Thottal Thodarum

Jul 30, 2011

வெப்பம்

ரொம்ப நாளாகவே பாடல்கள் மூலமாய் அறிமுகமாயிருந்த படம்.  கெளதமின் தயாரிப்பில் அவரது உதவியாளர் இயக்கிய படம். ட்ரைலர் கொஞ்சம் ஆர்வத்தை தூண்டியிருக்க, பெண் இயக்குனரின் படம் என்பதால் இன்னும் கொஞ்சம் எதிர்பார்ப்பு ஏறியிருந்த படம் வெப்பம்.


பெண் இயக்குனர்கள் வழக்கமாய் தொட மறுக்கும்  கதை களன். குப்பம், தாதா, பொடி, தூள், விபச்சாரம், பெண்கள், காதல், துரோகம் என்று எல்லாவற்றையும் தொட்டுப் பார்த்திருக்கிறார் இயக்குனர். அது தான் பிரச்சனை.
 veppam_movie_stills_photos_images_01 நாநி, நித்யா மேனன், கார்த்திக் குமார் மூவரும் குப்பத்தில் வசிப்பவர்கள். மூவரும் ஒட்டுக்காய் வளர்கிறார்கள்.  நாநி இஞ்ஜினியரிங் கல்லூரி மாணவராம். நாநி அவனது அண்ணன் இருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. நாநியின் அப்பா அவர்கள் கூட இல்லை. அதே ஏரியாவில் பெண்களை வைத்து ப்ராத்தல் தொழில் செய்து வருகிறான். அவன் அம்மாஜி எனப்படும் பெரிய பெண் தாதாவின் கண்காணிப்பில் தொழில் செய்து வருபவன். கார்த்திக் சீக்கிரம் பணம் சம்பாதித்து தான் காதலிக்கும் விபச்சாரப் பெண்ணை விடுதியிலிருந்து மீட்க, சரக்கு கடத்த தயாராகிறான். அதிலிருந்து ஆரம்பிக்கும் ப்ரச்சனைதான் படம்.
veppam_movie_stills_photos_images_02 வழக்கமாய் அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டரில் வரும் கார்த்திக் குமார் இதில் லோக்கல் படிக்காத மெக்கானிக்கடைக்காரனாக வருகிறார். நிறைய பாடி லேங்குவேஜில் நடிக்கிறார். எல்லாம் வேஸ்ட். நாநியின் முகத்தில் காதலின் போது இருக்கும் சுவாரஸ்யம் மற்ற காட்சிகளில் இல்லை. இரண்டு நாயகிகளில் நித்யா மேனன் சுத்தமாய் பொருந்தவேயில்லை. இரண்டாவது பெண் க்யூட். சரியான தேர்வு. விபச்சார விடுதியில் இருக்கும் பெண்ணாய், காதலனுக்கு முன் கஸ்டமருடன் போவதற்கு மருகும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார்.

