது பிரச்சனையாக இருக்கும் சமயத்தில், அங்கு கார் துடைக்கும் வேலைக்கு அசோசியேஷன் மூலமாய் சேருகிறான் ஃபண்டு. அவனுடன் பிண்டு என்கிற நாயும் வந்து சேர, சிறுவர்கள் கும்பலுக்கு கடுப்பாகிறது. அவனை துரத்த சில்லர் பார்ட்டி கும்பல் ப்ளான் செய்ய, ஒவ்வொன்றையும் அவன் மிகச் சுலபமாய் முடிக்கிறான். பக்கத்து தெரு கும்பலிடம் தொடர் தோல்வியில் இருக்கும் சில்லர் பார்ட்டி கும்பலுக்கு அவர்களுடய ஸ்டார் போலரான அக்ரம் விரலில் அடிபட்டு விட்டதால் ஆள் இல்லாமல் போக ஃபண்டுவை கூப்பிட்டுக் கொண்டு போகிறார்கள். அந்த மேட்சிலும் ஜெயிக்கிறார்கள். மெல்ல சில்லர் கேங்குக்கும்,ஃபண்டுவுக்கும், பிண்டுவுக்குமான நட்பு இறுகுகிறது. ஒரு நாள் அங்குள்ள சில்ரன்ஸ் பார்க்கை திறக்க வரும் அமைச்சரின் பி.ஏ ஃபண்டுவை திட்ட, அதைப் பார்த்த பிண்டு அவரை கடிக்க துரத்துகிறது. இதை பார்த்த அமைச்சர். தெரு நாய்களை ஒழிக்கப் போகிறேன் என்ற பெயரில் பிண்டுவை அந்த காலனியை விட்டே ஒழிக்க ப்ளான் செய்கிறார். பின்பு என்ன நடந்தது என்பதை மிக சுவாரஸ்யமாய் சிறுவர்களின் பாயிண்டாப் வீயூவிலேயே அருமையாய் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு சிறுவர்களின் காஸ்டிங் அருமையோ அருமை. இடது கை ஸ்பீட் போலரான விதயாராம் என்கிற அக்ரம், சிங் பையன், எதுவும் பேசாமல் ஆழ்ந்த பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் குண்டுச் சிறுவன், துறுதுறு ”ஹல்லா போல்” குட்டி படு சுட்டி. இவர்களின் பெற்றோர்களுக்கான காஸ்டிங் என்று பார்த்து பார்த்து தெரிந்தெடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சிறுவர்களும் செம இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர்கள். சிறுவர்கள் யாருமே நடித்தது போலவே தெரியவில்லை. அவ்வளவு இயல்பு.
எழுதி இயக்கிய விகாஷையும், நிதேஷ் திவாரியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். முக்கியமாய் ஒரு முழு குழந்தைகளுக்கான படத்தை எடுக்க துணிந்ததற்கு. பிறகு அவ்வயது சிறுவர்களின் பார்வையை மீறி எங்கும் யோசிக்காத திரைக்கதையமைத்தது, சுவாரஸ்யமான சம்பவங்களால் நம்மையும் அச்சிறுவர்களுடன் பயணிக்க வைத்ததற்காகவும் பாராட்டத்தான் வேண்டும். ஆங்காங்கே திரைக்கதையில் வேகத் தன்மை குறைவாக இருப்பது போல் தெரிந்தாலும். பின் பாதியில் அந்த பிரேகிங் நியூஸுக்காக ஜட்டி ராலியை நுழைத்தது படு சுவாரஸ்யமாகிறது. ஒரு அமைச்சர் ஏதோ ஒரு நாய் தன் உதவியாளரை கடிக்க விழைந்து விட்டது என்பதற்காக தன் பவர் முழுவதையும் பயன் படுத்துவாரா? என்று லாஜிக்கல் கேட்பவர்களாக இருந்தால் நிச்சயம் உங்களுக்கான படமல்ல இது. சிறுவர்களுக்கான படம் என்று முடிவெடுத்துக் கொண்டு போங்கள் நிச்சயம் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள். அவ்வளவு பெரிய காலனியில் வெறும் ஏழெட்டு சிறுவர்கள் மட்டுமே இருப்பதாக காட்டுவது படத்தின் பட்ஜெட்டை காட்டுகிறது. அப்புறம் அவர்களது கேங்கில் ஒரு பெண் குழந்தை கூட இல்லாதது இடிக்கிறது. அது அவர்களுக்கும் உறுத்தியிருப்பதால் இரண்டாவது பாதியில் ஒரு பெண் குழந்தையை மட்டும் நுழைந்த்திருப்பது தெரிகிறது. நிச்சயம் குழந்தைகளூடன் பார்க்க வேண்டிய படம்.
Chillers Party - A Cute Kid’s Movie
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
அஞ்சலி படம் போல என்ற உடன் பார்க்க கூடாது என்று நினைத்தேன். விமர்சனம் படித்த உடன் என்னத்தை மாற்றி கொண்டேன்.
Paakkalamnu irukken!!
Thanks
Regards
J.M.Gazzaly
(http://hack-erz.blogpsot.com)
Thanks
Regards
J.M.Gazzaly
(http://hack-erz.blogpsot.com)
silirkkuthu cablarae. aamir khan ippo salman khan periya starz illatha padam thayarikkaranga Taare zameen par, delhi belly peepli live, ippo intha padam.. koncha naalukku munnala stanley ka dabba ippadi hindi padam oru pakkam vithiyasama kodukkaranga but with entertainment value irukku athu mathiri inga pasanga , subramaniyapuram sollalam both with no stars
ranbir kapoor oda kuthu paatai pathi onnum sollalai
kindly tell me how to type in tamil ? do u need any software....
ithai officela irundhu than (hi hi hi ...)pakiren type panren. page load agumbothu neraya items kanama poiduthu or blocked
athanal senior pathivalargal athigamaga pinnottam(comment thaane) adippavargal thayavu koorndhu entha kuzhandhaikku satru solli tharungal
அது எனக்கு தெரியும் யுடிவி ஸ்பாட் பாய்.. யுடிவி சாப்ட்வேருடயது. அதை ஏன் இங்கே ஆரம்பிக்ககூடாது என்றுதான் கேட்டிருகிறேன். அதற்கு தாய் கம்பெனிஎன்ன புள்ளை கம்பெனி என்ன?
Regards
M.Gazzaly
(http://hack-erz.blogspot.com)
thanks sankar for intro.