சென்னையில் எனக்கு தெரிந்து எக்ஸ்பிரஸ் அவின்யூவிலும், பி.வி.ஆர் தியேட்டர் இருக்கும் ஸ்கை வாக்கிலும் இந்த உணவகம் இருக்கிறது. 100% சைவ உணவகம். விலையை கேட்டதும் கொஞ்சம் அதிரத்தான் செய்யும் ஆனாலும் சரி என்று முடிவெடுத்து உட்கார்ந்தால் விலை ஒரு பொருட்டேயில்லை என்று சொல்வீர்கள். அப்படியென்ன விலை என்று கேட்கிறீர்களா? அதை பிறகு சொல்கிறேன்.
போய் உட்கார்ந்ததும் முட்டை வடிவ தட்டினுள் வரிசையாய் குட்டிக் குட்டி கிண்ணங்களும், நடுவில் ஒரு பெரிய தட்டும், இரண்டு ஸ்பூன்களுடன் செட் செய்து வைத்திருப்பதே ஒரு அழகென்றால், உட்கார்ந்த இடத்திலேயே கை கழுவ, ராஜாக்கால குடுவையிலிருந்து நம் கையை கழுவ தண்ணீர் ஊற்றுகிறார்கள். அதன் பிறகுதான் ஆரம்பிக்கிறது வரிசை மேளா. நான்கு வகை சப்ஜிக்கள், ஒரு பச்சடி, மூன்று வகையான டால்கள், மற்றும் அசட்டுத்தித்திப்பாக மோர்குழம்பு போன்ற ஒரு குழம்பு. சூடான குடமிளகாய், உருளைக்கிழங்கு பஜ்ஜி, காரசட்னி, ஸ்வீட் சட்னி, மற்றும் அட்டகாசமான கார ஆவக்காய் ஊறுகாயும், பச்சை மிளகாய் ஊறுகாயும் வைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட சூப்புமில்லாமல் பச்சடியாகவும் இல்லாமல் மாங்காய் போட்ட ஒரு சூப் போன்ற அயிட்டத்துடன் ஆரம்பித்தார்கள். அதன் பிறகு வரிசையா சுடச்சுட அடுப்பிலிருந்து எடுக்கப்பட்ட ரோட்டி, புல்கா வகையராக்கள் வரிசைக்கட்டி நிற்க, அதன் மேல் ஒரு ஸ்பூன் நெய்யை தாராளமாய் ஊற்ற, நெய் படர்ந்த புல்கா, ரொட்டிகளுக்கு துணையாய் ஒரு ராஜ்மா, உருளைக்கிழங்கு, பன்னீர், கோபியில் நான்கு வகையான சப்ஜிக்கள் வரிசைக் கட்டி நிற்க, அது தவிர இருக்கும் டாலும் துணைக்கிருக்க, சும்மா அடிதூள். என்றால் அடி தூள் தான்.
வேண்டிய வரை புல்கா, ரோட்டியை சாப்பிட்டவுடன், அடுத்த அயிட்டமான கிச்சடி எனும் ராஜஸ்தானிய பொங்கலைப் போட்டு அதன் மேல் ஒரு கரண்டி நெய் வேண்டுமா? என்று கேட்டு தாராளமாய் ஊற்றுகிறார்கள். அது முடிந்து டாலுடன் சாப்பிடுவதற்கு ப்ளெயின் சாதமும், பால் மணக்கும் தாளித்து கொட்டப்பட்ட, கொஞ்சம் கூட புளிக்காத தயிர்சாதத்தோடு, ஆவக்காய் காம்பினேஷன் தூள் கிளப்பியது. இதன் நடுவில் ஒரு ப்ளேட்டில் நல்ல உருண்டையாய் ஜீராவில் ஊறிய குலோப் ஜாம், பர்பி, அல்வா என்று மூன்று அயிட்டங்களில் ஒன்றை எடுக்கச் சொல்ல, எதை விடுப்பது, எதை எடுப்பது என்ற குழப்பத்தில் ஷா..பூ..த்தீரி போட்டு ஒன்றை எடுத்து டெசர்ட்டுக்கு முடித்து கொள்ளலாம். இதன் நடுவில் சாப்பிட ஆரம்பித்ததிலிருந்து தொடர்ச்சியாய் த்ண்ணீருடன், புளிக்காத அற்புதமான மோர் காலியாக காலியாக ஊற்றப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த சாப்பாட்டி விலை ரூ.199+ வரிகள் மட்டுமே. இப்ப சொல்லுங்க விலை ஜாஸ்தியா?. இதையெல்லாம் விட முக்கியமான விஷயம். சாப்பிட்டு வந்த ரெண்டாவது நாள் உங்களுக்கு டெல்லியிலேர்ந்து போன் பண்ணி, சாப்பாடு நலலருக்கா? ஏதாவது குறையிருக்கான்னு விசாரிக்கிறதுதான். such a Divine Veg Food. Goo… For…it.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
This place is always crowded hence i am yet to try the food here
கலக்கல்... நல்லா அனுபவிச்சு சாப்பிட்டு இருக்கீங்க...
அதை விவரித்த விதமும் அழகோ அழகு...
நெக்ஸ்ட் டைம் சென்னை வரும்போது ட்ரை பண்ணிட வேண்டியது தான்...
>>>>>மற்றும் அசட்டுத் தித்திப்பாக மோர்குழம்பு போன்ற ஒரு குழம்பு.<<<<<
வட இந்தியர்கள் இந்த அசட்டு திரவத்தைக் 'கடி' என்கிறார்கள்! யாரைப் போய்க் கடிக்க?!
நன்றி!
சினிமா விரும்பி
Regards
M.Gazzaly
http://hack-erz.blogspot.com
டெல்லியிலிருந்து போன் பண்ணி..யார் ? ராசானா..கனியா?//
*********
ஹா...ஹா...ஹா... தலீவா வணக்கம்... டிபிக்கல் மணிஜி டச்.. ரசித்தேன்...