Thottal Thodarum

Jul 25, 2011

கொத்து பரோட்டா – 25/07/11

தமிழ்நாடு பூராவும் திமுக அமைச்சர்கள், கட்சிகாரர்கள் என்று பாகு பாடு இல்லாமல் நில அபகரிப்பு கேஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பல பேர் மீது சென்ற ஆட்சியின் போதே போலீஸாரிடம் கேஸ் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்திருக்கிறார்கள். நிச்சயம் இவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்க தகுந்ததே. ஆனால் அதே நேரத்தில் அதிமுக அமைச்சர்கள் மீதும் நில அபகரிப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பையா போன்ற அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் மட்டும் தொடர்ந்து விசாரணையில் இருப்பதாய் சொல்லப்படுகிறது. அதில் சமீபத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மீது கேஸ் கொடுத்தவர் தனக்கு எழுதப்படிக்க தெரியாது என்றும், என்ன ப்ரச்சனை என்றே தெரியாமல் கையெழுத்து போட்டு விட்டேன் என்று கூறி கேஸை வாபஸ் வாங்கிவிட்டார். இதன் பின்னணி என்னவென்று தமிழ் நாட்டிலிருக்கு சிறு குழந்தைகளுக்கு தெரியும். இந்த ஆட்சியிலாவது பாரபட்சமில்லாத சட்டம் ஒழுங்கு போற்றப்படும் என்கிற ஒரு விஷயம் வெறும் நம்பிக்கையாக மட்டுமே போய்விடுமோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. இந்த பக்கம் கேஸ் கொடுத்தவங்க நல்லா படிச்சவங்க போலிருக்கு.
#############################


சென்ற வாரம் பூராவும் பதிவுலக வாசகர்களின் சந்திப்பாகவே அமைந்துவிட்டது. அதை தொடங்கி வைத்தவர் பதிவர் எழில். ஒரு சனிக்கிழமை லஞ்சுக்கு அழைத்திருந்தார். பெலிடாவில் நான், எவனோ ஒருவன் பெஸ்கி, எழிலுடன் அருமையான லஞ்சை அளித்தார். மிக சுவாரஸ்யமாக போனது அன்றைய மதியம். அதன் பிறகு சினி சிட்டியில் இரண்டு பேர் கொஞ்சம் தயங்கியபடி அருகே வந்து “நீங்க கேபிள்தானே?” என்று கேட்டனர். ஆமாம் என்று சொன்ன மறுவினாடி “அஹா… தலைவரே..” என்று பெருங்குரலெடுத்து கட்டி அணைத்து போட்டோக்கள் எடுத்துக் கொண்டு போனார். அவர்களில் ஒருவர் சாப்ட்வேர் ஃபீல்டில் இருந்தாலும் டி.ஜேவாக இருக்கிறார். பெயர் கோபி. அவருடய விஸிட்டிங் கார்டே மிக சுவாரஸ்யமாய் இருந்தது. அதே சினி சிட்டியில் இன்னொரு நண்பர் வாசகர். அபுதுபாயிலிருந்து கார்திகேயன்.  இரண்டு வருடங்களுக்கு மேலாக படித்துக் கொண்டிருப்பதாகவும், நிச்சயம் தங்கள் ஊருக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். நன்றி கார்த்திகேயன். நண்பர் ஹாரிஸ் கூட இந்த வாரம் அழைத்திருக்கிறார். இவரும் என் நெடுநாள் வாசகர்.
################################
செவிக்கினிமை
கேட்டவுடன் மறுபடி, மறுபடி முணுமுணுக்க வைத்த பாடல் “வாகை சூட வா” படத்தில் வரும் “போறானே..போறானே” . கேட்சியான ட்யூன். முக்கியமாய் நேகாவின் குரல் ஹாண்டிங்  வாய்ஸ். அதே போல கார்த்திக் நேதாவின் பாடல் வரிகள். மிக ஆழகாய் ஆழமாய் எழுதப்பட்ட வரிகள். ”போறானே.. போறானே, காத்தோட தூத்தலைப் போல”, என்று ஆரம்பிக்கும் வரிகளில் இருக்கும் ஒரு சுவாரஸ்யமே பாடலை நம்முள் கொண்டு செல்கிறது.

