ஏப்ரல் 2011 நஞ்சுபுரம், சன்னின் மாப்பிள்ளை, பிரசாந்தின் பொன்னர் சங்கர், கே.வி.ஆனந்தின் கோ, சிம்புவின் வானம் என்று கலந்தடித்து படங்கள் வெளிவந்தது. ராமநாராயணன் வெளியிட்டும் நஞ்சுபுரத்தின் விஷம் ஏறவில்லை. சன் வெளியிட்ட தனுஷின் மாப்பிள்ளை மீண்டும் சன்னுக்கு மட்டுமே சூப்பர் ஹிட் படமாய் தெரிந்தது. கலைஞர் கதை, திரைக்கதை வசனத்தில், பிரசாந்தின் இரட்டை வேட நடிப்பில் வெளிவந்த பொன்னர் சங்கர். ஒன்றும் சொல்லிக் கொள்ளூம்படியாய் இல்லை. படத்தை தியேட்டரிலிருந்து எடுத்தும் இன்றளவில் சில சமயம் கலைஞர் டிவியில் மட்டும் விளம்பரம் வருகிறது.
தேர்தல் சமயத்தில் வெளியாக வேண்டிய கோ.. கொஞ்சம் தள்ளி வெளிவந்தது. வந்த சூட்டிலேயே படம் பிய்த்துக் கொண்டு ஓட ஆரம்பித்தது. இன்றளவில் நிற்கவில்லை. தமிழ் தெலுங்கு என்று பின்னி பெடலெடுக்கிறது. தெலுங்கு ரீமேக்கான வானம் தெலுங்கில் எந்தளவிற்கு எடுபட்டதோ அதே அளவில் தான் இங்கேயும். ஹிட்டும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் அலைபாய்ந்தது. இந்த மாதத்தில் மட்டுமல்ல இது வரை, இந்த வருடம் வந்த படங்களிலேயே சூப்பர் டூப்பர் ஹிட கோ மட்டும்தான். தமிழில் மட்டுமில்லாது தெலுங்கிலும் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது..
சூப்பர் டூப்பர் ஹிட்- கோ
ஆவரேஜ் – வானம். #################################
மே 2011 மீண்டும் இம்மாதம் சன்னுடன் தான் ஆரம்பித்தது. எங்கேயும் காதல். ஏஜிஎஸ் நிறுவனத்தின் படத்தை வாங்கி சன் வெளியிட்டது. தயாநிதி அழகிரி தன் பங்கிற்கு சுசீந்திரனின் அழகர் சாமி குதிரை படத்தை வெளியிட்டது. களவாணி தயாரிப்பாளர் நசீரின் எத்தன் டெபிசிட்டினால் ஒரு வாரம் தள்ளி வெளியானது. சின்ன பட்ஜெட் படமான மைதானம், சாப்ட்வேர் கம்பெனியின் கண்டேன் ஆகியவை வெளியாயின. எங்கேயும் காதல் படத்தின் பாடல்கள் பெரிய ஹிட். ஆனால் படம் பெரிதாய் போகவில்லை. மீண்டும் சன்னுக்கு மட்டுமேயான சூப்பர் ஹிட் படமாய் அமைந்தது. சுசீந்திரனின் அழகர் சாமி குதிரையை டிவியில் விளம்பரங்களில் இருக்கிற இலக்கியவாதிகள் எல்லாம் சொல்லி வைத்தார் போல ஜன்னி வரும் வரை பாராட்டியதால், வெகு ஜனங்களுக்கு தூரமான படமாய் போனதோ என்று தோன்றுமளவுக்கு தோல்வியடைந்தது. மைதானம் என்கிற சிறு பட்ஜெட் படம் நான்கு உதவி இயக்குனர்கள் நடித்து வெளிவந்த டிஜிட்டல் படம். ஆங்காங்கே பத்திரிக்கையாளர்களும், சில விமர்சகர்களாலும் பாராட்டப் பட்டாலும் குறைப்பட்ட மேக்கிங். பட்ஜெட் போன்ற பிரச்சனைகளால் பெரும் தோல்வி படமானது. பிரபுதேவாவின் சீடர் முகில் இயக்கத்தில் வந்த கண்டேன் படம் சாந்தனுவுக்கு மீண்டும் ஒரு தோல்விப் படமாகவே அமைந்தது. களவாணி தயாரிப்பாளரின் எத்தன் ஏற்கனவே சொன்ன தேதியில் ரிலீஸாகவில்லை. ஒரு வாரம் தள்ளித்தான் வெளியானது. ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டினாலும் பெரிதாய் ஏதும் நடக்கவில்லை.