ஜோஸ்வா ஸ்ரீதரின் பாடல்கல் ஏற்கனவே ஹிட் லிஸ்டில் இருந்ததுதான். நா.முத்துகுமாரின் ரசிக்கக்கூடிய பாடல் வரிகளுக்கு கொஞ்சம் கூட உதவாத பாடல் மேக்கிங். ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு தரம். பெரும்பாலும் ஹாண்ட் ஹெல்டில் எடுத்திருக்கிறார். கொஞ்சம் நீளமான காட்சிகளாய் இருந்தாலும், மிக குறுகிய இடத்தில் ப்ரேம்களை வைத்து அசத்தியிருக்கிறார். படத்தில் வரும் அந்த மஞ்சள் கலந்த பச்சை டோன் கொடுக்கும் விஷுவல் எபெஃக்டுகள், படத்தில் இல்லாததால் தனியாய் தெரிகிறது.
veppam_movie_stills_photos_images_08 படத்தின் பெரிய மைனஸே திரைக்கதை எனும் வஸ்துவை சரிவர மேய்க்காததே.. படம் ஆரம்பிக்கும் போது நாநியின் அண்ணனுக்கு முக்யத்துவத்துடன் ஆரம்பிக்கிறது. திடீரென நாநி, நித்யா மேனன், கார்த்திக்கின் பால் போகிறது. அவ்வப்போது வாய்ஸ் ஓவரில் நாநியின் அண்ணனின் பாயிண்ட் ஆப் வியு. திடீரென நாநியின் அப்பா, விபசாரம், விபசார விடுதி காதலி என்று பாயிண்ட்டாப் வியூ மாறுகிறது. கார்த்திக் ஏன் நாநியின் அப்பாவிடம் சேர ஆசைப் பட வேண்டும் என்று யோசிக்கும் போது, அதற்கான பதிலேயில்லை. அங்கே போன பின்புதான் விபசாரப் பெண்ணைப் பார்த்து காதலிக்க ஆரம்பிக்கிறார். எனவே… லாஜிக் தவறு. முதல் பாதி முழுவதும் நான் லீனியராய் சொல்வது போல சென்று இரண்டாவது பாதியில் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார்கள். 
ஆனால் அதற்குள் ஆரம்ப சுவாரஸ்யம் எல்லாம் வடிந்து விடுவதால் எதுவும் எடுபடவில்லை. சவசவ என போகிறது திரைக்கதை. படம் நெடுக ஆக்‌ஷன் காட்சிகளுக்கான சீன்கள் இருந்தாலும் Veppam_movie_wallpapers_stills_01பெரும்பாலான காட்சிகளில் ஆக்‌ஷன் கொரியோகிராபி படு சொதப்பல். ரத்தமே வராமல் கார்டூன் படங்களில் வருவது போல கத்தியால் குத்திக் கொள்கிறார்கள்.  இரண்டு சீனுக்கு ஒரு திருப்பம், வெட்டு, குத்து, கலாச்சார அதிர்ச்சிகள், அவ்வப்போது மியூட் செய்யப்பட்ட வசனங்கள் என்று வைத்துவிட்டால் ஒரு பக்கா ஸ்லம் பேஸ்டு லோக்கல் ஆக்‌ஷன் படம் தயார் என்று நினைத்துவிட்டார் போலும் ஜோஷ்னா. படம் ஆரம்பிக்கும் போது இருக்கும் ஸ்லம் ஃபீல் இரண்டாவது ரீலீல் ஹைஃபை ஸ்லம் படமாய் மாறிவிடுகிறது. குப்பத்தைப் பற்றி ஏதும் தெரியாமல் குப்பத்தைப் பற்றி படமெடுத்தால் இப்படித்தான் ஒட்டாமல் வரும். அம்மாஜியாகவரும் அந்த பெண் கேரக்டர் படு சொதப்பல்.

பாராட்ட வேண்டிய விஷயமென்றால் ஒரு பெண் இயக்குனராய் இருந்து இம்மாதிரியான களத்தை எடுக்க துணிந்தது. அதிக வன்முறையில்லாமல் எடுத்தது. ஆங்காங்கே வரும் சின்னச் சின்ன டீடெயில்கள். கார்த்திக், அந்த விபசாரப் பெண் எபிசோட். முக்கியமாய் கார்த்திக் கதவை திறக்கும் போது ஒரு கஸ்டமர் வெளியே வர, கார்த்திக்கின் தவிப்பும், கோபமும், அந்தப் பெண்ணின் தடுமாற்றமும்.. க்ளாஸ்.
வெப்பம் – சூடேயில்லை.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

9 comments:

Unknown said...

muthal Wadai enakku!!!!!
Nalla Review

Regards
M.Gazzaly
http://hack-erz.blogspot.com

ஜெய்சக்திராமன் said...

vadai pochey...

கோவை நேரம் said...

அப்போ படம் காலியா..? உங்கள் விமர்சனம் படித்த பின் இனி எதுக்கு பார்க்கணும் ..?

கா.கி said...

//ஒரு பக்கா ஸ்லம் பேஸ்டு லோக்கல் ஆக்‌ஷன் படம் தயார் என்று நினைத்துவிட்டார் போலும் ஜோஷ்னா.//

பாஸ், இயக்குனர் பேரு Anjana, joshna இல்லை.. அடிக்கடி இப்படி தப்பு பண்றீங்க, தூக்க கலக்கத்துல டைப் பண்ணா இப்படிதான்.. :P

Sivakumar said...

டைரக்டர் அக்கா பேரு அஞ்சனா அலிகான்!!

jayaramprakash said...

First.Many more happy returns of the day cable ji!!

'பரிவை' சே.குமார் said...

good Review.

valaipathivu said...

உங்கள் பதிவினை அனைத்து திரட்டியிலும் பதிய எளிய வழி. http://www.valaipathivagam.com தளத்திற்குச் செல்லுங்கள். இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி, உலவு, தமிழ்10, திரட்டி, வலைப்பூக்கள் என மொத்தம் 16 திரட்டிகளும் இந்த தளத்தில் உள்ளது. இந்த தளத்திலிருந்து அனைத்து திரட்டிகளிலும் உங்களது பிளாக்கின் பதிவினை பதிவு செய்யலாம்.

aotspr said...

நல்ல விமர்சனம்.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com