இந்த வாரம் “வந்தான் வென்றான்” பாடல் வெளியீட்டிற்கு போயிருந்தேன். தமனின் இசையில் மூன்று பாடல்களும், ட்ரைலரையும் வெளியிட்டார்கள். மூன்று பாடல்களில் எனக்கு பிடித்தது தாமரை எழுதிய “காஞ்சனமாலா” தான். கொஞ்சம் ரஹ்மானின் ‘நெஞ்சினிலேவை பிரதியெடுத்தது போல இருந்தாலும் இண்ட்ரஸ்டிங்.  ஆலாப் ராஜு பாடியிருக்கும் அஞ்சனா விஷுவலாய் நன்றாக இருக்கிறது. டாப்ஸி டாப்பாக இருக்கிறார். ஆனால் தமனின் டிரேட்மார்க்கான குரல்களை டெக்னோ சவுண்டாக்கி விடும் ஸ்டைல் வர வர எரிச்சலடைய வைக்கிறது. மதன் கார்க்கி மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார். சமீப காலத்தில் வெகு சீக்கிரத்திலே முன்னணி பாடலாசிரியர் வரிசையில் வந்து கொண்டிருக்கிறார் இவர். நா.முத்துகுமாரின் முடிவில்லா மழையோடு பாடலும் ஹிட் வரிசையில் வர சான்ஸிருக்கிறது.
###################################
சென்ற வாரம் நான் எழுதிய ”கேட்டால் கிடைக்கும்” கட்டுரை பல பேரை ரொம்பவும் பாதித்திருக்கிறது. நிறைய நண்பர்கள் தொலைபேசியில் பாராட்டிவிட்டு, தாங்களும் தங்கள் பங்குக்கு இது மாதிரியான விஷயங்களுக்காக போராடியிருப்பதாய் சொன்னார்கள். முக்கியமாய் பெங்களூரிலிருந்து நண்பர் பிரபு. பஸ் ஸ்டாண்டுகளில் கட்டண கழிப்பறைகளில் ஒரு ரூபாய்க்கு பதிலாய் இரண்டு ரூபாய் மூன்று ரூபாய் வாங்குவதைப் தான் எதிர்த்ததாகவும், அதற்காக தன்னை அடிக்க வந்ததாகவும் கூறினார். அதே போல வாசகர் சரவணன் மக்கள் தங்கள் உரிமையை உணர ஏன்  அதற்கான சட்ட திட்டங்களைப் பற்றி எழுதக்கூடாது என்று கேட்டார். விரைவில் அதையும் வெளியிடுகிறேன் நண்பரே. நம் உரிமைகளை நாம் என்றுமே விட்டுக் கொடுக்க கூடாது. நம்மிடமிருந்து கொள்ளையடிக்க அவர்கள் வெட்கப்படாத போது நாம் ஏன் வெட்கப்பட வேண்டும் நம் உரிமைகளை கேட்பதற்கு?. இதை ஒரு இயக்கமாய் நாம் செய்தால் என்ன? உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்.
#################################
ஓர் அறிவிப்பு
இயக்குனர் களஞ்சியம் இயக்கி, நடித்திருக்கும் “கருங்காலி” திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை வருகிற புதன்கிழமை 27ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு திரையிட இருக்கிறார்கள். பார்க்க விரும்பும் பதிவர்கள், பேஸ்ஃபுக் அன்பர்கள் தயவு செய்து என்னை தொடர்பு செய்து உங்கள் வருகையை உறுதிபடுத்தவும். நன்றி.
###################################
டெல்லி பெல்லி படத்தை தடை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தியிருக்கிறது. படத்தில் நாயகர்கள் போலிஸிடமிருந்து தப்பிக்க புர்கா அணிந்து போவதால் முஸ்லிம்களின் மனம் புண்பட்டிருக்கிறதாம். சினிமா கண்டு பிடித்த காலத்திலிருந்து இருக்கும் இந்த யுக்தி இப்போதுதான் இவர்கள் மனதை புண்படுத்தியிருக்கிறதா? நிச்சயமாய் இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இப்படத்தில் வரும் வசனங்கள் ஹிங்கிலிஷ் படமாதனால் ஆபாச வார்த்தைகள் வந்ததை பற்றி பெரியதாய் கண்டு கொள்ளவில்லை. அதுவும் அமீர்கான் போன்ற பெரிய நடிகர்களின் தயாரிப்பாய் இருந்தால் கண்டு கொள்ளப்படுவதில்லை. அதே நம்மூர் ஆரண்யகாண்டம் என்றால் ட்ரிபியூனல் எல்லாம் போய்தான் வரணும். அதென்ன தமிழுக்கு ஒரு நியாயம்? மற்ற மொழிகளூக்கு ஒரு நியாயம்?
#################################
ப்ளாஷ்பேக்
இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஸ்ரீதேவிக்காகவே மீண்டும் மீண்டும் பார்த்த பாடல். ஒரு பாடல் முழுவதும் தன்னுடய நடனத்தின் மூலம் கட்டிப் போடும் திறமை மிக சிலருக்கே உண்டு. இதே மாதிரி பாடல்கள் பல ஹிந்தி படங்களில் வந்திருந்தாலும் இது என்னுடய பேவரிட்.
#######################################
அட்டக்காப்பி
இந்தப் படம் தான் உட்டாலக்கடின்னு ஒலகத்துக்கே தெரிஞ்சாலும் அவங்க ரொம்பவே கஷ்டப்பட்டு எடுத்ததா சொல்றாய்ங்க.. சரி அதை விடுங்க. இந்த பாட்டை கேளுங்க.. இதையும் கஷ்டப்பட்டுத்தான் போட்டாய்ங்களா?