##################################
ஜுன் 2011
ஆண்மைத் தவறேல், ஆரண்ய காண்டம், அவன் இவன், உதயன், பிள்ளையார் கோவில் கடைசி தெரு, 180, ஆகியவை வெளியாயின. ஆண்மைதவறேல் பிரேசிலியன் படமான ட்ரேட்டின் உல்டா. ஆனால் இதே படத்தை வைத்து இதற்கு முன் வந்த விலை போன்ற படஙக்ளை விட சுமாராக எடுககப்பட்டிருந்தாலும் மக்களிடையே கொண்டு சேர்க்க முடியவில்லை. ஆரண்யகாண்டம் ட்ரைலரே மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு வந்த ப்ரோமோக்கள் எல்லாம் அடித்து தூள் பரத்த, ரிலீஸான அன்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, விமர்சகர்களிடையேவும், பத்திரிக்கையாளர்களிடமும் பெரிய பெயரை பெற்றிருந்தாலும், ஏனோ மக்களிடையே போய் சேரவில்லை. நன்றாக இருக்கிறது என்று மவுத் பப்ளிசிட்டி போய் சேர்வதற்கு தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டுவிட்டது துரதிஷ்டமே. பாண்டிச்சேரியில் ஒரே ஒரு நாளும், இன்னும் சில ஊர்களில் இரண்டு ஷோ, இரண்டு நாள் என்று படம் ஓடாமல் தூக்கப்பட்டது படு வருத்தம். வெளியூர்களில் ஓடாததற்கு படத்தின் போஸ்டர் டிசைன் கூட காரணம் என்கிறார்கள். யார் நடிப்பது என்று கூட தெரியவில்லைஆனாலும் ஒரு சிறந்த படம். பாலாவின் அவன் இவன் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளிவந்தது. ஆனால் கதை என்கிற வஸ்துவே இல்லாமல் எடுக்கப்பட்டிருந்த கேரக்டர்களின் தொகுப்புப் படம் மக்களிடையே பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்ட காரணத்தால் முதல் மூன்று நாட்களூக்கு பிறகு எல்லா இடங்களிலும் வசூல் வீழ்ந்தது. அடுத்த வாரம் வந்த அருள்நிதியின் உதயன், ஆர்.பி.சவுத்திரியின் இரண்டாவது மகன் ரமேஷின் இரண்டாவது இன்னிங்க்ஸ் படமும் பெரிதாய் செல்ப் எடுக்கவில்லை. சத்யம் சினிமாஸின் 180 சிட்டி மக்களிடம் கொஞச்ம் அதன் டெக்னிக்கல் வேல்யூவிற்காக பாராட்டப்பட்டாலும், வழக்கமான கேன்சர் கதையானதால் தோல்வியடைந்தது என்று சொல்ல வேண்டும்.
###########################

இங்கே குறிப்பிடப் பட்டிருக்கும் படங்களைத் தவிர சில சின்ன பட்ஜெட் படங்கள் வெளியானாலும் அவைகள் எல்லாம் லிஸ்டிலேயே சேர்க்க முடியாத காரணத்தால் குறிப்பிடவில்லை. மொத்தத்தில் இந்த மூன்று மாதத்தில் கோ மட்டுமே மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. மற்ற அத்துனை படங்களும் விமர்சனங்களால் நல்ல பெயர் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாய் பெரிதாய் போகவில்லை என்றுதா சொல்ல வேண்டும்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
எனக்கு கோ படத்தை விட எத்தன் பிடித்து இருந்தது.. :-)
அண்ணே ரமேஷ் தான் முதல் பையன். ஜீவாதான் ரெண்டாவது (வரலாறு மிகவும் முக்கியம். ஹிஹி)
Regards
M.Gazzaly
(http://hack-erz.blogspot.com
எனக்கு எத்தன் பிடித்து இருந்தது.
அண்ணே ரமேஷ் தான் முதல் பையன். ஜீவாதான் ரெண்டாவது (வரலாறு மிகவும் முக்கியம். ஹிஹி)//
Ramesh and Jeeva are third and fourth of RBC, they have two more siblings, Suresh and Jeevan.
உங்க நேர்மை ரொம்பவே பிடிச்சிருக்கு
நன்றி
நமக்கு பிடிக்கிறது எல்லாருக்கும் பிடிக்கிறது இல்லை..
@மதுரை சரவணன்
நன்றி
@கானாவரோ
யெஸ்
நன்றி
@முரளிகண்ணன்
நன்றி
சே.குமார்
நன்றி.
அண்ணே.. அவங்ககுடும்பத்தை பற்றி சொல்லணுமின்னா இன்னும் சில விஷயஙக்ள் இருக்கு.
@ரிஷோபன்
எதுக்குண்ணே.. இவ்வள்வு கோபம்?
அட.. நீங்க அந்த பூனை கண்ணை முடிகிட்ட கேஸா.. மத்த பத்திரிக்கைகள், விமர்சனங்கள் எதையும் படிக்கிறது இல்லை போலருக்கே.. போய்.. எல்லாத்தையும் படிச்சிட்டு வாங்க..

அட..என்ன அவசரம். என்னை பாராட்டுறீங்க. அடுத்த ரிப்போர்டுலதான் என் நேர்மை தெரியும். அப்போ பாராட்டுங்க..
@ராஜ்
அதையெல்லாம் லிஸ்டுல சேர்க்க முடியாதுங்க..
எனககு எந்த கவலையும் இல்லை.. நான் எப்பவுமே ஃபீரியாத்தான் இருக்கேன்.இருப்பேன்.
2009ல் திமுகவை ஜெயிக்க வைத்ததற்கா?