சாப்பாட்டுக்கடை - சார்மினார்
60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர்
ஹைதராபாத் என்றதும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நினைவு வரும் ஆனால் எனக்கு பிரியாணிதான் நினைவுக்கு வரும். பாவர்சி, பாரடைஸ் பிரியாணி, செகந்தராபாத் ஸ்டேஷனின் வாசலில் இருக்கும் ஒரு பிரியாணி என்று தேடித் தேடி சாப்பிடுவேன். என்னதான் சென்னை முழுவதும் ஹைதராபாத் பிரியாணி என்று போர்டு வைத்து கூவிக் கூவி அழைத்தாலும் ஒரிஜினல் ஹைதராபாத் பிரியாணியை யாரும் கொடுப்பதில்லை. பெரும்பாலும் வழக்கமான பாஸ்மதி பிரியாணியையே தருகிறார்கள். ஹைதை பிரியாணியில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்டீர்கள் என்றால் அதை சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.
ஹைதராபாத் என்றதும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நினைவு வரும் ஆனால் எனக்கு பிரியாணிதான் நினைவுக்கு வரும். பாவர்சி, பாரடைஸ் பிரியாணி, செகந்தராபாத் ஸ்டேஷனின் வாசலில் இருக்கும் ஒரு பிரியாணி என்று தேடித் தேடி சாப்பிடுவேன். என்னதான் சென்னை முழுவதும் ஹைதராபாத் பிரியாணி என்று போர்டு வைத்து கூவிக் கூவி அழைத்தாலும் ஒரிஜினல் ஹைதராபாத் பிரியாணியை யாரும் கொடுப்பதில்லை. பெரும்பாலும் வழக்கமான பாஸ்மதி பிரியாணியையே தருகிறார்கள். ஹைதை பிரியாணியில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்டீர்கள் என்றால் அதை சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.
நம்மூரில் கொடுக்கப்படும் பிரியாணி கறியோடு மசாலாவுடன் சேர்ந்து கொடுக்கப்படும். ஆனால் ஹைதை பிரியாணி பாஸ்மதி அரியில் செய்யப்பட்டு, லேசான மஞ்சள் நிறத்தில் மசாலாவோடு கிளறப்பட்டு, அதன் நடுவில் மட்டன், சிக்கன் பீஸ்கள் வைத்து கொடுப்பார்கள். நம்மூரில் கொடுக்கப்படும் அளவை விட அதிகமாகவே இருக்கும். பிரியாணியோடு, கறித்துண்டுகளை நாம் கிளறி, கலந்து சாப்பிட, கறியோடு இருக்கும் ம்சாலாவும், சாதத்தில் இருக்கும் மசாலாவும் சேர, இவை சேர்ந்த வாசமும் நம் பசியை கிளப்ப, வாயில் போட்டவுடன் டிபிக்கல் ஆந்திரக் காரத்தோடு இருக்கும் போன்லெஸ் கறியையும், சேர்த்து சாப்பிட ஆர்மபித்தால் ம்ம்ம்ம்ம்ம் நிஜமாகவே டிவைன்
நான் சொல்வது கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்வதாய் உங்களுக்கு தெரியலாம். சாப்பிட்டு பார்த்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். அந்த பாவர்சி பிரியாணி சென்னையில் கிடைக்கிறது என்றவுடன் கிட்டத்தட்ட ஜொள்ளு ஊற்றாத குறையாய் சார்மினாரைத் தேடியலைந்து கண்டுபிடித்துவிட்டேன். மிக டீசெண்டான ரெஸ்டாரண்ட், புதியதாய் ஆரம்பித்திருந்ததால் கொஞ்சம் கூட்டம் கம்மியாக இருக்க, பிரியாணியை ஆர்டர் செய்தேன். ஹைதையில் பார்த்த அதே பிரியாணி. கூடவே கத்திரிக்காயையும், பச்சை மிளகாய், கோங்குரா போட்டு அரைத்த சட்னி, ரய்தா. எல்லோரும் சொல்லும் வழக்கமான ஹைதராபாதி பிரியாணி இல்லை என்று பார்த்த மாத்திரத்தில் தெரிந்துவிட, ஆவலாய் ஒரு கறி ஃபீஸோடு, சாதத்தை கிளறி, பிரட்டி, ஒரு வாய் போட்டேன். வாவ்... வாவ்..
அருமையாய் இருந்தது. கொஞ்சம் மசாலா மட்டும் தூக்கலாய் இருக்க, கடை உரிமையாளர்களான ராம், லஷ்மணிடம் சொன்னேன். இது டபுள் மசாலா முறையில் போடப்பட்டது என்றும். டபுள் மசாலா இல்லாமல் கேட்டால் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு, சிங்கிள் மசாலா போட்ட பிரியாணி கொஞ்சம் கொடுத்தார். ம்ம்ம்.. இது சரியாக இருந்தது. அதன் மூன்று நான்கு முறை நண்பர்களோடு அங்கே சென்றிருக்கிறேன். பிரியாணி தவித்து, கபாப், ரோட்டி, நான், ப்ரைட் ரைஸ் போன்ற அயிட்டங்களும் இருக்கிறது. சமீபத்தில் ஒரு நாள் சென்ற போது முட்டை ஃபரையும், ஷோர்பா கபாப்பும் ஸ்டாட்டர்களாக ஆரடர் செய்திருந்தோம். நண்பர் ஒரு செஃப். வழக்கமாய் முட்டை ஃப்ரைக்கு முட்டையை இரண்டு பாகங்களாய் ஆக்கி அதை பஜ்ஜி மாவு போன்ற ஒரு மிக்சில் போட்டு கூடவே, காரத்திற்கு குடமிளகாயைப் போட்டுக் கொடுப்பார்கள். இவர்கள் முட்டையை நல்ல துண்டங்களாக்கி மேலும் நல்ல ப்ரையோடு தருகிறார்கள். அதே போல ஷோர்பா சிக்கன். வாயில் போட்டால் கரைகிறது. நான், பட்டர் நான், ரோட்டி ஆகியவைகளையும் நல்ல முறையில் தருகிறார்கள்.
குறையென்று சொன்னால் பிரியாணிக்கு கொடுக்கும் ரைத்தாவை நீர் மோராய் கொடுக்காமல் , நல்ல தயிரோடு கொடுத்தால் நன்றாக இருக்கும். அதே போல பிரியாணிக்கு கொடுக்கும் சட்னியையும் கொஞ்சம் கெட்டியாய் கொடுக்கலாம். மற்றபடி நிச்சயம் ஹைதை பிரியாணி மட்டுமில்லாமல் நல்ல கபாப், ரோட்டி வகைகள் சாப்பிட ஆசைப்படுகிறவர்களுக்கு ஏற்ற இடம். விலையும் மிக அதிகமில்லை. ஒரு அப்பர் மிடில் க்ளாஸ் உணவகமாகத்தான் இருக்கிறது.
சார்மினார்
269, அவ்வை சண்முகம் சாலை
முதல் மாடி. கோபாலபுரம், சென்னை.
044-28111007, 9500055001.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
i agree. was there in Hyderabad for 2 years. Tried all type of biriyanis(from paradise hotel to bawarchi). None came close to our biriyani. May be taste differs.