############################################
Amy winehouse பேரைக் கேட்கும் போதே கொஞ்சம் லேசான போதை ஏறும். இவரின் ரிஹாப் சிங்கிளை கேட்டபின் இவர் குரலில் உள்ள போதை நம்மை கிறங்கடிக்கும். அப்படிப்பட்ட இளமையான, இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்.  மிகவும் குறுகிய காலத்தில் பணம், புகழ், விருதெல்லாம் இவரை தேடி வர, போதையின் உச்சத்தில் ஏறி அமர்ந்த காரணத்தால் 27 வயதில் நேற்று முன் தினம் வீட்டில் இறந்து கிடந்தார் இவர்.

###################################################
மை கார்னர்

##############################################
அடல்ட் கார்னர்

அந்த பெண்கள் பள்ளியில் ஆங்கில வாத்தியார் ஒருவர் வகுப்பு எடுக்க வரும்போது பேண்ட்டுக்கு ஜிப் போட மறந்து வந்துட்டார்.. அவர் லுல்லாவை பார்த்த மாணவிகள் சிரிக்க ஆரம்பித்தனர்.மாணவிகள் சிரிப்பது எதற்கு என்று புரியாத அந்த ஆங்கில வாத்தியார் மிரட்டறதா நினைச்சிகிட்டு, 'இனிமே யாரவது சிரிச்சிங்கன்னா வெளிய நிக்க வச்சிடுவேன்'...அப்படின்னு சொன்னதும் மாணவிங்க ஒட்டு மொத்தமா சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க...


Post a Comment

20 comments:

husain said...

super ji, waiting for KOTTHU PAROTO, NOW READY

husain said...

super ji, waiting for KOTTHU PAROTO, NOW READY

nellai அண்ணாச்சி said...

அண்ணே ஜோக் வழக்கம் போல சூப்பர்

Saran said...

hi sankar sir,
Which movie/song you are telling in அட்டக்காப்பி.. i heard it, but couldnt recognise it.

அத்திரி said...

//இந்த ஆட்சியிலாவது பாரபட்சமில்லாத சட்டம் ஒழுங்கு போற்றப்படும் என்கிற ஒரு விஷயம் வெறும் நம்பிக்கையாக மட்டுமே போய்விடுமோ என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது.//


கிகிகிகிகிகி:))))))))))))))))

Gobs said...

Shankar Sir,
Again TTMGN is a copy. But don't speak about their struggle. As a film maker you will know that than us. Really a good film deserves the pat. I don't expect this from you cableji. They haven't given the credit to the original but we(great people of educated ;) knows it. But to my opinion its a great and real good effort which has to be supported and appreciated. Instead of a gangster story copies(lot of films now) this copy is a good one.
Udane thitta varadeengaa samiyoooooooooov.

ம.தி.சுதா said...

மைகார்ணர் தான் ஆறுதலாகப் பார்த்தேனுங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சாருவின் ஆபாச அரட்டை உண்மையா? பொய்யா? ஆதார பதிவு

Anonymous said...

அட்டக் காப்பி : நீங்கள் இணைத்திருக்கும் வீடியோவும் ஒரிஜினல் அல்ல.. மூல இசைக்கு சொந்தக்காரர்கள் வால்ட் டிஸ்னி : http://www.youtube.com/watch?v=_or3MKiU8Rw
இதை இணைப்பதற்குக் காரணம், அந்த இரண்டு விடலைப் பசங்களுக்கு கிரெடிட் போவதை விரும்பாததே :) :)

பபாஷா..! said...

Dear Cableji,

I am your die hard fan. Long time No see. My village is celebrating aadi festival. If u please grand me one visit to our village. That will be great to all of us.

All my mondays are opening with your kothu parotta only.

Why u are not writing enter kavidhaikal?

How is chennai? Wish u all the best.

Yours Truly!
papasha!

Ps. This is my first english comment . If any mistake you found, please scold my english master in the next monday kothu parotta.

Bye and take care. :)

Unknown said...

//நம்மிடமிருந்து கொள்ளையடிக்க அவர்கள் வெட்கப்படாத போது நாம் ஏன் வெட்கப்பட வேண்டும் நம் உரிமைகளை கேட்பதற்கு?. இதை ஒரு இயக்கமாய் நாம் செய்தால் என்ன? உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன//

கண்டிப்பா செய்வோம்!!!! இத செய்யாம வேற எத செய்யப்போறோம்?? நம்ம லெவல்ல இத செய்ய ஆரம்பிச்சா போதும், நம்ம நண்பர்கள் தானா முன்வந்து கை கொடுப்பாங்க.. நான் முதல் ஆளா நிப்பேன்

Unknown said...

அன்னிக்கு லஞ்ச் ஒரு மிக அருமையான லஞ்ச்.. 2 மணி நேரம் போனதே தெரியல.. அடுத்த லஞ்சுக்கு சீக்கிரமே பிளான் பண்ணுவோம்... :)

Busy said...

Dear Sankar,

Iam reading ur blog long time, i feeling bad, why you people bother about this dehli belli case about muslims, what ever wrong about islam immediateLY you people publish in blogs, any body put the news about NORWAY Bomb Blast,after this blast immedately waht BBC Published, after that why they dnt publish its done by somebody with innocent people. this is media, blogs etc.,

HajasreeN said...

ennathaan serius a ponalum last a oru JK solli sirika wachiduringa boss

'பரிவை' சே.குமார் said...

வழக்கம் போல SUPERO S...U...P...E...R.

போளூர் தயாநிதி said...

ஜோக் சூப்பர்

Sivakumar said...

கருங்காலி... இந்த மாதிரி சிறப்பு காட்சியை எப்ப பாத்தாலும் வார நாள்ல வச்சா பாக்க முடியறதே இல்லை. 9-5 வேலை செய்றவங்க மட்டும்தான் பாக்க முடியும். தயவு செஞ்சி சனி, ஞாயிறு வைக்க சொல்லுங்க சார்.

Shark said...

அட்டக் காப்பி : what movie is that?pls

Ba La said...

பேஷ் பேஷ் ”காப்பி” றெம்ப நன்னா இருக்கே..

கரம் மசாலா - கல்யாணம்

அருண் said...

வழக்கம் போல அருமை,வாகை சூட வா இசையமைப்பாளர் - ஒரு நம்பிக்கைக்குரிய புதுவரவு.
-அருண்-

shiva said...

Attacopy..

Even these people dont space cartoon songs.

Check out this.

http://www.youtube.com/watch?v=p3G5IXn0K7A&ob=av3e